Tuesday, January 19, 2021

“உலக விவசாயிகளே! ஒன்று சேருங்கள்!” (டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கான ஆதரவு அறிக்கை)

 

உலக தொழிலாளர்களேஒன்று சேருங்கள்!

நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை! அடிமை சங்கிலியை தவிர!

என்றார் கார்ல் மார்க்ஸ்.

விவசாய புரட்சி ஓங்க வேண்டும் என்பதற்காக அந்தத் தாரக மந்திரத்தை கொஞ்சம் மாற்றி  உலக விவசாயிகளே! ஒன்று சேருங்கள்!” என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். உலகம் முழுக்க உழுகுடி மக்களுக்கு இழைக்கப்படும் முறைக்கேடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அம்முறைகேடானது நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும் பாதிப்பை எல்லா உலக மக்களும்தான் அனுபவிக்கிறார்கள். யாரோ ஒருசிலர் சுகபோகமாக செல்வச் செழிப்பில் கொழிக்க விவசாயிகளின் ரத்தம் அட்டைப்போல் உறிஞ்சப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தோழர்களே; காப்ரெட் நிறுவனங்களின் ஆதிக்கமும், இடைத்தரகர்களின் செல்வாக்கும் இன்று ஒரு நோய் தொற்றுப்போல பரவிகிடக்கிறது. இதன் காரணமாக சிறிய அளவில் பயிர் செய்து பிழைக்கும் விவசாயிகளின் நிலை படு மோசமாகிவிட்டதுடன் தங்களின் விளைநிலங்களையும் தாரைவார்த்துவிட்ட பல சம்பவங்கள் நம் கண்முன் நிற்கிறது.

இந்திய அரசு தற்போது கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு காய்கறிகள் மற்றும் பயிர்வகைகளை இறக்குமதி செய்து அதை வாங்கி பயன்படுத்தும் எல்லா நாட்டு மக்களுக்குமே பாதிப்புதான். இதனால் விலைவாசி கட்டுக் கடுங்காமல் தலைவரித்தாடும். இதன் பின்விளைவுகள் மிக பயங்கரமாக மாறும் என்பதிலும் சந்தேகமில்லை.

இந்த வேளான் சட்டத்தின்மீது இந்திய உச்ச நீதிமன்றம் கொண்டு வந்திருக்கும் தற்காலிக தடையுத்தரவை நிரந்தரமாக்க வேண்டும் என்றும் இந்திய அரசு இந்த வேளாண் சட்டத்தை நிரந்தரமாக மீட்டுக்கொள்ள வேண்டும் என்றும் மலேசிய சோசலிசக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இதுதொடர்பாக ஹரியான, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களிலிருந்து போராடும் விவசாயிகளோடும் 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களோடும், மலேசிய சோசலிசக் கட்சியும் கைகோர்க்கிறது என்பதினை இந்த அறிக்கையின் வழி நாங்கள் கூறிக்கொள்கிறோம். ஒவ்வொரு நாட்டிலும், அந்நாட்டின் முதுகெழும்பாக இருக்கும் விவசாயத்தையும், விவசாய நலனையும் கருத்தில் கொண்டு உலக மக்களே ஒன்று கூடுவோம். விவாசாயிகளுக்காக குரல் கொடுப்போம். விவசாயிகளை ஊக்குவிப்போம்; விவசாயத்தை வாழவைப்போம். 

 

நன்றி

மலேசிய சோசலிசக் கட்சி

(தொடர்புக்கு: சிவராஜன் ஆறுமுகம் (மலேசிய சோசலிசக் கட்சியின் தேசிய செயலாளர், தொலைப்பேசி : +60102580455)

(டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கான ஆதரவு அறிக்கை, இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு, வாசிக்கப்பட்டது)

 

No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...