மே 1 2026 பிரகடனம்
தொழிலாளர்களே ஒன்றுபடுவோம்- போரை தவிர்ப்போம், ஊழலை
எதிர்ப்போம்
இந்த
ஆண்டு, மே 1 தொழிலாளர் தினக்
கொண்டாட்டம், பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் போர்களால், நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்கும் ஊழலால் மற்றும் மக்களும் தொழிலாளர் வர்க்கமும் கொண்ட ஒற்றுமையை அச்சுறுத்தும் பலவீனமான வேற்றுமையால் சூழப்பட்டுள்ளது. 2026 ஆம்
ஆண்டிற்கான மே 1 தொழிலாளர் தினக்
கொண்டாட்டத்தின் கருப்பொருள்: “தொழிலாளர்களே ஒன்றுபடுவோம் – போரை தவிர்ப்போம், ஊழலை எதிர்ப்போம்.”
உலகளாவிய நிலைத்தன்மையையும்
தேசிய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் தொழிலாளர்களே பிரதான சக்தியாகவும் அரணாகவும்
உள்ளனர்.
உலகளாவிய
அரசியல் நிச்சயமின்மையும் நாட்டின் நிர்வாகத் துறையில் காணப்படும் குறைபாடுகளும் கவலைக்கிடமான சூழலில், இந்த ஆண்டின் தொழிலாளர்
தினக் கருப்பொருள், தொழிலாளர்களின் கூட்டு வலிமை என்பது பொருளாதாரத்தின்
உந்து சக்தி மட்டுமல்ல, அது உலக அமைதியையும், ஊழல் மற்றும் முறைகேடுகளற்ற ஒரு பணிச்
சூழலையும் கோரும் ஒரு தார்மீகக் குரலும் கூட என்பதை வலியுறுத்துகிறது. எந்தவொரு
இன மோதலும், ஊழலையும் போர்களையும் எதிர்க்கும் மக்களின் சக்தியை மட்டுமே பலவீனப்படுத்தும்.
இன ரீதியான நடத்தை, ஊதியக்
கோரிக்கைகள், விலைக் கட்டுப்பாடுகள், மானியங்களைத்
தக்கவைத்தல், ஒரு சிலருக்கு மட்டுமே பயனளிக்கும் பெருநிறுவனங்களின்
முறைகேடான உறவுமுறைச் சார்புநிலை போன்ற மிக முக்கியமான தேசியக் கோரிக்கைகளில்
கவனம் செலுத்துவதிலிருந்து தொழிலாளர்களின் கவனத்தைத் திசைதிருப்பிப்
பிரித்துவிடும்.
“தொழிலாளர்கள் ஒன்றுபடுவோம்” என்ற கருப்பொருள், ஆயுத விற்பனையாளர்களுக்கும் தொழிலாளர் பிரிவினையின் பின்னால் மறைந்து செயல்படும் ஆட்சியாளர்களுக்கும் நன்மை தரக்கூடிய போர், ஊழல் மற்றும் இனவாதத்திற்கு எதிராக மக்கள் கைகோர்க்க வேண்டும் என்பதற்கான ஓர் அழைப்பாகும்.
எனவே,
1 மே 2026 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாங்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்:
1. ஒற்றுமையை
வலுப்படுத்துதல்
i. இன மற்றும் மத உணர்வுகளை பயன்படுத்தி
மக்களைப் பிளவுபடுத்தும் அனைத்து முயற்சிகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
ii. இனப்
பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஒற்றுமைக்கான உரையாடல் ஒரு அரணாக அமைய
வேண்டும்.
2. தொழிலாளர்கள் போரை நிராகரிக்கின்றனர்
i. ஈரான், உக்ரைன், ஏமன் ஆகிய நாடுகளில் நடக்கும் போர்களையும், பாலஸ்தீனம் மற்றும் போர்கள் தீவிரமாக நடைபெறும் அனைத்து இடங்களிலும் நடக்கும் இனப்படுகொலையையும் நிறுத்த வேண்டும்.
ii. போர்
நிதியளிப்பவர்களுக்கு வழங்கப்படும் ஆதரவை நிறுத்த வேண்டும். சர்வதேச போர் கப்பல்கள் இந்த
நாட்டின் கடற்பரப்பில் நங்கூரமிடுவதற்குத் தடைவிதிக்கப்பட வேண்டும்.
iii. வளைகுடா பகுதிகளில் நடைபெறும் போர்கள், பெருநிறுவனங்களுக்கும் அரசியல் உயர்வுவகுப்பினருக்கும் மட்டுமே நன்மை அளிக்கின்றன; அதே நேரத்தில் தொழிலாளர்களை
அது பாதிக்கின்றது, குறிப்பாக விநியோகச் சங்கிலி பாதிப்புகள் மற்றும் பெட்ரோல்/டீசல் விலை உயர்வால் வாழ்க்கைச்
செலவு அதிகரிப்பது உள்ளிட்டவையாகும்.
