Sunday, January 17, 2021

வேலையிடத்தில் உங்களுக்கு ஏதும் பிரச்சனையா? சியாப்-பிற்கு அழையுங்கள்

சியாப்தொழிலாளர் புகார் முறை (SiAP - Sistem Aduan Pekerja) என்பது பிரச்சனை எதிர்நோக்கும் தொழிலாளர்களுக்கு சட்ட ஆலோசனை கொடுக்கும் ஒரு தளமாகும். உங்கள் முதலாளி சம்பளத்தை சரியாக கொடுக்காவிடில், .பி.எப் (EPF) & சொக்சோ வெட்டாமல் ஏமாற்றுவது, சட்டவிரோத வேலை நிறுத்தம், மிரட்டல்கள் மற்றும் எந்த பிரச்சனையானாலும், எங்களின் 'சியாப்' எண்ணுக்கு அழைக்கலாம்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 2.0 இப்போது அமலில் உள்ளது. இந்த தருணத்தில் தொழிலாளர்கள் கூடுதல் பிரச்சனையை எதிர்நோக்கி வருகினறனர். எனவே இந்தச் செய்தியை அனைவருக்கும் பகிருங்கள். பிரச்சனையில் உள்ளவர்கள் பயனடைவார்கள்.

மேற்கண்ட விபரத்திற்கு,  “10 கேள்விகள்உள்ளடக்கிய எங்களின்  சுவரொட்டியை படியுங்கள். 

 

சியாப்-கு தொடர்பு கொள்ளுங்கள் (011-10767989)

சியாப்

10 கேள்விகளும் அதற்க்கான விடைகளும்

1. 'சியாப்' என்றால் என்ன?

சியாப் என்றால் தொழிலாளர் புகார் முறையாகும். தொழிலாளர்களுக்கு பிரச்சனை இருந்தால் சியாப் அவசர எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். புகாரைப் பதிவு செய்து தேவையான சேவை கொடுக்கப்படும்.

2. சியாப்-பின் நோக்கம் என்ன?

முதலாளிகளால் பிரச்சனை எதிர்நோக்கும் தொழிலாளர்களை பலப்படுத்துவது. தொழிலாளர் உரிமையை நிலைநாட்டுவது. தொழிலாளர்களுக்கு தொழிற்சட்டம் தொடர்பான சட்ட ஆலோசனை வழங்குவது.

தொழிலாளர்கள் அவர்களுக்கான உரிமையை அறிந்துக் கொள்ளும் நூலகமாகவும் இந்தச் சியாப் செயல்படும். 

3. தொழிலாளர்களின் புகார்கள் அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்லப்படுமா?

சியாப்-க்கு வரும் உங்கள் புகார்கள் அரசாங்க அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். உதாரணத்திற்கு தொழிலாளர் புகார் இலாகா (JTK), தொழிலுறவு இலாகா (JPP), சொக்சோ, .பி.எப், சட்ட உதவி அலுவலகம் மற்றும் பல அரசாங்க அலுவலகங்களுக்கு தேவையின் அடிப்படையில் அனுப்பப்படும். சியாப் ஒருங்கிணைப்பாளர்கள், நீங்கள் நாட வேண்டிய அலுவலகம் சம்பந்தப்பட்ட விபரங்களை உங்களுக்கு கூறுவர்.  

4. பணம் கட்ட வேண்டுமா?

தேவையில்லை. அனைத்து சேவையும் இலவசம்.

5. எம்மாதிரியான பிரச்சனைகளை புகார் செய்யலாம்?

வேலை இடத்தில் நடக்கும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சியாப் எண்ணுக்கும் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். சட்டவிரோத சம்பள குறைப்பு, சட்டவிரோத வேலை நிறுத்தம் மற்றும் அனைத்திற்கும்.

6. சியாப் எண்ணின் செயல்பாட்டு நேரம் என்ன?

சியாப் புகார் முறை சில தன்னார்வ உறுப்பினர்களால் கையாளப்பட்டு வருகிறது. காலை 9 மணியிலிருந்து 5 மணிவரை இயங்கும். இருப்பினும், 5 மணிக்கு மேலும் நீங்கள் சியாப் வாட்சாப்பிற்கு புகாரை அனுப்பலாம். சியாப் ஒருங்கிணைப்பாளரில் ஒருவர் 48 மணி நேரத்திற்குள் உங்களை தொடர்பு கொள்வர்.

7. சியாப் தொடர்பு எண் என்ன?

சியாப் உதவி தொடபு எண் 011-10767989. சில நேரங்களில் நீங்கள் தொடர்பு கொள்ளும் போது யாரும் எடுக்காவிட்டால், சியாப் உறுப்பினர் உங்களை தொடர்பு கொள்வர். மேலும், நீங்கள் வாட்சாப் அல்லது குறுஞ்செய்தியும் அனுப்பலாம்.

8. சியாப் சேவை யாருக்கு?

சியாப் எல்லா தொழிலாளர்களுக்கான சேவையாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அனைவரும் இதில் அடங்குவர்.

9. புகார் செய்பவர்களின் விபரங்கள் பாதுகாப்பாக கையாளப்படுமா?

புகார் செய்வபர்களின் விபரங்கள் அந்த புகாரை கையாளும் ஒருங்கிணைப்பாளர்களிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளப்படும். தொழிலாளர்களின் அனுமதியின்றி அவர்களின் விபரங்கள் மூன்றாம் தரப்பினரிடம் பகிர்ந்து கொள்ளப்படாது.

10. சியாப் எனக்கு வேலை தேடி தருமா?

சியாப் என்பது புகார் செய்யும் தளம், வேலை தேடி தரும் நிறுவனம் அல்ல. வேலை தேடுபவர்கள் Jobstreet அல்லது JobsMalaysia தளங்களை நாடலாம். சொக்சோ நிறுவனமும் வேலை தேடுவதற்கு உதவி செய்வர்.  

 

மேற்கண்ட விபரத்திற்கு சியாப் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் (011-10767989).

நன்றி. 


No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...