Sunday, March 3, 2024

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை:


(இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்திற்கு  (பகுதிக்கு) உள்ளேயும் வெளியேயும் உள்ள குழுக்களால் அங்கீகரிக்கப்பட்டது.)

நாங்கள்,  இரகசிய கையொப்பமிடப்பட்ட அமைப்புகள், பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலை குற்றங்களை இழைத்துள்ள இஸ்ரேலின் சியோனிச  (Zionist) ஆட்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இஸ்ரேலின் சியோனிச அரசு, தற்போது பாலஸ்தீனத்தின் மீது தொடர்ச்சியான படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக பாலஸ்தீனிய மக்களின் சுதந்திரம், கண்ணியம், நீதி மற்றும் அபிவிருத்திக்கான அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவது மட்டுமல்லாமல்,   தற்போது உலகின் பல்வேறு மூலைகளிலும் நிறுவப்பட்டுள்ள உலக ஏகாதிபத்தியத்தை பராமரிப்பதாகவும் பலப்படுத்துவதாகவும் உள்ளது.

அமெரிக்காவின் இராணுவ மற்றும் அரசியல் ஆதரவு இல்லாமல், மேற்குக் கரை, காசா மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்து, இனப்படுகொலைகளை நடத்தியதற்கு சாத்தியமில்லை. அமெரிக்க மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகள் காசா மக்களின் இனப்படுகொலையில் முழுமையாக ஈடுபட்டுள்ளன.  இல்லையேல் இஸ்ரேலின் இருப்பு கூட அங்கு சாத்தியமற்றது.

பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேலின் பாசிச சியோனிச ஆட்சியானது, அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளின் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவியுடன் மனிதகுலத்திற்கு எதிரான கடுமையான குற்றங்கள், போர்க்குற்றங்கள் மற்றும் வெகுஜன மக்களை இனப்படுகொலைகளை செய்துள்ளது. காசா மீது இஸ்ரேலின் குண்டுவீச்சு தொடங்கியதிலிருந்து, மக்களை வெளியேறுமாறு கட்டளையிடும் நயவஞ்சக நடவடிக்கைகள், பின்னர் அகதிகள் தப்பிக்கும் வழிகளில் குண்டுவீச்சு, 69,000 க்கும் மேற்பட்டோருக்குக் காயங்கள் விளைவித்தது,   பத்திரிகையாளர்கள் மற்றும் மருத்துவ குழுக்களைக் கொன்றது, 12,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட குறைந்தது 29,000 பேரின் இறப்புக்கும் வழிவகுத்தது.  காசா பகுதியில் 1.9 மில்லியன் பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இஸ்ரேலின் சியோனிச ஆட்சியில்படையெடுப்பு, காலனித்துவம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் பிற அட்டூழியங்களுக்கு பல்வேறு காரணங்கள் மற்றும் பொய்கள் பரப்பப்பட்ட போதிலும், அடிப்படையில் பாலஸ்தீனிய சுதந்திரத்திற்கான போராட்டத்தை  நிறுத்துவது, பாலஸ்தீனிய மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது, கட்டுப்படுத்துவது, அவர்களின் நிலத்தை அபகரிப்பது மற்றும் இஸ்ரேலின் எல்லையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முற்போக்கு மக்கள் இயக்கமான நாங்கள் ஏகாதிபத்தியம், சியோனிசம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான  போராட்டத்தில் ஒன்றுபட்டுள்ளோம். தேச விடுதலைக்கான பாலஸ்தீனப் போராட்டத்திற்கு எங்களது ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இதன் மூலம் நாங்கள் முன்வைப்பது :

- பாலஸ்தீன பிரதேசங்களில் சியோனிச அரசின்  இனப்படுகொலைக்கு முடிவு;

- காசா பகுதியிலும் மேற்குக் கரையிலும் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலிய சியோனிசப் படைகளின் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் முடிவுக்குக் கொண்டுவருதல்;

- காசாவில் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த நெதன்யாகு அரசாங்கம், அமெரிக்க ஜனாதிபதி பைடன் மற்றும்  ஐக்கிய இராச்சியம் அரசாங்கங்கள் உட்பட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்த அனைத்து குற்றவாளிகளுக்கும் எதிரான தண்டனை;

- பாலஸ்தீனிய மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கான முழு ஆதரவு;

- இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களிடையேயும் ஒற்றுமையின் அடிப்படையில் ஒரு புதிய ஜனநாயக அரசை நிறுவுவதற்கான ஆதரவு.

சுதந்திர பாலஸ்தீனம் இப்போதே !


Thursday, October 12, 2023

டெனூடின் தோட்டத்து போராளியான ஆறுமுகம் காலமானார்.

வலது பக்க இறுதியில் வெள்ளை சட்டை அணிந்திருப்பவர்



டெனூடின் தோட்டப்போரளிகளில் ஒருவரான ஆறுமுகம் அவர்கள் கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி  காலமானார். 65 வயதே ஆன அவர் தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளைத் தனியே விட்டுச் சென்றுள்ளார். அவர் மலேசிய சோசிலிச கட்யின் தீவிர பற்றாளர் ஆவார், டெனூடின் செம்பனைத் தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பணம், தண்ணீர் சிக்கல், குடியிருக்க வீடு என பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தி, இறுதியில் அதன் உச்சமாக அவர்களுக்கு இலவசவீடுகள் வழங்கபட காரணமாக இருந்தர்.

சுமார் 21 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்த டெனூடின் தோட்டத்தில் 16 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்ட வரலாற்றை பற்றி உங்களிடம் எடுத்துரைக்க விடும்புகிறேன். காலமான ஆறுமுகம் அவர்கள் முனியாண்டி, சேது, பிரான்சிஸ், பத்துமலை ஆகியோருடன் சேர்ந்து  இப்போராட்டத்தில் ஆற்றிய பங்கு முதன்மையானது.  சரியாக 16 டிசம்பர் 2002 தொடங்கி 27 டிசம்பர் 2002 வரை 16 நாட்களுக்கு இப்போராட்டம் நடத்தப்பட்டது.

