புதிய உறுதிப்பாடு மற்றும் உற்சாகத்துடன் பழைய சவால்களை எதிர்கொள்வோம்
பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களுடன் 2025 புதிய ஆண்டிற்குள் நாம் அடியெடுத்து வைக்கிறோம். நாட்டிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி, பெரும்பாலான தாழ்த்தப்பட்டவர்கள் இன்னும் பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். விடுதலை, ஜனநாயகம், பொருளாதார சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் போராட்டம் தொடர வேண்டும். இல்லையெனில், நெருக்கடி இன்னும் மோசமாகி, சாதாரண மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள்.
மலேசியாவில் ஒற்றுமை அரசாங்கம் இரண்டு வருடங்கள் நம்மை ஆட்சி செய்த பிறகும் மக்கள் இன்னும் குறைந்த வருமானம் மற்றும் அதிக அன்றாட செலவுகளுடன் வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மேலும், மக்களைச் சொந்த நலனுக்காகப் பிளவுபடுத்தி சமத்துவமற்ற யுக்திகளைக் கையாளுகின்றார்கள் உயரடுக்கு அரசியல்வாதிகள்.
இந்த புதிய ஆண்டிலும் மலேசியர்கள் ஐந்து பழைய அச்சுறுத்தல்களை சந்திக்க நேரிடுகிறது:
1. கடினமான மற்றும் சுமை நிறைந்த சமூகப் பொருளாதார வாழ்க்கை
இன்றைய இக்கட்டான பொருளாதார சூழ்நிலையில் சாமானிய மக்கள் பல தரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுகிறது. ஊதியம் குறைவாக இருப்பினும் அன்றாட செலவுகள் அதிகரித்து வருகிறது. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களின் முதலாளிகளால் பணியமர்த்தப்படும் அனைத்து தொழிலாளர்களுக்கும் 1 பிப்ரவரி 2025 முதல் குறைந்தபட்ச ஊதிய விகிதம் மாதம் RM1,700 ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், ஏற்கனவே அதிக சுமைகளால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இவை போதுமானதாக இல்லை.
குறைந்த ஊதிய விகிதம் தொழிலாளர்களை நீண்ட நேரம் வேலை செய்ய அல்லது பகுதி நேரமாக வேலை செய்யத் தூண்டுகிறது. இது மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும் என்பது உறுதி.
குறைந்த ஊதியம் மட்டுமின்றி மலேசியாவில் உள்ள தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பு மோசமாகி வருகிறது. கிக் பொருளாதாரத் துறையின் விரிவாக்கம் மற்றும் பொதுத்துறை உட்பட பல்வேறு துறைகளில் தொழிலாளர்களைத் தனியார் நிறுவனங்களின் மூலம் பணியமர்த்துவதால் வேலை பாதுகாப்பின்றி தொழிலாளர்கள் அல்லாடுகின்றனர். (உதாரணத்திற்கு மருத்துவமனைகள் மற்றும் பள்ளி போன்ற அரசாங்க கட்டிடங்களில் உள்ள பாதுகாப்பு மற்றும் துப்புரவு சேவைகள்.)
அரசாங்கம் இன்னும் நவதாரளவாத "சுதந்திரச் சந்தை" எனும் கருத்தைக் கடைப்பிடித்து, மக்களின் அடிப்படை உரிமைகளைத் தனியார்த் துறைக்கு அடகு வைக்கும் தனியார்மயமாக்கல் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதால் மக்களின் வாழ்க்கைத் தரம் மேலும் பாதிக்கப்படுகிறது. சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முக்கிய துறைகளில் "பொது தனியார் கூட்டான்மையை" (பிபிபி) ஊக்குவிப்பதில் மடானி அரசாங்கத்தின் உற்சாகம், தொடர்ந்து அதிகரித்து வரும் கட்டணங்களால் அடிப்படை சேவைகளுக்காக மக்கள் சஞ்சலப்படும் அதே நேரத்தில் முதலாளித்துவ வர்க்கம் பயனடைந்து கொண்டிருக்கிறது. இது நமது சமூகத்தில் உள்ள செல்வ இடைவெளியை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பது உறுதி.
