Monday, October 13, 2025

டிரம்ப் வருகையை எதிர்க்கும் 5 காரணங்கள்


டிரம்ப் கலந்துக்கொள்ளும் ஆசியான் உச்சி நிலை மாநாடு வருகையை எதிர்க்கும் 5 காரணங்கள்

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் , இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சி நிலை மாநாட்டில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளார். எனினும், இந்த அழைப்பை திரும்பப் பெறுவது அவசியம்.

ஏன்?

கீழே உள்ள விளக்கத்தைப் படிப்பதோடு, அக்டோபர் 26 அன்று, கோலாலம்பூரில் நடைபெறும்டிரம்பை எதிர்க்கும் மக்கள் ஒன்றுகூடலில் கலந்து கொள்ளவும் மறக்காதீர்கள்!


1 காசாவில் இனப்படுகொலை குற்றத்திற்கு அமெரிக்கா மிக முக்கியமான துணைபுரிகிறது

                                    

  • ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் தடையற்ற விநியோகம் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அமெரிக்க  veto அதிகாரத்தின் பாதுகாப்பு இல்லாமல், இஸ்ரேலிய இந்த வன்முறை தொடர முடியாது.
  •  அமெரிக்கா தனது ஆதரவை நிறுத்தினால், இஸ்ரேல் போரை நிறுத்தி பேச்சுவார்த்தை செயல்முறையைத் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

 

2. அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை, இராணுவ-தொழில்துறை வளாகம் கையகப்படுத்தியுள்ளது


  • அமெரிக்க பொருளாதாரம் மற்றும் அரசியலில் இராணுவ-தொழில்துறை வளாகம் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது
  • இக்கூட்டணி, உலகம் முழுவதும் அமைதியின்மையும் பதற்றத்தையும் தூண்டி, அதனால் மேம்பட்ட மற்றும் விலையுயர்ந்த ஆயுதங்களுக்கான தேவை அதிகரிப்பதன் மூலம் பெரும் லாபத்தைப் பெற்றுக்கொள்கிறது.

அமெரிக்காவின் கொடூரமான வர்த்தகத் தடைகள்மக்களுக்குக் கெடுதியையும் துயரத்தையும் ஏற்படுத்துகின்றன


  •        கியூபா, வெனிசுலா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் போன்ற நாடுகள் மீது அமெரிக்கா கடுமையான வர்த்தகத் தடைகள் விதித்துள்ளது. இந்த நாடுகள், அமெரிக்கா மற்றும் உலக வங்கியின் வளர்ச்சி மாதிரிகளைப் பின்பற்ற மறுத்ததற்காகவே தண்டிக்கப்படுகின்றன.
  •       இந்தத் தடைகள், அந்த நாடுகளின் பொதுமக்களுக்குச் சிரமம், வறுமை மற்றும் அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறை ஏற்படுத்தி, மனிதாபிமான நெருக்கடியை தீவிரப்படுத்துகின்றன.

 

அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்கள் மேலும் பணக்காரர்களாகி வருகின்றனர்


  • நிறுவன வரிக் குறைப்புகள் மற்றும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக உலகளாவிய குறைந்தபட்ச வரியை (Global Minimum Tax) விதிப்பதை மறுப்பது, பெரிய நிறுவனங்களுக்கு பெரும் நன்மையாகியுள்ளது.
  • மேலும், அமெரிக்கா தனது பெருநிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில் சர்வதேச விவகாரங்களில் தலையிடுகிறதுஉதாரணமாக, கூகிள் மீது ஐரோப்பிய ஒன்றியம் (EU) 2.95 பில்லியன் யூரோ அபராதம் விதித்தபின், அமெரிக்கா அச்சுறுத்தும் நிலைப்பாட்டை எடுத்தது.

சர்வதேச குற்றவாளி மற்றும் அடக்குமுறை/ பகடிவதைச் செயல்களின் அடையாளம்

  • பிற ஊழல்களுடன்  டொனால்ட் டிரம்ப்,  பாலியல் தாக்குதல் வழக்கிலும் வணிகப் பதிவுகள் போலி செய்த குற்றத்திலும் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
  • அவர் அடக்குமுறை மற்றும் வன்முறையான நடத்தை மூலம் இளைஞர் தலைமுறைக்கு மிக மோசமான முன்னுதாரணமாக திகழ்கிறார்.

No comments:

Post a Comment

டிரம்ப் வருகையை எதிர்க்கும் 5 காரணங்கள்

டிரம்ப் கலந்துக்கொள்ளும் ஆசியான் உச்சி நிலை மாநாடு வருகையை எதிர்க்கும் 5 காரணங்கள் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் , இம்மாத இறுதியில்...