Sunday, December 29, 2024

PSM-இன் மக்கள் போராட்டம் 2024 ; ஒரு பார்வை


2024-ஆம் ஆண்டின் இறுதியில் நின்றுக்கொண்டு, 2025-ஆம் புதிய ஆண்டை வரவேற்க உள்ளோம்.  இந்த ஓராண்டு காலத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடிய, தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் மலேசிய சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) கடந்த ஓராண்டின்  செயல்பாடுகள் மற்றும் முயற்சிகளின் சுருக்கமாக மதிப்பாய்வு இது.

 

1. முதியோர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்


ஓய்வூதியம் பெறாத 65 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்து மலேசியர்களுக்கும் மாதந்தோறும் RM500 செலுத்தும் மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த PSM தீவிரமாக பிரச்சாரம் செய்தது. நாடு முழுவதும் இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவாக PSM ஆர்வலர்கள் கையெழுத்துகளை பொதுமக்களிடம் சேகரித்தனர். மேலும் 45 அமைப்புகளால் ஆதரிக்கப்பட்ட ஒரு குறிப்பாணையை 1 அக்டோபர் 2024 அன்று பிரதமர் அலுவலகத்தில் PSM சமர்ப்பித்தது. நம் நாட்டில் உள்ள முதியோர்களின் அவலநிலை குறித்து அக்கறை கொண்ட அரசு சாரா சமூக இயக்கங்களுடன்  இணைந்து, பட்ஜெட்டில் முதியோர்களுக்கான  ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று அரசாங்கம் மற்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்து, PSM அக்டோபர் 15, 2024 அன்று பாராளுமன்றத்தின் முன் ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்தது.

 

2. குறைந்தபட்ச ஊதியத்தை RM2,000 ஆக உயர்த்த வேண்டும்


PSM மற்றும்   அரசு ஒப்பந்த தொழிலாளர்களின் குத்தகை சங்கம்   (JPKK)  இணைந்து 27 செப்டம்பர் 2024 அன்று மனித வள அமைச்சகத்திடம் குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை,  குறைந்தபட்சம் RM2,000 ரிங்கிட்டாக உயர்த்துவதற்கான ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்தது. பிப்ரவரி 2025 முதல் குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை RM1,700 ஆக உயர்த்திய பட்ஜெட் 2025 இன் அறிவிப்பில் PSM திருப்தி கொள்ளவில்லை, ஏனெனில் அடிமட்டத் தொழிலாளர்களின் எளிமையான மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கு அது போதுமானது இல்லை.


3. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான அடக்குமுறையை எதிர்த்துப் போராட்டம்


நம் நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஒடுக்குமுறை பிரச்சினையை அம்பலப்படுத்துவதில் PSM கடப்பாடு கொண்டுள்ளது.  இதில் அதிக எண்ணிக்கையிலான வங்காளதேசத் தொழிலாளர்களை நாட்டிற்கு கொண்டு வரும் விவகாரமும் அடங்கும். அவர்கள் இங்கு வந்தவுடன் அவர்களின் பணி ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அவர்களுக்கு வேலை வழங்கப்படுவதில்லை. அம்மாதிரி பிரச்னைகளை எதிர்கொள்ளும் தொழிலாளர்களுக்கு போலீஸ் அறிக்கைகளை தயார் செய்யவும், தொழிலாளர் வழக்குகளை மனிதவளத் துறையிடம் பதிவு செய்யவும் PSM  உதவி செய்கிறது. இந்த விவகாரத்தை முன்னிலைப்படுத்தியதற்காக, இந்தப் பிரச்னையில்  ஈடுபட்டுள்ள இரண்டு நிறுவனங்களான Beaks Construction Sdn Bhd   மற்றும் Suria Harmoni Resources Sdn Bhd  ஆகியவை PSM மற்றும் மலேசியாகினி செய்தி இணையதளத்திற்கு எதிராக மிரட்டல் இடும் அல்லது "பொது பங்கேற்பிற்கு எதிரான மூலோபாய வழக்கு" (SLAPP) கீழ் அவதூறு வழக்குகளை தாக்கல் செய்தன. 


4. பேங்க் நெகாராவுக்கு எதிரான வழக்கில் கோகிலா வெற்றி பெற்றார்


கோகிலா யானசேகரன், ஒரு சமூக ஆர்வலர் மற்றும் தற்போது PSM மத்திய செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். 
பேங்க் நெகாராவுக்கு எதிரான தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் வெற்றி பெற்றார். கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் 29 மார்ச் 2024 அன்று, 2017 இல் கோகிலா அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்றதற்காக பணியிலிருந்து  நீக்கப்பட்டது செல்லாது மற்றும் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது.


5. முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள், வீட்டுக் கோரிக்கைகளை வென்றனர்


பெர்ஜெயாசிட்டி ஊழியர் வீட்டு ஒருங்கிணைப்பு  குழுவின்  தொடர்ச்சியான வலியுறுத்தலின் விளைவாகவும், கோலா குபு பாரு மாநில சட்டமன்றப் பகுதிக்கான இடைத்தேர்தல் (பிஆர்கே) வாய்ப்பைப் பயன்படுத்தி, தோட்டத் பாட்டாளிகள் தங்கள் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி, மத்திய அரசும் சிலாங்கூர் மாநில அரசும் கோலா சிலாங்கூர் மற்றும் ஹுலு சிலாங்கூர் மாவட்டங்களில் உள்ள 5 தோட்டங்களைச் சேர்ந்த, 245 முன்னாள் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க ஒப்புக்கொண்டன.


6. பாலஸ்தீனத்துக்கு ஆதரவு மற்றும் இனப்படுகொலைக்கு எதிர்ப்பு




பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலை இன்னும் genosid இஸ்ரேலிய ஆட்சியால் நடத்தப்பட்டு வரும் நிலையில், PSM பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், காஸா இனப்படுகொலைக்கு எதிராகவும் எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து ஆதரித்து வருகிறது. PSM ஆர்வலர்கள் GEGAR அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர், அதாவது 24 பிப்ரவரி 2024 மற்றும் 13 டிசம்பர் 2024 அன்று நடந்த போராட்டங்களை சொல்லலாம். GEGAR மலேசிய அரசாங்கத்தின் பங்குகளை பிளாக் இராக்கிற்கு விற்கும் நடவடிக்கைகளையும் விமர்சித்தது. அதோடுஇஸ்ரேலின் சியோனிச ஆட்சிக்கு இராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை வழங்கும் நிறுவனங்களை நம் நாட்டில் நடைபெறும் சர்வதேச கண்காட்சிகளில் பங்கேற்க அனுமதித்ததும், பாலச்தீன ஆதரவாளர்கலால் எதிர்ப்புக்கு உள்ளாகியது. மேலும், பாலஸ்தீன ஆதரவு செயற்பாட்டாளர்கள் போலிஸ் விசாரணைகளால் அடிக்கடி அச்சுறுத்தப்படுகின்றனர்.


7. தோட்டப் பகுதிகளில் விவசாயம் செய்ய தடை விதிக்கப்பட்டதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு




பாட்டாளி மக்களின் ஒருங்கிணைப்பு குழு (MARHAEN) விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தில் 25 ஏப்ரல் 2024 அன்று, தோட்டப் பகுதியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தடுக்கும் Sime Darby நிறுவனத்தின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தது.


8. பேராக் மாநில விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது


பேராக் மாநிலத்தின் பல பகுதிகளில் சிறு விவசாயிகள், இன்னும்கூட தங்களின் விவசாய நிலத்திலிருந்து வெளியேற்றும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பைக் காக்க அவர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். இன்னும் சில வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.


9. சோங் யீ ஷானுக்கு நீதி வேண்டும்


PSM மத்தியச் செயற்குழு உறுப்பினர் சோங் யீ ஷான்,  24 அக்டோபர் 2023 அன்று  சிறு விவசாயிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கையின்போது  பேராக் நில அமலாக்கப் பிரிவினரால் காயமடைந்தார். பின் அந்த அதிகாரிகளால்   நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். பேராக் நில அமலாக்க அதிகாரிகளுக்கு எதிராக ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் 16 ஜூலை 2024 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது


10. ஞாயமான ஊதியக் கொள்கை தொடர்பான விவாதம்


மலேசியாவில் பெரும்பாலான தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் குறைந்த ஊதியம்,  பிரச்சனைகளுக்கு தீர்வு காண போதுமானதாக இல்லை என்பதால், ஞாயமான ஊதியக் கொள்கை தொடர்பாக PSM விவாதம் செய்தது. 31 ஜனவரி 2024 அன்று  மலாயா பல்கலைக்கழகம்,  ஆசிய ஐரோப்பா நிறுவனம் (AEI) மற்றும் JPKK இணைந்து ஏற்பாடு செய்த இந்த ஊதியக் கொள்கை குறித்த வட்ட மேசை விவாத அமர்வில் இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டது.

11. விளிம்புநிலை மக்கள்  எதிர்கொள்ளும் குடியுரிமைப் பிரச்சனையைத் தீர்க்க அரசாங்கத்தை PSM வலியுறுத்தியது



13 செப்டம்பர் 2024 அன்று மலேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் (SUHAKAM) ஒரு மகஜரை PSM சமர்ப்பித்தது.  மலேசிய குடியுரிமை பெற்ற கணவருடன் இதுவரை திருமணத்தை பதிவு செய்யாத வெளிநாட்டு தாய்மார்களைக் கொண்ட குழந்தைகள், தாய் மலேசியாவில் பிறந்திருந்தாலும் அடையாள அட்டை இல்லாத தாய்மார்களைக் கொண்ட குழந்தைகள் என இரண்டு விளிம்புநிலை மக்கள் எதிர்கொள்ளும் குடியுரிமைப் பிரச்சனைகளை எடுத்துரைக்க அந்த மகஜர் வழங்கப்பட்டது.  