"முழு கட்டண நோயாளி சேவைகள்" போன்ற திட்டங்களின் மூலம் அரசு மருத்துவமனைகளில் "தனியார் பிரிவுகள்" திறக்கப்பட்டு தற்போது "ராக்கன் கேகேஎம்" என்று மறுபெயரிடப்பட்டிருப்பது முக்கிய பிரச்சினையைத் தீர்க்காத அணுகுமுறையாகும். அதாவது, சுகாதாரத்தைப் பண்டமாக்குதல் மற்றும் வணிகமயமாக்குதல் பொதுச் சுகாதார அமைப்பைப் பாதிக்கின்றது. இதனால், உரிய பொதுச் சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படும். அதற்கு, பதிலாக பொதுச் சுகாதார அமைப்பைத் தொடர்ந்து சேதப்படுத்தும், மேலும் அவர்களின் அடிப்படை உரிமையான தரமான சுகாதார சேவைகளைக் குடிமக்களிடமிருந்து கொள்ளையடிக்கின்றது.
மேலும், நம் நாடு " வயதாகும் சமுதாயத்தில்" அடியெடுத்து வைக்கும் போது, பெரும்பாலான குடிமக்கள் தங்கள் வயதான காலத்தில் வருமான பாதுகாப்பு இல்லை. ஏனெனில், உலகளாவிய ஓய்வூதியம் இல்லை. ஊழியர்களின் சேமிப்பு நிதியில் (EPF) பங்களிக்கும் முறையான பணியாளர்கள் கூட, அவர்களுக்கு கண்ணியமான முதுமையை வழிநடத்த போதுமான முதியோர் சேமிப்பு இல்லை.
2. சமூகத்தை பிரிக்கும் இன அரசியல்
இன அரசியல் ஏற்கனவே மலேசியர்களுக்கு புதிதல்ல, ஏனென்றால் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி அல்லது பிரதான எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, அரசியல்வாதிகள் பெரும்பாலும் ஆதரவைப் பெறவும், உண்மையான சமூக-பொருளாதார பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும் இதைப் பயன்படுத்துகின்றனர். குறுகிய இன மற்றும் மத அரசியல் மக்களை பிளவுபடுத்தியுள்ளது மற்றும் மலேசியாவில் பல இன சமூகங்களுக்கு இடையே இறுக்கமான உறவுகளை உருவாக்கியுள்ளது. எனவே, நமது சமூகம் எந்தப் பின்னணியில் இருந்தாலும் சமூகத்தின் பொதுவான நலனுக்காக முன்னேறுவதற்கு இன, மத அரசியல் தடையாக உள்ளது.
3. ஜனநாயக சுதந்திரம் சிதைந்து வருகிறது
மடானி அரசாங்கத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் பதவிகளை வகிக்கும் பல அரசியல்வாதிகள், கடந்த காலங்களில் ஒரு காலத்தில், நம் நாட்டில் ஜனநாயக நிலை நிறுத்துவதற்காக "சீர்திருத்தம்" காக கடுமையாகப் போராடினர். ஆனால், ஒருமுறை சீர்திருத்தம் என்ற முழக்கத்தை உரக்க முழங்கியவர் 2022 முதல் மடானி அரசை வழிநடத்திய பிறகு, ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும், ஆழப்படுத்தவும் அரசியல் சீர்திருத்தமும் எங்கும் போவதாகத் தெரியவில்லை, ஜனநாயகத்திற்கான இடம் கூட மீண்டும் சுருங்கிவிட்டது. " “உணர்வுப்பூர்வமான பிரச்சினை” இதில் 3R அடங்கும்.
தேர்தல் முறையில் சீர்திருத்தம், அடக்குமுறை சட்டங்களை நீக்குதல் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடுதல் போன்ற நிறுவன சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளாகவே உள்ளன. மறுபுறம், ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட ஆளும் கட்சியின் தலைவர்கள் கிரிமினல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படலாம், அதே நேரத்தில் நாட்டின் மோசமான ஆட்சியைக் கேள்வி கேட்கும் சமூக ஆர்வலர்களுக்கு எதிராக பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சட்டங்கள் இன்னும் பயன்படுத்தப்படுகின்றன.
4. ஆபத்தான காலநிலை நெருக்கடி
உலகில் உள்ள அனைத்து மனித இனத்தையும் அச்சுறுத்தும் காலநிலை நெருக்கடியிலிருந்து மலேசியா நாட்டை விடுவிக்க முடியாது. இருப்பினும், காலநிலை நெருக்கடியைச் சமாளிக்க ஒரு மூலோபாயத்தை வகுப்பதில் மலேசிய அரசாங்கம் கார்ப்பரேட் வர்க்கத்துடன் இழுத்துச் செல்லப்படுவதாகத் தெரிகிறது.
