Thursday, December 5, 2019

2019 - சோசியலிஸ்ட் கருத்துக் களம் 2019




முதல் அங்கம்
  
தலைப்பு: "2018 தேர்தலுக்குப் பிறகு மலேசியாவில் புதியது என்ன?
 
"100 நாட்களில் நிறைவேற்றுவோம் என பக்கத்தான் ஹராப்பான் கொடுத்த வாக்குறுதிகளில் இதுவரை 6 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் மக்களுக்கு ஒன்று நினைவுபடுத்த நினைக்கிறேன்; அதாவது கொடுத்திருக்கும் ஒவ்வொரு வாக்குறுதிகளின் கிழ் 44 கிளை வாக்குறுதிகள் ஒளிந்துகொண்டிருக்கின்றன. தூய மலேசியாவுக்காக முன்னெடுத்த பெர்சே போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், புதிய மலேசியா வந்த பிறகு, அதில் திருப்தி அடைந்ததோடு, எதிர்பார்ப்பு நிறைவேறிய மகிழ்ச்சியில் கணிசமாக குறைந்தனர். தற்போது யார் பிரதமர் பதவியை நிர்ணயிக்க வேண்டும் என்ற அரசியல் உட்பூசலில் மக்கள் அதிருப்தியும் குழப்பமும் அடைந்துள்ளனர்.

- தாமஸ் ஃபாண்,

பெர்சே 2.0 அமைப்பின் நிறுவனர்

‘’புதிய மலேசியாவுக்கான போராட்டத்தில் ஊடகத்துறையின் பங்கு மிகப்பெரியது ஆகும். தற்போது ஊடகத்துறையில் நிகழ்ந்திருக்கும் மாற்றம் பெரிதாக கவனிக்கப்படுகிறதா? ‘’உத்துசான் மலேசியா’’ போன்ற பத்திரிகைகள் மூடப்படும்போது பக்கத்தான்  ஹரப்பான் என்ன நடவடிக்கையை எடுத்தது? ஆட்சி கை மாறினாலும் ஊடகம் என்பது இன்னும்கூட அரசாங்கத்தின் கட்டுப்படுத்தப்பட்ட கருவியாகவே உள்ளது.”

- காயத்திரி வெங்கேடேஸ்வரன்

மலேசிய நாட்டிங்ஹாம்  பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்
மற்றும் ‘’மலேசிய கினி’’ வலைப்பதிவாளர்

“பாரிசான் அரசாங்கம் குறைந்த வருமானம் கொண்ட  மக்களுக்கு  கொடுத்து வந்த உதவி பணத்தின் சிலவற்றை நிறுத்திவிட்டது; சிலவற்றை குறைத்துவிட்டது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தன் காலையே சுட்டுக்கொண்ட நிகழ்வுகளாக ஐசெர்ட், ரோம் சட்டம்,  பறக்கும் வாகனம், சீபில்ட், 
சொஸ்மா  மற்றும் விடுதலைப்புலிகள் ஆகிய சம்பவங்கள் இருக்கின்றன. இந்த 6 விவகாரங்களும் நாட்டு மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு நடப்பு அரசாங்கத்தின் மீது ஒரு நம்பகத்தன்மையையும் ஏற்படுத்திவிட்டது.’’   

- அருட்ச்செல்வன்

மலேசிய சோசியலிஸ்ட் கட்சியின் துணை இயக்குனர்

இரண்டாம் அங்கம் 
தலைப்பு: சமூக-பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் கொள்கைகள் குறித்து பக்காத்தான் ஹராப்பான் தெரிந்து வைத்திருக்கிறதா? 

டாக்டர் துன் மஹாதீர் திரும்பி வந்துள்ளாரே தவிர திருந்தி வரவில்லை. அதே இன அடிப்படையிலான கொள்கைகளையே மீண்டும் மீண்டும் ஆதரித்து வருகிறார். இதனால் யார் பலனடைகின்றனர்? பணக்காரர்களே. தேவை அடிப்படையிலான பொருளாதார கொள்கைகளே தற்போது நாட்டிற்கு தேவை. இதன் மூலமே ஏழை மக்கள் பயனடைய முடியும், அதிலும் அதிகபட்ச மலாய்கார ஏழைகள் பயனடைவார்கள்.பக்கத்தான் ஹரப்பான் எதிர்க்கட்சியாக இருந்தபோது அவர்கள் பல விஷயங்களுக்கு  குரல்கொடுத்தார்கள் . அவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு முன்னாள் அரசாங்கம் செய்த தவற்றையே இவர்களும் செய்கின்றனர். 

-தேரென்ஸ் கொமெஸ்

பொருளாதார துறை விரிவுரையாளர் 

சுற்று சூழலை நடுநிலையாக வைத்து நாட்டின் பொருளாதார கொள்கைகளை வரையறுக்க வேண்டும். அப்போதுதான் சுற்று சூழலை பாதிக்கும் மேம்பட்டு திட்டங்களை தடுக்க முடியும். இப்போது உள்ள அரசாங்கம் இதற்கு முன்னுரிமை அளிக்கவில்லை.

