Tuesday, January 19, 2021

‘புவி வெப்பமடைதல்’ – வரலாறு (பிரைய்ன் கோவ்)

ஜூன் 23, 1988-ல், நாசாவின் கீழ் உள்ள கோட்டார்ட் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (Goddard Institute for Space Studies) இயக்குநர் ஜேம்ஸ் ஹேன்சன், அமெரிக்க காங்கிரஸ் மாநாட்டில், ‘99 விழுக்காடு, புவி வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு, அது மனிதச் செயல்கள்தான், குறிப்பாக தொழில் துறைகளிலிருந்து வெளியேற்றம் காணும் கரிமம்,’ என்று விளக்கம் அளித்தார். அப்போதிருந்து, புவி வெப்பமடைதல் பிரச்சினைகள் உலகின் முக்கியக் கவனமாகிப் போனது.

டாக்டர் ஜேம்ஸ் ஹேன்சன்

1988-ஆம் ஆண்டின் அதே மாதத்தில், அறிவியலாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும், டொராண்டோவில் மாறிவரும் வளிமண்டலம் குறித்த உலக மாநாட்டை நடத்தினர். புவி வெப்பமடைதல் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்றும், கரிம வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டுமென்றும் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் கருதினர். கரிம உமிழ்வைக் குறைப்பதற்கான இலக்கு விவாதிக்கப்படுவது இதுவே முதல் முறை. நவம்பர் 1988-ல், புவி வெப்பமடைதலின் அச்சுறுத்தலைப் பெரும்பாலான நாடுகள் அங்கீகரித்ததன் விளைவாக, ​​ஐக்கிய நாடுகள் சபை, மாறிவரும் பருவநிலைகள் குறித்து, கொள்கை வகுப்பாளர்களுக்கு உண்மையான தகவல்களை வழங்க ‘அரசாங்கங்களுக்கு இடையிலான காலநிலை மாற்றக் குழு’வை (Intergovernmental Panel on Climate Change, IPCC) அமைத்தது.

1990-களில், ஐ.நா.வினால் ஒழுங்கமைக்கப்பட்ட பல்வேறு மாநாடுகள், காலநிலை மாற்றச் சிக்கல்களைக் கையாளத் தவறிவிட்டன. எனவே, 2015-ம் ஆண்டு, பாரிஸ் நடந்த ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் ‘பாரிஸ் ஒப்பந்தம்’ முன்வைக்கப்பட்டது. பாரிஸ் ஒப்பந்தம் 2°C-க்கும் குறைவான வரம்பில் புவி வெப்பமடைதல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டைக் கூறுகிறது; ஆனால், இது அவசரமாக நிர்ணயிக்கப்பட்ட ஓர் இலக்காகக் கருதப்படுகிறது.

2°C-க்கும் குறைவான வரம்பில் புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்தும் குறிக்கோள் 2009-ல் கோபன்ஹேகனில் நடந்த காலநிலை மாநாட்டில் அறிவிக்கப்பட்டபோது, ஆப்பிரிக்க நாடுகளின் பெரும்பாலான பிரதிநிதிகள் இது அவர்களுக்கு ஒரு “மரண தண்டனை” என்று விவரித்தனர். உண்மையில், சில தாழ்நிலத் தீவு நாடுகள், தங்களை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக வெப்பநிலையை 1.5°C-க்கும் குறைவான வரம்பில் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோருகின்றன. இறுதியாக, பாரிஸ் ஒப்பந்தத்தில் அதன் உறுப்பு நாடுகள், “1.5°C-க்கும் குறைவான வரம்பில் வெப்பநிலை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த கடுமையாக உழைக்கும்” என்று ஒரு விதிமுறையை சேர்ந்துகொண்டன, இது ஒரு பிணைப்பு இல்லாத விதிமுறையாக மட்டுமே வழங்கப்பட்டிருந்தாலும்கூட.