சுற்றுச்சூழல் நெருக்கடியைக் கையாள்வதில் உண்மையில் தவறான தீர்வாக இருக்கும் ஒரு டெனோக்ரடிக் தீர்வை நடைமுறைப்படுத்த மலேசிய அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிக்கும் தரப்புகள் உள்ளன. கார்பன் சந்தையைத் தள்ளும் அரசாங்கத்தின் திட்டம் மற்றும் "கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு" (CCUS)க்கான உள்கட்டமைப்பு கட்டுமானம், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்கிறது. காலநிலை நெருக்கடிக்கு. மாசுபடுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் காலநிலை நெருக்கடியை மோசமாக்கும் கார்பனை தொடர்ந்து வெளியிடலாம், அதே நேரத்தில் இயற்கை காடுகள் மற்றும் பழங்குடி மக்களின் வழக்கமான நிலப்பகுதிகள் கார்பன் சந்தையில் லாபத்திற்காக வர்த்தகம் செய்யக்கூடிய பொருட்களாக மாற்றப்படுகின்றன.
5. ஏகாதிபத்திய சக்தியின் பிடி
மேலே பட்டியலிடப்பட்டுள்ள 4 அச்சுறுத்தல்களைத் தவிர, மலேசியர்கள் உலக முதலாளித்துவ நெருக்கடி மற்றும் உலக வல்லரசுகளின் போட்டியின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள். பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேலின் சியோனிச ஆட்சி செய்த இனப்படுகொலை குற்றங்கள், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போர், சூடானில் போர், மியான்மர் போர் மற்றும் பல, உலகின் பெரும் வல்லரசுகள் மறுசீரமைக்க முயற்சிப்பதால் இன்னும் தொடர்கின்றன. ஆளும் வர்க்கத்தின் பொருளாதார மற்றும் மண் சார்ந்த அரசியல் நலன்களை அடிப்படையாகக் கொண்ட உலக ஒழுங்கு என்பது ஒவ்வொரு சாதாரண மக்களின் வாழ்க்கை மற்றும் இறப்பை பற்றி கவலைப்படாததாகவே இருக்கின்றது.
அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளுக்கும் அந்தந்த நாடுகளின் (ரஷ்யா மற்றும் சீனா போன்ற) ஆளும் உயிரடுக்கின் நலன்களைப் பாதுகாக்க முயற்சிக்கும் தரப்பும் வளர்ந்து வரும் சக்திகளுடன் போட்டியிடுவதால் பல இடங்களில் ஆசியா பசிபிக் நாடுகள் உட்பட நிச்சயமற்ற புவிசார் அரசியல் சூழ்நிலை உருவாகியுள்ளது. பெரும் ஏகாதிபத்திய சக்திகள் தீவிரமான புவிசார் அரசியல் போட்டியில் ஈடுபடும் மூன்றாம் உலக வளரும் நாடுகளை தங்கள் பக்கம் கட்டாயப்படுத்தி இழுக்க முயல்கின்றது. மலேசியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் தங்கள் சொந்த சமூக மற்றும் பொருளாதார திறன்களை வளர்த்துக் கொள்வது முக்கியம். ஏனெனில், எந்த ஒரு வெளிநாட்டுச் சக்தியையும் சார்ந்து இயங்கக்கூடாது என்பதால். மேலும், பிராந்திய மற்றும் மூன்றாம் உலக நாடுகளுக்கு இடையான மோதல்களுக்கு இழுக்கப்படாமல் இருக்கும் வகையில் நெருக்கமான ஒற்றுமையை வளர்ப்பது, மக்களுக்குப் பயனளிக்காத பெரும் பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்ள உதவும்.
ஒரு முற்போக்கான மாற்று வழிக்காக நாம் தொடர்ந்து போராட வேண்டும்.
பெரும்பான்மை மக்களுக்கு எதிராக தொடர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும் அவற்றைச் சமாளிப்பதற்கும், கீழ்க்கண்ட சிந்தனைகளின் அடிப்படையில், சாமானிய மக்கள் இயக்கத்தையும், முற்போக்கான மாற்று அரசியலையும் கட்டியெழுப்ப நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும்.