UKM பட்டதாரி, JKMI, CDS பிறகு மலேசிய சோசிலிச கட்சி என அவரது போராட்ட வாழ்வின் காலவரிசை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது;

4 டிசம்பர் 2002- திகதில் சரியாக மதியம் 3.00 மணியளவில் டெனூடின் தோட்டத்தில் செம்பனைத்  தொழிலாளர்கள் எழுவர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட 120.00 ரிங்கிட் சம்பளத்தைப் பார்த்து பேரதிர்ச்சியடைந்தனர். அந்த எழுவரில் செம்பனை குலை வெட்டுபவர்களும் அதனை சேகரிப்பவர்களும் அடங்குவர். அதிர்ச்சிக்குள்ளான அவர்கள் அந்த சம்பளக்குறைவுக்கான காரணமும் தெளிவு கிடைக்கும் வரை அந்த சம்பளத்தை ஏற்க மாட்டோம் என்ற முடிவில் உறுதியாக இருந்தனர்.

5 டிசம்பர் 2002-இல் அத்தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்திருந்தனர். தோட்ட நிறுவாகம் சம்பளக்குறைவுக்குத் தெளிவு கொடுப்பதற்கும், வழக்கமான சம்பளத்தை கொடுப்பதற்கும் ஒப்புக்கொண்டாலும் மட்டுமே இயல்பு வேலைக்கு திரும்புவோம் என கூறினர்.

எனினும் நிறுவாகம் இது குறித்து தொழிலாளர்களிடம் பேச முன்வரவில்லை. எனவே, தொழிலாளர்கள்  இச்சிக்கலை தேசிய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் (NUPW) தலைமை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். அச்சங்கத்தின் செயலாளர் ஜி.சங்கரன் மற்றும் சிலாங்கூர் பிரிவை சேர்ந்த தமசேகரன் ஆகியோர் இச்சிக்கல் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்துடம் கலந்துரையாடல் நடத்தி, 10 டிசம்பர் 2002 தேதிக்குள் தகவல் தெரிவிப்பதாக உறுதி கூறினர்.

7 டிசம்பர் 2002 - தொழிலாளர்கள் மீண்டும் நிறுவாகத்திடம் தங்களுக்கு சேரவேண்டிய சரியான சம்பளத் தொகையை கோரினர். ஆனால் அந்நிறுவனம் அதற்கு மறுப்புத் தெரிவித்தது. எனவே, அத்தோட்ட தொழிலாளர்கள் தங்களது வேலை நிறுத்தத்தைக் கைவிடாமல் தொடர்ந்தனர். அதே சமயம்,  காவல் நிலையத்தில் பாதுகாப்பு கருதியும் சம்பளச் சிக்கல் குறித்தும் இரண்டு புகார்கள் செய்தனர்.  வெளி தொழிலாளர்களும், குண்டர்களும் தங்களது லயங்களில் தங்களுக்கு மாற்றாக வேலைக்கு கொண்டுவரப்படலாம் என்ற பயம் அவர்களுக்கு உள்ளூர இருக்கவே செய்தது.

9 டிசம்பர் 2002-இல் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்கள் கேட்டபடி விளக்கம் கொடுக்க டெனூடின் தோட்டத்திற்கு அவர்களை அழைத்தது. ஆனால் எதிர்ப்பார்த்தது போல அல்லாமல் விளக்கத்திற்கு பதிலாக அவர்கள் பழி சுமத்தப்பட்டார்கள். கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடிக்கவில்லை எனவும், அதனால் செம்பனை வியாபார வரவு குறைந்துவுள்ளது எனவும் அதன் காரணமாகவே சம்பளம் குறைக்கப்பட்டது எனவும் குற்றம்சாட்டப்பட்டார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத தொழிலாளர்கள் உடனடியாக அதற்கு எதிர்ப்பு  தெரிவித்தார்கள். 10 ஆண்டுகளாக ஒரே மாதிரி வேலை செய்துள்ளதாகவும்  எங்களுக்கு  இதுவரை இந்த அளவுக்கு குறைந்த சம்பளம் கொடுக்கப்பட்டதில்லை எனவும் பதில்கூறியுள்ளார்கள். இதில் கடந்த நவம்பரில் இரண்டு கூடுதல் வேலைகள் வற்படுறுத்தி வழங்கப்பட்டுள்ளது. அந்த கூடுதல் வேலைக்கு தனி சம்பளம் உண்டு எனவும் உறுதியளித்துள்ளது நிறுவாகம். நிறுவாகத்தின் வாக்குறுதிகள் பின்வருமாறு;

ஓராண்டுக்கு மேலாக கவனிப்பாரற்றுகிடந்த லயத்து செம்பனை மரக்கிளைகளை வெட்டுதல், கீழே உதிரும் செம்பனை பழ உதிரிகளை பொருக்கி கோனிப்பையில்  சேகரித்தல். ஆனால் வழக்கத்துக்குக் கூடுதலாக கொடுக்கப்பட்ட இந்த வேலைக்கான கூலி நவம்பர் மாத சம்பளத்தில் இணைக்கவில்லை. 

அன்று, நிறுவாகத்தால் இன்னமும் நிறைவேற்றாமல் இருக்கும்  பல வாக்குறுதிகளைப் பற்றியும் தொழிலாளர்கள் முன்வைத்தார்கள். தோட்ட லயங்களில் இருந்த மரங்களின் எண்ணிக்கை குறைப்பு, பணி பகுதி தூய்மை, தொழிலாளர்கள் எளிதாக பணிப்புரிய  உதவும் வகையிலான பாதையமைப்பு இது போன்ற வசிதிகள் செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்து ஏமாற்றப்பாட்டிருப்பதை தொழிலாளர்கள் எடுத்துரைத்தனர். அதே சமயம் தங்களுக்கு முறையாக சேர வேண்டிய சம்பள பணத்தை மீண்டும் கோரிப்பார்த்தனர். தோட்ட நிறுவாகம் அவர்களின் நியாயமான கோரிக்கையை பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்தியது. எனவே, தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டனர்.