3. தொழிலாளர்கள்
ஊழலை எதிர்க்கின்றனர்
i. மலேசிய
ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) தலைவர் Azam Baki அவர்கள் பணியிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
ii. பெருநிறுவன
மாஃபியா நடவடிக்கைகளை விசாரிக்க ஒரு சுயாதீன விசாரணை
ஆணையம் (RCI) அமைக்கப்பட வேண்டும்.
iii. ஊழல் தடுப்பு
ஆணையத்தின் தலைவர், தற்போது இருப்பது போல் பிரதமருக்கு மட்டும் பதிலளிக்காமல், நாடாளுமன்றத்திற்கே
பதிலளிக்கக் வேண்டியவராகவும் இருக்க
வேண்டும்.
4. தொழிலாளர்
உரிமைகள்
i. அதிகரித்து
வரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க,, மேலும்
யதார்த்தமான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
ii. வேலை
பாதுகாப்பும், ஒப்பந்த (கான்ட்ராக்ட்) முறையின் நீக்கமும்: நிரந்தர மற்றும் தொடர்ச்சியான பணியிடங்களுக்கு ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும்.
iii. முதியோர்
ஓய்வூதிய திட்டம்: ஓய்வு வயதை அடையும் அனைத்து
மலேசியர்களுக்கும் மாதாந்திர ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்.
iv. தொழிற்சங்க
உரிமைகள்: தொழிற்சங்கங்களை அமைப்பதை எளிதாக்கி, தொழிற்சங்கங்கள் பாதிக்கப்படாமல் இருக்கப்
பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
v. மாற்றுத்திறனாளி
(OKU) வேலைவாய்ப்பு உரிமைகள்: அனைவரும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவமான பணியாளர்கள் அமைப்பை உருவாக்கும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு திட்டங்கள் மூலம் வேலை வாய்ப்புகள் உறுதி
செய்யப்பட வேண்டும்.
vi. பராமரிப்பு
வேலை (Care Work) ஒரு தேசியப் பங்களிப்பாக அங்கீகரித்தல்: பெண்கள் மற்றும் குடும்பங்கள் மேற்கொள்ளும் பராமரிப்பு பணியின் பங்களிப்பை பொருளாதார ஆதரவின் மூலம் அங்கீகரித்து மதிக்க வேண்டும்.
5. சுகாதாரம்
i. இலவச மற்றும்
தரமான சுகாதார சேவை:
அரசு மருத்துவமனைகளின் பட்ஜெட்டை உயர்த்தி, மக்கள் தொடர்ந்து சிறந்த இலவச சிகிச்சை பெறுவதை
உறுதி செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளிலிருந்து தனியார்
துறைக்கு நிபுணர்கள் வெளியேறுவதைத் (brain drain) தடுக்க, மேலும் பல அரசு மருத்துவமனைகளைக்
கட்ட வேண்டும் மற்றும் புதிய தனியார் மருத்துவமனைகளின் கட்டுமானத்திற்கு 5 ஆண்டுகளுக்குத்
தடை (ஒத்திவைப்பு) விதிக்க வேண்டும்.
ii. KKM திட்டத்தை நிறுத்துதல்: அரசு மருத்துவமனைகளில் தனியார்மயமாக்கல்
திட்டங்களை (அரசு மருத்துவமனைகளில் தனியார் பிரிவுகள் போன்றவை) செயல்படுத்துவதை எதிர்க்க
வேண்டும். ஏனெனில், இத்திட்டங்கள் பணக்கார மற்றும் ஏழை நோயாளிகளுக்கு இடையே சிகிச்சையில்
பாகுபாட்டை உருவாக்குகின்றன.
