Monday, October 21, 2024

பட்ஜெட் 2025: சாதாரண மக்களுக்கு பெரும் ஏமாற்றமே...

பட்ஜெட் 2025 தாக்கல், சாதாரண மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?!


டந்த வெள்ளியன்று, நாட்டின் நிதி அமைச்சராகவும் பிரதமராகவும் பதவி வகிக்கும் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த 2025 பட்ஜெட், முதலாளித்துவ மடானி அரசாங்கத்தின் தன்மையை பிரதிபலிக்கிறது. அவர் பயன்படுத்திய மர்ஹான் தொடர்பான பேச்சு இந்த அரசாங்கத்தின் கொள்கைகளாக இல்லை. மாறாக சாதாரண மக்களை அடிமைப்படுத்தவும், செல்வந்தர்களை மேலும் வளப்படுத்தவும் மட்டுமே தொடரக்கூடியதாக இருக்கிறது. மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) சேர்ந்த நாங்கள்,  இந்த வரவு செலவுத் திட்டம் குறித்து  எங்களின் கருத்துக்களை பின்வருமாறு சுருக்கமாகக் கூற கடமைபட்டுள்ளோம்.

 1. தனியார் துறையின் மேன்மை மற்றும் தீவிரமடையும் தனியார்மயமாக்குதலின் திட்டம்

இந்த பட்ஜெட், மடானி அரசாங்கத்தை ஒரு முதலாளித்துவ முகவராக அம்பலப்படுத்துகிறது. முதலாவதாக, இந்த அரசாங்கம் வேலை வாய்ப்புகளுக்காக Public-Private Partnership (PPP) மூலம் தனியார் துறையை பெரிதும் நம்பியுள்ளது. அவ்வகையில் வேலை வாய்ப்புக்காக தனியார் நிறுவனங்களைச் சார்ந்திருப்பது தெள்ளத் தெளிவாகிறது.

மலேசியத் தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் வசதிகள் மிகக் குறைவாக இருப்பதற்கு முக்கியக் காரணம் தனியார் உடைமை. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அதிகரிப்புக்கு,  பொருத்தமில்லாத ஊதிய உயர்வுடன் இதைக் காணலாம். 1970-ல் இருந்து தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களின் சராசரி ஊதியம் 1.4 மடங்கு மட்டுமே அதிகரித்துள்ளது. அதே சமயம் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24 மடங்கு அதிகரித்துள்ளது. தொழிலாளர்களின் வியர்வையிலிருந்து உற்பத்தியாகும் செல்வம், முதலாளிகளால் கைப்பற்றப்பட்டு முதலாளித்துவ கைகளில் சேகரிக்கப்படுவதை இது காட்டுகிறது. அது மட்டுமின்றி, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு இப்போது தனியார் துறையை நம்பியிருப்பதால், அவர்களுக்கு எதிராக வரிகளை உயர்த்துவதும் கடினமாக உள்ளது.

அதனால்தான் 1970ல் 40% ஆக இருந்த கார்ப்பரேட் வரி விகிதம் தற்போது 24% ஆகக் குறைந்துள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பெரும் பணக்காரர்கள் நமது தொழிலாளர்களின் முயற்சியின் பலனைத் தின்று, குறைந்த ஊதியத்தைதான் அதற்கு ஈடாக கொடுக்கிறார்கள்; தற்போதுள்ள தொழிலாளர் அமைப்பு முறையால், இந்தத் செல்வத்தை முற்போக்கான வரிவிதிப்பு மூலம் திரும்பப் பெற்று ஏழை மக்களுக்கு மறுபகிர்வு செய்யவும் முடியாது.

இப்படி ஒரு முறையை வைத்து, தொடர்ந்து இந்த சார்புநிலையை அதிகரிப்பது நியாயமா? மேலும், "பணம் செலுத்தும் பயனர்" உறுப்பை கணக்கில் எடுத்துக்கொண்டு அதன்படி பார்த்தால் நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு பொது-தனியார் கூட்டாண்மையும் அடிப்படை என்பது புரியும். அரசின் பொறுப்பில் இருக்க வேண்டிய பொது வசதிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது. இது பின்கதவு தனியார் தனியார்மயமாக்கலாகும் (backdoor privatisation).

பொருளாதாரத்தில் தனியார் துறையின் அதிகாரத்தை குறைக்க அரசு துணிந்து செயல்பட வேண்டும். தனியாருக்கு எதிராக, வேலை வாய்ப்புகளை அரசின் வேலை உறுதித் திட்டத்தின் மூலம் உருவாக்க வேண்டும். ஒரு முதலாளியாகவே அரசாங்கமும் இருப்பதால், அதன் மூலம், தனியார் துறையின் செல்வாக்கை, ஒரு நிலைக்கு குறைக்க முடியும். மேலும், மேம்பாடு அல்லது வளர்ச்சித் திட்டங்களில் தனியார் துறையை நம்புவதற்குப் பதிலாக  பொது வசதிகளை உருவாக்குபவர் என்ற முறையில் அரசாங்கம் தனது பொறுப்பை ஏற்க வேண்டும்.

