Monday, October 17, 2022

உலக வறுமை ஒழிப்பு தினம் 2022

மலேசிய சோசலிசக் கட்சி பண்ணாட்டு ரீதியிலான உலக வறுமை ஒழிப்பு நாளை 17/10/2022 அன்று முன்னெடுத்தது


''உலக வறுமை ஒழிப்பு தினத்தை அனுசரிக்கும் அதே வேளையில், இன்னும் சில நாட்களிம் நாம் 15-வது தேசிய பொதுதேர்தலையும் சந்திக்க உள்ளோம். இதை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில் பாமர மக்களின் கூட்டணியைச் (மார்ஹைன்) சேர்ந்த நாங்கள்,  அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் வேட்பாளர்களையும் பாமர மக்களின் நல்வாழ்வுக்காக  கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கையை வைக்கிறோம். 

மேலும், நாட்டில் வறுமையை ஒழிக்க சரியானதொரு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். 

கோவிட் காலக்கட்டத்தில் நாட்டு மக்களின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக பாதிக்கப்பட்டுள்ளது. M40 நிலையில் இருந்த மக்கள்  B40 நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். B40  நிலையில் இருந்த மக்களில் பெறும்பான்மையினர் B20 நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் சூழலை ஆராய வேண்டும். 

இன்னும் தெளிவாக சொல்லப்போனால் 5.6% இருந்த நாட்டின் ஏழ்மை விகிதாச்சாரம் 8.6% உயர்ந்துள்ளது. இந்த நிலையை கலைவதற்கும் பாமர மக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு கைகொடுக்க வேண்டும்.'' பாமர மக்களின் கூட்டணி கேட்டுக்கொண்டது. 



Tuesday, October 11, 2022

பி.எஸ்.எம் மத்திய செயலவைக் குழு அவசரக் கூட்டத்தை நடத்தியது.

மலேசிய சோசலிசக் கட்சியின் மத்திய செயலவைக் குழு

அவசரக் கூட்டத்தை நடத்தியது. 


10 அக்டோபர் 2022 அன்று மலேசிய சோசலிசக் கட்சி, மத்திய செயலவை உறுப்பினர்களுடன் அவசரக் கூட்டத்தை ஏற்பாடு செய்து பின்வருபவை குறித்து விவாதித்தது.

1. பட்ஜெட் முடிந்து 3 நாட்களுக்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது, பி.எஸ்.எம் பொருத்தவரை இது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. இது நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாகவும் பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்தத் தேர்தல் நாடாளுமன்ற அளவில் மட்டுமே நடைபெறும், அதாவது அம்னோ தலைவர்களின் அரசியல் நலன்களுக்காக நடத்தப்படும் இந்த திடீர் தேர்தல் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுவது தொடரும் செயலாகும். அதே வேளையில், பருவமழை அவசரநிலையை சமாளிக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்வதில் இந்த தேசிய தேர்தல்கள் பெரிய கவனச்சிதறலை ஏற்படுத்தும். 

2. 2. PSM மிகவும் நியாயமான மற்றும் குறைந்தபட்ச கோரிக்கையை PH-இடம் சமர்ப்பித்துள்ளது. பொதுவான சின்னத்தைப் பயன்படுத்த ஒப்புக்கொள்வதைத் தவிர்த்து சுங்கை சிப்புட் நாடாளுமன்ற இருக்கைக்காக போட்டியிட, பிஎஸ்எம் தலைவரை முன்நிறுத்தி நாங்கள் சுங்கை சிப்புட் தொகுதியை கேட்டுள்ளோம். மீண்டும் பி.எஸ்.எம் சுங்கை சிப்புட்டை கைப்பற்ற மக்கள் விரும்புகின்றனர். டாக்டர் குமார் தலைமைதுவத்தின் கடந்த 10 ஆண்டுகால சேவையை மக்கள் இன்றும் நினைவு கூறுகின்றனர். தற்போது, சுங்கை சிப்புட் தொகுதிக்கு ம.இ.கா தேசிய தலைவர் டத்தோ விக்னேஸ்வரன் போட்டியிடவிருக்கும் வேளையில், அவரை வீழ்த்த முன்னாள் தலைவரான டத்தோஶ்ரீ சாமிவேலுவை அத்தொகுதியில் தோற்கடித்த டாக்டர் குமாரின்னால் மட்டுமே முடியும்.  எனவே பலமுனை போட்டிகளை தவிர்க்க. நேர்முனை போட்டிக்கு பக்கத்தான் பி.எஸ்.எம்-க்கு வழிவிட வேண்டும்.  


3. எந்தெந்த தொகுதியில் பி.எஸ்.எம் போட்டியிடப்போகிறோம் என்று பல ஊடகங்கள் எங்களை கேட்கின்றன. PH உடனான தேர்தல் ஒப்பந்தம் நிறைவேறினால் அது குறித்து முடிவெடுக்கப்படும். கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி PH உடனான எங்கள் சந்திப்புக்குப்பிறகு, PH தலைமைத்துவதிடமிருந்து அறிவிப்பு வந்திருக்க வேண்டும், ஆனால், அதிகாரப்பூர்வமான எந்த பதிலையும் அவர்களிடமிருந்து நாங்கள் பெறவில்லை. சாதகமான பதிலுக்காக காத்திருக்கிறோம்.   

 

எஸ்.அருள்செல்வன்

பி.எஸ்.எம் தேசிய துணைத்தலைவர்

Pengarah Biro Pilihanraya PSM.

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...