Wednesday, June 12, 2024

Bajau Laut சமூக வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவத்தை PSM வன்மையாகக் கண்டிக்கிறது (பத்திரிக்கை செய்தி)

சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலான சபாவின் செம்போர்னாவில் உள்ள பஜாவ் லாவுட் சமூகத்தின் கடலோர வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பான சம்பவத்தால் மலேசிய சோசலிசக் கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது. 

Bajau Laut சமூகம் நாட்டிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அல்ல, தற்போது நடைமுறையில் உள்ள  தேசிய நவீன எல்லைகள் இருப்பதற்கு முன்பேவ் அவர்கள் அக்கடல் பகுதியில் வாழ்ந்த  அசல் பூர்வக்குடி குடிமக்களாவர்.

கிழக்கு கடற்கரை Bajau சமூகம்,  சுலு கடல், Celebes  பிலிப்பைன்ஸ் எல்லையான Sulawesi,  இந்தோனேசியா மற்றும் மலேசியா எல்லைகளில் உள்ள  கடல் பகுதிகளில் நாடோடிகளாக அல்லது 'கடல் ஜிப்சிகளாக' 18 ஆம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே  இருந்து வருகிறார்கள்.  அவர்கள் படகைத் தங்களின் வீடாகக் கொண்டிருப்பதால்,  பெரும்பாலும் அவர்கள் நீரின் வழியே இடம்பெயர்கின்றனர். 

காலனித்துவவாதிகளிடமிருந்து நாம் பெற்ற இந்த நாடும், அதன் அரசு சட்டத்திட்டங்களும்,  பூர்வக்குடிகளின் தனித்துவமான வாழ்க்கை முறைக்கு பொருந்தவில்லை என்பதால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமா?  

நாட்டின் நவீனத்துவத்தில் அதன் எல்லைகள் தொடர்பான விதிகளில், இவ்வாரானவர்கள்  நாடற்றவர்களாகவும் அத்துமீறி நுழைபவர்களாகவும் கருதப்படுகிறார்கள். உண்மையில் அத்துமீறி நுழைவது யார்!

நீண்ட காலமாக இந்த சமூகத்துடன் இணைந்து ஆய்வு செய்து, களப்பணியாற்றி வரும் ஒரு சமூக ஆர்வலர் கருத்து தெரிவிக்கையில், "Bajau Laut மக்கள் தேசிய எல்லைகளை ஆக்கிரமிக்கவில்லை, மாறாக இந்த நாடுதான் அவர்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்திருக்கிறது" என்றார்.  

அப்படியானால், அவர்களின் வீடுகளை இடிப்பதன் காரணம் என்ன? எங்கே நம் மனிதாபிமானம்? குடியேற்ற அந்தஸ்து கொண்ட  பூர்வக்குடி சமூகத்தை கட்டாயமாக வெளியேற்றுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இச்சமூக மக்களின் கல்வி, சுகாதார சேவைகள் மற்றும் வீடுகள் போன்ற அடிப்படை வசதிகளை திறம்பட வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யத் தவறிய வேளையில், அவர்களின் வீடுகளை இடித்து அவர்களின் வாழ்வை அழிக்கும் உரிமை எங்கிருந்து வந்தது?

செம்போர்னாவில் உள்ள ஏழு தீவுகளில் வாழும் Bajau Laut சமூகத்தை குறிவைத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு சபா மாநில அரசை PSM வலியுறுத்துகிறது.

அதோடு, அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தந்து, தீவுக்கூட்டத்தின் பூர்வீக மக்களாக அவர்கள் இருப்பதை மதித்து பாதுகாக்கப்பட  வேண்டும் என்றும் பி.எஸ்.எம் கேட்டுக் கொள்கிறது.  

சிவராஜன்

பி.எஸ்.எம். தேசிய பொதுச் செயலாளர்

10/6/2024.

களப்பரியாத போராளி, தோழர் சாந்தா காலமானார் (1975 - 2025)

சமூக ஆர்வாலர், ஓர் ஆசிரியர்,  முற்போக்கான குரல் மற்றும் எங்கள் ஜொகூர் கிளையின் முக்கிய தலைவருமான தோழர் சாந்தா லெட்சுமி பெருமாள் அவர்களின் உய...