Thursday, September 29, 2022

பி.எஸ்.எம் கட்சியின் தொடர் போராட்டத்தின் வெற்றி !

மேலும் 25 கம்போங் வீராசாமி குடியிருப்பாளர்களுக்கு நில உரிமம் கிடைத்தது..

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் போராட்டத்தின் வெற்றியாக கம்போங் வீராசாமி குடியிருப்பாளர்கள் மொத்தம் 50 பேர் நில உரிமம் பெற்றுள்ளனர். அவர்களின் 25 பேருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது பி.எஸ்.எம் கட்சியின் தேசியத்தலைவர் டாக்டர் ஜெயகுமார் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, அம்மக்களுக்கு உரிமம் வழங்கப்பட்ட வேளையில், மேலும் 25 பேருக்கு இன்று நிலஉரிமப் பத்திரம் கிடைத்தது. இது பி.எஸ்.எம் தொடர்ந்து முன்னெடுத்த போராட்டத்தினாலும், நெருக்கதினாலும் மக்களுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி என்று பி.எஸ்.எம் சுங்கை சிப்புட் கிளையின் தலைவர் அகஸ்திம் தெரிவித்தார்.


அவர் மேலும் பேசுகையில்…

சில ஆண்டுகளுக்கு முன்பு முதல் 25 பேருக்கு நிலஉரிமம் கிடைத்தப் பிறகு, நாட்டில் நடந்த ஆட்சி மாற்றத்தில் பக்காத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்தது. அவர்கள் கேட்டுக்கொண்டதின் பேரில் இந்த நிலப்பிரச்னை தொடர்பாக அவர்களுக்கு முறையான எல்லா ஆவணங்களும் சமர்பிக்கப்பட்டு, நில உரிமைக்காக காத்திருப்பவர்களுக்கு ஏதாவது செய்வார்கள் என்று எதிர்ப்பார்த்தோம். அப்படி ஏதும் நடக்காத நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திரும்பவும் பி.எஸ்.எம் தோழர்கள் இவ்விவகாரத்தை கையில் எடுத்தனர், அதன் தொடர்ச்சியான சந்திப்புகள் மற்றும் கோரிக்கைகளின் பலனாக இன்று மேலும் 25 பேருக்கு பேராக் அரசாங்கம் நில உரிமம் வழங்கியிருக்கிறார்கள்.

இந்த நில உரிமைக்காக மேலும் 20 பேர் இன்னும் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், அவர்களுக்காக பி.எஸ்.எம் தொடர்ந்து போராடும். காரணம் இங்கிருக்கும் குடியாளர்கள் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருகிறார்கள். கம்போங் வீராசாமி சுங்கை சிப்புட் தொகுதிக்கு உட்பட்ட கிராமமாகும். அவர்களுக்கு இந்த நிலப்பிரச்னை தொடங்கியதிலிருந்து,  மொத்தம் 50 பேருக்கு வீட்டு உரிமம் கிடைத்திருப்பது வரை பி.எஸ்.எம் மக்களோடு களத்தின் நின்று கடுமையாக போராடியிருக்கிறது, இதை யாரும் மறுக்கவும் மறைக்கவும் முடியாது.

70 சதவிகிதம் சீனர்கள் கொண்ட இந்தக் கிராமத்தில் ஒரே ஒரு குடும்பம் மட்டுமே மலாய்க் குடும்பமாகும். ஏனைய அனைவரும் இந்தியர்களாக இருக்கும் பட்சத்தில் பி.எஸ்.எம் எல்லாருக்குமாக போராடி இந்த உரிமத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறது.

இன்று பிற அரசியல் கட்சிகள் அவர்கள்தான் போராடியதாகவும் உரிமம் பெற்றுத் தந்ததாகவும் பத்திரிகைகளில் செய்தி கொடுக்கிறார்கள். இது முற்றிலும் நகைப்புக்குறியதாகும். மக்களோடு இன்றுவரை தோள் குடுத்து நிற்கும் பி.எஸ்.எம் கட்சியை மக்கள் அறிவார்கள், இவ்வாறு அகஸ்திம் தெரிவித்தார்.  

-யோகி

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...