அக்டோபர் 8, 2018-ல், ‘1.5°C புவி வெப்பமடைதல் சிறப்பு அறிக்கை’ (Special Report on Global Warming of 1.5 °C, SR15) என்றத் தலைப்பில், ஐபிசிசி வெளியிட்ட அறிக்கை, புவி வெப்பமடைதல் 1.5°C-ஆக மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறியது, 2°C வெப்பத்துடன் ஒப்பிடும்போது மனித நாகரிகம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஏற்படும் மோசமான விளைவுகளை இது குறைக்கும். ‘கரிம உமிழ்வை ஒரு பெரிய அளவில் குறைக்க முடியும்’ என்றால், புவி வெப்பமடைதலை 1.5°C வரம்பில், வெப்பநிலையின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவது உண்மையில் சாத்தியமாகும்; ஆனால், அதற்காக மனித சமூகம் “இதற்கு முன் இல்லாதப் பெரிய, திடீர் மாற்றங்களை அனுபவிக்க தயாராக இருக்க வேண்டும்.”

அறிவியலாளர்களிடமிருந்து கிடைத்த சிறந்த ஆய்வுகளின் கணிப்புகளை ஐபிசிசி சமர்ப்பித்தது. அப்படியிருந்தும், அது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படுவதற்கு முன்னர், அதன் உறுப்பு நாடுகளால் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும். அறிக்கையின் உள்ளடக்கங்கள் 6,000-க்கும் மேற்பட்ட ஆதாரங்களில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டு, நூற்றுக்கணக்கான ஆசிரியர்களால் நிறைவு செய்யப்பட்டுள்ளன. ஐபிசிசி 1.5 டிகிரி செல்சியஸுக்குக் கீழே வெப்பத்தைத் தக்கவைக்க, பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றது :


1.    உலகளாவிய கரிம உமிழ்வை 2030-க்குள் பாதியாகக் குறைக்க வேண்டும்.

2.    உலகளாவிய கரிம உமிழ்வை 2050-க்குள் சுழிய நிகர் அளவை எட்ட வேண்டும்.

3.    அனைத்து முகான்மை பொருளாதாரங்களும் மேற்கண்ட தரநிலைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

4.    அனைத்து அம்சங்களிலும், இதற்கு முன்பு நிகழாத தீவிரமான மற்றும் பரவலான மாற்றம் சமூகத்தில் ஏற்பட வேண்டும்.


தற்போது, அதன் உறுப்பு நாடுகளால் செயல்படுத்தப்பட்டுள்ள கரிம உமிழ்வு குறைப்பு கொள்கைகளை மட்டுமே நாம் நம்பினால், கடல் மட்டங்கள் உயர்ந்து வரும்நிலையில், கடற்கரையோரத்தில் அமைந்துள்ள நகரங்களை அது வெள்ளத்தில் மூழ்கடிக்கும், பவளப்பாறைகள் அழிவை எதிர்கொள்வதோடு, நீடித்த வறட்சிகள் உலகெங்கிலும் பெருமளவில் பயிர்களை அழிக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவோம்.

“கரிம வரி” சேகரிப்பு போன்ற தொழில்நுட்ப அணுகுமுறைகள், ஒரு குறிப்பிட்ட தீர்வை கொடுக்கும் என ஐபிசிசி அறிக்கை உறுதிபடுத்தி இருந்தாலும், கரிம உமிழ்வை விரைவாகக் குறைக்கும் இலக்கை அது அடையவில்லை. உண்மையில், சமூகம் மாற்றங்களை விரைவில் செய்ய வேண்டும், ஆற்றலை உருவாக்கும் விதம், உணவை உற்பத்தி செய்யும் விதம், நகர்த்தும் விதம் மற்றும் வீடுகளைக் கட்டும் விதம் உள்ளிட்ட அனைத்திலும்.


கிரெட்டா துன்பெர்க்கி

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், 3-5°C புவி வெப்பமடைதல் வெப்பநிலையை அதிகரிப்பதை நோக்கி நமது உலகம் செல்லும் என்று உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization) கூறுகிறது. இதன் அர்த்தம் என்ன?

