Sunday, February 26, 2023

பிஎஸ்எம் காப்பார் சேவை மையம்- திறப்புவிழாக் கண்டது

 

மலேசிய சோசலிசக் கட்சி  (பிஎஸ்எம்) காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில் தமது சேவையை  தொடங்கியது.  பிஎஸ்எம் காப்பார் சேவை மையம்  26 பிப்ரவரி 2023 அன்று,  உள்ளூர் மக்களுக்கு  சேவைகள் மற்றும் புதிய அரசியல் மாற்றங்களை வழங்க அதிகாரப்பூர்வமாக தொடக்கம் கண்டது.

தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், மக்களுக்கான  பல்வேறு பிரச்னைகளில் நீண்டகாலமாகத் தீவிரமாக தன்னை  ஈடுபடுத்தி வருபவரும்,  PSM இன் மத்திய செயற்குழு உறுப்பினருமான தோழர் எம்.சிவரஞ்சனி தலைமையில்,  பிஎஸ்எம் காப்பார் சேவை மையம்  செயல்படவுள்ளது.

சிவரஞ்சனி தற்போது Workers' Bureau- பிரிவில் தலைவராக உள்ளார். இன வேறுபாடின்றி மக்களுக்கு உதவுவதில், குறிப்பாக தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சிவரஞ்சனி, குறைந்தபட்ச ஊதியப்  பிரச்சாரம், பணிநீக்க நிதி பிரச்சாரம்,  போன்ற முக்கியமான  பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.  சாதாரண மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும் சிவரஞ்சனி தனது முயற்சிகளைத் தொடர உறுதியாக இருக்கிறார்.


பிஎஸ்எம் காப்பார் சேவை மையத்தின் திறப்பு விழாவின் போது, சிவரஞ்சனி தனது உரையில், PSM நமது நாட்டின் அரசியலுக்கு புதிய சுவாத்தைக் கொண்டுவரவும், கபார் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள உள்ளூர் மக்களுக்கு சேவைகளை வழங்கவும் தயாராக உள்ளது என்றும் கூறினார்.

இந்த மையத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட உள்ளூர்வாசிகள் அளித்த ஆதரவிற்கு சிவரஞ்சனி தனது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன் மேலும் அவர்களிடமிருந்த வட்றாத ஆதரவை எதிர்பார்ப்பதாக கூறினார்.

இவ்விழாவில் உரையாற்றிய டாட்டர் ஜெயக்குமார்,  1970ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நமது நாட்டின் வளம் 30 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், ஆனால் குறைந்த வருமானம் காரணமாக நாட்டு மக்கள் பல்வேறு பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார். எனவே, செல்வத்தை மிகவும் நியாயமான முறையில் விநியோகிக்கக்கூடிய மற்றும் சாதாரண மக்களின் நல்வாழ்வுக்கான உத்தரவாதத்தை உருவாக்கும் கொள்கைகளை செயல்படுத்த PSM முயற்சிக்கிறது என்றும்  டாக்டர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அரசாங்க ஓய்வூதியம் அல்லது SOCSO ஓய்வூதியம் பெறாத மூத்த குடிமக்களுக்கு,  ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக PSM ஒரு புதிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது என்று ஜெயக்குமார் அன்றைய தினம்  கூறினார்.

இந்த விழாவில் பி.எஸ்.எம்-மின் முக்கியத் தோழர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

சேவை மையத்தின் முகவரி :

Pusat Khidmat PSM Kapar , 16, Lorong Kapar Setia 8, Taman Emas, 42200, Kapar.


சேவை நேரம் : சனிக்கிழமைகளில் மாலை 4 முதல் இரவு 8 வரை

தொடர்பு எண்: 010-2402159


Wednesday, November 9, 2022

Ayer Kuning வட்டார தேர்தல் அறிக்கை அறிமுகம்


 

6 அம்ச கோரிக்கையை முன்வைத்து  பேராக் Ayer Kuning மாநிலத் தேர்தல் அறிக்கையை அறிமுகம் செய்தார் மக்கள் வழக்கறிஞரும் தேர்தல் வேட்ப்பாளருமான தோழர் பவாணி.  

முன்னதாக உள்ளூர் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கண்டறிந்து அதன் பின்னரே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. 


உள்ளூர் மக்களின் கோரிக்கை

1. ஜாலான் கம்பாரில் இருந்து தெலுக் இந்தான் வரையில் புதிய சாலை அமைக்க வேண்டும்.