10 டிசம்பர் 2002, போராட்டம் நான்காவது நாளாக தொடர்ந்த போது, பொது தொழிலாளர்களும் செம்பனைத்தோட்ட தொழிலாளர்கள் ஊதியத்தைக் கோரி  இணைந்து போராட தொடங்கினர். அதுவே அப்போராட்டித்திற்கு புது வீரியத்தை ஏற்படுத்தியது. அப்போதும் நிர்வாகம் அவர்களின் ஊதியத்தை கொடுக்க மறுக்கவே செய்தது. தோட்ட வேலைகள் துவங்கப்படாமல் போராட்டம் நிலைகொண்டது. அன்றைய தினம் காலையில் நிர்வாக அதிகாரிகளில் ஒருவர் மேல்நிலை அதிகாரிகளிடன் லயங்களில் மரங்களின் எண்ணிக்கை குறைப்பு பற்றி கலந்துரையாடுவதாக உறுதியளித்தார்.

இந்தச் சிக்கலுக்கு மத்தியில் தேசிய விவசாய தொழிலாளர் சங்கமோ புதிதாக நிர்ணயிக்கப்பட்ட 10.00 ரிங்கிட் சந்தா பணம் 6 மாதங்களாக செலுத்தப்படாமல் இருப்பதை தெரிவித்து; அதை செலுத்தினால் மட்டுமே  இச்சிக்கலைக் களைய உதவ முடியும் என கூறிவிட்டனர். இது சிக்கலை மேலும் வலுவாக்கியது. அதே போல சிலாங்கூர் பிரிவோ, 13 டிசம்பர்தான் தங்களால் தோட்டத்துக்கு வர இயலும் என தெரிவித்துவிட்டனர். இதற்கிடையில் சங்கதினர் இப்போராட்டத்தை நிறுத்தக்கோரியுள்ளனர். இது தொழிலாளர்களின் கோபத்தை மேலும் தூண்டவே, தங்களுக்கு முறையாக சேர வேண்டிய சம்பளப்பணம் முழுமையாக் செலுத்தப்பட்டால் மட்டுமே இப்போராட்டம் நிறுத்தப்படும் என கூறி முழுமூச்சாக போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்தனர். அதே சமயம் சங்கத்தின் சந்தா உயர்த்தப்பட்டுள்ளதற்கான காரண விவரங்களைத் தெரிவிக்காதவரை அந்த பணத்தையும் செலுத்தபோவதில்லை என தெரிவித்துவிட்டனர்.

அன்று மாலை 5.00 மணியளவில் தோட்ட நிறுவாகம் தொழிலாளர்களின் சம்பளத்தை கொடுப்பதாகவும் லயங்களில் மரங்களின் எண்ணிக்கையை 200-ஆக குறைப்பதாகவும் தெரிவித்தது. தொழிலாளர்கள் மகிழ்ந்து மறுநாள் வேலைக்குச் செல்ல சம்மதித்தனர்.

ஆனால் நிர்வாகம் கொடுத்த உறுதி நீடிக்கவில்லை, சரியாக ஒரு மணிநேரம் கழித்து மேல்நிர்வாகம் அதாவது மலேசிய விவசாய உற்பத்தியாளர் சங்கம் (MAPA) சம்பளப் பணத்தை  தர ஒப்புக்கொள்ளவில்லை எனவும் தொழிலாளர்கள் அனைவரையும் 11 டிசம்பர் மாலை 3.00க்கு செமெஞ்செ தோடத்தில் சந்திப்புக்கு அழைத்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொழிலாளர்கள் அந்த அழைப்பை மறுத்து, டெனூடின்  தோட்ட அலுவலகத்திலேயே சந்திப்பு நடத்தப்பட வேண்டும் அல்லது செமெஞ்செ தோட்ட அலுவலகத்திற்குச் செல்ல போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து தரப்பட வேண்டும் எனவும் அழுத்தமான கோரிக்கையை விடுத்தனர். தோட்டத்தொழிலாளர்களின் இந்த கோரிக்கைக்கும் நிர்வாகம் மறுப்பையே தெரிவித்தது. எனவே 12 டிசம்பர் 2002 இல் தோட்டத்தொழலாளர்கள் இது குறித்து தொழிலாளர் இலாகா (Jabatan Buruh) அலுவலகத்திற்குச் சென்று புகார் செய்ய முடிவெடுத்தனர்.

11 டிசம்பர் 2002, தொழிலாளர்கள் சற்றும் குழப்பமற்ற நிலையில் தங்களது சம்பளக் கோரிக்கையை முதன்மையாகக் கொண்டு போராடினர். நிறுவாகம் கொஞ்சமும் இணங்கிவராத நிலையில் 5-ஆவது நாளாக வேலைக்குச் செல்லாமல் போராட்டம் தொடர்ந்தது. அதே சமயம் புதிய தொழிலாளர்கள் யாரும் தங்களுக்கு மாற்றாக வேலை செய்கிறார்களாக என்பதை அறிய பணியிடத்தை (field’) சுற்றி பார்வையிட்ட வண்னமே இருந்தார்கள். மேலும் சிக்கலை உடனடியாகக் களைய   தொழிலாளர்களுடனான  சந்திப்பு ஒன்றை நிறுவாகம் நடத்த வேண்டும் எனக் கோரி தொழிலாளர்கள் அனைவரும் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று நிறுவாகக்திடம் ஒப்படைக்கப்பட்டது.

சிலாங்கூர் பிரிவு தேசிய விவசாய தொழிலாளர் சங்கம் (NUPW) தொழிலாளர்களுக்கு உதவுவதாகக் கொடுத்த வாக்குறுதியை மீறியிருந்து. மாறாக சந்தாப்பணம் செலுத்தப்பட்டால்  மட்டுமே உதவ இயலும் என  சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது.  கடந்த 30 ஆண்டுகளாக செலுத்தப்பட்ட சந்தாப்பணத்தை சற்றும் கருத்தில்கொள்ளாமல்,  கட்டப்படாமல் இருந்த புதிய சந்தா வசூலை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டது, தொழிலாளர்களைப் பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

