Tuesday, November 8, 2022

BN வேட்பாளர்கள் கைகடிகாரங்கள், ஆடம்பர கைப்பைகளின் மதிப்பை அறிவிக்குமாறு பிஎஸ்எம் அறிவுறுத்துகிறது


இந்தப் 15-வது  பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி கட்சி அளித்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகள்,  சோசலிச வாக்குறுதிகள் மாதிரியாக இருப்பது ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறது என்று அந்நடவடிக்கை  குறித்து  சோசலிசக் கட்சி கருத்து தெரிவித்திருக்கிறது. 

இது குறித்து கட்சியின் தேசிய துணைத்தலைவரான எஸ்.அருட்செல்வன் கூறுகையில்,  "முதலாளித்துவக் கூட்டணியான BN  "  கடந்த காலங்களில் அடிப்படை ஊதியம் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு  இலவசக் கல்வி போன்ற கோரிக்கைகளை PSM முன்வைத்தபோது அது  முட்டுக்கட்டையாக இருந்தது. பிரசாரக் காலத்தில் மட்டுமே  மக்களை  விரும்பும் கட்சிகளிடம் வாக்காளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம். "பூரணமாக  வறுமையை ஒழிப்போம்" என்ற வாக்குறுதியை BN தனது வேட்பாளர்களுக்கு வழங்கும் முன் தங்கள் சொத்துக்களை முதலில் அறிவிக்க வேண்டும்" என்று   அருட்செல்வன் அறிவுறுத்தினார். 

"அவர்கள் ஒவ்வொருவரின்  டிசைனர் கைக்கடிகாரம் மற்றும் கைப்பைகளின் மதிப்பினை  வெளிப்படுத்த வேண்டும். சில அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் அத்தகைய பொருட்களை வைத்திருப்பது எப்படி என்பது நாம் அனைவரும் அறிவோம். அதன் விலையை ஆராய்ந்தால் ஒரு   B40  தன்  வாழ்நாள் முழுவதும்  சம்பாதிக்கக்கூடியதை விடவும் அது  அதிகமாக இருக்கும் " என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.


வருமானத்தில்  இடைவெளி அதிகரித்து வருகிறது

கடந்த சில வருடங்களாக மலேசியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான வருமான இடைவெளி அதிகரித்து வருகிறது. 

"தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்க முடிந்தால் மற்றும் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளியை குறைக்க  முயற்சித்தால் மட்டுமே BN தீவிர வறுமையைக் குறைக்க முடியும். அதை செயற்படுத்துவதற்கு முன்,  அவர்கள் முதலில் தங்கள் சொத்தை அறிவிக்க வேண்டும். 

பேராக் மற்றும் சபாக் பெர்னாமில் இருந்து B40 தொழிலாளர்கள் நவம்பர் 3 2021 அன்று BN அலுவலகத்திற்கு வந்தபோது, ​​அவர்களின் மகஜரைப்  பெற யாரும் முன்வரவில்லை.  அன்றைய தினம், அரசாங்கத் துறையில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்யும்  முறையை ஒழிப்பதற்கு ஆதரவளிக்குமாறு சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள்  BN ஐ நாடி  வந்திருந்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது" என்றும் அருட்செல்வன் கூறினார்.

நன்றி மலேசியாகினி https://m.malaysiakini.com/news/643116

No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...