2. முழுநேர மருத்துவரை நியமித்து, கிராமப்புற மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டும்.

3. பணப்பொறி (ஏடிஎம் இயந்திரம்) & அஞ்சலகச் சேவைகளை மீண்டும் கொண்டுவர வேண்டும்.

4. மின்சாரத் தடங்கல் சிக்கலுக்குத் தீர்வு காண்பதோடு, தொலைத்தொடர்பு வசதிகளையும் மேம்படுத்தவும் வேண்டும்.

5. பொதுப் பேருந்து சேவைக்குப் `பேராக் திராண்சிட்` பொறுப்பேற்க வேண்டும்.


6 அம்ச கோரிக்கையும் விளக்கமும் 

1. வேலை உத்திரவாதத் திட்டம்

·         வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்

·         பராமரிப்பு மற்றும் சமூகப் பணிகளில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்

2. உணவு உத்தரவாதம்

·         உணவு உற்பத்தியாளர்களை (விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் & மீனவர்கள்) அவர்கள் இடத்திலிருந்து வெளியேற்ற வேண்டாம்.

·         உணவு விலையைக் கட்டுபடுத்த வேண்டும் & உணவு உற்பத்தியாளர்களுக்கு மானியங்கள் வழங்க வேண்டும்.

3. சமூகப் பாதுகாப்பிற்கு அதிகாரமளித்தல்

·         அனைத்து மூத்தக் குடிமக்களுக்கும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

·       அனைத்து முறைசாரா துறை (குத்தகை / பகுதி நேரம் / நிரந்தரம் அற்ற) தொழிலாளர்களுக்கும் சொக்சோ பாதுகாப்பை வழங்க வேண்டும்

 4. மக்களுக்கான வீடுகள்

·         பி40 & எம்40 மக்களுக்கு மலிவு விலையில் வீடுகளைக் கட்டும் இலாப நோக்கமற்ற சிறப்பு வீட்டுவசதி வாரியம்.

 5. காலநிலை நெருக்கடியைக் கையாளுதல்

கடல் நீர்மட்ட உயர்வு, வெள்ளம், வறட்சி & வெப்பம் போன்று, இன்னும் பிற காலநிலை நெருக்கடி விளைவுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, மக்கள், குறிப்பாக விளிம்புநிலை சமூகங்கள் தயார் நிலையில் இருப்பதற்கான வசதிகள் மற்றும் திறனை அதிகரிக்க வேண்டும்.

6. தேசிய நிர்வாக நிறுவனங்களின் சீர்திருத்தம்

·         உள்ளூர் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், உள்ளூர் மக்கள் மீதான பொறுப்புக்கு உத்தரவாதம் அளிக்கவும் உள்ளூராட்சி தேர்தலை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.


K இன்று KLINIK DESA AYER KUNING -கில், இன்று  தோழர் பவாணி தனது ஆதரவாளர்களுடன் அவ்வறிக்கையை வெளியிட்டார்.   
மனுவைத் தொடங்கினார் தோழர் தினா

 தாக்குதல் மனுவைத் தொடங்கினார் தோழர் தினா                                                                      

நவம்பர் 9, 2022

தோழர் தினாவுக்கு இது அற்பமான பிரச்சினையாக தெரியவில்லை.  கடந்த வாரம் முதல், உள்ளூர்வாசிகளிடமிருந்து, குறிப்பாக  Pedas, Chembong மற்றும் Pekan Rembau ஆகிய இடங்களில் கடுமையாக இருக்கும் ஈ தாக்குதல்கள் குறித்து அவர் பல புகார்களைப் பெற்றுகொண்டிருக்கிறார்.

அருகில் பல கோழி  பண்ணைகள் இருப்பது இதற்கு  காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. சில பெரிய நிறுவனங்கள் இந்தப் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளுடன் 30 கோழி பண்ணைகள்  வைத்துள்ளன.

பெக்கான் பெடாஸிலிருந்து 2 கிமீ அளவிற்கும் குறைவான தூரத்தில் கோழிப்பண்ணை இருப்பதாக நம்பப்படுகிறது. அதே தூரத்தில்   ஒரு பெரிய கோழி உரம் பதப்படுத்தும் தொழிற்சாலயும்  இருப்பதாக நம்பப்படுகிறது.