இந்தக் கட்டுரையின் முடிவாக, 1.5°C-க்குக் கீழே வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்ட ஓர் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்கியின் கூற்றை நான் மேற்கோள்காட்ட விரும்புகிறேன் :

“இந்தச் சிக்கலை நீங்கள் ஆராயும் வரை, நமக்கு புதிய அரசியல் தேவை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். குறைந்து வரும் மற்றும் வரையறுக்கப்பட்ட கரிம வரவுசெலவு திட்ட (கரிம பட்ஜெட்டின்) அடிப்படையில், நமக்கு ஒரு புதிய பொருளாதாரத் திட்டம் தேவை. ஆனால், அது மட்டும் போதாது. நமக்கு புதிய சிந்தனைகள் தேவை… நாம் ஒருவருக்கொருவர் போட்டியிடுவதை நிறுத்த வேண்டும். நாம் ஒன்றாக வேலை செய்யத் தொடங்க வேண்டும், முக்கியமாக, கிரகத்தின் வளங்களை நியாயமான முறையில் பகிர்ந்துகொள்ள வேண்டும்.”

-பிரைய்ன் கோவ், 

மலேசிய சோசலிசக் கட்சியின், சுற்றுச்சூழல் பிரிவு செயற்பாட்டாளர்

தமிழாக்கம் :- சாரணி சூரியமதன்

சிலாங்கூர் நீர் நெருக்கடி : மாநில அரசின் மெத்தனப் போக்கு அவதிப்படும் மக்கள்!!

 

சுமார் ஒரு மாதக் காலக்கட்டத்திற்கு பின்னர் மீண்டும் சிலாங்கூர் மாநிலத்தில் நீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இம்முறை செமிஞ்செ ஆற்றில் மாசு ஏற்பட்டிருப்பதாகவும் இதனால் சுமார் 274 பகுதிகளில் வாழும் 309,687 மக்கள் இதனால் பாதிக்ககூடும் அதில் கோலா லங்காட்,உலு லாங்காட்,சிப்பாங் மற்றும் பெட்டாலிங் ஆகிய பகுதிகளும் அடங்கும்.

ஏற்பட்டுள்ள நீர் நெருக்கடி சூழலை கவனிக்கும் போது சிலாங்கூர் மாநில அரசு இவ்விவகாரத்தை ஆக்கப்பூர்வமாக கையாளவில்லை எனவும் இது மாநில அரசாங்கத்தின் பலவீனமான கையாடல் எனவும் சிலாங்கூர் மாநில மலேசிய சோசலிச கட்சி கருதுகிறது.கோவிட்-19 பெருந்தொற்று மக்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் அதேவேளையில் மக்களை ஆரோக்கியமாகவும் சுகாதாரமாக இருக்க வலியுறுத்தும் காலக்கட்டத்தில் தூய்மையான நீர் இல்லாமல் மக்கள் அவதிப்படுவது வருத்தம் அளிக்கிறது.

 

சிலாங்கூர் மாநில பி.எஸ்.எம் பின்வரும் கோரிக்கைகளை முன் வைக்கிறது:

1.அமைக்கப்பட்டிருக்கும் சிலாங்கூர் நீர் விநியோகம் சிறந்த மற்றும் ஆக்கப்பூர்வமான சேவையினை  மக்களுக்கு வழங்கிட தவறியுள்ளது.சிலாங்கூர் நீர் வாரியத்தை நிர்வாகிக்க நிறுவனங்கள் தொடர் மாற்றங்களை கண்டபோதிலும் மக்களுக்கான அவசிய தேவைகளில் அதீத கவனம் செலுத்தப்படவில்லை.மாசுப்படுத்தப்படுவதால் ஏற்படும் நீர் விநியோக தடையையும் அதனால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளையும் களைவதிலும் அதனை அக்கப்பூர்வமாக கையாள்வதற்காகவும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் கடுமையான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

2.சிலாங்கூர் மாநிலத்தின் அதீத வளர்ச்சி நிலையோடு ஒப்பிடுகையில் மையப்படுத்தப்பட்ட நீர் சேவையால் அஃது பூர்த்தி செய்ய முடியாது.எனவே,மழை நீர் சேகரிப்பு திட்டத்தை ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும் உருவாக்கப்பட்டு அதனை மாநில அரசு நிர்வாகிக்கவும் வேண்டும்.இந்நடவடிக்கை நீர் நெருக்கடி சிக்கலை குறைப்பதோடு நீர் தேவையால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும்.

