Thursday, October 8, 2020

நாட்டின் முதல் வரலாற்று வெற்றி...


செப்டம்பர் 28, 2020 அன்று, மேல்முறையீட்டு நீதிமன்றம் விதவைகளுக்கு ஒரு வரலாற்று முடிவை வழங்கியது.

கணவர் இறந்த பிறகு ஓய்வூதியம் கோரி விதவையாக இருக்கும் சீனப் பெண்மணியான லம் குன் தை சொக்சோ நிறுவனத்திடம் விண்ணப்பம் கோரியுள்ளார். அவரது திருமணம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்படாததால் அவரது கோரிக்கையை சொக்சோ  நிராகரித்தது. இந்த வழக்கில் வேறு எந்த தரப்பினரும் இந்த உரிமைகளை கோரவில்லை என்றாலும், லோம் குன் டாயின் கூற்றை சொக்சோ தொடர்ந்து நிராகரித்தது.

 லம் குன் தாய் சொக்சோ-வின் மேல் வழக்கு தொடர்ந்து உயர்நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று 2017-ல் குறிப்பிட்ட அந்த வழக்கில் வென்றார், அதன் பிறகு சொக்சோ, அவ்வழக்கை  மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது. இறுதியாக, மேல்முறையீட்டு நீதிமன்றம் சோக்சோவின் முறையீட்டை நிராகரித்து  லம் குன் தை-யிடம்  ஓய்வூதிய கோரிக்கையை கொடுக்கும்படி உத்தரவிட்டது.

 இந்த முடிவானது மலேசியாவில் ஒரு வரலாற்று முடிவாகும். இந்த முடிவானது தொழிலாளர் வர்க்கத்திற்கு நன்மைகளைத் தருகிறதா என்பதை அறிய, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை பிஎஸ்எம் அதன் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்தது. அந்தச் சந்திப்பில் லம் குன் தை மற்றும் அவரது வழக்கறிஞர் பி.என். மணிமேகலை கலந்துக்கொண்டு விளக்கமளித்தனர்.



(ஊழியர்கள் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969 என்பது ஒரு சமூகப் பாதுகாப்புச் சட்டமாகும். இது மனிதநேயம் மற்றும் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டதோடு நவீன சமூக பாதுகாப்புக் கருத்துக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.)

Wednesday, October 7, 2020

சிலாங்கூர் நீர் நெருக்கடி, அவதிப்படும் மக்கள்!!

சிலாங்கூர் நீர் நெருக்கடி : மாநில அரசின் மெத்தனப் போக்கு அவதிப்படும் மக்கள்!!



சுமார் ஒரு மாதக் காலக்கட்டத்திற்கு பின்னர் மீண்டும் சிலாங்கூர் மாநிலத்தில் நீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இம்முறை செமிஞ்செ ஆற்றில் மாசு ஏற்பட்டிருப்பதாகவும்
 சுமார் 274 பகுதிகளில் வாழும் 309,687 மக்கள் இதனால் பாதிக்ககூடும் எனவும் அதில் கோலா லங்காட்,உலு லாங்காட்,சிப்பாங் மற்றும் பெட்டாலிங் ஆகிய பகுதிகளும் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்பட்டுள்ள நீர் நெருக்கடி சூழலை கவனிக்கும் போது சிலாங்கூர் மாநில அரசு இவ்விவகாரத்தை ஆக்கப்பூர்வமாக கையாளவில்லை எனவும் இது மாநில அரசாங்கத்தின் பலவீனமான கையாடல் எனவும் சிலாங்கூர் மாநில மலேசிய சோசலிச கட்சி கருதுகிறது. கோவிட்-19 பெருந்தொற்று மக்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் அதேவேளையில் மக்களை ஆரோக்கியமாகவும் சுகாதாரமாக இருக்க வலியுறுத்தும் காலக்கட்டத்தில் தூய்மையான நீர் இல்லாமல் மக்கள் அவதிப்படுவது வருத்தம் அளிக்கிறது.