இதுகுறித்து இப்பகுதி உணவுக்கடை வியாபாரிகள் கூறியதாவது: "இந்த ஆண்டு முதல் கோழி கூண்டுகளை சுத்தம் செய்யும் பணி, மாதம் ஒருமுறை நடப்பதால், ஈக்களின் தாக்குதல் அதிகமாக உள்ளது. இந்த ஈ தாக்குதலால் கிட்டத்தட்ட அனைத்து உணவு கடைகளிலும்  தங்கள் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் கூறுகின்றன. சிலர் கடையை மூட வேண்டியதாயிற்று. இதன் காரணத்தினால்  இந்த ஊர்களுக்கு உணவருந்த வருபவர்களின் வருகை குறைந்துள்ளது"

தோழர் தினாஇந்தப் பிரச்சினையை தீவிரமாக கையில்  எடுத்து, பொதுமக்களிடம்  கையெழுத்து வேடடையைத் தொடங்கினார். கடைக்காரர்கள், குறிப்பாக உணவுக் கடைகள் மற்றும் உள்ளூர்வாசிகளிடம் கையெழுத்துப் பெற்றுக்கொண்டிருக்கிறார். 

மக்களின் அந்த கையெழுத்து மனுவோடு, இவ்விவகாரத்தின் மீது   உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் மனு அளிக்கப்படும். இந்த ஈ தாக்குதலுக்கான காரணத்தை அதிகாரிகள் கண்டறிந்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், துப்புரவு மற்றும் வடிகால் விதிமுறைகளை கடைபிடிக்க பண்ணை  நடத்துபவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.  

மேலும், இப்பிரச்னையை உடனடியாக எதிர்கொள்ள  அடுத்த வாரம் ரெம்பாவ் மாவட்ட சுகாதார அலுவலகம், ரெம்பாவ் மாவட்ட கவுன்சில் மற்றும் நெகிரி செம்பிலான் சுற்றுச்சூழல் துறைக்கு மனுவழங்கப்படும் என்று தோழர் தினா தெரிவித்தார். 

Tuesday, November 8, 2022

தோழர் தினா உடனடியாக புகார் அளித்தார்

ரெம்பாவ்  பொதுச் சந்தையில்  பொதுக் கழிப்பறை பழுது,

தோழர் தினா  உடனடியாக  புகார் அளித்தார் (9 நவம்பர் 2022 )இன்று காலை Rembau பொதுச் சந்தைக்கு மக்களைச் சந்திக்க சென்ற Rembau பாராளுமன்ற வேட்பளரான தோழர் தினா, அங்கு உள்ள பொதுக் கழிவறையில் தண்ணீர் ஓடாமல் தேங்கி இருந்ததுடன், அக்கழிப்பறை  பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள், புகார்  தெரிவித்தபோது போது அவர் அதிர்ச்சியடைந்தார். 

இன்று காலை அப்பகுதியில்,  அங்குள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் வணிகர்களை சந்திக்க   நடைபயணம் மேற்கொண்டபோது திடீரென ஒரு வியாபாரி, தோழர் தினாவை  அழைத்தார். ஒரு மாதமாகியும் அதிகாரிகள் சரி செய்யாமல் கைவிடப்பட்டிருக்கும் கழிவறையின் மோசமான நிலையைப் காட்டுவதற்காக அந்த  வியாபாரி தோழர் தினகரனை அழைத்தார், தோழர் தினா நிலையை கண்டறிந்து  உடனடியாகச் செயல்பட்டு, புகார் அளிக்க தனது குழுவுடன் ரெம்பாவ் மாவட்ட மாநகர மன்றத்திற்கு  விரைந்தார். அதிகாரி Faez என்பவரிடம் அது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக, அவர்களிடத்தில்  குறைவான பணியாளர்களே  இருப்பதாகவும், ஆனால் அங்கு ஏற்பட்டுள்ள பிரசனையை கையாள  ஆட்களை ஏற்பாடு செய்ய முயற்சிப் படும்  என்றும் அங்கு கூறப்பட்டது. சம்பந்தப்படட இடத்தில் மறுசீரமைப்பு பணிகளை செய்யும் போது  தாமும் உடன்  இருக்க வேண்டும் என்பதற்காக, பொதுச் சந்தைக்கு கவுன்சில் எப்போது செல்லும் என்பதை தெரிவிக்குமாறு தோழர் தினா கேட்டுக் கொண்டார்.

ரெம்பாவ்  பொதுச் சந்தை அன்றாட பயன்பாட்டுக்கு தேவையான ஒரு அடிப்படை வசதி, சீரான பராமரிப்பின்றி இப்படி புறக்கணிக்கப்படுவது மிகவும் வருத்தமாக உள்ளது என்று பி.எஸ்.எம் கவலை தெரிவித்து.  