3.சிலாங்கூரில் அடிக்கடி நிகழும் இப்பிரச்னையை மாநில அரசாங்கம் இயல்பாக நடக்கும் நீர் பிரச்னையாக கருதாமல் இதனை மிக கடுமையான நீர் மாசுப்படுத்தலாக கருதிட வேண்டும்.நீர் மாசுப்படுத்தலை ஏற்படுத்துவோர் மீது மாநில அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதற்கிடையில்,மாநில அரசாங்கம் நீர் விநியோகம் சட்டம் 1999இல் மாற்றம் செய்து அபதாரத்தை அதிகப்படுத்தியிருந்தாலும்,அது போதுமானதல்ல.மாறாய்,சம்மதப்பட்ட நிறுவனங்கள் மீது மக்களின் நலன் கருதி அந்நிறுவனங்களின் செயல்பாட்டுக்கு நிரந்திர மூடுவிழா செய்தல் வேண்டும்.

4.அதேவேளையில்,இப்பிரச்னை தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டுள்ளது.இந்நிலையில்,நீர் மாசு மற்றும் ஆற்று தூய்மைகேடு ஆகியவற்றை கவனிக்கும் மற்றும் பாதுகாத்தல் ஆகியவை யாரின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுள்ளது?அது ஏன் தொடர்ந்து ஏற்படுகிறது எனும் கேள்வியும் எழுகிறது.சரியான அல்லது துரிதமான கண்காணிப்பும் இல்லாமல் போனால் இம்மாதிரியான நீர் மாசுப்படுத்துதல் தொடர்கதையாகத்தான் இருக்கும்.இப்பிரச்னையில் மத்திய அரசாங்கத்தையோ அல்லது சுற்றுச்சூழல் இயற்கைவள இலாகாவையோ குற்றம் சொல்வது ஏற்புடையதல்ல.அது நேரம் விரயம் தான்.இதனால் அடிமட்ட பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது என சிலாங்கூர் பி.எஸ்.எம் கருதுகிறது.

5.மேலும்,மாசுப்படுத்தலை சுற்றுச்சூழல் இயற்கை வளம் மற்றும் சிலாங்கூர் நீர்வள வாரியம் ஆகிவற்றின் கண்காணிப்பு மட்டும் போதுமானதல்ல.ஆற்றின் அருகில் அபிவிருத்து அல்லது நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கும் உள்ளூர் ஊராட்சித்துறையும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.சட்டவிரோத தொழிற்சாலை மற்றும் ஆற்றோர நிலௌரிமையாளர் தொழிற்சாலைகளை தான் இதற்கு காரணம் என கூறும் அலட்சியமான பதிலை தொடர்ந்து கூறாதீர்கள்.ஆற்றோர நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.அது அரசு நிலமாக பதிவு செய்யப்பட வேண்டும்.அங்கு எவ்வித மேம்பாடு நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என சிலாங்கூர் பி.எஸ்.எம் அறிவுறுத்துகிறது.

6.நீர் விரயத்தை குறைப்பது குறிப்பாக வருவாய் அல்லாத நீர் பயன்பாடு மற்றும் சிலாங்கூரில் நீர் குழாய் அமைப்பு முறை நிர்வாகித்தல் ஆகியவற்றில் சிலாங்கூர் மாநில அரசு ஆக்கப்பூர்வ மற்றும் நேர்த்தியான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் சிலாங்கூர் பி.எஸ்.எம் கேட்டுக் கொள்கிறது.நடப்பில் வருவாய் அல்லாத நீரின் பயன்படு அல்லது விரயம் 30 விழுகாடு என்பது குறிப்பிடத்தக்கது.

 

செல்வம் V

பி.எஸ்.எம் சிலாங்கூர் மாநிலத் தலைவர்

019-3369044

(அக்டோபர் 2020) 

“உலக விவசாயிகளே! ஒன்று சேருங்கள்!” (டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கான ஆதரவு அறிக்கை)

 

உலக தொழிலாளர்களேஒன்று சேருங்கள்!

நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை! அடிமை சங்கிலியை தவிர!

என்றார் கார்ல் மார்க்ஸ்.