 

சிலாங்கூர் மாநில பி.எஸ்.எம் பின்வரும் ஆலோசனைகளை  முன் வைக்கிறது:

1.அமைக்கப்பட்டிருக்கும் சிலாங்கூர் நீர் விநியோகம் சிறந்த மற்றும் ஆக்கப்பூர்வமான சேவையினை  மக்களுக்கு வழங்கிட தவறியுள்ளது.சிலாங்கூர் நீர் வாரியத்தை நிர்வாகிக்க நிறுவனங்கள் தொடர் மாற்றங்களை கண்டபோதிலும் மக்களுக்கான அவசிய தேவைகளில் அதீத கவனம் செலுத்தப்படவில்லை.மாசுப்படுத்தப்படுவதால் ஏற்படும் நீர் விநியோக தடையையும் அதனால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளையும் களைவதிலும் அதனை அக்கப்பூர்வமாக கையாள்வதற்காகவும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் கடுமையான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

2.சிலாங்கூர் மாநிலத்தின் அதீத வளர்ச்சி நிலையோடு ஒப்பிடுகையில் மையப்படுத்தப்பட்ட நீர் சேவையால் அது பூர்த்தி செய்ய முடியாது.எனவே,மழை நீர் சேகரிப்பு திட்டத்தை ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும் உருவாக்கப்பட்டு அதனை மாநில அரசு நிர்வாகிக்கவும் வேண்டும். இந்நடவடிக்கை நீர் நெருக்கடி சிக்கலை குறைப்பதோடு நீர் தேவையால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும்.

3.சிலாங்கூரில் அடிக்கடி நிகழும் இப்பிரச்னையை மாநில அரசாங்கம் இயல்பாக நடக்கும் நீர் பிரச்னையாக கருதாமல் இதனை மிக கடுமையான நீர் மாசுப்படுத்தலாக கருதிட வேண்டும். நீர் மாசுப்படுத்தலை ஏற்படுத்துவோர் மீது மாநில அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதற்கிடையில், மாநில அரசாங்கம் நீர் விநியோகம் சட்டம் 1999இல் மாற்றம் செய்து அபதாரத்தை அதிகப்படுத்தியிருந்தாலும்,அது போதுமானதல்ல. மாறாய்,சம்மதப்பட்ட நிறுவனங்கள் மீது மக்களின் நலன் கருதி அந்நிறுவனங்களின் செயல்பாட்டுக்கு நிரந்திர மூடுவிழா செய்தல் வேண்டும்.

4.அதேவேளையில், இப்பிரச்னை தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்,நீர் மாசு மற்றும் ஆற்று தூய்மைகேடு ஆகியவற்றை கவனித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவை யாரின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுள்ளது?அது ஏன் தொடர்ந்து ஏற்படுகிறது எனும் கேள்வியும் எழுகிறது. சரியான அல்லது துரிதமான கண்காணிப்பு இல்லாமல் போனால் இம்மாதிரியான நீர் மாசுப்படுத்துதல் தொடர்கதையாகத்தான் இருக்கும். இப்பிரச்னையில் மத்திய அரசாங்கத்தையோ அல்லது சுற்றுச்சூழல் இயற்கைவள இலாகாவையோ குற்றம் சொல்வது ஏற்புடையதல்ல. அது நேரம் விரயம் தான்.இதனால் அடிமட்ட பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது என சிலாங்கூர் பி.எஸ்.எம் கருதுகிறது.

5. சுற்றுச்சூழல் மாசுப்படுத்தலை சுற்றுச்சூழல் இயற்கை வளம் மற்றும் சிலாங்கூர் நீர்வள வாரியம் ஆகிவற்றின் கண்காணிப்பு மட்டும் போதுமானதல்ல. ஆற்றின் அருகில் அபிவிருத்து அல்லது நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கும் உள்ளூர் ஊராட்சித்துறையும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். சட்டவிரோத தொழிற்சாலை மற்றும் ஆற்றோர நிலவுரிமையாளர்தான் இதற்கு காரணம் என கூறும் அலட்சியமான பதிலை தொடர்ந்து கூறாதீர்கள். ஆற்றோர நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அது அரசு நிலமாக பதிவு செய்யப்பட வேண்டும். அங்கு எவ்வித மேம்பாடு நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என சிலாங்கூர் பி.எஸ்.எம் அறிவுறுத்துகிறது.

6.நீர் விரயத்தை குறைப்பது குறிப்பாக வருவாய் அல்லாத நீர் பயன்பாடு மற்றும் சிலாங்கூரில் நீர் குழாய் அமைப்பு முறை நிர்வாகித்தல் ஆகியவற்றில் சிலாங்கூர் மாநில அரசு ஆக்கப்பூர்வ மற்றும் நேர்த்தியான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் சிலாங்கூர் பி.எஸ்.எம் கேட்டுக் கொள்கிறது.நடப்பில் வருவாய் அல்லாத நீரின் பயன்பாடு அல்லது விரயம் 30 விழுகாடு என்பது குறிப்பிடத்தக்கது.


செல்வம் V
தலைவர்
பி.எஸ்.எம் சிலாங்கூர்




 

 

 

 

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...