Meja Media Bilik Gerakan PSM P131 Parlimen Rembau 12.30PM


BN வேட்பாளர்கள் கைகடிகாரங்கள், ஆடம்பர கைப்பைகளின் மதிப்பை அறிவிக்குமாறு பிஎஸ்எம் அறிவுறுத்துகிறது


இந்தப் 15-வது  பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி கட்சி அளித்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகள்,  சோசலிச வாக்குறுதிகள் மாதிரியாக இருப்பது ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறது என்று அந்நடவடிக்கை  குறித்து  சோசலிசக் கட்சி கருத்து தெரிவித்திருக்கிறது. 

இது குறித்து கட்சியின் தேசிய துணைத்தலைவரான எஸ்.அருட்செல்வன் கூறுகையில்,  "முதலாளித்துவக் கூட்டணியான BN  "  கடந்த காலங்களில் அடிப்படை ஊதியம் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு  இலவசக் கல்வி போன்ற கோரிக்கைகளை PSM முன்வைத்தபோது அது  முட்டுக்கட்டையாக இருந்தது. பிரசாரக் காலத்தில் மட்டுமே  மக்களை  விரும்பும் கட்சிகளிடம் வாக்காளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம். "பூரணமாக  வறுமையை ஒழிப்போம்" என்ற வாக்குறுதியை BN தனது வேட்பாளர்களுக்கு வழங்கும் முன் தங்கள் சொத்துக்களை முதலில் அறிவிக்க வேண்டும்" என்று   அருட்செல்வன் அறிவுறுத்தினார். 

"அவர்கள் ஒவ்வொருவரின்  டிசைனர் கைக்கடிகாரம் மற்றும் கைப்பைகளின் மதிப்பினை  வெளிப்படுத்த வேண்டும். சில அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் அத்தகைய பொருட்களை வைத்திருப்பது எப்படி என்பது நாம் அனைவரும் அறிவோம். அதன் விலையை ஆராய்ந்தால் ஒரு   B40  தன்  வாழ்நாள் முழுவதும்  சம்பாதிக்கக்கூடியதை விடவும் அது  அதிகமாக இருக்கும் " என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.


வருமானத்தில்  இடைவெளி அதிகரித்து வருகிறது

கடந்த சில வருடங்களாக மலேசியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான வருமான இடைவெளி அதிகரித்து வருகிறது. 

"தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்க முடிந்தால் மற்றும் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளியை குறைக்க  முயற்சித்தால் மட்டுமே BN தீவிர வறுமையைக் குறைக்க முடியும். அதை செயற்படுத்துவதற்கு முன்,  அவர்கள் முதலில் தங்கள் சொத்தை அறிவிக்க வேண்டும். 

பேராக் மற்றும் சபாக் பெர்னாமில் இருந்து B40 தொழிலாளர்கள் நவம்பர் 3 2021 அன்று BN அலுவலகத்திற்கு வந்தபோது, ​​அவர்களின் மகஜரைப்  பெற யாரும் முன்வரவில்லை.  அன்றைய தினம், அரசாங்கத் துறையில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்யும்  முறையை ஒழிப்பதற்கு ஆதரவளிக்குமாறு சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள்  BN ஐ நாடி  வந்திருந்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது" என்றும் அருட்செல்வன் கூறினார்.

நன்றி மலேசியாகினி https://m.malaysiakini.com/news/643116

Friday, November 4, 2022

15 - வது பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கை


 முன்னுரை 

வருகின்ற  15-வது பொதுத்தேர்தலில் பங்கேற்பதன் மூலம் மலேசியாவில் அரசியல், பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்த முயற்சிகளுக்கு உயிர்ப்பூட்ட வல்ல  புதிய சுவாசத்தை வழங்க மலேசிய சோசலிசக் கட்சி (PSM) தயாராக உள்ளது. 