விவசாய புரட்சி ஓங்க வேண்டும் என்பதற்காக அந்தத் தாரக மந்திரத்தை கொஞ்சம் மாற்றி  உலக விவசாயிகளே! ஒன்று சேருங்கள்!” என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். உலகம் முழுக்க உழுகுடி மக்களுக்கு இழைக்கப்படும் முறைக்கேடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அம்முறைகேடானது நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும் பாதிப்பை எல்லா உலக மக்களும்தான் அனுபவிக்கிறார்கள். யாரோ ஒருசிலர் சுகபோகமாக செல்வச் செழிப்பில் கொழிக்க விவசாயிகளின் ரத்தம் அட்டைப்போல் உறிஞ்சப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தோழர்களே; காப்ரெட் நிறுவனங்களின் ஆதிக்கமும், இடைத்தரகர்களின் செல்வாக்கும் இன்று ஒரு நோய் தொற்றுப்போல பரவிகிடக்கிறது. இதன் காரணமாக சிறிய அளவில் பயிர் செய்து பிழைக்கும் விவசாயிகளின் நிலை படு மோசமாகிவிட்டதுடன் தங்களின் விளைநிலங்களையும் தாரைவார்த்துவிட்ட பல சம்பவங்கள் நம் கண்முன் நிற்கிறது.

இந்திய அரசு தற்போது கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு காய்கறிகள் மற்றும் பயிர்வகைகளை இறக்குமதி செய்து அதை வாங்கி பயன்படுத்தும் எல்லா நாட்டு மக்களுக்குமே பாதிப்புதான். இதனால் விலைவாசி கட்டுக் கடுங்காமல் தலைவரித்தாடும். இதன் பின்விளைவுகள் மிக பயங்கரமாக மாறும் என்பதிலும் சந்தேகமில்லை.

இந்த வேளான் சட்டத்தின்மீது இந்திய உச்ச நீதிமன்றம் கொண்டு வந்திருக்கும் தற்காலிக தடையுத்தரவை நிரந்தரமாக்க வேண்டும் என்றும் இந்திய அரசு இந்த வேளாண் சட்டத்தை நிரந்தரமாக மீட்டுக்கொள்ள வேண்டும் என்றும் மலேசிய சோசலிசக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இதுதொடர்பாக ஹரியான, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களிலிருந்து போராடும் விவசாயிகளோடும் 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களோடும், மலேசிய சோசலிசக் கட்சியும் கைகோர்க்கிறது என்பதினை இந்த அறிக்கையின் வழி நாங்கள் கூறிக்கொள்கிறோம். ஒவ்வொரு நாட்டிலும், அந்நாட்டின் முதுகெழும்பாக இருக்கும் விவசாயத்தையும், விவசாய நலனையும் கருத்தில் கொண்டு உலக மக்களே ஒன்று கூடுவோம். விவாசாயிகளுக்காக குரல் கொடுப்போம். விவசாயிகளை ஊக்குவிப்போம்; விவசாயத்தை வாழவைப்போம். 

 

நன்றி

மலேசிய சோசலிசக் கட்சி

(தொடர்புக்கு: சிவராஜன் ஆறுமுகம் (மலேசிய சோசலிசக் கட்சியின் தேசிய செயலாளர், தொலைப்பேசி : +60102580455)

(டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கான ஆதரவு அறிக்கை, இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு, வாசிக்கப்பட்டது)

 

Sunday, January 17, 2021

வேலையிடத்தில் உங்களுக்கு ஏதும் பிரச்சனையா? சியாப்-பிற்கு அழையுங்கள்

சியாப்தொழிலாளர் புகார் முறை (SiAP - Sistem Aduan Pekerja) என்பது பிரச்சனை எதிர்நோக்கும் தொழிலாளர்களுக்கு சட்ட ஆலோசனை கொடுக்கும் ஒரு தளமாகும். உங்கள் முதலாளி சம்பளத்தை சரியாக கொடுக்காவிடில், .பி.எப் (EPF) & சொக்சோ வெட்டாமல் ஏமாற்றுவது, சட்டவிரோத வேலை நிறுத்தம், மிரட்டல்கள் மற்றும் எந்த பிரச்சனையானாலும், எங்களின் 'சியாப்' எண்ணுக்கு அழைக்கலாம்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 2.0 இப்போது அமலில் உள்ளது. இந்த தருணத்தில் தொழிலாளர்கள் கூடுதல் பிரச்சனையை எதிர்நோக்கி வருகினறனர். எனவே இந்தச் செய்தியை அனைவருக்கும் பகிருங்கள். பிரச்சனையில் உள்ளவர்கள் பயனடைவார்கள்.

