Thursday, February 25, 2021

மொழியும் மதமும்



1. மொழியும் மதமும் வேறு. தமிழ் பேசுபவர்கள் அனைவரும் இந்துக்கள் அல்ல. இந்துக்கள் அனைவரும் தமிழர்களும் அல்ல. இதுதான் அடிப்படை. ஒரு மொழி சார்ந்த பாட புத்தகம் ஒரு மதத்தை மட்டும் தூக்கி புடிக்க வேண்டும் என கட்டாயம் இல்லை. அது எந்த மதம் சார்ந்த மற்றும் மதம் சாரா நபர்களைப் பற்றியும் பேசலாம். ஒரு மொழி ஒரு மதத்தின் சொந்தம் ஆகாது

 

2.      2.  சமயம் மற்றும் கடவுள் நம்பிக்கை வளர்க்கும் பொறுப்பு பள்ளிகளுக்கும் பாட புத்தகத்திற்கும் இல்லை என்பதுதான் உண்மை. இந்த கருத்து எல்லாம் சமயத்திற்கும் சாரும். ஒரு மதத்தின் மீது இருக்கும் அணுகுமுறை கண்டிப்பாக இதை எழுதும் எனக்கும் இதைப் படிக்கும் உங்களுக்கும் கண்டிப்பாக வெவ்வேறாகத்தான் இருக்க முடியும். இந்த உறவு என்றும் ஒரே மாதிரி நிலைத்து நிற்காது; காலத்திற்கு ஏற்ப மற்றும் வளரும் சூழ்நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு தனிமனிதனுக்கும் மாறிக்கொண்டே இருக்கும்.

 

3.  3. ஒரு மொழி சார்ந்த பாட புத்தகம் அந்த சமூகத்திற்குப் பங்காற்றியவர்கள் பற்றி பேசுவதில் எந்த தப்பும் இல்லை. மகாகவி பாரதியார் முதல் பெரியார் வரை சமூக நீதி பற்றி பேசிய அனைவரை பற்றியும் கற்று தர வேண்டும். இது காலத்தின் கட்டாயம். சமூக நீதி பேசிய மற்றும் போராடியவர்களின் பேரும் புகழும் அரை பக்க எழுத்துக்கள் தாண்டி நிலைத்து நிற்கும். சமூக ஏற்ற தாழ்வு இருக்கும் வரை இவர்களின் கருத்துக்கள் என்றென்றும் ஒலிக்கும்.

 

4.       4. திராவிடம் என்பது ஒரு சமூக நீதி சொல். அன்று அது தமிழ் மற்றும் அதன் குடும்ப மொழியைக் குறிக்கும் சொல்லாக இருக்கலாம். ஆனால் இன்று திராவிடம் என்பது ஒரு சமூக நீதி கருத்தியல். சாதிய கட்டமைப்பு எதிராக பேசும் கருத்தியல். பெண் அடிமைத்தனம் எதிராக பேசும் கருத்தியல். பெரியார் திராவிடத்தை உருவாக்கவில்லை. அதை அவருக்கு முன்னர் அயோத்திதாசரும் பேசினார். திராவிடம் என்பது கடவுள் எதிர்ப்பு கொள்கை என குறுகிய சிந்தனையில் பொய் பரப்புவது என்பது கருத்தியல் சார்ந்த உரையாடலுக்கு நீங்கள் செய்யும் துரோகம்.

5.      5. தமிழருக்குத் தை முதல் நாளே புத்தாண்டு என்று முடிவு எடுத்தது கட்சி சார்ந்த அரசியல் பேசுபவர்கள் அல்ல. 1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடினர். தமிழ் ஆண்டு என்று ஓர் ஆண்டுமுறை வேண்டும், அதை திருவள்ளுவர் பெயரில் ஆரம்பிக்கலாம் என கருத்து எடுத்து வைக்கப்படுகின்றது. இந்த மாநாட்டில் நாத்திகர்கள் மட்டும் கலந்துக் கொள்ளவில்லை. மறைமலை அடிகள் மற்றும் திரு.வி.க போன்ற சைவ சமயத்தை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர் என்பதை இன்றைய மதம் சார்ந்த அமைப்புகள் அறிவார்களா?

6.       6. உலகில் இயங்கும் எல்லாம் கருத்துக்களும் தத்துவங்களும் விமர்சனங்களுக்கு உட்பட்டு ஆக வேண்டும். மதம் இதற்கு விதிவிலக்கு அல்ல. விமர்சனங்களுக்கு உட்படும் கருத்துக்கள் முற்போக்கான கருத்துக்களை முன்வைக்கும். புனிதம் என்ற பெயரில் விமர்சனங்கள் மற்றும் கேள்விகளைத் தவிர்த்து வரும் தத்துவங்கள் குறிப்பாக மதம்; மதம் சார்ந்த அமைப்புகள் பிற்போக்காகவே இருக்கும். 

7.       7. காலம் காலமாக விமர்சனங்களுக்கு உட்பட்டுத்தான் வருமையை எதிர்த்தும் முதலாளித்துவத்தை விமர்சனம் செய்யும் போப்பாண்டவர் கிறித்தவர்களுக்குக் கிடைத்தது. வெற்றியா தோல்வியா என்ற கேள்வியைத் தாண்டி குறைந்த பட்சம் குரலாவது எழுந்தது. வாசகர்கள் சார்ந்த மதங்களும் இதை பற்றி பேச வேண்டும். திடிரென எழுந்த சனாதன கும்பல் எத்தனை முறை நாட்டின் குறைந்த பட்ச சம்பளத்தை எதிர்த்து பேசிருப்பார்கள்?

 

8.       8. சமூகநீதி பேசுவதற்கு எந்த வேதத்தை மேற்கோள் காட்டுவீர்கள்? இராமாயணம் மகாபாரதம் இவற்றில் எதையாவது? அசுரர்களை மற்றும் கெட்ட சக்திகளை வீழ்த்திய வீரம் தொழிலாளி வர்க்கத்திலிருந்து சுரண்டும் முதலாளித்துவத்தை எதிர்ப்பதில் எங்கே?

 

9.      9.  இன்றும் மலேசியாவில் சாதிய கட்டமைப்பு அதிகமாகவே காணப்படுகின்றது. சாதிய அமைப்புகள் பரவலாக காணப்படுகின்றன. இதனைத் தகர்க்கும் வழிமுறை எதேனும் இந்து மதம் சார்ந்த அமைப்புகளுக்கு உண்டா? குரல் எழுப்பி உள்ளனரா?

 

10.   10. இன்றும் மலேசியாவில் சாதிய அடையாளங்களுடன் திருமணம் மற்றும் சடங்குகள் நடைபெற்று தான் வருகின்றன. இந்த அடையாளங்களை விளக்கியும் எதிர்த்தும் இந்து மதம் சார்ந்த அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளனரா?

 

1111. பெரியார் பள்ளி பாட புத்தகங்களில் இருக்க கூடாது என தீவிரம் காட்டும் இத்தனை அமைப்புகளும் இந்தியாவில் உள்ள உங்கள் தோழமை அமைப்புகளுடன் நிலமற்ற ஏழை விவசாயிகள் எப்படி நலம் பெற என கருத்து பரிமாற்றம் நடந்ததுண்டா? அதில் தீவிரம் எங்கே?

 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான














காந்திபன் நந்தகோபாலன்,
செயலாளர், பி.எஸ்.எம் இளைஞர் அணி.

 

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...