தொடர்ந்து 12 டிசம்பர் 2002 முன்னமே திட்டமிட்டது போல ஜாலான் அம்பாங்கில் அமைந்துள்ள  தொழிலாளர் இலாகா (jabatan buruh) அலுவலகத்திற்குச் சென்று புகார் செய்தனர். அப்போது அப்பிரிவின் தலைமைப்பொறுப்பில் இருந்த திருமதி சுல்கியா பிந்தி ஹுஷைன் (puan Zulkiah binti Hussain) அவர்கள் இச்சிக்கலை  சிலாங்கூர்  தொழிலாளர் இலாகா (Jabatan Buruh Selangor) எடுத்துச் சென்றார்.  தொழிலாளர்களை சிலாங்கூர் பிரிவு இலாகா அலுவலகத்தைத் தொடர்பு தொடர்புக்கொள்ளுமாறு வழிகாட்டினார். இதற்கிடையில்  அன்றைய அதிகாலையிலேயே, கொடுக்கப்பட்ட வேலையை முழுமையாக செய்து முடிக்கவில்லை என்ற புகார் கடிதம் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. வேலை செய்து முடிக்கப்படவில்லை என்று நிறுவாகம்  குறிப்பிடும்  தேதிக்கும் புகார் கடித தேதிக்கும்  20 நாட்கள் கால வேறுபாடு இருந்தது. இது குறித்து காவல் நிலையத்தில் தொழிலாளர்கள்  புகார் செய்தனர். 

7-வது நாள் போராட்டத்தின்போது (13 டிசம்பர் 2002) சிலாங்கூர் பிரிவு தொழிலாளர் இலாகாவிலிருந்து (Jabatan Buruh Selangor)  சுமார் 11.30 மணியளவில் 2 அதிகாரிகள் போராட்டம் குறித்து தோட்டத்திற்கு வந்திருந்தனர். வந்திருந்தவர்கள் தொழிலாளர்களுடன்  பழுதடைந்த நிலையில் மோசமாக இருந்த தோட்ட வீடுகளை பார்வையிட்டனர்.  மேலும் சம்பள விவகாரம் குறித்து தோட்ட நிறுவாகத்தின் மேலதிகாரியிடம் பேசுவதாகவும்; அதன் பின்னர் அதுகுறித்த முடிவை தெரிவிப்பதாகவும் உறுதியளித்தனர்.

மேலும், கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடிக்கவில்லை என்ற புகார் கடிதத்தை பெற்ற தொழிலாளர்கள் மட்டும் அக்கடிதத்திற்கு பதில் கடிதம் கொடுத்தனர்.  அக்கடித உள்ளடக்கம் பின்வருமாறு;

 

1.   > வேலையை செய்து முடிக்கவில்லை என்ற புகார் ஏற்றுக்கொள்ளப்படாதது.

2..> கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மரங்களின் எண்ணிக்கை உண்மைக்கு மாறானது; காரணம் வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையே கடிதத்தில் காட்டப்பட்டுள்ளது.

3.    > நவம்பர் மாதத்தில் கூடுதல் வேலை கொடுக்கப்பட்டது.

4 > புதிய விதிமுறைகள், 1985 முதல் அமலிலிருந்த வழக்கங்களுக்கு மாறாக இருக்கிறது.

5. > சம்பந்தப்பட்ட தேதியிலிருந்து 20 நாட்கள் தாமதமாகப் புகார் கடிதம் அனுப்புவது அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

டிசம்பர் மாதத்தில் சம்பளச் சிக்கல் விவகாரம் தொடர்பாக  வேலைக்கு செல்லவில்லை என்று நிறுவாகம் கொடுத்த புகார் கடிதத்திற்கும் தொழிலாளர்கள் இவ்வாறு பதில் கடிதம் கொடுத்தனர்.

எட்டாவது நாள் போராட்டத்தின்போது தேசிய விவசாய  தொழிலாளர் சங்கத்திலிருந்து (NUPW)  முதன்முறையாக 2 அதிகாரிகள் தோட்டத்திற்கு வருகை புரிந்திருந்தனர். தொழிலாளர் இலாகா (Jabatan Buruh) அதிகாரிகள் இச்சிக்கல் குறித்து நடவடிக்க எடுக்கக் கோரினர் எனவேதான் வந்தோம் என தெரிவித்தனர். அதே சமயம் 3 ரிங்கிட் சந்தா ஏற்றம் குறித்து தெளிவுபடுத்தி, அதை செலுத்தினால் இச்சம்பள விவகாரத்தை தீர்த்துவைப்பதாக உறுதியளித்தனர். ஆனால், தொழிலாளர்கள் இச்சிக்கலை தீர்த்துவைத்தப் பின்னரே அந்த சந்தா பணத்தை செலுத்துவோம் என்று கூறிவிட்டனர்.

போராட்டத்தின் ஒன்பதாவது நாளில் அதாவது (17 டிசம்பர் 2002) மலேசிய தொழிற்சங்க காங்கிரசின் (MTUC) பார்வையும் தோட்டத்தின் பக்கம் திரும்பியது. அவர்களின் பிரதிநிதிகள் தொழிலாளர் மற்றும் நிறுவன இலாகாவிற்கு  (Jabatana buruh dan prindustrian) அனுப்பப்ட்டனர்.

10 நாள் போராட்டம் அதாவது 8 டிசம்பர் 2002-இல் தோட்ட நிறுவாகம் சிலாங்கூர் தொழிலாளர் துறை அலுவலகத்திற்கு தொலை நகல் (fax) அனுப்பியதாக அத்துறை அதிகாரி திருமதி கௌசார் (puan Kausar) தெரிவித்தார். அத்தொலைநகலில் எந்த நிபந்தனையுமற்று தொழிலாளர்களை வேலைக்குச் செல்ல கோருமாறு நிறுவாகம் கேட்டிருந்தது. ஆனால் தொழிலாளர்கள் அதை முற்றாக மறுத்தனர். எனவே திருமதி கௌசார் (puan Kausar) சம்பளச் சிக்கல் குறித்து நிறுவாகத்திடம் பேசி உடனடியாகத் தீர்வு வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.

போராட்டத்தின் 11-ஆவது நாள் 19 டிசம்பர் 2002-இல் தோட்ட நிறுவாகம் இந்தோனேசிய தொழிலாளர்களைக் கொண்டு செம்பனை குலைகளை வெட்டத்தொடங்கியிருந்தது. இதை அறிந்த தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

தொடர்ந்து 13-ஆவது நாள் போராட்டத்தின் போது (21 டிசம்பர் 2002) தொழிலாளர்கள் தோட்ட நிறுவாகத்தினரால் மிரட்டப்பட்டனர். தொடர்ந்து இந்தோனேசிய தொழிலாளர்களை வேலைச் செய்யவிடாமல் தடுத்தால் காவல் அதிகாரிகளால் கைது செய்யப்படுவீர்கள் என பகீரங்கமான மிரட்டுதலுக்குள்ளாகினர்.