மேற்கண்ட விபரத்திற்கு,  “10 கேள்விகள்உள்ளடக்கிய எங்களின்  சுவரொட்டியை படியுங்கள். 

 

சியாப்-கு தொடர்பு கொள்ளுங்கள் (011-10767989)

சியாப்

10 கேள்விகளும் அதற்க்கான விடைகளும்

1. 'சியாப்' என்றால் என்ன?

சியாப் என்றால் தொழிலாளர் புகார் முறையாகும். தொழிலாளர்களுக்கு பிரச்சனை இருந்தால் சியாப் அவசர எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். புகாரைப் பதிவு செய்து தேவையான சேவை கொடுக்கப்படும்.

2. சியாப்-பின் நோக்கம் என்ன?

முதலாளிகளால் பிரச்சனை எதிர்நோக்கும் தொழிலாளர்களை பலப்படுத்துவது. தொழிலாளர் உரிமையை நிலைநாட்டுவது. தொழிலாளர்களுக்கு தொழிற்சட்டம் தொடர்பான சட்ட ஆலோசனை வழங்குவது.

தொழிலாளர்கள் அவர்களுக்கான உரிமையை அறிந்துக் கொள்ளும் நூலகமாகவும் இந்தச் சியாப் செயல்படும். 

3. தொழிலாளர்களின் புகார்கள் அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்லப்படுமா?

சியாப்-க்கு வரும் உங்கள் புகார்கள் அரசாங்க அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். உதாரணத்திற்கு தொழிலாளர் புகார் இலாகா (JTK), தொழிலுறவு இலாகா (JPP), சொக்சோ, .பி.எப், சட்ட உதவி அலுவலகம் மற்றும் பல அரசாங்க அலுவலகங்களுக்கு தேவையின் அடிப்படையில் அனுப்பப்படும். சியாப் ஒருங்கிணைப்பாளர்கள், நீங்கள் நாட வேண்டிய அலுவலகம் சம்பந்தப்பட்ட விபரங்களை உங்களுக்கு கூறுவர்.  

4. பணம் கட்ட வேண்டுமா?

தேவையில்லை. அனைத்து சேவையும் இலவசம்.

5. எம்மாதிரியான பிரச்சனைகளை புகார் செய்யலாம்?

வேலை இடத்தில் நடக்கும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சியாப் எண்ணுக்கும் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். சட்டவிரோத சம்பள குறைப்பு, சட்டவிரோத வேலை நிறுத்தம் மற்றும் அனைத்திற்கும்.

6. சியாப் எண்ணின் செயல்பாட்டு நேரம் என்ன?

சியாப் புகார் முறை சில தன்னார்வ உறுப்பினர்களால் கையாளப்பட்டு வருகிறது. காலை 9 மணியிலிருந்து 5 மணிவரை இயங்கும். இருப்பினும், 5 மணிக்கு மேலும் நீங்கள் சியாப் வாட்சாப்பிற்கு புகாரை அனுப்பலாம். சியாப் ஒருங்கிணைப்பாளரில் ஒருவர் 48 மணி நேரத்திற்குள் உங்களை தொடர்பு கொள்வர்.

7. சியாப் தொடர்பு எண் என்ன?

சியாப் உதவி தொடபு எண் 011-10767989. சில நேரங்களில் நீங்கள் தொடர்பு கொள்ளும் போது யாரும் எடுக்காவிட்டால், சியாப் உறுப்பினர் உங்களை தொடர்பு கொள்வர். மேலும், நீங்கள் வாட்சாப் அல்லது குறுஞ்செய்தியும் அனுப்பலாம்.

8. சியாப் சேவை யாருக்கு?

சியாப் எல்லா தொழிலாளர்களுக்கான சேவையாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அனைவரும் இதில் அடங்குவர்.

9. புகார் செய்பவர்களின் விபரங்கள் பாதுகாப்பாக கையாளப்படுமா?

