PSM அறிக்கை – 3 மார்ச் 2026
மத விவகார துணை அமைச்சர் “சீரழிந்த கலாசாரம்” என LGBTQIA சமூகத்தை குறிப்பிட்ட கருத்துக்கு சோசலிச இளைஞர் பிரிவு பதிலடி
மத விவகாரங்களுக்கான துணை அமைச்சர் YB Sen. Puan Marhamah Binti Rosli அவர்கள் LGBTQIA+ சமூகத்தை “சீரழிந்த கலாசாரம்” என குறிப்பிட்ட சமீபத்திய கருத்துக்களை சோசலிச இளைஞர் பிரிவு கடுமையாக எதிர்க்கிறது. இத்தகைய பேச்சுகள் வெறும் அவமதிப்பானது மட்டுமல்ல; அது மனிதாபிமானமற்றது, பழித்தூற்றலை வலுப்படுத்துகிறது, பாகுபாட்டைச் சட்டப்பூர்வமாக்குகிறது, மேலும் ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சமூகத்தினருக்கு எதிரான விரோதத்தைத் தூண்டும் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது.
அரசியல் அழுத்தம் அல்லது பொதுமக்கள் அதிருப்தி அதிகரிக்கும் தருணங்களில், குயர் சமூகத்தை எளிதான பலிகடாவாக பயன்படுத்தும் ஒரு கீழ்மையான அரசியல் முறை காணப்படுவதை நாங்கள் கவலையுடன் கவனிக்கிறோம். அடையாள அரசியலை ஆயுதமாக்குவது, பொறுப்பேற்க வேண்டிய தேசிய பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திருப்புகிறது.
இந்த நடைமுறை பின்வரும் நிகழ்வுகளில் தெளிவாகத் தெரிகிறது:
மே–ஜூலை 2025
Rafizi Ramli மற்றும் Nik Nazmi Nik Ahmad ஆகியோரின் ராஜினாமாவை மையமாகக் கொண்டு பொதுமக்கள் கவனம் திரும்பியிருந்த நிலையில், மத விவகார அமைச்சர், ஒரு பாலியல் சுகாதார விழிப்புணர்வு பயிலரங்கை விசாரிக்க வேண்டுமெனக் கோரினார் — அதற்கு கூட்டாட்சி சட்டம் அல்லது ஷரியா சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படையும் இல்லை. அதே காலகட்டத்தில், கிளந்தானில் நடைபெற்ற தனியார் கூடுகை ஒன்று “கே பார்ட்டி” என சோதனை செய்யப்பட்டு சித்தரிக்கப்பட்டது. பின்னர் சிவில் சமூகம் மற்றும் சுகாதார அமைச்சகம் அது HIV விழிப்புணர்வு நிகழ்ச்சி என்பதை தெளிவுபடுத்தின.
நவம்பர்–டிசம்பர் 2025
சபா மாநிலத் தேர்தலால் ஏற்பட்ட கூட்டாட்சி அரசியல் பின்னடைவுகளின் போது, பினாங்கு மற்றும் கோலாலம்பூரில் ஆண்கள்-மட்டும் (men-only )சோனா மையங்களில் சட்ட அமலாக்கத்தினர் மிகப் பெரிய அளவில் சோதனைகள் நடத்தினர். “ஒழுக்கக்கேடான செயல்கள்” என்ற கோணத்தில் செய்தித் தலைப்புகள் வெளிவந்தபோதிலும், அதன் பின்னர் குறைந்த அல்லது எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை.
ஜனவரி–பிப்ரவரி 2026
Azam Baki தொடர்பான ஊழல் விவகாரங்கள் மற்றும் நிறுவனப் பொறுப்புணர்வு குறித்த பொது ஆய்வுகள் தீவிரமானபோது, கவனம் திடீரென ஓரினச்சேர்க்கையை வேலை அழுத்தத்துடன் இணைக்கும் கூற்றுக்கள் மற்றும் மத விவகார அமைச்சர்களால் LGBTQ+ மக்களை "மாறுபட்ட கலாச்சாரம்" என்று முத்திரை குத்துவது குறித்து கவனம் திரும்பியது.
இந்த நிகழ்வுகள் அனைத்தும், LGBTQ+ சமூகத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளும் கருத்துக்களும், மலேசியர்களின் கவனத்தை ஊழல் மற்றும் மோசமான அரசியலிலிருந்து திருப்புவதற்கான நெறிப்படுத்தப்பட்ட கலக்கத்தை (moral panic) தூண்டுவதே நோக்கமாக இருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.