இக்காலக்கட்டத்தில் நம் நாடு உலகளாவிய பொருளாதார நெருக்கடி, பொது மக்களை ஆழமாக பாதித்த கோரணி நச்சில் தொற்றுநோயால் ஏற்பட்ட சுகாதார நெருக்கடி, மனிதகுலத்தை அச்சுறுத்தும் உலகளாவிய காலநிலை நெருக்கடி, பாதுகாப்பின்மை, உழைக்கும் வர்க்கத்தின்  வாழ்க்கை செலவினம், அதிகரித்து வரும் பொருளாதார இடைவெளி, தற்போதுள்ள தேசிய நிர்வாக அமைப்பின் மீது மக்கள் அடைந்துள்ள நம்பிக்கையின்மை, மக்களைப் பிரிக்கும் அடிப்படைவாத அரசியலின் அச்சுறுத்தல்  போன்ற பல்வேறு நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், மாணவர்கள், தெருவோர வியாபாரிகள், சிறு வியாபாரிகள், B40 மற்றும் M40 குடிமக்கள் மற்றும் பல தரப்பினரை உள்ளடக்கிய சாமானிய மக்கள், அதாவது பாமர மக்கள், இந்த நெருக்கடியின் அனைத்து விளைவுகளையும் எதிர்நோக்கும் சமூகமாக ஆக்கப்பட்டுள்ளனர்.

நிலை இப்படி இருப்பினும், இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் திறம்படச் சமாளிக்கவும், நிலையான வழியை வழங்கவும் அரசாங்கத்தால் இன்னும் இயலவில்லை.

இதுவரை ஆட்சி செய்த எந்த அரசாங்கமும் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் தீர்க்கமான அரசியல், பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களைச் செயல்படுத்தத் தவறியதாலேயே இது நடந்தது. இன்றும் தொடர்கிறது.

எனவே, பாமர மக்களை வாட்டி வதைக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கக்கூடிய புதிய அரசியல் சக்தி நமது நாட்டுக்குத் தேவை. நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றத்திலும் பாமர மக்களை உண்மையாகவும் உளச்சான்றுடனும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஒரு குரல் நமக்குத் தேவை.

பாமர மக்களின் போராட்டத்திலிருந்து பிறந்த, பாமரனின் குரலை எப்பொழுதும் நிலைநிறுத்தி வந்த PSM, பாமர மக்களின் குரலை நம் நாட்டின் சட்டமன்றத்தில் நிலைநிறுத்துவதில் உறுதியாக உள்ளது. நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப் பேரவையிலும் சீர்திருத்தத்திற்காகப் போராடும் உரத்த குரலின் இருப்பு, எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் மற்றும் சமூகத்தின் நலனுக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய சீர்திருத்தங்களைச் செயல்படுத்த வலியுறுத்தும் சக்தியாக செயல்படும். பாமர மக்களின் குரலைத் தேர்ந்தெடுங்கள்!  

 

          மலேசியர்களுக்கான பி.எஸ்.எம் தேர்தல் அறிக்கை

          6 தராசுகள் 

 

  •     வேலை உத்தரவாதத் திட்டம்
  •     உணவு உத்தரவாதம்
  •    சமூக பாதுகாப்பை வலுப்படுத்துதல்
  •    மக்களுக்கான வீட்டுரிமை
  •    பேரிடர் காலத்தை கையாளுதல
  •    தேசிய நிர்வாக நிறுவனங்களின் சீர்திருத்தம் 

 இந்த கூறுகளானது எங்கள் போராட்டத்திற்கு அடிப்படையாக விளங்கும். மேலும், பாராளுமன்றத்திலோ அல்லது மாநிலங்களவையிலோ உங்கள் பிரதிநிதியாக நாங்கள் வெற்றிகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டால் இவற்றை செயல்படுத்தும் வேலைகளைச் செய்வோம்.   

 1வேலை உத்தரவாதத் திட்டம்

1. மக்களுக்கு வேலை வாய்ப்பையும், வேலை உத்தரவாதத்தையும் ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

2. முதியோர்களை பாதுகாப்பதற்கும், பாலர் பள்ளி குழந்தைகளை பராமரிப்பதற்கும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். மேலும், ஊனமுற்றோர்களுக்கும் ஏழைகளுக்கும் நேரடியாக உதவுவதற்கு சமுக வேலையாட்களை அதிகரிக்க வேண்டும்.

3. சுகாதார துறையில் வேலையாட்களை அதிகரிக்க வேண்டும். அதாவது தாதியர், டாக்டர், ஆய்வக தொழில்நுட்பவியலாளர் மற்றும் பல சுகாதார பகுதியில் தொழிலாளர்களை அதிகரிக்க வேண்டும்.

4. புதிய தொழிற்துறையான மின்சார பஸ் கட்டுமானம் மற்றும் ஹைட்ரஜன் பஸ் போன்ற துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு அதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். இதோடு நின்று விடாமல், நாட்டின் பொது போக்குவரத்தையும் மேம்படுத்த வேண்டும்.