புகார் செய்வபர்களின் விபரங்கள் அந்த புகாரை கையாளும் ஒருங்கிணைப்பாளர்களிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளப்படும். தொழிலாளர்களின் அனுமதியின்றி அவர்களின் விபரங்கள் மூன்றாம் தரப்பினரிடம் பகிர்ந்து கொள்ளப்படாது.

10. சியாப் எனக்கு வேலை தேடி தருமா?

சியாப் என்பது புகார் செய்யும் தளம், வேலை தேடி தரும் நிறுவனம் அல்ல. வேலை தேடுபவர்கள் Jobstreet அல்லது JobsMalaysia தளங்களை நாடலாம். சொக்சோ நிறுவனமும் வேலை தேடுவதற்கு உதவி செய்வர்.  

 

மேற்கண்ட விபரத்திற்கு சியாப் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் (011-10767989).

நன்றி. 


Monday, January 11, 2021

மலேசியா வாழ் விவசாயிகள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.


"முயற்சி விதை போல

விதைத்துக்கொண்டே இரு,

முளைத்தால் மரம்

இல்லையென்றால் உரம்’’

 

என்கிறார் வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார். நமது நாட்டில் முயற்சி-விதை இரண்டுமே பற்றாக்குறையாகத்தான் இருக்கிறது. நிலங்கள் இருக்கும் இடத்தில் விவசாயம் நடப்பதில்லை. விவசாயம் செய்யப்படும் இடத்தில் நிலம் நிரந்தரமில்லை. மூன்றாம் தரப்புகளின் இடயூர் காரணமாக  விவசாய நிலங்களை அரசே பறிமுதல் செய்யும் அநியாயங்களை கடந்த வருடங்களில் பார்த்திருக்கிறோம். விவசாயிகள் அது தொடர்பாக முன்னெடுத்த அனைத்து போராட்டங்களும் தற்காலிக போராட்டமாக இருந்ததே தவிர, அவர்களுக்காக ஒரு நிரந்தர தீர்வு கிடைத்ததில்லை. பொது மக்கள், அரசு மற்றும் அரசுசாரா இயக்கங்கள், தன்னார்வ அமைப்புகள் குரல் கொடுத்தார்கள்?

தற்போது இரண்டு மாதங்களாக இந்தியாவின் டெல்லியில் நடந்துக்கொண்டிருக்கும் உழுகுடி மக்கள் போராட்டமானது, இந்தியாவுக்கு மட்டுமல்ல அது உலக மக்கள் போராட்டமாகும். அந்தப்போராட்டத்தின் வழியாக நாம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது. தவிர அங்கிருக்கும் விவசாயிகள் புதிதாக அரசு அறிவித்திருக்கும் வேளாண் சட்டங்களை எதிர்க்கும் காரணத்தை நாம் ஆராய வேண்டும். காரணம் நமது நாட்டிலும் பெருவாரியான விவசாய குத்தகைகள் தனியார் நிறுவனத்திடம் உள்ளதை நாம் உணர வேண்டும்.    

இந்தியாவில் மத்திய பாஜக அரசு கொரோனா அவசரக் கோலத்தில், ஜனநாயகத்திற்கு விரோதமாகவும் மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமலும், நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்கப்படாமலும் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

 

 1.அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020

2.விவசாய விளைப்பொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம் 2020 3.விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020

இந்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த மூன்று சட்டங்களை விவசாயிகள் எதிர்க்கும் காரணம் என்ன?

1.விளைபொருட்கள் சந்தைகளை கார்ப்பரெட் நிறுவனங்கள் கட்டுப்படுத்தும் சூழல் உருவாகும்.

2.பெரு வியாபாரிகள் அதிகளவில் உணவுப் பொருட்களை பதுக்க வாய்ப்பு ஏற்படும்

3.வேளாண் திருத்த சட்டங்களை கார்ப்பரேட் நிறுவனகளை ஊக்குவிக்கும் 4.குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பு தட்டிக்கழிக்கப்படும்.

