Thursday, April 7, 2022

ஆல்பள இலாக்கா ஒரே நிலையான நடைமுறையை கையாள வேண்டும்!



மலேசிய சோசலிச கட்சியின் தொழிலாளர் பகுதி பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க குத்தகை தொழிலாளர் அணி பிரதிநிதி ஆகியோர் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி புத்ராஜெயா ஆள்பல துணை இயக்குனரை சந்தித்தனர்.

அடிமட்ட தொழிலாளர்களிடமிருந்து பல புகார்கள் வந்த வண்ணமிருக்க, அதை வட்டார ஆள்பல இலாக்காகளுக்கு கொண்டு செல்லும் போது தொழிலாளர்கள் பல பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். பொதுவாக முதலாளிகள் தொழிலாளர்களுக்கு தொழில் ஒப்பந்தம், சம்பள அறிக்கை மற்றும் அவர்கள் வேலை செய்வதற்கான எவ்வித ஆவணத்தையும் கொடுப்பதில்லை. தொழிலாளர்கள் பிரச்சனையை ஆள்பல இலாக்காவிற்கு கொண்டு செல்லும் போது, தொழில் உறவிற்கான ஆதாரத்தை ஆள்பல அதிகாரியிடம் கொடுக்க முடிவதில்லை. இச்சூழ்நிலையில் முதலாளிகளை விசாரிக்காமல், தொழிலாளர்கள் மீது அந்த சுமையை வைப்பது நியாமில்லை என்றும் ஆள்பல இலாக்கா,  முதலாளிகளை சோதனையிட வேண்டும், அவர்கள் சட்டங்களை முறையாக அமலாக்கம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று இக்குழு வழியுருத்தியது.

மேலும், பல தொழிலாளர்கள் அவர்களின் வழக்கை வாதாட திறன் இல்லாதலால் நம்மை நாடுகின்றனர். ஆனால், ஆள்பல இலாக்காவில் தொழிற்சங்கவாதிகள் மட்டும்தான்  தொழிலாளர் பிரதிரிநிகளாக வாதாட முடியும் என்ற சட்டம் எங்களைப் போன்ற சமூக ஆர்வாளர்களுக்கு தடையாக உள்ளது. நாட்டில் பல தரப்பினர் தொழிலாளர் பிரச்சனையை முன்நிறுத்தி போராடி வருகின்றனர், அவர்களுக்கும் தொழிலாளர்களை பிரதிநிதிக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் மற்றுமொரு முக்கிய கோரிக்கையையும் அவர்கள் முன் வைத்தனர்.

நமது நாட்டில் மிகப் பெரிய  எண்ணிக்கையில் ஆவணம் இல்லாத அந்நிய தொழிலாளர்களும் இருக்கின்றனர்;  அவர்களும் வேலை இடத்தில் பல பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களின் பிரச்சனையை ஆல்பள இலாக்காவிடம் கொண்டும் செல்லும் போது, ஒரு வட்டார இலாக்கா அந்த புகாரை ஏற்கிறது, மற்றொன்று நிராகரிக்கிறது. ஏன் இந்த பாகுபாடு. எல்லா வட்டார ஆல்பள இலாக்காவும் ஒரே நிலையான நடைமுறையை கையாள வேண்டும், இதுவே தொழிலாளர் பிரச்சனையை சுமுகமாக  தீர்க்க வழிவகுக்கும் என்பதையும் அவர்கள் வழியுறுத்தினர்.

No comments:

Post a Comment

தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைச் சட்ட வரைவு !

தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைச் சட்ட    வரைவு ! மனித வள அமைச்சிடம் சமர்பிக்கப்பட்டது     தோட்டத் தொழிலாளர்கள் ஆதரவுக் குழு (JSM...