அரசின் வளங்கள், உண்மையான சேதங்களை எதிர்கொள்ள முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் — அதாவது சுரண்டல், துஷ்பிரயோகம், மனிதக் கடத்தல், வன்முறை, ஊழல் மற்றும் அமைப்புசார் சமத்துவமின்மை. இவை மக்களின் பாதுகாப்பையும் நலனையும் நேரடியாகப் பாதிக்கும் பிரச்சினைகள்.
சர்வதேச பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், மலேசியாவின் வெளிநாட்டு கொள்கை நிலைப்பாடுகள் குறித்த கவலைகளும் நிலவுகின்றன. இத்தகைய நேரத்தில், நெறிமுறைக் கலக்கத்தை தூண்டி கவனத்தைத் திருப்புவது, பொது பொறுப்புணர்வை மேலும் பலவீனப்படுத்தும்.
அரசாங்கம் தங்கள் அறிக்கைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்களின் வார்த்தைகள் சமூக மனப்பான்மையை வடிவமைக்கின்றன, மேலும் பதட்டங்களைத் தணிக்கலாம் அல்லது பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை நோக்கி வன்முறையை தூண்டலாம்..
மலேசிய அரசியலில் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் இத்தகைய தந்திரங்களுக்கு இடமிருக்கக் கூடாது.
Pemuda Sosialis, பலிகடா அரசியலிலிருந்து விலகி, நீதி, சமத்துவம் மற்றும் பொறுப்புணர்வு அடிப்படையிலான கொள்கைகளுக்கு மாறுமாறு வலியுறுத்துகிறது.
எழுதியவர்: பு யான் கேய், Rainbow Troupe, சோசலிச இளைஞர் பிரிவு
SOURCES
May-July 2025:
- Malaysian Ministers Quit in Blow to Anwar’s Government, 28 May 2025 -
https://www.bloomberg.com/news/articles/2025-05-28/malaysia-economy-minister-rafizi-to-resign-effective-june-17
- Malaysia Kini: No legal grounds to probe LGBTQ+ workshop, says LFL, 1 June 2025 - https://m.malaysiakini.com/news/744959?s=08
- Not a 'gay party' but a HIV awareness event, 22 July 2025 -
https://www.nst.com.my/news/nation/2025/07/1248515/not-gay-party-hiv-awareness-event
November-December 2025:
- Sabah’s Nov 29 election will test Malaysia’s federal maturity, 29 November 2025 - https://www.ucanews.com/news/sabahs-nov-29-election-will-test-malaysias-federal-maturity/111080
- Malaysia PM faces electoral setback as allies fall in Sabah state polls, 30 November 2025 -
https://www.reuters.com/world/asia-pacific/malaysia-pm-faces-electoral-setback-allies-fall-sabah-state-polls-2025-11-30/
- Senior citizen among 13 nabbed in Penang sauna raid, 29 November 2025 - https://www.nst.com.my/news/regional/2025/11/1326944/senior-citizen-among-13-nabbed-penang-sauna-raid
- ‘Men only’ KL spa raid: 171 freed after court rejects remand bid in ‘victimless’ case, 30 November 2025 -
https://www.straitstimes.com/asia/se-asia/men-only-kl-spa-raid-171-get-off-scot-free-after-court-rejects-remand-bid-in-victimless-case
January-February 2026:
- Malaysians lampoon minister over stress-gay link: ‘they never work hard in parliament?’, 28 January 2026 -
https://www.scmp.com/week-asia/politics/article/3341504/malaysians-lampoon-minister-over-stress-gay-link-they-never-work-hard-parliament
- Bukit Aman records statement from Albert Tei over allegations involving Azam Baki, 29 January 2026
https://www.thestar.com.my/news/nation/2026/01/29/bukit-aman-records-statement-from-albert-tei-over-allegations-involving-azam-baki
-Malaysian minister calls for royal probe into anti-graft body’s ‘corporate mafia’ claims, 24 February 2026 -
https://www.straitstimes.com/asia/se-asia/malaysia-minister-calls-for-top-level-probe-into-anti-graft-bodys-corporate-mafia-claims
- Deputy minister says LGBT should be called ‘deviant culture’ to avoid normalisation, 26 February 2026 -
https://www.malaymail.com/news/malaysia/2026/02/26/deputy-minister-says-lgbt-should-be-called-deviant-culture-to-avoid-normalisation/210509