Tuesday, November 24, 2020

கள்ளக் குடியேறிகளுக்கும் இலவச மருத்துவ சோதனை

                                             



கோலாலம்பூர், நவ 25 

போதுமான ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் வேலை செய்து கொண்டிருக்கின்ற அந்நியத் தொழிலாளர்களுக்கும் இலவச மருத்துவ பரிசோதனைகளை, செய்து தர வேண்டும் என்று மலேசிய சோசலிச கட்சியின் தலைவர் டாக்டர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார்.

கோவிட் 19 தொற்று காரணமாக அந்நியத் தொழிலாளர்கள் அதிகமாக பாதிப்படைந்து வருகின்றனர். கள்ளக் குடியேறிகளுக்கு எதிராக நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் அதிகமான அந்நியத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் அவர்களையும் மனிதாபிமான முறையில் நடத்த வேண்டும். கள்ளக் குடியேறிகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்து தரப்பட வேண்டும்.

கட்டுமானம், தயாரிப்பு, தோட்டத் தொழில், விவசாயத்துறை தொழில்களில் வேலை செய்து வருகின்ற கள்ளக் குடியேறிகளுக்கு அடுத்தாண்டு ஜூன் 30-ஆம் தேதிவரை சலுகைகளை வழங்க வேண்டும்.

பொது மன்னிப்பின் கீழ் அவர்களை தங்கள் தாயகங்களுக்கு திரும்ப அனுமதி தரவேண்டும் என்றும் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.  

Wednesday, November 18, 2020

2021 பட்ஜெட்டில் புறக்கணிகப்பட்ட முன்னிலை தொழிலாளர்கள்

 16 நவம்பர் 2020:

கடந்த நவம்பர் 6-ஆம் தேதி, நாட்டின் மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2021-ஆம் ஆண்டுக்கான வரவு –செலவு திட்டத்தை தம்மால் ஏற்க முடியாது என அரசு ஒப்பந்த தொழிலாளர்களின் குத்தகை சங்கம்  (ஜே.பி.கே.கே)  தெரிவித்துள்ளது. ஏனெனில் 2021 ஆண்டுக்கான பட்ஜெட், கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடிவரும்  முன்னிலை தொழிலாளர்களை  புறக்கணிப்பு செய்திருக்கிறது என்று அச்சங்கம் தெரிவித்திருக்கிறது. கோவிட் பெருந்தொற்றை எதிர்த்து போரிடும் அனைத்து ஊழையர்களையும் முன்னிலை தொழிலாளர்களாக வகைப்படுத்துவதோடு, வர்க்கம், தொழில், மதிப்பு அல்லது தோற்றத்தைப்பார்க்காமல் 2021 பட்ஜெட்டில் உடனடியாக அவர்களுக்கும் ஒரு பங்கு ஒதுக்க வேண்டும் என  மத்திய அரசை கேட்டுக்கொள்வதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் தூய்மை தொழிலாளர்கள், அரசு பள்ளிகளில் காவலராக இருக்கும் பாதுகாவலர்கள், அங்கு வேலை செய்யும் செடிகளை பராமரிப்பவர்கள் உள்ளிட்ட அனைத்து வகை ஊழியர்களும் முன்னிலை தொழிலாளர்களாக இருப்பதோடு அவர்கள் அனைவரும் ஒவ்வொருநாளும், உயிரை பணையம் வைத்து கோவிட் பெருந்தொற்றை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கின்றனர். 2021-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அவர்களை புறக்கணிப்பதற்கான நோக்கமே அவர்கள் குத்தகை தொழிலளர்களாக இருப்பதால்தான். அவர்கள் மூன்றாம் தரப்பினரால் பணியமர்த்தப்பட்டு ஊதியம் பெறுவதால், மலேசிய அரசாங்கத்தால் இவர்கள் முதன்மை தொழிலாளர்களாக அங்கீகரிப்பதாதற்கு இது ஒரு காரணமாக இருக்கிறது. எனவே, அரசாங்கத்தால் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் கோவிட்-19 இன் சிறப்பு நிதியுதவியான RM600 ரிங்கிட் பெறுவதற்கும் அதோடு கோவிட் பெருந்தொற்றை எதிர்த்து போராடும் பங்களிப்புக்கான சிறப்பு வெகுமதியாக சுகாதார அமைச்சு வழங்கிய RM500 வெள்ளியைப் பெறுவதற்கும் இத்தொழிலாளர்கள் அனைவரும் தகுதியற்றவர்களாக கருதப்படுகிறார்கள்.