இவையனைத்தும் நமக்கு உணர்த்துவது என்னவென்றால் புதிய தாராளமயமாக்களின் கீழ் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்தத் திட்டமானது முழுக்க முதலாளித்துவதின் வெளிபாடே தவிர வேறு ஒரு ஞாயமான காரணத்தையும் அதில் அறிய முடியவில்லை. சிறு விவசாயிகள் முதல் விவசாயம் சார்ந்திருக்கும் அனைவருமே கார்ப்பரெட் பிடியில் சிக்கிக்கொள்ளும் சூழல் உண்டாகிவிடும்.

இதே அடிப்படையில்தான் மலேசியாவின் விவசாயக் கொள்கைகளும் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது. உதாரணத்திற்கு நம் நாட்டின் அரிசி உற்பத்தியை எடுத்துக்கொள்ளலாம். அரிசியின் அனைத்துவிதமான முடிவுகளையும் ‘பெர்னாஸ்’ (BERNAS) என்ற தனியார் நிறுவனம்தான் எடுக்கிறது. மலேசியாவில் எந்த மூலையில் நெல் சாகுப்புடி செய்தாலும் அதை பெர்னாஸிடம்தான் விற்றாகவேண்டும். தவிர உள்நாட்டில் அரிசி பற்றாக்குறையாக இருந்தால் வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதும் பெர்னாஸ் மட்டுமே. ஒரு அத்தியாவசியப் பொருள், அரசின் கையில் இல்லாமல் எப்படி தனியார் நிறுவனத்தின் கையில் இருக்கிறது? மக்கள் சிந்திக்க வேண்டும்.

அரசின் பரிசீனையில் இருக்கும் ஒரு விஷயம் விதைகள் உரிமம் சம்பந்தப்பட்டதாகும். அதாவது ஒரு பயிரின் விதையை (அதை நாம் பயிர் செய்த பயிரிலிருந்து எடுக்கப்பட்டதாக இருந்தாலும்) நாம் அதை விற்க முடியாது. காரணம் விதைகளுக்கான உரிமையை ஒரு தனியார் நிறுவனம் வைத்திருக்கும். அந்த நிறுவனத்திடமிருந்துதான் நாம் அனுமதிப் பெற்று விதையை வாங்கி விதைக்கவோ விற்கவோ முடியும். இதில் இருக்கும் பெரிய சிக்கல் என்ன வென்றால் ஒரு நிறுவனத்திடமிருக்கும் விதை, மரபணு மாற்றப்பட்டு, அதற்கு தேவையான ரசாயனைத்தையும் சேர்த்தே தயாரித்திருப்பார்கள். அந்த ரசாயனத்தை பயன்படுத்தாமல் விதையின் விளைச்சல் சரியாக இருக்காது. ஆக, விதையையும் அதன் ரசாயனத்தையும் சேர்த்தே வாங்கக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும்.

இவ்வாறு நடந்தால் விவசாயிகளுக்கு இதைவிட பேரிடி இருக்கமுடியாது. பரம்பரை பரம்பரையாக தொடரப்பட்ட விவசாய பாரம்பரியத்தை இழக்க வேண்டியதுதான். இந்த மாதிரியான சட்டத்தை மலேசிய அரசாங்கம் கொண்டு வருவதற்கான யோசனையில் இருக்கிறது. நிச்சயமாக இது ஆதரிக்க முடியாத ஒன்று. இப்படியான ஒரு சட்டம் அமலுக்கு வந்தால் நிச்சயமாக இந்திய விவசாயிகளை முன்மாதிரியாக கொண்டு அணி திரள நாம் தயங்கக்கூடாது. காரணம் இது ஒரு விவசாயியின் தனி மனித பிரச்னை அல்ல. இது உணவு உட்கொள்ளும் ஒவ்வொருவரின் பிரச்னையாக பார்க்க வேண்டும். 

விவாசயம் சார்ந்த அரசுக் கொள்கைகள், விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமே தவிர கார்ப்ரேட் நிறுவனகளுக்கு அல்ல. இந்த பொங்கல் நன்னாளில் விவசாயிகளின் பிரச்னைகளை நம் ஒவ்வொருவரின் பிரச்னையாக பாவித்து செயல்பட வேண்டும் என பி.எஸ்.எம் கேட்டுக்கொள்கிறது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.    

சிவராஜன் ஆறுமுகம்

பி.எஸ்.எம் தேசிய பொதுச்செயலாளர்.     

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...