14 நாள், 23 டிசம்பர் 2002-இல் டிசம்பார் மாத சம்பள விவகாரத்திகுப் பிறகு ஏற்பட்ட வேலைக்கு விடுப்பு குறித்த புகார் கடிதத்திற்கு தொழிலாளர்கள்  மீண்டும் பதில் கடிதம் கொடுத்தனர்.

தொடர்ந்து 15-வது நாள் போராட்டத்தில் அதாவது கிறிஸ்மஸ்சுக்கு முதல் நாளன்று (24 டிசம்பர்  2002) நிறுவன மேலாண்மை துறையில் (IRD) செக்‌ஷன் 56- கூட்டு ஒப்பந்தத்திற்கு இணங்காமை என்ற சட்டத்தின் அடிப்படையில்  தொழிலாளர்கள் புகார் செய்தனர். இதுகுறித்த தகவல்களையும் அறிவுரைகளையும் கார்ப்பரேட்(நிறுவன) நீதிமன்ற பதிவாளரைச் (Pendaftar mahkamah Perusahaan) சந்தித்து பெற்றுக்கொண்டனர்.

16-வது நாள் போராட்டதின்போது போராளிகள் கேட்டுக்கொண்டதன்படி தோட்ட நிறுவாகத்துடம் டெனூடின் தோட்டத்திலேயே ஒரு சந்திப்பு நடத்தப்பட்டது.  தொழிலாளர்கள் 27 டிசம்பர் 2002 தேதியில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கடிதம் அங்கே கொடுக்கப்பட்டது.

அதே சமயம் தொழிலாளர்களின் சம்பள கோரிக்கையும் வேலைக்குறித்த நிபந்தனைகளையும் நிறுவாகம் ஏற்றுகொண்ட பின்னரே  27 டிசம்பர் 2002-இல் தொழிலாளர்கள் தங்களது வேலைக்குச்  செல்ல சம்மதித்தனர்.  தொழிளாளர்களின் அந்த கூட்டுப் போராட்டம்  வெற்றியில் முடிவுற்றது.

இவ்வகையில் டெனூடின் தோட்டப்போராளிகள் அப்போராட்டம் போற்றுதக்குரிய வரலாறாகும். இப்போராட்டத்தைத் தொடர்ந்து மேலும் சில போராட்டங்கள் அத்தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டன. குடிநீர் சிக்கல் அதில் அடங்கும். அது போல முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இறுதியானது  6 ப்ரல் 2011 நடத்தப்பட்ட போராட்டமாகும்.  9 தொழிலாளர்களுக்கு திடீர் வேலை நிறுத்த கடிதம் வழங்கப்பட்டதன் பேரில் இப்போரட்டம் அமைந்தது. அக்கடிதத்தின்படி அத்தொழிலாளர்களின் இறுதி வேலை நாள் 31 மே 2011 தேதியாகும்.

இவ்விவகாரத்தை தோட்டவாசிகள் அரசு எக்ஸ்கோவான மரியாதைக்குரிய டாக்டர் சேவியரின் (YB DR. Xavier Exco Kerajaan)  பார்வைக்குக்  கொண்டுச் சென்றனர்.

12 மே 2011 இல் டெனூடின் தோட்ட மக்கள் நல குழுவினர், மேல் அதிகாரியான  இஞ்ச் கென்னத் (Inch Kenneth) அவருடன் சந்திப்பு நிகழ்த்தக் கோரி கடிதம் அனுப்பினர்.

அச்சந்திப்பில் கோரப்பட்ட வேலை நிறுத்த இழப்பீடுகள் பின்வருமாறு;

1.   மலேசிய விவசாய உற்பத்தி மற்றும் தேசிய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் (MAPA_NUPW) ஒப்பந்த அடிப்படையில் வேலை நிறுத்த பணம் மற்றும் மீத சம்பளப் பணம் ஆகிய உரிமை செம்பனை வெட்டும் தொழிலாளர்களுக்குமானது.

2.   டெனூடின் தோட்டத்தின் அருகில் மலிவு விலை தரை வீடு திட்டம்.

3. முன்னாள் தோட்ட தொழிலாளர்களுக்கும்  வேலை ஓய்வு பெற்றவர்களுக்குமான ஒரே மாதிரியான நன்மைகள் செய்யப்பட வேண்டும்.

4.    இழப்பீட்டு தொகை கொடுக்கப்பட வேண்டும்.

5.கோவில், தேவாலயம், மண்டபம் மற்றும் காற்பந்து விளையாட்டு மைதானம் ஆகியவற்றின் தரம் மேம்பாடு.

6.   தோட்டத்தொழில் செய்பவர்களுக்கான  நில இழப்பீடு வழங்க வேண்டும்.

7. Qua-சிக்கல் தீரும்வரை மின்சாரம், நீர் போன்ற அடிப்படை வசதிகள் நிறுத்தப்படக் கூடாது. 

8.மாற்று புதிய குடியிருப்பு முழுமையாக தயாராகும்வரை தோட்டத்திலிருந்து வெளியேற்றக்கூடாது. 

9.   மாற்று வீடு கட்டிமுடிக்கும் வரையில் இத்தோட்ட சுற்றுப்புற தூய்மை பேனப்பட வேண்டும்.

முதலில் இஞ்ச் கென்னத் (Inch Kenneth) தொழிலாளர் சட்டத்தின் அடிப்படியிலான இழப்பீடுகளை மட்டுமே செய்துதர முடிவெடுத்திருந்தார். ஆனால், அதனையொட்டி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் இறுதியில் 22 முன்னாள் தொழிலாளர்களும் இலவச வீட்டுக்கான  ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டனர். 22 முன்னாள் தொழிலாளர்களுக்கும் தரை வீடு கட்டிக்கொடுக்க ஒப்புக்கொண்டதற்கான ஒப்பந்தம் அது. அவ்வொப்பந்தம் மேலதிகாரியான இஞ்ச் கென்னத் (Inch Kenneth) உடன் கையொப்பமிடப்பட்டது. ஒப்பந்தத்திற்கு அருட்செல்வம் மக்கள் சார் சாட்சியாகவும், இஞ்ச் கென்னத்தின் சாட்சியாக திரு ஹுசைன் (Encik Hussain) அவர்களும் பங்காற்றினர். அதனைத் தொடர்ந்து 22 நவம்பர் 2018 அன்று  புதிய வீட்டுக்கான சாவி கொடுக்கும் வரையிலும் தொழிலாளர்கள் தோட்ட வீட்டிலேயே இருக்க அனுமதிக்கப்பட்டனர். வீட்டுச் சாவி செமிஞ்சே மலேசிய சோசிலிச கட்சி அலுவலத்தில்  ஒப்படைக்கப்பட்டது.