iii. அனைவரையும்
உள்ளடக்குதல்: அகதிகள், புலம்பெயர்ந்தோர் மற்றும் விளிம்புநிலை சமூகத்தினர் சுகாதார
சேவைகளைப் பெறுவதில் பாகுபாடு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
6. வீட்டுவசதி
i. வீட்டுவசதி
உரிமைகளுக்கு உத்தரவாதம் மற்றும் கட்டாய வெளியேற்றங்களுக்குத் தடை: நகர்ப்புறக் குடியேறிகள்,
பழங்குடி மக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட மர்ஹைன் சமூகத்தினரின் எந்தவொரு கட்டாய வெளியேற்றத்தையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். எந்தவொரு மேம்பாட்டு திட்டமும் செயல்படுத்தப்படுவதற்கு
முன், மாற்று குடியிருப்புகள் வழங்கப்படுவது கட்டாயமாக இருக்க வேண்டும்.
ii. மக்கள்
வீடமைப்பு திட்டம் (PPR) செயல்படுத்துதல்: அரசாங்கம் முக்கியமான இடங்களில் மக்கள் வீடமைப்பு திட்டங்களை முன்னுரிமையுடன் செயல்படுத்தி, நியாயமான, தரமான மற்றும் மக்கள் வாங்கக்கூடிய அல்லது வாடகைக்கு ஏற்ற விலையில் வீடுகள்
வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்; இதன் மூலம் ஒவ்வொரு
குடிமகனும் வசதியான குடியிருப்பு பெறும் உரிமை பாதுகாக்கப்படும்.
7. குடிபெயர்
தொழிலாளர்கள் மற்றும் அகதிகள்
i. குடிபெயர்ந்த
தொழிலாளர்களுக்கான சம உரிமைகள்: நவீன
அடிமைத்தனம் மற்றும் சுரண்டலிலிருந்து குடிபெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும்.
ii. அகதிகள்
மற்றும் தஞ்சம் கோருவோருக்கான வேலை உரிமை அங்கீகாரம்:
நாட்டில் உள்ள அகதிகளுக்கும் தஞ்சம்
கோருவோருக்கும் வேலை செய்யும் உரிமையை
அரசு வழங்க வேண்டும்.
iii. தொழிலாளர்
குடிபெயர்வு தொடர்பான முழுமையான தேசிய கொள்கை: தொழிலாளர் குடிபெயர்வை நிர்வகிக்கும் வகையில் ஒரு விரிவான தேசிய
கொள்கை அமல்படுத்தப்பட
வேண்டும்.
8. உணவு
பாதுகாப்பும் பொருள்களின் விலை கட்டுப்பாடும்
i. பொருள்களின்
விலை கட்டுப்பாடு: அன்றாட தேவைக்கான பொருள்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த
வேண்டும். மேலும், மக்கள் பயனடையும் வகையில் மானிய (subsidy) வழங்கலை மீண்டும் திறமையாகவும் நேரடியாகவும் அமல்படுத்த வேண்டும்.
ii. விவசாய
உரிமையும் உணவு பாதுகாப்பும்: விவசாயிகள்
மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களது நிலங்களில் இருந்து வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட வேண்டும். நீண்ட காலமாக விவசாயம் செய்து உள்ளூர் உணவு உற்பத்திக்கு பங்களித்து
வரும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரை அங்கீகரித்து, அவர்களுக்கு
நில மானியங்களை வழங்க வேண்டும்.
9. மனித
உரிமைகள்
i. ஊடக
சுதந்திரமும் மக்கள் குரலும்: தகவல் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்க,
அச்சுச் சட்டத்தையும் தகவல் தொடர்புச் சட்டத்தின் பிரிவு 233-ஐயும் ரத்து செய்ய வேண்டும்.
ii. கல்வி
சீர்திருத்தமும் மாணவர் உரிமைகளும்: மாணவர்களை கட்டுப்படுத்தும் AUKU சட்டம் மற்றும் அதற்கு ஒத்த சட்டங்கள் ரத்து
செய்யப்பட வேண்டும். கல்விக் கடன் (PTPTN) நீக்கப்பட வேண்டும். அதேவேளை, குடிபெயர்ந்த குழந்தைகள் மற்றும் அகதிகள் உட்பட அனைவருக்கும் உள்ளடக்கிய இலவசக் கல்வி அமல்படுத்தப்பட வேண்டும்.
iii. தேசத்துரோகச்
சட்டத்தையும், மக்களின் பேச்சுரிமை மற்றும் குடிமை உரிமைகளைக் கட்டுப்படுத்தும் அனைத்துக்
கடுமையான சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்.
iv. பாலின சமத்துவம்:
விரிவான சட்ட சீர்திருத்தத்தின் மூலம் பாலினம் அல்லது பாலியல் நோக்கஅடிப்படையிலான எந்தவொரு
ஒடுக்குமுறையையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
v. குழந்தைகள்
பாதுகாப்பு: குழந்தைகளின் உரிமைகள் மீதான உலகளாவிய
உடன்படிக்கையின்படி (CRC), குழந்தைகளின் உரிமைகள்
முழுமையாக பாதுகாக்கப்பட்டும் உறுதி செய்யப்பட்டும் இருக்க வேண்டும்.
