Wednesday, November 9, 2022

மனுவைத் தொடங்கினார் தோழர் தினா

 தாக்குதல் மனுவைத் தொடங்கினார் தோழர் தினா                                                                      

நவம்பர் 9, 2022

தோழர் தினாவுக்கு இது அற்பமான பிரச்சினையாக தெரியவில்லை.  கடந்த வாரம் முதல், உள்ளூர்வாசிகளிடமிருந்து, குறிப்பாக  Pedas, Chembong மற்றும் Pekan Rembau ஆகிய இடங்களில் கடுமையாக இருக்கும் ஈ தாக்குதல்கள் குறித்து அவர் பல புகார்களைப் பெற்றுகொண்டிருக்கிறார்.

அருகில் பல கோழி  பண்ணைகள் இருப்பது இதற்கு  காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. சில பெரிய நிறுவனங்கள் இந்தப் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளுடன் 30 கோழி பண்ணைகள்  வைத்துள்ளன.

பெக்கான் பெடாஸிலிருந்து 2 கிமீ அளவிற்கும் குறைவான தூரத்தில் கோழிப்பண்ணை இருப்பதாக நம்பப்படுகிறது. அதே தூரத்தில்   ஒரு பெரிய கோழி உரம் பதப்படுத்தும் தொழிற்சாலயும்  இருப்பதாக நம்பப்படுகிறது.

இதுகுறித்து இப்பகுதி உணவுக்கடை வியாபாரிகள் கூறியதாவது: "இந்த ஆண்டு முதல் கோழி கூண்டுகளை சுத்தம் செய்யும் பணி, மாதம் ஒருமுறை நடப்பதால், ஈக்களின் தாக்குதல் அதிகமாக உள்ளது. இந்த ஈ தாக்குதலால் கிட்டத்தட்ட அனைத்து உணவு கடைகளிலும்  தங்கள் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் கூறுகின்றன. சிலர் கடையை மூட வேண்டியதாயிற்று. இதன் காரணத்தினால்  இந்த ஊர்களுக்கு உணவருந்த வருபவர்களின் வருகை குறைந்துள்ளது"

தோழர் தினாஇந்தப் பிரச்சினையை தீவிரமாக கையில்  எடுத்து, பொதுமக்களிடம்  கையெழுத்து வேடடையைத் தொடங்கினார். கடைக்காரர்கள், குறிப்பாக உணவுக் கடைகள் மற்றும் உள்ளூர்வாசிகளிடம் கையெழுத்துப் பெற்றுக்கொண்டிருக்கிறார். 

மக்களின் அந்த கையெழுத்து மனுவோடு, இவ்விவகாரத்தின் மீது   உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் மனு அளிக்கப்படும். இந்த ஈ தாக்குதலுக்கான காரணத்தை அதிகாரிகள் கண்டறிந்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், துப்புரவு மற்றும் வடிகால் விதிமுறைகளை கடைபிடிக்க பண்ணை  நடத்துபவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.  

மேலும், இப்பிரச்னையை உடனடியாக எதிர்கொள்ள  அடுத்த வாரம் ரெம்பாவ் மாவட்ட சுகாதார அலுவலகம், ரெம்பாவ் மாவட்ட கவுன்சில் மற்றும் நெகிரி செம்பிலான் சுற்றுச்சூழல் துறைக்கு மனுவழங்கப்படும் என்று தோழர் தினா தெரிவித்தார். 

No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...