ஓய்வூதியம் கோரப்படாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே இஞ்ச் கென்னத்(Inch Kenneth) நிறுவனம் இந்த இலவச வீட்டை கட்டிக் கொடுத்தது. இவ்விடத்தில் ஆறுமுகம் மற்றும் வாசுதேவன் ஆகிய இருவருகான ஓய்வூதியத்தொகை அதிகம் எனினும் மக்களுக்கு புதிய வீடு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே சுயநலம் காக்காமல் தங்களது ஓய்வூதியப்பணத்தை விட்டுக்கொடுத்திருந்தனர். எனவே அவரது இந்த போராட்ட குணத்தையும் மேன்மை குணத்தையும் நினைவுக்கூர்ந்து எடுத்துரைக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

ஆறுமுகத்தின் நல்லாத்மா இனிதே சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். வீட்டில், சேதாரம் போன்ற சிக்கல்கள் இன்னமும் இருக்கவே செய்கின்றன. னாலும் அதனைக் கடந்து ஆறுமுகம் அவர்களின் தியாகமும் போராட்டமும் மறக்கவியலாதது. சிறந்த போராளியான அவர் எனக்கு நல்ல நண்பரும்கூட.


Sunday, February 26, 2023

பிஎஸ்எம் காப்பார் சேவை மையம்- திறப்புவிழாக் கண்டது

 

மலேசிய சோசலிசக் கட்சி  (பிஎஸ்எம்) காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில் தமது சேவையை  தொடங்கியது.  பிஎஸ்எம் காப்பார் சேவை மையம்  26 பிப்ரவரி 2023 அன்று,  உள்ளூர் மக்களுக்கு  சேவைகள் மற்றும் புதிய அரசியல் மாற்றங்களை வழங்க அதிகாரப்பூர்வமாக தொடக்கம் கண்டது.

தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், மக்களுக்கான  பல்வேறு பிரச்னைகளில் நீண்டகாலமாகத் தீவிரமாக தன்னை  ஈடுபடுத்தி வருபவரும்,  PSM இன் மத்திய செயற்குழு உறுப்பினருமான தோழர் எம்.சிவரஞ்சனி தலைமையில்,  பிஎஸ்எம் காப்பார் சேவை மையம்  செயல்படவுள்ளது.

சிவரஞ்சனி தற்போது Workers' Bureau- பிரிவில் தலைவராக உள்ளார். இன வேறுபாடின்றி மக்களுக்கு உதவுவதில், குறிப்பாக தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சிவரஞ்சனி, குறைந்தபட்ச ஊதியப்  பிரச்சாரம், பணிநீக்க நிதி பிரச்சாரம்,  போன்ற முக்கியமான  பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.  சாதாரண மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும் சிவரஞ்சனி தனது முயற்சிகளைத் தொடர உறுதியாக இருக்கிறார்.


பிஎஸ்எம் காப்பார் சேவை மையத்தின் திறப்பு விழாவின் போது, சிவரஞ்சனி தனது உரையில், PSM நமது நாட்டின் அரசியலுக்கு புதிய சுவாத்தைக் கொண்டுவரவும், கபார் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள உள்ளூர் மக்களுக்கு சேவைகளை வழங்கவும் தயாராக உள்ளது என்றும் கூறினார்.

இந்த மையத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட உள்ளூர்வாசிகள் அளித்த ஆதரவிற்கு சிவரஞ்சனி தனது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன் மேலும் அவர்களிடமிருந்த வட்றாத ஆதரவை எதிர்பார்ப்பதாக கூறினார்.

இவ்விழாவில் உரையாற்றிய டாட்டர் ஜெயக்குமார்,  1970ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நமது நாட்டின் வளம் 30 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், ஆனால் குறைந்த வருமானம் காரணமாக நாட்டு மக்கள் பல்வேறு பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார். எனவே, செல்வத்தை மிகவும் நியாயமான முறையில் விநியோகிக்கக்கூடிய மற்றும் சாதாரண மக்களின் நல்வாழ்வுக்கான உத்தரவாதத்தை உருவாக்கும் கொள்கைகளை செயல்படுத்த PSM முயற்சிக்கிறது என்றும்  டாக்டர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அரசாங்க ஓய்வூதியம் அல்லது SOCSO ஓய்வூதியம் பெறாத மூத்த குடிமக்களுக்கு,  ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக PSM ஒரு புதிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது என்று ஜெயக்குமார் அன்றைய தினம்  கூறினார்.

இந்த விழாவில் பி.எஸ்.எம்-மின் முக்கியத் தோழர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

சேவை மையத்தின் முகவரி :

Pusat Khidmat PSM Kapar , 16, Lorong Kapar Setia 8, Taman Emas, 42200, Kapar.


சேவை நேரம் : சனிக்கிழமைகளில் மாலை 4 முதல் இரவு 8 வரை

தொடர்பு எண்: 010-2402159


Wednesday, November 9, 2022

Ayer Kuning வட்டார தேர்தல் அறிக்கை அறிமுகம்


 

6 அம்ச கோரிக்கையை முன்வைத்து  பேராக் Ayer Kuning மாநிலத் தேர்தல் அறிக்கையை அறிமுகம் செய்தார் மக்கள் வழக்கறிஞரும் தேர்தல் வேட்ப்பாளருமான தோழர் பவாணி.  

முன்னதாக உள்ளூர் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கண்டறிந்து அதன் பின்னரே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. 


