Sunday, February 26, 2023

பிஎஸ்எம் காப்பார் சேவை மையம்- திறப்புவிழாக் கண்டது

 

மலேசிய சோசலிசக் கட்சி  (பிஎஸ்எம்) காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில் தமது சேவையை  தொடங்கியது.  பிஎஸ்எம் காப்பார் சேவை மையம்  26 பிப்ரவரி 2023 அன்று,  உள்ளூர் மக்களுக்கு  சேவைகள் மற்றும் புதிய அரசியல் மாற்றங்களை வழங்க அதிகாரப்பூர்வமாக தொடக்கம் கண்டது.

தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், மக்களுக்கான  பல்வேறு பிரச்னைகளில் நீண்டகாலமாகத் தீவிரமாக தன்னை  ஈடுபடுத்தி வருபவரும்,  PSM இன் மத்திய செயற்குழு உறுப்பினருமான தோழர் எம்.சிவரஞ்சனி தலைமையில்,  பிஎஸ்எம் காப்பார் சேவை மையம்  செயல்படவுள்ளது.

சிவரஞ்சனி தற்போது Workers' Bureau- பிரிவில் தலைவராக உள்ளார். இன வேறுபாடின்றி மக்களுக்கு உதவுவதில், குறிப்பாக தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சிவரஞ்சனி, குறைந்தபட்ச ஊதியப்  பிரச்சாரம், பணிநீக்க நிதி பிரச்சாரம்,  போன்ற முக்கியமான  பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.  சாதாரண மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும் சிவரஞ்சனி தனது முயற்சிகளைத் தொடர உறுதியாக இருக்கிறார்.


பிஎஸ்எம் காப்பார் சேவை மையத்தின் திறப்பு விழாவின் போது, சிவரஞ்சனி தனது உரையில், PSM நமது நாட்டின் அரசியலுக்கு புதிய சுவாத்தைக் கொண்டுவரவும், கபார் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள உள்ளூர் மக்களுக்கு சேவைகளை வழங்கவும் தயாராக உள்ளது என்றும் கூறினார்.

இந்த மையத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட உள்ளூர்வாசிகள் அளித்த ஆதரவிற்கு சிவரஞ்சனி தனது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன் மேலும் அவர்களிடமிருந்த வட்றாத ஆதரவை எதிர்பார்ப்பதாக கூறினார்.

இவ்விழாவில் உரையாற்றிய டாட்டர் ஜெயக்குமார்,  1970ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நமது நாட்டின் வளம் 30 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், ஆனால் குறைந்த வருமானம் காரணமாக நாட்டு மக்கள் பல்வேறு பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார். எனவே, செல்வத்தை மிகவும் நியாயமான முறையில் விநியோகிக்கக்கூடிய மற்றும் சாதாரண மக்களின் நல்வாழ்வுக்கான உத்தரவாதத்தை உருவாக்கும் கொள்கைகளை செயல்படுத்த PSM முயற்சிக்கிறது என்றும்  டாக்டர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அரசாங்க ஓய்வூதியம் அல்லது SOCSO ஓய்வூதியம் பெறாத மூத்த குடிமக்களுக்கு,  ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக PSM ஒரு புதிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது என்று ஜெயக்குமார் அன்றைய தினம்  கூறினார்.

இந்த விழாவில் பி.எஸ்.எம்-மின் முக்கியத் தோழர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

சேவை மையத்தின் முகவரி :

Pusat Khidmat PSM Kapar , 16, Lorong Kapar Setia 8, Taman Emas, 42200, Kapar.


சேவை நேரம் : சனிக்கிழமைகளில் மாலை 4 முதல் இரவு 8 வரை

தொடர்பு எண்: 010-2402159


No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...