 

5. சுத்தமான ஆற்றல் கல்வியில் முதலீடு செய்ய வேண்டும். இதற்கு தோதுவான துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். காடுகள் பாதுகாப்பு, ஆறுகளை சுத்தமாக வைத்திருக்க, உள்நாட்டு கழிவு செயலாக்க தொழில்நுட்பம் மேலும் மறுபயநீடு ஆகிய துறைகளில் வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

2.உணவு உத்தரவாதம் (பாதுகாப்பு)

1.அரசாங்க நிலத்தை வைத்திருக்கும் நிறுவனங்கள் ( GLC அரசாங்க தொடர்புடைய நிறுவனங்கள் ) அன்றாட உணவு உற்பத்தி பொருட்களை கடுமையான முறையை கையாள்வதோடு, விவசாய நிலபரப்பை அதிகரித்து உணவு இறக்குமதி எதிர்பார்ப்பை குறைக்கின்றன.

2. நடைமுறையில் உள்ள உணவு உற்பத்தி பொருட்கள் நிரந்தரமாக்க வேண்டும் :

_  அரசாங்க நிலத்தில் விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும்

_  மண் தூர்வாரும் (திருடும் , சுரண்டும் ) திட்டத்தினால் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

_  தோட்டங்களில் கால்நடை வளர்ப்பு அனுமதிக்கப்பட வேண்டும்

_ நில அபகரிப்பு /  சட்டவிரோத வெளியேற்றம் மற்றும் கடல் நிலங்களின் ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும்.

3) உணவுபொருட்களின் அதிகபட்ச விலை கட்டுபாடு நிர்ணயித்தல். மற்றும் நெல் பயிரிடுபவர்களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்குவதின் மூலம் விவசாய / உற்பத்தி  செலவுகளை  குறைக்கலாம்.

4 ) சர்வதேச அமைதி உடன்படிக்கை முயற்சியை ஆதரிப்பதோடு உக்ரைன் - ரஷ்யா  போரினால் ஏற்படும் உணவு இறக்குமதி செலவு  அதிகரிப்பை தவிர்க்கலாம்.

 

3.சமூக பாதுகாப்பை வலுப்படுத்துதல்

1. அரசாங்க ஓய்வூதியம் அல்லது சொக்சொ போன்ற பிற சலுகைகளைப் பெறாத அனைத்து முதியவர்களுக்கும் (>65வயதுக்கு மேற்பட்டவர்கள்) RM500 மாதாந்திர ஓய்வூதியம்.

2. ஒப்பந்தத் தொழிலாளர்கள், ரப்பர் விவசாயிகள், நெல் விவசாயிகள், மீனவர்கள், சிறு வணிகர்கள், கிக் தொழிலாளர்கள் மற்றும் இல்லத்தரசிகள் உட்பட அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் சொக்சொ திட்டத்தின் பலன்கள் கிடைக்க வேண்டும். இந்த பங்களிப்பு 100% அரசாங்கம் ஏற்க வேண்டும்.

3. உணவுப் பொருட்களின் அதிகரிப்பு கட்டுப்படுத்தப்படும் வரை அனைத்து B40 குடும்பங்களுக்கும் மாதத்திற்கு RM200 பண உதவி

4. பூர்வீக குடியினர், ஊனமுற்ற நபர்கள் (OKU) மற்றும் பாலியல் சிறுபான்மையினருடன், அவர்களின் தேவைகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தும் அணுகுமுறையின் மூலம் அனைத்து நியாயமற்ற கொள்கைகள், கையாளுதல்களை நிறுத்துங்கள்.

இனம், மதம், பாலின அடையாளம் மற்றும் உடல் அல்லது மன திறன் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த விதமான பாகுபாடுகளையும் தடுக்க, பாகுபாடு எதிர்ப்புச் சட்டத்தை இயற்றவும்.

4.மக்களுக்கான வீட்டுரிமை

1. B40 மக்களுக்காக வாடகைக்கு ஆண்டுக்கு 100,000 PPR வீடுகளை கட்டுவதே இதன் இலக்காகும். ஒரு யூனிட்-டுக்கு RM100,000 க்கும் குறைவான விலையில் மலிவு வீடுகளை குறிப்பாக B40 மற்றும் M40 நபர்களுக்கு கட்டவும் மற்றும் விற்கவும் சிறப்பு வீட்டுவசதி வாரியம் (இலாப நோக்கற்ற நிறுவனம்) உருவாக்க வேண்டும்.   