பாராளுமன்றத்தில் 2021 பட்ஜெட்டின் உரையின் போது பேசிய நிதி அமைச்சர்

செனட்டர் தெங்கு டத்தோ ’ஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ், “இந்த COVID-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட முதன்மை தொழிலாளர்களின் சேவையையும் தியாகத்தையும் அரசாங்கம் பாராட்டுகிறது’ என்றார். எனினும், மாவீரர்களாக கருதப்படும் முன்னணி தொழிலாளர்களான மருத்துவமனை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள், பள்ளி பாதுகாப்பு பணியாளர்கள், மற்றும் தோட்டக்காரர்கள் 2021 பட்ஜெட்டில் இருந்து தவிர்க்கப்பட்டவர்களாக இருப்பது  அவரது பேச்சுக்கு முரணாக இருப்பதோடு 2021 பட்ஜெட்டில் பாரபட்சமும் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், மருத்துவமனை மற்றும் பள்ளிகளில் வேலைசெய்யும் நம் முதல்நிலை மாவீரர்கள்,  பாதுகாப்பு உபகரணங்களான முகக்கவரி, கையுரை, கைத்தூய்மை போதாமையால் ஒவ்வொரு நாளும் COVID19 பரவும் அபாயத்திற்கு ஆளாகின்றனர்.

இவர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்களை இலவசமாக வழங்கினால் COVID-19 பரவுவதைத் தடுக்க உதவுவதோடு அவர்களின் குடும்பத்தினருக்கும் இந்தத் தொற்று பரவாமல் உதவ முடியும். மலேசிய அரசாங்கம் மொத்தம் RM318 மில்லியனை பாதுகாப்பு உபகரணங்களுக்காக ஒதுக்கியுள்ளது. ஆனால் மருத்துவமனை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள், பள்ளி பாதுகாவளர்கள்,  தோட்டங்களை பராமரிப்பவர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் இல்லாததால் இச்சலுகைக்கான தகுதியை குத்தகை தொழிலாளர்களான அவர்கள்  இழக்கிறார்கள். அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள்கூட  குத்தகை தொழிலாளர்களின் முதலாளிகளின் கையில்தான் இருக்கிறது.

எங்கள் அறிக்கையின்படி நாங்கள் வழியுருத்துவது என்னவென்றால்,  அரசு அலுவலகங்களின் கீழ் இயங்கும் குத்தகை முறையிலான மேற்குறிப்பிட்ட தொழிலாளர்கள்  அனைவரையும்,  ஜூன் 2021 ஆண்டுக்குள் அரசின் ஊழியர்களாக வகைப்படுத்த வேண்டும்.

ஜியோஜ் ஆர்வெல் கூறியது போல, “ஆண்களும் பெண்களும் சரியான நேரத்தில் எங்களை அச்சுறுத்தும் வன்முறையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதால் நாங்கள் பாதுகாப்பாக தூங்குகிறோம்.” என்றார்.  நமது நாட்டில் COVID-19 தொற்றுநோயை தோற்கடிக்க போராடும் ஆண்கள் மற்றும் பெண்கள்" அல்லது மாவீரர்கள் மற்றும் வீராங்கனைகளை நம் குழந்தைகள் படிக்கும் வரலாற்று புத்தகங்களில் சேர்க்க இன்னும் தாமதமாகிவிடவில்லை.

மத்திய அரசிடமும், மலேசிய பிரதமரிடமும், நிதியமைச்சரிடமும், கல்வியமைச்சரிடமும் மற்றும் மனிதவள அமைச்சரிடமும் நாங்கள் வலியுறுத்தி கேட்கிறோம், வரவு-செலவு 2021 திட்டத்தி,   கோவிட் 19-தை  எதிர்த்து போராடும் அனைத்து முன்னிலை தொழிலாளர்களுக்கும் வர்கம், தொழில், தகுதி உள்ளிட்ட பாரபட்சம் பார்க்காமல் சலுகையளிக்கவேண்டும். நன்றி. 


சிவரஞ்சனி 

அரசு ஒப்பந்த தொழிலாளர்களின் குத்தகை சங்கம்  (JPKK)

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...