 


2. வீட்டுரிமையை புறக்கணித்துது  பொது மக்களின் கடனை அதிகரித்தல்

முந்தைய அரசாங்கங்களைப் போலவே, மடானி அரசாங்கமும் 2025 பட்ஜெட்டில் வீட்டுக் கடன்களுக்கான நடைமுறையை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம் காலாவதியான யோசனைகளைத்தான் பயன்படுத்தியிருக்கிறது. அதாவது வீட்டின் விலை மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதனூடான வீடுகளின் அடிப்படைப் பிரச்சினையை தீர்க்க முடியாது. உண்மையில், வீடுகளின் விலையை அதிகரிப்பது டெவலப்பர்களின் நம்பிக்கையை மட்டுமே அதிகரிக்கும், ஏனெனில் மக்கள் வீட்டுக்காக கடன் பெறுவது எளிது. அதனைத் தொடர்ந்து அதிக கடன் சுமையில் மக்கள் மூழ்கடிக்கப்படுகின்றனர்.  மற்ற அடிப்படைத் தேவைகளைப் போலவே வீடும் மக்களின் அடிப்படை உரிமையாகும். இருப்பினும், இது லாபம் ஈட்டுவதற்காக வாங்கி-விற்கும் மற்ற வியாபாரத்தை போன்றே ஒப்பிடப்படுகிறது. இதன் விளைவாக, இந்த லாப விகிதத்தை அதிகரிக்க வீடுகளின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. மக்களின் உணர்வுகளை மதிக்கும் அரசு இந்தப் பிரச்னையை பல்வேறு வழிகளில் தடுக்க நடவடிக்கை எடுக்கும். வீட்டுக்காக மக்கள் பெற்ற கடனை கட்டமுடியாமல், டெவலப்பர் அந்த வீட்டை விற்கும் நடவடிக்கை பற்றியெல்லாம் இந்த அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

 

அதிர்ஷ்டவசமாக, இந்த நெருக்கடியைக் கட்டுப்படுத்த PSM பல உத்திகளை முன்வைத்துள்ளது. அவற்றில், வாங்கும் முதல் வீட்டை சந்தையில் இருந்து அகற்ற வேண்டும். இலாப நோக்கற்ற ஒரு அமைப்பு, முழு அரசாங்க நிதியுதவியுடன் கட்டும் குறைந்த விலை வீடுகளை, தங்களிம் முதல் வீட்டை வாங்க விரும்பும் மலேசியர்களுக்கு விற்க வேண்டும். இந்த வீடுகளை முதலீட்டுப் பொருளாக வைத்திருமாமல்,  குடியிருப்புகளாகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதோடு, சம்பந்தப்பட்ட வீட்டுக்கு அதிகாரம் கொண்டவர்கள் தவிர வேறு யாருக்கும் விற்க முடியாது என்ற நிபந்தனையுடன் இந்த வீடுகள் விற்கப்பட வேண்டும்.

இருப்பினும், முதல் 5 ஆண்டுகளுக்கு குறைந்த கடனைத் திருப்பிச் செலுத்தும் வசதிகளை வழங்கும் Step-Up Financing போன்ற திட்டங்களை மட்டுமே மடானி அரசு உருவாக்கியிருக்கிறது. ஆனால் அடுத்த 30 ஆண்டுகளில் வீடு வாங்கியவர்கள் கடனை அதிகமாக திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும், இதனால் டெவலப்பரின் லாபம் அதிகரிக்கும். அதைத்தவிர்த்து, விலையுயர்ந்த வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு சிறப்பு வரி, இரண்டாவது வீடு மற்றும் அதுமாதிரியான விவகாரங்களுக்கு முதன்மை நில மதிப்பு வரி மற்றும் முதன்மை சொத்து விற்பனையாளரின் மூலதன ஆதாயங்கள் ஆகியவை, மலிவு விலையில் வீடுகள் கட்டுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக்கொள்ளலாம். பகுதி அல்லது முழுமையாக ஆக்கிரமிக்கப்படாத சொத்துகள் மீதான வரி (under-occupancy and vacant tax)  வீட்டு ஊகங்களை குறைக்கலாம், இதனால் வீட்டு விலைகள் குறையும்.

3. தொழிலாளர்கள் மற்றும் சாதாரண மக்களின் நலனில் அக்கறை காட்டவில்லை

MADANI அரசாங்கம் குறைந்தபட்ச ஊதியத்தை மாதத்திற்கு RM1,500 லிருந்து RM1,700 ஆக உயர்த்தியது என்பதை நாம் இந்த பட்ஜெட்டின் வழி அறிவோம். இது தனியார் நிறுவனங்களுக்கு பிரதமரே கோரிய RM3,000 வெள்ளியை விட மிகக் குறைவு. தேசிய சம்பள ஆலோசனை மன்றத்தின் சூத்திரத்தின்படி, குறைந்தபட்ச சம்பளம் RM2,444 ஆக இருக்க வேண்டும்.  மேலும், 2018-ல் பேங்க் நெகாரா மலேசியா கூறியது, கோலாலம்பூரில் வசிக்கும் ஒரு தனி நபருக்கு கெளரவமான சம்பளம் RM2,700-ஆக இருக்க வேண்டும் என்று. அப்படிகூறி 6 ஆண்டுகள் முடிந்துவிட்டது.

