Tuesday, July 26, 2022

விவசாயிகள் பாராளுமன்றத்திற்கு படையெடுத்தனர்

 கோலாலம்பூர்,  ஜூலை 26



நாட்டில் நாளுக்கு நாள் உணவு சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பூதாகரமாக தலையெடுத்து வருகிறது. உணவு பொருள்கள் விலையேற்றம், அத்யாவசியப் உணவு பொருள்களின் பற்றாக்குறை, விவசாயத்திற்கு தேவையான பொருள்களின் விலையேற்றம் இவற்றோடு விவசாய நிலங்களின் ஆக்ரமிப்பு உள்ளிட்ட  பலவிவகாரங்கள், உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிவரும் வேளையில் அதனை எதிர்த்து தங்களின் ஆச்சேபத்தை வெளிபடுத்தும் விதமாகவும் , பாராளமன்றத்தில் ஆலோசித்து சரியான தீர்வை கொண்டு வரவேண்டும் என்றும் விவசாயிகள்  மகஜர் ஒன்றை சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு வழங்கினர். 

    


முன்னதாக துகு நெகாரா செல்லும் சாலையருகே கூடிய,   நெல் பயிரிடும் விவசாயிகள், காய்கறிகள் பயிரிடும் விவசாயிகள், கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பிரதிநிதிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள்  பதாகைகளை ஏந்தி, அங்கிருந்து  பாராளுமன்றம் வளாகம் வரை கோஷம் மிட்டவாறே நடந்துச் சென்றனர்.   


அத்யாவசியப் உணவுப் பொருள்களின் விலை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசு அப்பொருள்களின் உற்பத்திக்காக பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தும் விலை கைமீறி போயிருப்பதை இந்த ஆர்பாட்டத்தில் விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.



மலேசிய சோசலிசக் கட்சி ஆதரவில் நடத்தப்பட்ட இந்த அமைதிப் பேரணி அமையான முறையில் நடந்தேறியதுடன் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் பிரதிநிதிகள் மகஜரை பெற்றுக்கொண்டனர். சுமார் 1 மணிநேரம் நடந்த இந்தப் பேரணிக்காக ஏராளமான போலீஸ்க்காரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது. 




Sunday, July 24, 2022

TURUN DAN LAWAN இளைஞர்கள் போராட்டம்...



கோலாலம்பூர்,  ஜூலை 23....

விலைவாசி அதிகரிப்பு, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து இளைஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். உணவு பொருள்களின் விலை கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் ஏறிவருகிறது. மேலும் கோழி இறைச்சி முட்டை, சமையல் எண்ணை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதோடு அவை ஏழை மக்கள் வாங்க முடியாத அளவுக்கு விலை ஏறியுள்ளன. இதனால் மக்கள் கொதிப்படைந்திருக்கின்றனர்.  அரசுக்கு இது தொடர்பாக அழுத்தம் கொடுக்க இன்று இளைஞர்கள் வீதியில் இறங்கி  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பட்டதாரி இளைஞர்கள் அதிகமானோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டதோட அரசு சாரா இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த இளைஞர்களும் கலந்துக்கொண்டு அரசுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தனர்.  











இளைஞர்கள் முன்வைத்த 5 கோரிக்கைகள்...

Potong gaji Menteri;

Kekalkan subsidi;

Salurkan bantuan bermaruah;

Kawal harga barang;

Selesaikan isu jaminan makanan.











தமிழில்

1அமைச்சர்களின் ஊதியத்தை குறைத்தல்

2 உதவிதொகையை நிலைநிறுத்துக

3 நியாயமான உதவிகளை செய்க

4 பொருள்களின் விலையை கட்டுப்படுத்துக

5 உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துக.

செய்தி : யோகி


பி.எஸ்.எம் தேசிய தலைவரின் 24-வது மாநாட்டு உரை 24


இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...