Tuesday, November 19, 2024

தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைச் சட்ட வரைவு !

தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைச் சட்ட  வரைவு !

மனித வள அமைச்சிடம் சமர்பிக்கப்பட்டது

 

 

தோட்டத் தொழிலாளர்கள் ஆதரவுக் குழு (JSML) மற்றும் மலேசிய சோசலிசக் கட்சி (PSM)  ஆதரவோடு, 10-க்கும் மேற்பட்டத் தோட்டப் பாட்டாளிகள், தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைச் சட்ட  வரைவு ஒன்றை மனித வள அமைச்சிடம் (KESUMA) இன்று (19/11/2024) சமர்பித்தனர்.

முன்னதாக  YB ஸ்டீவன் சிமின் அவர்களுடன் இதுதொடர்பான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேளையில், அவர் வராத காரணத்தினால் அவரின் பிரதிநிதியான  எட்ரி பைசல் அவர்களுடன் மேற்குறிப்பிட்ட சந்திப்பும் கலந்துரையாடலும் நடைப்பெற்றது. இந்தச் சந்திப்பில் மலேசியாவில் உள்ள பல மாநிலங்களிலிருந்து வந்திருந்த தோட்ட பாட்டாளி மக்கள் பிரதிநிதிகளும்  JSML மற்றும் PSM பிரதிநிதிகளும் பங்கெடுத்தனர்.  

2019 ஆம் ஆண்டில், கிட்டத்தட்ட 1000 தொழிலாளர்கள் இந்தச் சட்டத்தை இயற்றக் கோரி மலேசிய அரசாங்கத்திற்கு ஒரு மகஜர் சமர்ப்பிக்க பாராளுமன்றத்திற்கு திரண்டனர்.  ஆனால் இன்று வரை எந்த பதிலும் அம்மக்களுக்கு அரசு கொடுக்கவில்லை. இது பாட்டாளிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அதன் காரணமாக, JSML, மலேசியா முழுவதிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மற்றும் கருத்துகளின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைச் சட்ட  வரைவை தாமே இயற்றியிருக்கிறது.

மலேசிய அரசாங்கம் இந்த வரைவை நாடாளுமன்றத்தில் விவாதித்து,  பாட்டாளிகளின் நலன் கருதி அதைச் சட்டமாக்க வேண்டும் என்று  ஜே.எஸ்.எம்.எல் கேட்டுக் கொண்டது.

இந்தச் சட்ட வரைவை ஜேஎஸ்எம்எல் பிரதிநிதிகளான கார்த்திகேஸ் மற்றும் டி.கணேசன் ஆகியோர் திரு. எட்ரியிடம் சமர்ப்பித்தனர்.

No comments:

Post a Comment

களப்பரியாத போராளி, தோழர் சாந்தா காலமானார் (1975 - 2025)

சமூக ஆர்வாலர், ஓர் ஆசிரியர்,  முற்போக்கான குரல் மற்றும் எங்கள் ஜொகூர் கிளையின் முக்கிய தலைவருமான தோழர் சாந்தா லெட்சுமி பெருமாள் அவர்களின் உய...