Sunday, March 3, 2024

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை:


(இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்திற்கு  (பகுதிக்கு) உள்ளேயும் வெளியேயும் உள்ள குழுக்களால் அங்கீகரிக்கப்பட்டது.)

நாங்கள்,  இரகசிய கையொப்பமிடப்பட்ட அமைப்புகள், பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலை குற்றங்களை இழைத்துள்ள இஸ்ரேலின் சியோனிச  (Zionist) ஆட்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இஸ்ரேலின் சியோனிச அரசு, தற்போது பாலஸ்தீனத்தின் மீது தொடர்ச்சியான படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக பாலஸ்தீனிய மக்களின் சுதந்திரம், கண்ணியம், நீதி மற்றும் அபிவிருத்திக்கான அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவது மட்டுமல்லாமல்,   தற்போது உலகின் பல்வேறு மூலைகளிலும் நிறுவப்பட்டுள்ள உலக ஏகாதிபத்தியத்தை பராமரிப்பதாகவும் பலப்படுத்துவதாகவும் உள்ளது.

அமெரிக்காவின் இராணுவ மற்றும் அரசியல் ஆதரவு இல்லாமல், மேற்குக் கரை, காசா மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்து, இனப்படுகொலைகளை நடத்தியதற்கு சாத்தியமில்லை. அமெரிக்க மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகள் காசா மக்களின் இனப்படுகொலையில் முழுமையாக ஈடுபட்டுள்ளன.  இல்லையேல் இஸ்ரேலின் இருப்பு கூட அங்கு சாத்தியமற்றது.

பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேலின் பாசிச சியோனிச ஆட்சியானது, அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளின் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவியுடன் மனிதகுலத்திற்கு எதிரான கடுமையான குற்றங்கள், போர்க்குற்றங்கள் மற்றும் வெகுஜன மக்களை இனப்படுகொலைகளை செய்துள்ளது. காசா மீது இஸ்ரேலின் குண்டுவீச்சு தொடங்கியதிலிருந்து, மக்களை வெளியேறுமாறு கட்டளையிடும் நயவஞ்சக நடவடிக்கைகள், பின்னர் அகதிகள் தப்பிக்கும் வழிகளில் குண்டுவீச்சு, 69,000 க்கும் மேற்பட்டோருக்குக் காயங்கள் விளைவித்தது,   பத்திரிகையாளர்கள் மற்றும் மருத்துவ குழுக்களைக் கொன்றது, 12,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட குறைந்தது 29,000 பேரின் இறப்புக்கும் வழிவகுத்தது.  காசா பகுதியில் 1.9 மில்லியன் பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இஸ்ரேலின் சியோனிச ஆட்சியில்படையெடுப்பு, காலனித்துவம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் பிற அட்டூழியங்களுக்கு பல்வேறு காரணங்கள் மற்றும் பொய்கள் பரப்பப்பட்ட போதிலும், அடிப்படையில் பாலஸ்தீனிய சுதந்திரத்திற்கான போராட்டத்தை  நிறுத்துவது, பாலஸ்தீனிய மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது, கட்டுப்படுத்துவது, அவர்களின் நிலத்தை அபகரிப்பது மற்றும் இஸ்ரேலின் எல்லையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முற்போக்கு மக்கள் இயக்கமான நாங்கள் ஏகாதிபத்தியம், சியோனிசம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான  போராட்டத்தில் ஒன்றுபட்டுள்ளோம். தேச விடுதலைக்கான பாலஸ்தீனப் போராட்டத்திற்கு எங்களது ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இதன் மூலம் நாங்கள் முன்வைப்பது :

- பாலஸ்தீன பிரதேசங்களில் சியோனிச அரசின்  இனப்படுகொலைக்கு முடிவு;

- காசா பகுதியிலும் மேற்குக் கரையிலும் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலிய சியோனிசப் படைகளின் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் முடிவுக்குக் கொண்டுவருதல்;

- காசாவில் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த நெதன்யாகு அரசாங்கம், அமெரிக்க ஜனாதிபதி பைடன் மற்றும்  ஐக்கிய இராச்சியம் அரசாங்கங்கள் உட்பட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்த அனைத்து குற்றவாளிகளுக்கும் எதிரான தண்டனை;

- பாலஸ்தீனிய மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கான முழு ஆதரவு;

- இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களிடையேயும் ஒற்றுமையின் அடிப்படையில் ஒரு புதிய ஜனநாயக அரசை நிறுவுவதற்கான ஆதரவு.

சுதந்திர பாலஸ்தீனம் இப்போதே !


இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...