செய்தி அறிக்கை
மலேசியாவில் வெள்ளத்திற்கான காரணங்களை சீர் செய்வது தொடர்பாக மடானி அரசு தொடர்ந்து மறுக்கும் நிலையில் அதை எதிர்கொள்வது சாத்தியமா?
ஒவ்வொரு வருட இறுதியில் மலேசியாவில் மழைக்காலம்
தொடங்கும் போதெல்லாம் ஏற்படும் பாதிப்புகளை நாமே படித்தும், கேட்டும், சில சமயம் பார்த்தும் இருக்கிறோம். கடந்த வாரம்
ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 150,000-க்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு
அனுபவத்தின் அடிப்படையில் பாத்தோம் என்றால் சொத்து இழப்பு மற்றும் உள்கட்டமைப்பு
சேதம் பல பில்லியன் ரிங்கிட்டை எட்டக்கூடும்.
மேலும் கடந்த வாரம் மட்டுமே ஆறு பேர் வெள்ளத்தினால் உயிரிழந்துள்ளனர்.
ஆனால், மலேசியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பிரச்சினையைத் தீர்க்க
நேர்மையான முயற்சிகள் நடந்திருக்கிறதா? மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் உண்மையான
காரணத்தை அடையாளம் காண மடானி அரசு மறுக்கிறதா? அப்படியானால் அதற்கான காரணம் என்ன?
பெரும்பாலான அரசியல் தலைவர்கள், இயற்கை பேரிடர்
ஏற்படும் போது சுற்றுச்சூழலின் மீதும், கடவுளின் சக்தியின் மீதும், பணிச்சுமையை போடுவார்கள்.
இம்முறை கிளந்தான் மற்றும் திரங்கானுவில் தொடர்ந்து 5 நாட்கள் பெய்த கனமழை ஆறு மாதங்களுக்குச் சமமானது
என்று கூறிய போதும் PMX மற்றும் துணைப் பிரதமர் II அவர்கள் அதே பழி சுமத்தலைச் செய்வதில்
தவறவில்லை. கடந்த 30 ஆண்டுகளில் காலநிலையில் மாற்றம் இருப்பதால்தான்
இத்தகைய வெள்ளப்பெருப்பெடுப்புக்கு முக்கிய காரணம் என்று மலேசியா அரசு அறிந்திருக்க
வேண்டும்.
9 ஜூன் 1933-இல் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டில் (UNFCCC) மலேசியா கையெழுத்திட்டது மற்றும் 17 ஜூலை 1994 ஆம் ஆண்டு ஒப்புதலும் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து 1990 களில் இருந்த வரம் பெற்ற மழைப்பொழிவு உட்படக் காலநிலை மாற்றத்தைப் பற்றி விவாதிக்கும் விவாதங்களும் ஆவணங்களும் உள்ளன. இருப்பினும், மத்திய அரசு,மாநில அரசு அரசியல் தலைவர்கள் இதுபோன்ற சாக்குப்போக்குகளை பயன்படுத்துவது நியாயமா?
30 ஆண்டுகளாக மழையின் விகிதம் [மழையின் அளவு
(மிமீ)/நேரம்] என்ன என்று தெரிந்தும் எந்த ஒரு திட்டமிடல் நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்படாதது ஏன்?
பல பில்லியன் ரிங்கிட் செலவழித்தால், கிளந்தான் மற்றும் திரங்கானு
மாநிலங்கள் உட்பட மலேசியாவின் வெள்ளப் பிரச்சனை
தீர்ந்துவிடுமா? ஒருவேளை
இது சாத்தியமாகலாம். ஆனால் உறுதியாகத் தெரியவில்லை.
வெள்ளத் தணிப்பு திட்டங்கள் அறிகுறிகளை மட்டுமே 'சமன்படுத்த' முயல்கின்றன, ஆனால் வெள்ளத்திற்கான காரணங்கள் இன்னும்
கவனிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட RM12 பில்லியன்2 செலவில் 33 வெள்ளத் தணிப்புத் திட்டங்கள் மத்திய அரசால்
கடந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்டன.
சிலாங்கூரில் பல
வெள்ளத் தணிப்புத் திட்டங்கள் நிறைவடையவில்லை. சிலாங்கூர் மாநில
அரசு பல நூறு மில்லியன் ரிங்கிட்களை வெள்ளத்
தணிப்புத் திட்டங்களுக்காகச் செலவிட்டாலும் ஷா ஆலம் இன்னும் திடீர் வெள்ளத்தால்
பாதிக்கப்படுகிறது. சிலாங்கூர் மாநில
அரசிடம் திடீர் வெள்ளம் ஏற்படும் போது இந்த விவகாரத்தைக் கேள்வி
எழுப்பும் முக்கிய ஊடகங்களில் எந்த விவாதமும் இல்லை.
கிளந்தான் மற்றும் திரங்கானுவில் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட
பகுதிகள் பெரும்பாலும் ஆற்றின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளன.
