Wednesday, January 29, 2020

எங்கள் மாட்டுப்பண்ணையை இடிக்காதீர்!



ஷா ஆலாம்.ஜன.30-
  மூன்று தலைமுறையாக தங்களை வாழ்வைத்து வரும் தங்கள் மாட்டுப் பண்ணையை இடித்துவிடாதீர்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து ஷா ஆலாம் அரசாங்க செயலகத்தின் முன் ஒன்றுக்கூடினர் கிள்ளான் அம்பாங் போட்டானிக் பகுதியில் மாட்டுப் பண்ணை வைத்திருக்கும் பண்ணையாளர்கள்.
  மாடு வளர்ப்பையே நம்பி வாழ்ந்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு இடையூர் கொடுக்க வேண்டாம். குறிப்பாக கிள்ளான் மாவட்ட நில அலுவலகம் எங்களை வெளியேற்றுவதிலே குறியாக இருந்து வருகிறது. சிலாங்கூர் மந்திரி பெசாரின் அலுவலகம் இடம் மாற்றம் குறித்து எந்தவொரு இறுதிக்கட்ட முடிவையும் எடுக்காத நிலையில் மாவட்ட அலுவலகத்தின் நடவடிக்கை அத்துமீறுவது குறித்து அதிருப்தியடைந்த பண்ணையாளர்கள் நேற்று காலை 11.30 மணியளவில் பதாதையுடன் ஒன்றுத் திரண்டனர்.
  பி.எஸ்.எம் கட்சியின் உதவியோடு அங்குத் திரண்ட 20 க்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் அம்பாங் போட்டானிக் பகுதியில் ( முன்பு ஹைலண்ட்ஸ் தோட்டம் ) கடந்த 3 தலைமுறைகளாக இங்கு மாடு வளர்த்து வரும் தேவேந்திரன் ஆறுமுகம் என்பவர் இப்பகுதியில் ‘சுசு ரவி’ என்றால் அனைவருக்கும் நன்கு பரீட்சியமானவர். இவரின் பண்ணை இருக்கும் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று நெருக்குதல் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருப்பதுடன் பண்ணையை உடைக்கும் திட்டம் ஏறக்குறைய உறுதிப்படுத்தபட்டு விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிடுவதால்,  இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்ற அடிப்படையில் இந்த அமைதி மறியலுடன் கோரிக்கை மனு கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியதாக பி.எஸ்.எம் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் சிவரஞ்ஜனி மாணிக்கம் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

மாநில மந்திரி பெசார் பிரதிநிதியுடன் சிவரஞ்சனி

நில அலுவலகம் காட்டியுள்ள மாற்று இடமான ஓலாக் லெம்பிட் பகுதி தற்போதுள்ள இடத்திலிருந்து சுமார் 40 கிலோ மீட்டரில் பந்திங் பகுதியில் அமைந்துள்ளது. எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாமல் காடு போல இருக்கும் அவ்விடத்தில் 5 ஏக்கர் கொண்ட நிலத்தை அடையாளம் காட்டியிருந்தாலும் எந்த அடிப்படையில் அவ்விடம் வழங்கப்படுகிறது என்பதிலும் குழப்பம் நிலவுவதாக குறிப்பிட்ட சிவரஞ்ஜனி, தற்காலிகமாக அவ்விடத்தைக் கொடுத்துவிட்டு பின்னர் அரசாங்கத்திற்கு தேவை என மீட்டுக் கொண்டால் பண்ணையாளர்கள் மீண்டும் தெருவிற்கு வருவார்களா என்ற கேள்வியையும் முன்வைத்தார்.
  மாற்றுத் திறனாளியான தமக்கு மாட்டுப் பண்ணையின் வழி தான் வருமானம் என குறிப்பிட்ட தேவேந்திரன், தம்முடைய 160 மாடுகளை நம்பிதான் தனது வாழ்க்கை நடப்பதாக தெரிவித்த அவர், பால் விநியோகம், வியாபாரம் அனைத்தும் கிள்ளான், புக்கிட் திங்கி வட்டாரங்களை சுற்றியே இருப்பதால் அவர்கள் காட்டும் புதிய இடத்திற்கு சென்றால் எங்களின் அன்றாட வருமானம் நிச்சயம் பாதிப்படையும் என குறிப்பிட்டார்.
  மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரியை சந்திக்க முடியாத பட்சத்தில் அவரின் பிரதிநிதியாக ஹாஜி போர்ஹான் அமான் ஷா பண்னையாளர்கள் வழங்கிய கோரிக்கையை பெற்றுக் கொண்டார்.