உள்ளூர் மக்களின் கோரிக்கை

1. ஜாலான் கம்பாரில் இருந்து தெலுக் இந்தான் வரையில் புதிய சாலை அமைக்க வேண்டும்.

2. முழுநேர மருத்துவரை நியமித்து, கிராமப்புற மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டும்.

3. பணப்பொறி (ஏடிஎம் இயந்திரம்) & அஞ்சலகச் சேவைகளை மீண்டும் கொண்டுவர வேண்டும்.

4. மின்சாரத் தடங்கல் சிக்கலுக்குத் தீர்வு காண்பதோடு, தொலைத்தொடர்பு வசதிகளையும் மேம்படுத்தவும் வேண்டும்.

5. பொதுப் பேருந்து சேவைக்குப் `பேராக் திராண்சிட்` பொறுப்பேற்க வேண்டும்.


6 அம்ச கோரிக்கையும் விளக்கமும் 

1. வேலை உத்திரவாதத் திட்டம்

·         வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்

·         பராமரிப்பு மற்றும் சமூகப் பணிகளில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்

2. உணவு உத்தரவாதம்

·         உணவு உற்பத்தியாளர்களை (விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் & மீனவர்கள்) அவர்கள் இடத்திலிருந்து வெளியேற்ற வேண்டாம்.

·         உணவு விலையைக் கட்டுபடுத்த வேண்டும் & உணவு உற்பத்தியாளர்களுக்கு மானியங்கள் வழங்க வேண்டும்.

3. சமூகப் பாதுகாப்பிற்கு அதிகாரமளித்தல்

·         அனைத்து மூத்தக் குடிமக்களுக்கும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

·       அனைத்து முறைசாரா துறை (குத்தகை / பகுதி நேரம் / நிரந்தரம் அற்ற) தொழிலாளர்களுக்கும் சொக்சோ பாதுகாப்பை வழங்க வேண்டும்

 4. மக்களுக்கான வீடுகள்

·         பி40 & எம்40 மக்களுக்கு மலிவு விலையில் வீடுகளைக் கட்டும் இலாப நோக்கமற்ற சிறப்பு வீட்டுவசதி வாரியம்.

 5. காலநிலை நெருக்கடியைக் கையாளுதல்

கடல் நீர்மட்ட உயர்வு, வெள்ளம், வறட்சி & வெப்பம் போன்று, இன்னும் பிற காலநிலை நெருக்கடி விளைவுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, மக்கள், குறிப்பாக விளிம்புநிலை சமூகங்கள் தயார் நிலையில் இருப்பதற்கான வசதிகள் மற்றும் திறனை அதிகரிக்க வேண்டும்.

6. தேசிய நிர்வாக நிறுவனங்களின் சீர்திருத்தம்

·         உள்ளூர் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், உள்ளூர் மக்கள் மீதான பொறுப்புக்கு உத்தரவாதம் அளிக்கவும் உள்ளூராட்சி தேர்தலை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.


K இன்று KLINIK DESA AYER KUNING -கில், இன்று  தோழர் பவாணி தனது ஆதரவாளர்களுடன் அவ்வறிக்கையை வெளியிட்டார்.   








மனுவைத் தொடங்கினார் தோழர் தினா

 தாக்குதல் மனுவைத் தொடங்கினார் தோழர் தினா                                                                      

நவம்பர் 9, 2022

தோழர் தினாவுக்கு இது அற்பமான பிரச்சினையாக தெரியவில்லை.  கடந்த வாரம் முதல், உள்ளூர்வாசிகளிடமிருந்து, குறிப்பாக  Pedas, Chembong மற்றும் Pekan Rembau ஆகிய இடங்களில் கடுமையாக இருக்கும் ஈ தாக்குதல்கள் குறித்து அவர் பல புகார்களைப் பெற்றுகொண்டிருக்கிறார்.

அருகில் பல கோழி  பண்ணைகள் இருப்பது இதற்கு  காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. சில பெரிய நிறுவனங்கள் இந்தப் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளுடன் 30 கோழி பண்ணைகள்  வைத்துள்ளன.

பெக்கான் பெடாஸிலிருந்து 2 கிமீ அளவிற்கும் குறைவான தூரத்தில் கோழிப்பண்ணை இருப்பதாக நம்பப்படுகிறது. அதே தூரத்தில்   ஒரு பெரிய கோழி உரம் பதப்படுத்தும் தொழிற்சாலயும்  இருப்பதாக நம்பப்படுகிறது.

இதுகுறித்து இப்பகுதி உணவுக்கடை வியாபாரிகள் கூறியதாவது: "இந்த ஆண்டு முதல் கோழி கூண்டுகளை சுத்தம் செய்யும் பணி, மாதம் ஒருமுறை நடப்பதால், ஈக்களின் தாக்குதல் அதிகமாக உள்ளது. இந்த ஈ தாக்குதலால் கிட்டத்தட்ட அனைத்து உணவு கடைகளிலும்  தங்கள் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் கூறுகின்றன. சிலர் கடையை மூட வேண்டியதாயிற்று. இதன் காரணத்தினால்  இந்த ஊர்களுக்கு உணவருந்த வருபவர்களின் வருகை குறைந்துள்ளது"

தோழர் தினாஇந்தப் பிரச்சினையை தீவிரமாக கையில்  எடுத்து, பொதுமக்களிடம்  கையெழுத்து வேடடையைத் தொடங்கினார். கடைக்காரர்கள், குறிப்பாக உணவுக் கடைகள் மற்றும் உள்ளூர்வாசிகளிடம் கையெழுத்துப் பெற்றுக்கொண்டிருக்கிறார். 

மக்களின் அந்த கையெழுத்து மனுவோடு, இவ்விவகாரத்தின் மீது   உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் மனு அளிக்கப்படும். இந்த ஈ தாக்குதலுக்கான காரணத்தை அதிகாரிகள் கண்டறிந்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், துப்புரவு மற்றும் வடிகால் விதிமுறைகளை கடைபிடிக்க பண்ணை  நடத்துபவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.  

மேலும், இப்பிரச்னையை உடனடியாக எதிர்கொள்ள  அடுத்த வாரம் ரெம்பாவ் மாவட்ட சுகாதார அலுவலகம், ரெம்பாவ் மாவட்ட கவுன்சில் மற்றும் நெகிரி செம்பிலான் சுற்றுச்சூழல் துறைக்கு மனுவழங்கப்படும் என்று தோழர் தினா தெரிவித்தார். 

