பாண்டாமாரான், கிள்ளானில் அமைந்துள்ள கம்போங் பாப்பான் ஊர்வாசிகள் 1939 ஆம் ஆண்டு, அதாவது சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இங்கு வசித்து வருகின்றனர். தொடக்கத்தில் அவர்கள் கம்போங் பாரு (புதிய கிராமம்) குடியிருப்பாளர்களாகக் கருதப்பட்டனர். பின்னர் 1968 முதல் 1989 வரையிலான காலகட்டத்தில் தற்காலிக குடியேற்ற அனுமதி (TOL) பெற்றிருந்தனர்.
ஆயினும், தற்போது மேம்பாட்டு நிறுவனம் மற்றும் நீதிமன்றத்தினால் அவர்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.
எளிய முறையில் முக்கிய காலவரிசை விவரங்கள்:
• 1992 – மாநில அரசு, குடியேற்றக்காரர்களுடன் இணைந்து நில அளவீடு மற்றும் திட்டமிடல் பணிகளைத் தொடங்கியது. ஒவ்வொரு குடியேற்றக்காரரும் நில அளவீட்டுக்காக RM 70 செலுத்தினர். இந்த நடவடிக்கை அவர்கள் பின்னர் நில உரிமை பெறுவதற்கான அடிப்படையாகும் என்று அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது.
• 1995 – சிலாங்கூர் மாநில அரசு இந்த நிலத்தில் 95 ஏக்கர் நிலத்தை பேங்க் நெகாராவின் கீழ் உள்ள TPPT (Tabung Projek Perumahan Terbenkalai) க்கு மாற்றியது, இது குடியேறிகளுக்கு வீடுகளைக் கட்டுவதை நோக்கமாகக் கொண்டது. TPPT புதிய நில உரிமையாளராக மாறியது.
• 2007 – TPPT, Melati Ehsan Consolidated Sdn. Bhd. என்ற மேம்பாட்டு நிறுவனத்தைக் கொண்டு வந்து, குடியேறிகளுக்கு வீடுகளைக் கட்டும் நோக்கத்துடன் மீண்டும், அதே நிலத்தின் மீது POA (Power of Attorney வழங்கியது.
• 2020 – COVID-19 காலத்தில், Melati Ehsan நிறுவனம் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியேற்றக்காரர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தது; அவர்களை சட்டவிரோத குடியேற்றம் செய்தவர்கள் என குற்றம் சாட்டியது.
• 2024 – அந்நேரத்தில் , Melati Ehsan நிறுவனம் 11 ஏக்கர் நிலத்தை சிலாங்கூர் அரசாங்கத்திடம் திருப்பித் தர திட்டமிட்டனர், இதனால் மாநில அரசு அதே குடியேறிகளுக்கு வீடுகளைக் கட்டித் தர முடியும்.
இந்தச் சம்பவங்கள் தொடர்ச்சியாக அமைந்த விதத்தைப் பார்த்தால், நாம் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது —
சிலாங்கூர் மாநில அரசு, ஏன் இந்நிலத்தை TPPT-க்கு வழங்கியது?
அதன் பின்னர் TPPT, Melati Ehsan என்ற மேம்பாட்டு நிறுவனத்தை ஏன் இணைத்தது? இறுதியில், அதே நிறுவனமே நிலத்தின் ஒரு சிறிய பகுதியை மீண்டும் மாநில அரசுக்கு ஒப்படைக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது?
TTDI மற்றும் Melati Ehsan அடிக்கடி முன்வைக்கும் ஒரு காரணம் என்னவெனில் —
குடியேற்றக்காரர்கள் “தந்திரமானவர்கள்/ஏமாற்றுபவர்கள்” என்றும்
முன்பே RM 42,000 மதிப்புள்ள குறைந்த விலை வீட்டு unitகள் வழங்கப்பட்டன என்றும் கூறப்படுவது. இந்தக் கூற்றை வலுவாக நாங்கள் மறுக்கிறோம். குறைந்த விலை வீட்டு ஒதுக்கீடுகள் அனைத்தும் சிலாங்கூர் மாநில வீடு மற்றும் சொத்து வாரியம் (LPHS)- ஆல் நிர்வகிக்கப்படுகின்றன. உண்மையில், குடியேற்றக்காரர்கள் இரட்டை கோரிக்கை செய்திருந்தால், அது தொடர்பான ஆதாரம் நிச்சயமாக இருக்கும் — அப்படி இருந்தால், அவர்கள் வீட்டு ஒதுக்கீட்டிலிருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதற்கு மேலாக, மாநில அரசு மேற்கொண்ட ஓர் ஆய்வில் 211 குடியேற்றக்காரர்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் மந்திரி பெசார்களும், ஒவ்வொரு குடியேற்றக்காரருக்கும் சுமார் RM 99,000 மதிப்பில் தரைத்தள வீடுகள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தனர்.