2. குறைந்த விலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் பராமரிப்புப் பணியை நகராட்சி / நகர சபை ஏற்க வேண்டும். மாநகர மன்றத்திற்கு உதவ வருடத்திற்கு RM2 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்ய முயற்சிக்கப்படும்.  

3. நகர முன்னோடிகளுக்கு அவர்கள் குடியிருக்கும் கிராமத்திலேயே நியாயமான பிரீமியத்துடன் நில உரிமை வழங்க வேண்டும்.

4. தோட்ட உரிமையாளர்கள், தோட்டப்புற தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகளை உருவாக்கத் தவறினால், அவர்களுக்கு எதிராக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய விவசாய தொழிலாளர்களுக்கு வீடு வழங்க வேண்டும்.

5. நீண்ட நாட்களாக ஆட்கள் வசிக்காத வீடு/ அபார்ட்மெண்ட் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகள்/அபார்ட்மெண்ட் வைத்திருப்பவர்களுக்கு வரி விதிப்பதன் மூலம் ஆதாய வேட்டை செயல்பாடுகளை குறைக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்தலாம்.

5பேரிடர் காலத்தை கையாளுதல்

1. காலநிலை அவசரநிலையை பிரகடனப்படுத்தினால், சமூகம் மற்றும் அரசு விழிப்புடன் இருப்பதோடு உடனடியாக செயலாற்ற முடியும்.

2. நிரந்தர வனப் பகுதியில் மரம் வெட்டுவதையும் சுரங்கப் பணிகளை மேற்கொள்வதையும் உடனடியாக நிறுத்த வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் (NGO) இணைந்து காடுகளை மீட்டெடுக்கும் திட்டத்தை தொடங்க வேண்டும்.

3. செம்பனை ஆலை கழிவு மற்றும் சாக்கடை கழிவுகளைக் கொண்டு, சோலார் பேனல்கள், மின்சாரம்/மீத்தேன் உள்ளிட்ட உற்பத்தியை அதிகரிப்பதற்கான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை விரைவுபடுத்துங்கள்.

4. ஆடம்பர புதிய கார் வாங்குபவர்களுக்கு பெர்மிட் கட்டணத்தை அறிமுகப்படுத்த வேண்டும். சேகரிக்கப்படும் வருவாய் பணத்தை மலேசியா முழுவதும் பொதுப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் மின்சார/ஹைட்ரஜன் பேருந்துகளின் இயக்கச் செலவுகளுக்கு பயன்படுத்திகொள்ளலாம்.

5. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பெட்ரோல்/டீசல் மானியத்தை வெற்றியடையச் செய்வதற்காக B40 வாகனப் பயனர்களுக்கு மாதத்திற்கு RM300 மானியத்தை நேரடியாக வழங்க வேண்டும்.

6. 2028 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே மின்சார உற்பத்திக்கான எரிபொருளாக நிலக்கரியைப் பயன்படுத்துவதை நிறுத்த இலக்கு நிர்ணயம் செய்ய வேண்டும்.

7. கடல் மட்ட உயர்வு, வெள்ளம், வறட்சி மற்றும் வெப்பமயமாதல் ,  பிற காலநிலை நெருக்கடி விளைவுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதற்காக, மக்களிடையே , குறிப்பாக விளிம்புநிலை மக்களிடையே  வசதிகள் மற்றும் திறனை அதிகரித்தல்.

 6.தேசிய நிர்வாக நிறுவனங்களின் சீர்திருத்தம்

1. தலைமை நீதிபதி, ஊழல் தடுப்பு அமைப்பின் தலைவர், தேர்தல் ஆணையத்தின் தலைவர் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் (சுஹாகம்) நியமனத்தில் தேசிய நிர்வாக நிர்வாகியின் (பிரதமரின்)  தலையீட்டைத் தவிர்க்க வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் வேண்டும். அரசுசாரா சமூக அமைப்புகளின் ஈடுபாடு மற்றும் கருத்துகள், மற்றும் இரு கட்சி அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு நியமனக் குழு உருவாக்கம்.

2. அரசியல் கட்சிகளுக்கான பொது நிதியுதவிச் சட்டம். ஒவ்வொரு கட்சியும் பெற்ற தேர்தல் வாக்குகளின் அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்கு ஆண்டுக்கு 200 மில்லியன் ரிங்கிட் நிதியை பகிர்ந்தளிக்க வேண்டும்.