12. சிலாங்கூரில் B40 குடும்பங்கள் மலிவு விலையில் வீடு வாங்குவதற்கு  அரசாங்கத்தை வலியுறுத்தியது


குறைந்த வருமானம் கொண்ட B40 பிரிவினருக்கு உண்மையிலேயே மலிவு விலையில் வீடு வாங்குவதற்கான வீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், சிலாங்கூர் மாநில மலிவு வீடு ஒருங்கிணைப்பு குழு (JRM) மற்றும் PSM இணைந்து சிலாங்கூர் மாநில அரசுக்கு 28 மே 2024 அன்று ஒரு மகஜரை சமர்ப்பித்தனர்.


13. கைவிடப்பட்ட தாமான் ஸ்ரீ ஜெயா வீட்டுத் திட்டத்தின் குடியிருப்பாளர்கள் வீட்டு சாவியைப் பெறுகிறார்கள்


சிலாங்கூரில் உள்ள தாமான் ஸ்ரீ ஜெயா, பத்து 9, சேரஸ்சில் வீடுகளை வாங்கிய 7 குடும்பங்களில் 5 பேர்,  33 வருட காத்திருப்பு மற்றும் விடாமுயற்சிக்குப் பிறகு, கைவிடப்பட்ட அந்தத் திட்டத்தில் , இறுதியாக தாமான் ஹார்மோனியில்  மாற்று வீடுகளுக்கான சாவியைப் பெற்றனர்.

14. அமெரிக்க அரசுக்கு எதிராக சுப்ரமணியம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து கொள்ளப்பட்டது


தனக்கு எதிரான நியாயமற்ற பணிநீக்கம் தொடர்பாக  அமெரிக்க  அரசாங்கத்துடன் நீதிமன்றத்தில்  நஷ்ட ஈடு கோரி போராடிய முன்னாள் பாதுகாவலர் சுப்ரமணியம் லெட்சுமணன் வழக்கு, 16 வருடப் போராட்டத்திற்குப் பிறகு, நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து கொள்ளப்பட்டது.

15. ஒப்பந்த முறையில் உள்ள குறைபாடுகளை JPKK வெளிப்படுத்தியது


அரசு வளாகங்களில் பணி புரியும் குறிப்பாக அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் காவலர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களாக பணி செய்யும் குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களை, அரசு 
ஆதரவு சேவையாளர்களான தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறது என்றும் தொழிலாளர்களை  வேட்டையாடி  எப்படி வறுமையில் ஆழ்த்துகிறது என்பதை, ஆய்வு செய்து JPKK தனது சமீபத்திய ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. 

16. தொழிற்சங்க அழிவுக்கு எதிராக மருத்துவமனை ஊழியர் சங்கம்


அரசு மருத்துவமனையின் தனியார் ஊழியர் சங்கம் (NUWHSAS) அதனைச் சேர்ந்த தொழிற்சங்க உறுப்பினர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், Edgenta UEMS Sdn Bhd என்ற நிறுவன முதலாளியிடமிருந்து பல்வேறு அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல்களை இன்னும் எதிர்கொள்கிறது.

17. PSM இன் புதிய தேசியப் பொதுச் செயலாளராக சிவரஞ்சனி தேர்ந்தெடுக்கப்பட்டார்


ஜோகூர் பாருவில் 2024 ஜூலை 26-28 அன்று நடைபெற்ற PSM தேசிய காங்கிரஸில்,  சிவராஜன் ஆறுமுகத்திற்கு பதிலாக, PSM போராட்டத்தை ஒரு புதிய வீச்சுடன் நடத்தும் பணியை முன்னெடுக்க,  PSM இன் புதிய பொதுச் செயலாளராக சிவரஞ்சனி மாணிக்கம் தெரிவு செய்யப்பட்டார்.

18. சோசலிசம் 2024


சோசலிசம் 2024 மாநாட்டை "யாருக்கான  மடானி" என்ற கருப்பொருளுடன் ஏற்பாடு செய்தது. 30 நவம்பர்  முதல் 1 டிசம்பர் 2024 வரை கோலாலம்பூரில் நடந்த அந்த மாநாடு, மடானி அரசாங்கம் எந்த அளவிற்கு மக்களின் நலன்களை உயர்த்தி,  வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என்பதை மதிப்பிடும் வகையில் அந்த மாநாடு அமைந்தது.

19. 2024 தொழிலாளர் தின கொண்டாட்டம்


மே 1, 2024 அன்று கோலாலம்பூரில் "வாழ்க்கைக்காக சம்பளம்" என்ற கருப்பொருளில் நடைபெற்ற தொழிலாளர் தின விழாவில் சுமார் 1,500 பேர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

களப்பரியாத போராளி, தோழர் சாந்தா காலமானார் (1975 - 2025)

சமூக ஆர்வாலர், ஓர் ஆசிரியர்,  முற்போக்கான குரல் மற்றும் எங்கள் ஜொகூர் கிளையின் முக்கிய தலைவருமான தோழர் சாந்தா லெட்சுமி பெருமாள் அவர்களின் உய...