PSM குறைந்தபட்ச ஊதியமாக RM2,000 கோருகிறது, மேலும் இந்த இலக்கை  அடையும் வரை குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க இந்த அரசாங்கத்தை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். உண்மையில், குறைந்தபட்ச ஊதிய உயர்வு ஜனவரி 2025க்குள் 35 மாதங்கள் தாமதமாகும். ஒரு மலேசியத் தொழிலாளி  நிலுவையில் உள்ள தனது குறைந்தபட்ச ஊதியம் RM5,000 ரிங்கிட் சம்பளத்தை இழப்பார் (2025 இன் குறைந்தபட்ச ஊதியமான RM1,700 மாத ஊதியத்தின்படி கணக்கிடப்படுகிறது) - RM7 ,100 (2025 இன் குறைந்தபட்ச ஊதியமான RM2 ,000 மாதத்திற்கு கணக்கிடப்படுகிறது). இது நியாயமாக பார்க்கப்படுமா?

தனியார் துறையில் உள்ள பட்டதாரிகளுக்கு அதிக சம்பளம் வழங்குவதை ஊக்குவிக்க இந்த அரசாங்கம் ஆர்வமாக உள்ளது. அரசாங்கம், பட்டதாரிகளுக்கு தனியார் துறையினரின் பரிந்துரைக்காக சம்பள அளவுகோலை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இம்மாதிரியான விரைவு சட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் வற்புறுத்தலின்றி இந்த அளவுகோலை முதலாளிகள் பின்பற்றுவதன் நோக்கம் என்ன? இந்த பிரத்தியேக ஊதியக் கொள்கை, நிஜ உலகில் காலூன்றாத, உழைக்கும் வர்க்கத்தை அவமதிக்கும், மனத்தில் பிறந்த கனவு மட்டுமே.

மற்றொரு முட்டாள்தனமான கொள்கை, வயதான சமுதாயத்தை கையாள்வதற்கான ஒரு வழியாக EPF சேமிப்பை  தலைமுறைகளுக்கு இடையே மாற்றுவது. முதியோர் மற்றும் அவர்களது குழந்தைகளின் இபிஎஃப் கணக்கில் சேமிப்பு இல்லாததால், முதியோர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தைப் பெற PSM கடந்த 2 ஆண்டுகளாக, போராடி வருகிறது. தலைமுறைகளுக்கு இடையிலான பரிமாற்றங்கள் உண்மையில் முக்கியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக தனிநபர்களிடையே வறுமையின் வலியை மட்டுமே கூட்டுகின்றன.

மேற்கண்ட பகுப்பாய்விலிருந்து,  பணக்காரர்களின் கூட்டாளியாக இல்லாமல், உண்மையிலேயே மக்களுக்கான அரசாங்கமாக செயல்பட மடானி அரசாங்கத்தை பி.எஸ்.எம் கேட்டுக் கொள்கிறது. மலேசியாவில் உள்ள சாதாரண மக்களுக்கு விவேகம் மற்றும் பயனுள்ள கொள்கைகள் தேவை, மக்களின் கடினமான பிரச்சினைகளை வாக்குகளாக மாற்ற, அடிக்கடி தந்திரமாக துப்பிச் செல்லும் அரசியல்வாதிகளின் எச்சில் அல்ல. இதுபோன்ற கொள்கைகள் மடானி அரசாங்கத்தின் சிந்தனையில் இல்லை மாறாக எங்களைப் போன்ற மார்ஹேன் அமைப்புகளில் மட்டுமே இருப்பதாகவும் தெரிகிறது.  இங்குள்ள சாமானியர்கள் நெஞ்சில் கை வைத்து, அவர்களின் பசியை முன்னிறுத்தி கேட்க வேண்டும், உங்கள் ஆதரவைப் பெற யார் தகுதியானவர்?


- அரவிந்த் கதிர்ச்செல்வன்

மலேசிய சோசலிசக் கட்சி

மத்திய செயற்குழு உறுப்பினர்

(மொழிபெயர்ப்பு யோகி)

No comments:

Post a Comment

களப்பரியாத போராளி, தோழர் சாந்தா காலமானார் (1975 - 2025)

சமூக ஆர்வாலர், ஓர் ஆசிரியர்,  முற்போக்கான குரல் மற்றும் எங்கள் ஜொகூர் கிளையின் முக்கிய தலைவருமான தோழர் சாந்தா லெட்சுமி பெருமாள் அவர்களின் உய...