- முற்போக்கான வரிவிதிப்பு முறையின் நிதியுதவியுடன், பொதுச் சேவை அமைப்புகளை (சுகாதாரம், கல்வி போன்றவை) வலுப்படுத்தும் கொள்கைகள் மற்றும் விரிவான சமூகப் பாதுகாப்பு (முதியோர்களுக்கான உலகளாவிய ஓய்வூதியம் போன்றவை) மூலம் சமூகத்தின் செல்வத்தை மறுபங்கீடு செய்யும். அது பெரும் பணக்காரர்கள் சரியான வரி செலுத்துவதை உறுதி செய்கிறது.
- வாழ்க்கை ஊதியம், வேலைப் பாதுகாப்பு, சிறந்த பொது சுகாதார அமைப்பு, சிறந்த தேசிய நிர்வாகம் போன்ற பொதுவான பிரச்சினைகளுக்காகப் போராடுவதற்கு இன, மத எல்லைகளைக் கடந்து மக்கள் இயக்கத்தை உருவாக்குவதன் மூலம் அனைத்து இன அரசியலையும் நிராகரிக்கவும்.
- ஒரு பரந்த மற்றும் ஆழமான ஜனநாயக வெளி, இதனால் சாதாரண மக்கள் அன்றாட வாழ்க்கை தொடர்பான முடிவெடுக்கும் செயல்பாட்டில் ஈடுபட முடியும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீட்டெடுப்பது உள்ளிட்ட அரசியல் ஜனநாயகம் அடிமட்டத்துக்கு விரிவுபடுத்தப்பட வேண்டும்.
- கார்ப்பரேட் நலன்களின் செல்வாக்கிலிருந்து விடுபட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை செயல்படுத்துதல். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுவதற்கான உண்மையான முயற்சிகளை ஊக்குவித்தல், பொதுப் போக்குவரத்து முறையை மேம்படுத்துதல், காடுகளைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கும் பிற விஷயங்களில் காலநிலை நெருக்கடியைச் சமாளிக்கும் முயற்சிகளில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் ஜனநாயக ரீதியாக அரசாங்கம் ஈடுபடுத்த வேண்டும்.
- அனைத்து மக்களின் பொதுவான நல்வாழ்வுக்கான பரஸ்பர மரியாதை மற்றும் ஒற்றுமையின் உணர்வை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச உறவுகளை உருவாக்குவது. 2025-இல் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் (ASEAN) தலைவர் என்ற முறையில், மர்ஹேன் சார்பு பிராந்தியக் கொள்கையை உருவாக்குவதை ஊக்குவிப்பதில் மலேசிய அரசாங்கம் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. காலநிலை நெருக்கடி, சமூக அநீதி, போர், அகதிகள் நெருக்கடி போன்ற தேசிய எல்லைகளைக் கடந்த மற்றும் பல்வேறு சவால்களைச் சமாளிக்க தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்திலும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள தேசிய அரசாங்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஆக்கிரமிப்பு, பிற நாடுகளுக்கு எதிராகப் போரைத் தொடங்குதல் மற்றும் ஒரு சமூகத்திற்கு எதிராக இனப்படுகொலைக் குற்றங்களைச் செய்யும் எந்தவொரு அரசாங்க ஆட்சிக்கும் அனைத்து ஆதரவையும் (நிதி மற்றும் ஆயுதம் போன்றவை) நிறுத்துவதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
உண்மையான சுதந்திரமான, ஜனநாயக, சமத்துவ, நியாயமான மற்றும் வளமான சமுதாயத்தை உருவாக்க, ஒரு முற்போக்கான மாற்றீட்டை உணர, நாம் தொடர்ந்து மக்கள் சக்தியை அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்ப வேண்டும். இன்றைய பெரும் சவால்களைச் சமாளிக்க நமக்கு குறுக்குவழிகள் இல்லை. விரிவான மாற்றம் என்பது திடீரென்று தானாக வராது, அது நேர்மையான, விடாமுயற்சியான, உறுதியான, துணிச்சலான, பொறுமையான, நிலையான மற்றும் தீவிரமான போராட்டத்தால் மட்டுமே நிகழும்.
புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் தொடர்ந்து போராடுங்கள்!
எழுதியவர்: சூ சோன் காய்
மத்திய குழு உறுப்பினர்
மலேசிய சோசலிசக் கட்சி (PSM)
தமிழில் : மோகனா