2018 பிப்ரவரி 28 அன்று நடைபெற்ற MTES கூட்டம்,
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அலுவலகத்தின் தலைமையில் நடைப்பெற்றது, இதன் முடிவில் 181 நபர்கள் தான் உண்மையான முதன்மை குடியேற்றக்காரர்கள் எனத் தீர்மானிக்கப்பட்டது.
இந்த எண்ணிக்கையில்:
-
123 பேர்
கம்போங் பாப்பான் முதன்மை குடியேற்றக்காரர்கள்;
இவர்களுக்கு 20' x 70' அளவிலான தரைத்தள வீடுகள்
RM 99,000 விலையில் வழங்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. -
58 பேர்
Selangorku வகை B (800 சதுர அடி) வீடுகள்
RM 99,000 விலையில் வழங்கப்படும். -
சுமார் 30 குடும்பங்கள்
ஏற்கனவே உள்ள தள அமைப்பைக் கொண்ட வீட்டு அமைப்புகளுடன் இருப்பவர்கள்; இவர்களுக்கு நடுத்தர விலை வீடுகள்
(சந்தை விலைக்கு ஏற்ப) அல்லது Selangorku வகை B வீடுகள் வழங்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
சிலாங்கூர் மாநில அரசின் நிலைப்பாட்டைப் திரும்பிப் பார்த்தால்:
முன்னாள் BN ஆட்சியின் கீழ், முதல்வர் Khir Toyo “Zero Squatter Policy” என்ற கொள்கையை அறிமுகப்படுத்தினார். ஆனால் அதன் பின்னர், பகாத்தான் ராக்யாட் அதனைத் தொடர்ந்து பகாத்தான் ஹரப்பான் அரசு பொறுப்பேற்றதிலிருந்து, புதிய கொள்கை அமல்படுத்தப்பட்டது —அதாவது, குடியேற்றவாசிகள் தங்கள் வீடுகளை இடிப்பதற்கு முன்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, மாற்று வீடுகள் வழங்கப்பட்ட பிறகே அவர்களின் வீட்டுக்கள் இடிக்கப்பட வேண்டும். இது B40 சமூகத்திற்கு மிகவும் மனிதாபிமான அணுகுமுறையாகும்.
தற்போது இந்நிலையைத் தீர்க்க மாநிலத்தின் தற்போதைய முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் வலியுறுத்துகிறேன். அதோடு கம்போங் பாப்பான் குடியேற்றக்காரர்களின் போராட்டத்தில் DAP நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ADUN-கள் நீண்ட காலமாகச் செயல்பட்டு வருகின்றனர். கம்போங் பாப்பானின் பல முன்னாள் தலைவர்களும் DAP கட்சியின் உறுப்பினர்களாக உள்ளார்கள். அப்படியிருக்கையில் இன்று, அவர்கள் மேம்பாட்டு நிறுவனத்துக்கு முன்பாக மென்மையான அணுகுமுறையில் இருக்கிறார்களா? இவ்வாறு கேட்பதற்கான காரணம் — மேம்பாட்டு நிறுவனம் அவர்கள் விரும்பியபடி செயல்படுவதாக தோன்றுவதால் நான் இதைச் சொல்கிறேன்.
கடந்த வியாழக்கிழமை மந்திரி பெசார் அலுவலகம் முன்பு நடைபெற்ற எதிர்ப்பு போராட்டமும், மாநில நிர்வாகக் கவுன்சிலர் YB போர்ஹான் அவர்களுடனான சந்திப்பும், சிறு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. YB போர்ஹான் வழங்கிய உறுதிமொழிப்படி, தற்போது குடியிருந்து வரும் வீடுகள் இடிக்கப்படாது என்றும், குடியேற்றத்தாருக்கான மாற்று வீடு தீர்வுகள் குறித்து மேம்பாட்டு நிறுவனத்துடன் நடவடிக்கைகள் / கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன என்றும் கூறினார்.
எனது உறுதியான வேண்டுகோள் —
குடியேற்றக்காரர்கள் எந்த வகையிலும் அச்சுறுத்தப்படவோ,
அடக்குமுறைக்குள்ளாக்கப்படவோ கூடாது. அவர்களின் உரிமைகளே முதன்மை பெற வேண்டும்; மேம்பாட்டு நிறுவனத்தின் லாபநோக்கங்களல்ல.
எழுதியவர் : எஸ்.அருட்செல்வன் PSM & Gabungan Marhaen இன் துணைத் தலைவர் 25 அக்டோபர் 2025
No comments:
Post a Comment