சுப்ரமணியம் vs அமெரிக்க அரசு தொழிலாளர் விவகாரம்:
நீதிமனத்திற்கு வெளியே ஒரு தீர்வை எட்டியது!
சிவில் மேல்முறையீடு எண். W-01(A)-224-04/2024
சுப்பிரமணியம் த/பெ லெட்சிமணன் என்ற முன்னாள் பாதுகாவலர், தனது அப்போதைய முதலாளியான அமெரிக்கத் தூதரகத்திற்கு எதிராக, அநியாயமான பணிநீக்கத்துக்கு எதிராக தொழில்துறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். குறித்த வழக்கில், நீதிமன்றத்திற்கு வெளியே இரு தரப்பினரும் சமரசத்தை மேற்கொண்டனர். இந்த சமரசத்தின் அடிப்படையில், "பொறுப்புடன் இல்லை" என்ற அமெரிக்க அரசு சுப்ரமணியத்தின் மீது சுமத்திய குற்றச்சாட்டில், பின் வழங்கப்பட்ட தீர்ப்பில் சுப்பிரமணியத்திற்கு நியாயமான இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தின் முழுமையான மற்றும் இறுதி தீர்மானம் தற்போது வந்துள்ளது.
இந்த சவாலான மற்றும் நீடித்த போராட்டம் முழுவதும் சுப்பிரமணியத்துடன் நின்ற சட்டக் குழு, ஆதரவாளர்கள் மற்றும் அனைவருக்கும் மலேசிய சோசலிசக் கட்சி (PSM) தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. "2019ல் தொழில்துறை நீதிமன்றத்திற்கு வழக்கை அனுப்பிய அப்போதைய மனிதவள அமைச்சர் எம்.குலசேகரனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். வழக்கறிஞர் ரகுநாத் கேசவன் மற்றும் தை யோங் ஃபங் தலைமையிலான சட்டக் குழு, கூட்டாட்சி நீதிமன்றம் முதல் தொழில்துறை நீதிமன்றம் வரை வழக்கை முழுவதுமாக சிறப்பாக நடத்தி செயல்பட்டது. பல ஆண்டுகளாக அவர்களின் முனைப்பும் மற்றும் அர்ப்பணிப்பும் இந்த விசயத்தில் முக்கியமானது.
சுப்பிரமணியத்துக்கு ஆதரவாக தொழில்துறை நீதிமன்றம் முதல் உயர் நீதிமன்றம் வரை பின்னர் கூட்டாட்சி நீதிமன்றத்திலும் கூட முழு வழக்கு இலவசமாகத் தொடரப்பட்டது. இருப்பினும் அடுத்தடுத்த நீதித்துறை மறு ஆய்வும் விண்ணப்பத்தில் உயர் நீதிமன்றம் அனைத்து தர்க்கங்களையும் மீறி இத்தகைய வெளிநாட்டு சார்பினரை உள்ளடக்கிய வழக்குகளில் கட்டண விளக்கு இல்லை, என்று முடிவு செய்து முந்தைய கூட்டாட்சி நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகச் சொல்லப்பட்டது" என்பதை பி.எஸ்.எம் நினைவு கூர்ந்தது,
2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி சட்டவிரோதமாக சும்ரமணியம் பணிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, சுப்பிரமணியத்தின் 16 ஆண்டுக்கால நீதிக்கான தேடல் தொடங்கியது. பி.எஸ்.எம் (PSM) உடன் இணைந்து, அவர் நீண்டகாலமான நீதிக்கான பாதையை தொடங்கினார். அதோடு நீதிக்காக அவர் அமெரிக்காவை எதிர்கொண்டார். அமெரிக்கா போன்ற சக்திவாய்ந்த தரப்புக்கு எதிராக வழக்குத் தொடர்வது என்பது ஒரு கடினமான மற்றும் சவாலான முயற்சியாகும். ஆனால், இந்தப் போராட்டம், புதிய முன்னுதாரணமாகத் திகழ்ந்து, வெளிநாட்டு சார்பினரின் கீழ் பணியாற்றும் பல ஊழியர்களுக்கு நம்பிக்கையை வழங்கியது.
இந்த வழக்கு நாட்டின் சட்ட வரலாற்றில் முக்கியமான முன்னுதாரணத்தை உருவாக்கியது. 2022 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் அமெரிக்க அரசின் சட்டப்படி உள்ள விதிவிலக்கு இந்த வழக்கில் செல்லாது எனத் தீர்மானித்தது மற்றும் இந்த வழக்கை திறமையாக மற்றும் அதிகாரப்பூர்வமாகத் தொடருவதற்கான சரியான மற்றும் உரிய மேடையாக தொழில்துறை நீதிமன்றத்தை உறுதிப்படுத்தியது. இதன் முடிவாக, அமெரிக்கா தூதரகங்கள், தங்களுடைய பணியாளர்களை அரசுத் தலைமைச் சுயாதீக கோட்பாட்டின் பெயரில் பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை இனி மேற்கொள்ள முடியாது.
இதிலிருந்து மற்றொரு முக்கிய முன்னேற்றம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி வெளிநாட்டு மாநிலங்களின் அதிகார வரம்புக்கான தடுப்பு சட்ட மசோதா தேசிய சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, மலேசியா நீதிமன்றங்களின் அதிகார வரம்பை வெளிநாட்டு மாநிலங்களுக்கும், சொத்துக்களுக்கும், மாநிலத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட விலக்குரிமையை ஒழுங்குபடுத்தும் முயற்சியாக உள்ளது. மேலும், திருத்தப்பட்ட மசோதா வேலை வாய்ப்பு தொடர்பான சுயாதீக கோட்பாட்டைப் பயன்படுத்த முடியாததாக பரிந்துரைக்கின்றது.
இந்த முக்கியமான திருத்தத்தை மலேசியா அரசு செய்திருப்பதற்காக நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம், இது சுப்பிரமணியனுக்கு ஏற்பட்ட விடயத்தை மீண்டும் நிகழாமல் செய்வதை உறுதி செய்யும்.
இந்த நீண்ட கால கதையை நாம் நிறைவு செய்துள்ளோம். போராட்டம் நீண்டதாயிருந்தாலும், அது மதிப்புள்ளதே. பொதுவாகச் சொல்வது போல, " துணிந்து போராடினால் தான் வெற்றி நிச்சயம்."
வெளியிட்டவர்:
எஸ்.அருட்செல்வன்
பிஎஸ்எம் துணைத் தலைவர்
No comments:
Post a Comment