மேல்நிலைப் பகுதியில் காடுகளை அழிப்பதால் இது ஏற்படலாம். உதாரணமாக, நீல பள்ளத்தாக்கு - குவா முசாங் சாலை
திறக்கப்பட்டதிலிருந்து, கட்டுப்பாடற்ற நில ஆய்வு அனுமதிகள்
வழங்கப்படுவதால், பல
வனப்பகுதிகள் சூறையாடப்பட்டுள்ளன. பகாங்கிலும் இதேபோன்ற
நிலை ஏற்படுகிறது, அங்கு திதிவாங்சா மலைத்தொடருக்கும்
தேசிய பூங்காவிற்கும் இடைப்பட்ட பகுதி மரம் வெட்டும் நடவடிக்கைகளால் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மட்டத்தில் உள்ள மடானி அரசாங்கமும், கிளந்தான், திரங்கானு, சிலாங்கூர், பகாங் மற்றும் கெடா போன்ற மாநில அரசுகளும், உண்மையில் மலேசியாவின் வெள்ளப் பிரச்சனையில்
தீர்வு காண விரும்பினால், மறுப்பு நிலையிலிருந்து வெளியேற
வேண்டும் (அல்லது அறிந்திருக்கவில்லை என்று பாசாங்கு செய்வதை கைவிட வேண்டும்)
என்று பிஎஸ்எம் கேட்டுக்
கொள்கிறது.
வெள்ளப் பிரச்சனை குறித்து உடனடியாக
விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள்:
1. காலநிலை மாற்றம் என்பது நிதர்சனமான உண்மை.
இதனால் பெய்யும் மழையின் அளவு மேலும் மேலும் நிச்சயமற்றதாக மாறுகிறது.
வளிமண்டலத்தில் கார்பனை குறைப்பதே
நீண்ட கால தீர்வாகும். மேலும் காற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீது கார்பன் வரியை
அறிமுகப்படுத்துவதால் அரசாங்கம் திட்டத்தை செயல்முறைப்படுத்தலாம்.
2. மலேசியா 2025 ஆம் ஆண்டில் ஆசியான் நாடுகளின்
கூட்டமைப்பிற்கு தலைமை தாங்கவுள்ளதைத் தொடர்ந்து
அனைத்து ஆசியான் நாடுகளிலும் கார்பன் வரியைக் கிட்டத்தட்ட
ஒரே விகிதத்தில் இருக்கும் வகையில் ஆய்வுரைகளைப் பரிந்துரைக்கலாம். இதனால் ஆசியான் நாடுகளுக்கு
இடையே ஆரோக்கியமற்ற போட்டியைத் தடுத்து
அன்னிய முதலீட்டை (FDI) ஈர்ப்பதில் கவனம் செலுத்த இயலும்.
3. வெள்ளத் தணிப்புத் திட்டங்கள் செலவு மற்றும்
செயல்திறன் அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். வெள்ளத் தணிப்பு
திட்டங்களில் உள்ளூர் சமூகங்கள் மற்றும் வெளி நிபுணர்களின் தலையீடு இருக்க
வேண்டும்.
4. வெள்ளத் தணிப்புக்காக பில்லியன் கணக்கான ரிங்கிட் செலவழிப்பதை
அவசர நிதியின் கீழ் வைக்கக்கூடாது, அங்கு அது தணிக்கை செய்யப்படவில்லை, அதனால் மோசடிகள் ஏற்படுகின்றன.
5. குறிப்பாக கிளந்தான்,
திரங்கானு,
பகாங்
மற்றும் கெடா ஆகிய மாநிலங்களில் காடுகளை அழிக்க அனுமதி வழங்குவது மாற்றியமைக்கப்பட
வேண்டும். மாநில முதலமைச்சர் (MB), மாநில
நிலம் மற்றும் சுரங்க இயக்குநர் (PTG) மற்றும்
மாநில வனத்துறை இயக்குநர் ஆகியோர் ஆற்றின் மேல்நிலைப் பகுதியில் வன ஆய்வு அனுமதியை
வழங்கினால் அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர சட்ட ஏற்பாடு இருக்க
வேண்டும்.
6. ஒரு சுயாதீன மாநில நிலக் குழு (JBTN)
உருவாக்கப்பட
வேண்டும். அதில் அரசாங்கம்,
எதிர்க்கட்சி,
சிவில்
சமூகம் மற்றும் பாமர மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஜேபிடிஎன்
நில மற்றும் ஆற்றின் மேல்நிலைப் பகுதியில்
வன ஆய்வு அனுமதியை ரத்து செய்ய முழு அதிகாரம் பெற்றிருக்க வேண்டும்.
வெளியிட்டவர்:
சுரேஷ் பாலசுப்ரமணியம் (PSM மத்திய குழு உறுப்பினர் )
பிஎஸ்எம் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை
நெருக்கடி பிரிவுத் தலைவர்.
தமிழில் : மோகனா
No comments:
Post a Comment