3. தேசத்துரோகச் சட்டம், அச்சகம் மற்றும் வெளியீட்டுச் சட்டம், பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சொஸ்மா சட்டம் (SOSMA) மற்றும் பல அரசாங்கத்தின் அரசியல் அடக்குமுறையின் கருவிகளான செயல்களை/சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். சுயற்சை போலீஸ் நடத்தை ஆணையத்தை (IPCC) நிராகரித்து, சுயற்சை   போலீஸ் புகார்கள் மற்றும் தவறான நடத்தை ஆணையத்தை (IPCMC) உடனடியாக நிறுவுவதற்கு ஒப்புதல் அளிக்கவும்.

4. ஆண்டுக்கு 40 பில்லியன் ரிங்கிட் பொது நிதி கசிவைத் தடுப்பதில் தீர்க்கமாகச் செயல்பட தேசிய தணிக்கை தலைவருக்கு (ஆடிட்டர் ஜெனரலுக்கு) அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.

5. பிரதமர் மற்றும் மந்திரி பெசாரின் பதவிக் காலத்தை 2 தவணைகளாக (10 ஆண்டுகள்) வரம்பிடவும்.

6. உள்ளூர் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், உள்ளூர் மக்களுக்கு உள்ளாட்சி பொறுப்புக்கு உத்தரவாதம் அளிக்கவும் உள்ளாட்சி தேர்தலை மீண்டும் கொண்டு வாருங்கள்.
பி.எஸ்.எம் வேட்பாளர்களின் உறுதிமொழி 

1.நான் எந்த நேரத்திலும், எந்த தேர்தல் பிரச்சாரத்திலும் இன உணர்வுகளை வைத்து விளையாட மாட்டேன்.

2. நான் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தப் பதவியை துஷ்பிரயோகம் செய்து தனிப்பட்ட சொத்துக்களை குவிக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.

3.  தேர்தலில் நான் வெற்றி பெற்றால், ஒவ்வொரு ஆண்டும் எனது சொத்துக்களை பகிரங்கமாக அறிவிப்பேன்.

4. நான் எப்போதும் களத்தில் இறங்கி மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவற்றைத் தீர்க்க என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன், நாடாளுமன்றம்/ சட்டமன்றத்திலும் குரல் கொடுப்பேன்.

5. மக்கள் பிரதிநிதி பதவி என்பது மக்களின் புனிதமான நம்பிக்கையாகும். அப்பதவியை பொது நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கையை நான் கடைப்பிடிப்பேன். தனிப்பட்ட இலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன். 


Monday, October 17, 2022

உலக வறுமை ஒழிப்பு தினம் 2022

மலேசிய சோசலிசக் கட்சி பண்ணாட்டு ரீதியிலான உலக வறுமை ஒழிப்பு நாளை 17/10/2022 அன்று முன்னெடுத்தது


''உலக வறுமை ஒழிப்பு தினத்தை அனுசரிக்கும் அதே வேளையில், இன்னும் சில நாட்களிம் நாம் 15-வது தேசிய பொதுதேர்தலையும் சந்திக்க உள்ளோம். இதை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில் பாமர மக்களின் கூட்டணியைச் (மார்ஹைன்) சேர்ந்த நாங்கள்,  அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் வேட்பாளர்களையும் பாமர மக்களின் நல்வாழ்வுக்காக  கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கையை வைக்கிறோம். 

மேலும், நாட்டில் வறுமையை ஒழிக்க சரியானதொரு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். 

கோவிட் காலக்கட்டத்தில் நாட்டு மக்களின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக பாதிக்கப்பட்டுள்ளது. M40 நிலையில் இருந்த மக்கள்  B40 நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். B40  நிலையில் இருந்த மக்களில் பெறும்பான்மையினர் B20 நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் சூழலை ஆராய வேண்டும். 

இன்னும் தெளிவாக சொல்லப்போனால் 5.6% இருந்த நாட்டின் ஏழ்மை விகிதாச்சாரம் 8.6% உயர்ந்துள்ளது. இந்த நிலையை கலைவதற்கும் பாமர மக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு கைகொடுக்க வேண்டும்.'' பாமர மக்களின் கூட்டணி கேட்டுக்கொண்டது. பிஎஸ்எம் காப்பார் சேவை மையம்- திறப்புவிழாக் கண்டது

  மலேசிய சோசலிசக் கட்சி   ( பிஎஸ்எம் ) காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில் தமது சேவையை   தொடங்கியது .   பிஎஸ்எம் காப்பார் சேவை மையம்   26...