10. பழங்குடி
மக்கள்
i. மலேசியாவில்
உள்ள பழங்குடி மக்களின் பாரம்பரிய நில உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். அவர்களுக்கு
நிரந்தர நில உரிமை (hak milik kekal) வழங்கப்பட்டு, தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக்
ஆகிய இடங்களில் உள்ள பழங்குடி மக்களின் நில ஒதுக்கீடுகளின் (rezab) நிலை மேலும் வலுப்படுத்தப்பட
செய்ய வேண்டும். பழங்குடி மக்களின் நில வளர்ச்சி திட்டங்கள், அவர்களின் விருப்பம்,
தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட
வேண்டும்.
11. சுற்றுச்சூழல்
i. காலநிலை
அவசரநிலை மற்றும் முன்னேற்பாடு (Adaptasi Iklim): காலநிலை அவசரநிலையை அறிவித்து, வெள்ளம்
மற்றும் வெப்ப அலைகள் போன்ற இயற்கை பேரிடர்களிலிருந்து விளிம்புநிலை சமூகங்களை பாதுகாக்கும்
வகையில் சிறப்பு நிதியுடன் தேசிய ஏற்பாட்டு திட்டத்தை (Pelan Adaptasi Nasional) விரைவாக
செயல்படுத்த வேண்டும்.
ii. ஆற்றல்
மற்றும் உண்மையான தீர்வுகள்: தூய்மையான மற்றும் மலிவு விலையிலான புதுப்பிக்கத்தக்க
ஆற்றலுக்கு உடனடியாக மாற வேண்டும். பயனற்றதும், உள்ளூர் சமூகங்களின் நில உரிமைகளுக்கு
அச்சுறுத்தலாகவும் உள்ள போலி காலநிலை தீர்வுகளை (CCUS மசோதா போன்றவை) நிராகரிக்க வேண்டும்.
iii. ஆபத்தான
திட்டங்களை நிறுத்துதல்: அரிய மண் கனிம அகழ்வு, மக்கள் வசிக்கும் பகுதிகளில் எரிவாயு
உலைகள் அமைத்தல், அணுசக்தி, கடல் மீட்பு, உணர்திறன் மிக்க பகுதிகள் மற்றும் மலைச்சரிவுகளில்
மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட, சுற்றுச்சூழலுக்கும் உடல்நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும்
திட்டங்களை நிறுத்த வேண்டும்.
iv. மாசு மற்றும்
கழிவு கட்டுப்பாடு: வெளிநாட்டுக் கழிவுகளின் இறக்குமதியையும் திறந்தவெளி எரிப்பையும்
நிறுத்த வேண்டும். பொது சுகாதாரத்தை உறுதி செய்ய, மாசுபாடு தடுப்பிற்கு முன்னுரிமை
அளிக்க வேண்டும்.
12. செயற்கை
நுண்ணறிவின் பயன்பாடு
i. செயற்கை
நுண்ணறிவு யுகத்தில் வேலைப் பாதுகாப்பு: தானியக்கமயமாக்கலால் பாதிக்கப்படக்கூடிய துறைகளில்
உள்ள தொழிலாளர்களுக்கு முற்போக்கான மறுதிறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் சமூகப்
பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம், செயற்கை நுண்ணறிவு மனித வேலைகளின் தொடர்ச்சிக்கு
அச்சுறுத்தலாக அமையாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.
இந்தப் பிரகடனத்தை
ஆதரிக்கும் அமைப்புகளின் பட்டியல்
- AKSI
- Centre of Independence Journalism
- Gabungan Marhaen
- HARAM
- HAYAT
- Jentayu
- Kesatuan Pengawal Keselamatan Kespa
- Liga Mahasiswa Malaysia
- Mandiri
- Parti MUDA
- Parti Rakyat Malaysia (PRM)
- Parti Sosialis Malaysia (PSM)
- Persatuan Sahabat Wanita Selangor (PSWS)
- Suaram
- Tenaganita
- WAO
No comments:
Post a Comment