-மீனா

Third World Network

பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி நாட்டில் ஏழ்மையின் விகிதம் 0.4 சதவிகிதம் என நம்ப முடியாத  அதிர்ச்சியான பதிவை கூறியிருந்தார். ஆனால் அது 15 விழுக்காடாக இருப்பது பின்னர் நிரூபணமாக்கப்பட்டது. 2017-ஆம் ஆண்டு பேங்க் நெகாரா அறிக்கையின் படி ஒருவரின் சராசரி ஊதியம் 2,700 ரிங்கிட்டுக்கு குறைவானதாக இருக்கக்கூடாது என்றது. கிடைக்கும் வருமானத்தில்’, தான் மற்றும்  தனது குடும்பதின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாதவர்களை ஏழை அல்லது வறுமை கோட்டின் கீழ் வாழ்பவர் என கூறப்படும் வேளையில், சமுதாயப் பார்வையில் தோல்வியடைந்த ஒருவராகத்தான் அவரை காண முடியும்.
-சிவராஜா
மலேசிய சோசியலிஸ்ட் கட்சியின் செயலாளர்  


மூன்றாம் அங்கம் 
தலைப்பு : இனமும் மதமும்-
புதிய மலேசி யாவில் இதன் நிலைப்பாடு என்ன?

ஜாகீம் போன்ற மத அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து, வெளிப்படையான கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்.  நாட்டில் இஸ்லாத்தின் முற்போக்கான தன்மையை ஊக்குவிப்பதில் எத்தனை அமைப்புகள் பங்களிக்கின்றன?
- ஷெரீபா முனிரா அலதாஸ்
மலேசிய தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர்

இனங்கள் ஒற்றுமையாக இருப்பதை எந்த அரசும் விரும்புவதில்லை. தொடக்கத்தில் இஸ்லாமியர் பொருள்களை வாங்கி ஆதரவு கொடுங்கள் என்ற பிரச்சாரம் தற்போது எந்த அளவுக்கு தீவிரமடைந்துள்ளது என்பதை நாம் அறிவோம்.
- நிக் அசிஸ்
மலேசிய சோசியலிஸ்ட் கட்சியின் பொருளாளர்   


சத்தமில்லாமல் புகைந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளில் ஒன்று சிறார் திருமணம். 2020 நோக்கி நாடு போய்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். இன்னும்கூட மின் வசதியில்லாத கிராமம் நமது நாட்டில் இருக்கிறது. பெண் பிள்ளைகளுக்கு மாதப் பிரச்னை வந்தால் பயன்படுத்தக்கூடிய அடிப்படை பொருள்களை வாங்கி கொடுக்க வசதி  இல்லாத குடும்பங்கள் இருக்கிறார்கள். இதற்கு ஒரு தீர்வாக சிறார் திருமணத்தை ஆதரிக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்..
- மஜி டா ஹாசிம்
(SISTER IN ISLAM)

நான்காம் அங்கம்
தலைப்பு: அடுத்தது என்ன?
மேலும் எப்படி முன்னோக்கி செல்லப்போகிறோம்?

மக்களுக்காக புதிய அரசாங்கம் என நினைத்தால் பாராளமன்றத்தில் அவர்களுக்காகவே அவர்கள் காத்துக்கொண்டிருக்கும் வேடிக்கை நடக்கிறது.
-டாக்டர் தாஜூடீன்
விரிவுரையாளர் 

ஒரு சராசரி வாழ்க்கையை வாழும் இளைஞரின் பிரதிநிதியாக நான் பேசுகிறேன். இந்த வாழ்கை எனக்கு திருப்தியளிக்கவில்லை. கல்வி முதற்கொண்டு  அடிப்படையாக கிடைக்க வேண்டிய அனைத்தும் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்து இருக்கிறது. எங்கள் குரல் மட்டும்தான் கொடுக்க முடியும். அதிகாரம் எங்களிடம் இல்லை."
-நிக் அஸுரா
மாணவர் உரிமை போராட்டவாதி 

பழைய அச்சியில் வார்த்த புதிய அரசாங்கத்தைத்தான் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒரு முழுமையான மாற்றம் வர மூன்றாவதாக ஒரு சக்தி தேவைப்படுகிறது. அது எது? அது அரசியல் கட்சியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதை மேம்படுத்த பிஎஸ்எம் ஒரு கட்சியால்   மட்டும் செய்ய முடியாது. மக்கள்  பலத்தை கொண்டு அரசியல்  மாற்றம் வர வேண்டும்; மேல்மட்டத்திலிருந்து (அதிகாரம் உள்ளிவர்களிடமிருந்து) கீழ் நோக்கி (அதிகாரமற்றவர்களை)    வரக்கூடாது
சோ சோக்  வா
மலேசிய சோசியலிஸ்ட் கட்சியின் பொருளாளர்   


கோலாலம்பூர் - சிலாங்கூர் சீன மண்டபத்தில் நடந்த இந்த கருத்துக்களம்  தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர்களை கொண்டு வழிநடத்தப்பட்டது.   நாடு தழுவிய நிலையில் பல பார்வையாளர்களும் இடதுசாரி சிந்தனையாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.


  

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...