Tuesday, November 8, 2022

தோழர் தினா உடனடியாக புகார் அளித்தார்

ரெம்பாவ்  பொதுச் சந்தையில்  பொதுக் கழிப்பறை பழுது,

தோழர் தினா  உடனடியாக  புகார் அளித்தார் (9 நவம்பர் 2022 )



இன்று காலை Rembau பொதுச் சந்தைக்கு மக்களைச் சந்திக்க சென்ற Rembau பாராளுமன்ற வேட்பளரான தோழர் தினா, அங்கு உள்ள பொதுக் கழிவறையில் தண்ணீர் ஓடாமல் தேங்கி இருந்ததுடன், அக்கழிப்பறை  பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள், புகார்  தெரிவித்தபோது போது அவர் அதிர்ச்சியடைந்தார். 

இன்று காலை அப்பகுதியில்,  அங்குள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் வணிகர்களை சந்திக்க   நடைபயணம் மேற்கொண்டபோது திடீரென ஒரு வியாபாரி, தோழர் தினாவை  அழைத்தார். ஒரு மாதமாகியும் அதிகாரிகள் சரி செய்யாமல் கைவிடப்பட்டிருக்கும் கழிவறையின் மோசமான நிலையைப் காட்டுவதற்காக அந்த  வியாபாரி தோழர் தினகரனை அழைத்தார், 



தோழர் தினா நிலையை கண்டறிந்து  உடனடியாகச் செயல்பட்டு, புகார் அளிக்க தனது குழுவுடன் ரெம்பாவ் மாவட்ட மாநகர மன்றத்திற்கு  விரைந்தார். அதிகாரி Faez என்பவரிடம் அது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக, அவர்களிடத்தில்  குறைவான பணியாளர்களே  இருப்பதாகவும், ஆனால் அங்கு ஏற்பட்டுள்ள பிரசனையை கையாள  ஆட்களை ஏற்பாடு செய்ய முயற்சிப் படும்  என்றும் அங்கு கூறப்பட்டது. சம்பந்தப்படட இடத்தில் மறுசீரமைப்பு பணிகளை செய்யும் போது  தாமும் உடன்  இருக்க வேண்டும் என்பதற்காக, பொதுச் சந்தைக்கு கவுன்சில் எப்போது செல்லும் என்பதை தெரிவிக்குமாறு தோழர் தினா கேட்டுக் கொண்டார்.

ரெம்பாவ்  பொதுச் சந்தை அன்றாட பயன்பாட்டுக்கு தேவையான ஒரு அடிப்படை வசதி, சீரான பராமரிப்பின்றி இப்படி புறக்கணிக்கப்படுவது மிகவும் வருத்தமாக உள்ளது என்று பி.எஸ்.எம் கவலை தெரிவித்து.  

Meja Media Bilik Gerakan PSM P131 Parlimen Rembau 12.30PM


BN வேட்பாளர்கள் கைகடிகாரங்கள், ஆடம்பர கைப்பைகளின் மதிப்பை அறிவிக்குமாறு பிஎஸ்எம் அறிவுறுத்துகிறது


இந்தப் 15-வது  பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி கட்சி அளித்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகள்,  சோசலிச வாக்குறுதிகள் மாதிரியாக இருப்பது ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறது என்று அந்நடவடிக்கை  குறித்து  சோசலிசக் கட்சி கருத்து தெரிவித்திருக்கிறது. 

இது குறித்து கட்சியின் தேசிய துணைத்தலைவரான எஸ்.அருட்செல்வன் கூறுகையில்,  "முதலாளித்துவக் கூட்டணியான BN  "  கடந்த காலங்களில் அடிப்படை ஊதியம் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு  இலவசக் கல்வி போன்ற கோரிக்கைகளை PSM முன்வைத்தபோது அது  முட்டுக்கட்டையாக இருந்தது. பிரசாரக் காலத்தில் மட்டுமே  மக்களை  விரும்பும் கட்சிகளிடம் வாக்காளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம். "பூரணமாக  வறுமையை ஒழிப்போம்" என்ற வாக்குறுதியை BN தனது வேட்பாளர்களுக்கு வழங்கும் முன் தங்கள் சொத்துக்களை முதலில் அறிவிக்க வேண்டும்" என்று   அருட்செல்வன் அறிவுறுத்தினார். 

"அவர்கள் ஒவ்வொருவரின்  டிசைனர் கைக்கடிகாரம் மற்றும் கைப்பைகளின் மதிப்பினை  வெளிப்படுத்த வேண்டும். சில அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் அத்தகைய பொருட்களை வைத்திருப்பது எப்படி என்பது நாம் அனைவரும் அறிவோம். அதன் விலையை ஆராய்ந்தால் ஒரு   B40  தன்  வாழ்நாள் முழுவதும்  சம்பாதிக்கக்கூடியதை விடவும் அது  அதிகமாக இருக்கும் " என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.


வருமானத்தில்  இடைவெளி அதிகரித்து வருகிறது

கடந்த சில வருடங்களாக மலேசியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான வருமான இடைவெளி அதிகரித்து வருகிறது. 

"தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்க முடிந்தால் மற்றும் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளியை குறைக்க  முயற்சித்தால் மட்டுமே BN தீவிர வறுமையைக் குறைக்க முடியும். அதை செயற்படுத்துவதற்கு முன்,  அவர்கள் முதலில் தங்கள் சொத்தை அறிவிக்க வேண்டும். 

பேராக் மற்றும் சபாக் பெர்னாமில் இருந்து B40 தொழிலாளர்கள் நவம்பர் 3 2021 அன்று BN அலுவலகத்திற்கு வந்தபோது, ​​அவர்களின் மகஜரைப்  பெற யாரும் முன்வரவில்லை.  அன்றைய தினம், அரசாங்கத் துறையில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்யும்  முறையை ஒழிப்பதற்கு ஆதரவளிக்குமாறு சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள்  BN ஐ நாடி  வந்திருந்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது" என்றும் அருட்செல்வன் கூறினார்.

நன்றி மலேசியாகினி https://m.malaysiakini.com/news/643116

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...