  அங்கு ஒன்றுத் திரண்டிருந்த பண்ணையாளர்கள் சுமார் இரண்டு மணி நேரம் பதாதை தாங்கி நின்றுக் கொண்டிருந்தனர். சம்பந்தமே இல்லாத ஒருவர் பிரதிநிதி என்ற பெயரில் வந்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டதில் தங்களுக்கு திருப்தி இல்லையென பி.எஸ் எம் .கட்சியின் தலைமையக பணியாளர் யோகி தெரிவித்தார்.

செய்தியாளர் : பி.ஆர்.ஜெயசீலன்
பத்திரிகை செய்தி : (மக்கள் ஓசை 

Monday, January 27, 2020

10 ஆண்டுகள் முன்னோக்கிய செயற்பாடை; திட்டமிட்டது பிஎஸ்எம்



ரு கட்சிக்கு அதன் செயற்பாடுகள், தார்மீக கொள்கைகள் மட்டுமல்ல தூர நோக்கு சிந்தனையும் மிக முக்கியம். கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென ஒரு கொள்கையை நிர்ணயித்து அதிலிருந்து சற்றும் விலகாது தொடர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறது மலேசிய சோசலிச கட்சி. மக்கள் பிரச்சனைகளுக்கு முதன்மை நிலையில் முக்கியதுவம் கொடுத்து அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்வரை அவர்களின் கையை விடாமல் பற்றிக்கொண்டு போராடியும் வருகிறது. இந்நிலையில் தனது கட்சியின் அடுத்தக் கட்ட நகர்வு எப்படி இருக்க வேண்டும் என்ற 10 ஆண்டுகள் முன்னோக்கிய தூர நோக்கு சிந்தனையை தனது செயற்குழுவோடு வரைந்திருக்கிறது பிஎஸ்எம்.

கடந்த ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரையில் மூன்று நாட்கள் ஈப்போ துரோலாவில் ஒன்று கூடிய செயற்குழுவினர், நீண்ட கலந்துரையாடல் மற்றும் விவாதத்திற்குப் பிறகு மிக முக்கியமான ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயற்முறை படுத்த தன் சகாக்களோடு களம்மிரங்கியிருக்கின்றனர். இந்த 10 ஆண்டுகளில் மூன்று தேர்தல்களை சந்திக்கப்போகும் பிஎஸ்எம் கட்சி, தனது வெற்றியை நிலை நிறுத்தவும், மக்களுக்காக செயற்படுத்தப்போகும் திட்டங்களையும், அதை செயற்படுத்தப்போகும் முறைகளையும் தயார் செய்திருக்கிறது.

முதல் நாள் சந்திப்பில் இதுவரை பிஎஸ்எம் மேற்கொண்ட நடவடிக்கைகள், எதிர்கொண்ட சவால்கள் குறித்து அதன் துணை தலைவர் அருட்செல்வன் விளக்கினார். 



இரண்டாம் நாள், தொடக்கத்தில் பிஎஸ்எம் கட்சியின் தேசிய பொது செயலாளர் சிவராஜன் ஆறுமுகம், தேசிய செயலவை உறுப்பினர்களான சிவரஞ்சனி மாணிக்கம், நளினி, சைமன், தேசிய இளைஞர் பிரிவு தலைவரான நிக் அஸிஸ் மற்றும் அவரின் சகாவான அர்விந்த் ஆகியோர் தங்கள் திட்டங்களை எழுத்துப்பூர்வமாக முன்வைத்து விளக்கம் கொடுத்தனர். தொடர்ந்து இரண்டாம் அங்கத்தில் பிஎஸ்எம் கட்சியின் தேசிய தலைவர் டாக்டர் ஜெயகுமார் ஒன்றுகூடலை வழிநடத்தினார். முன்னதாக அவரின் உரை எழுத்துப்பூர்வமாக அனைவருக்கும் வழங்கப்பட்டிருந்தது. அது தொடர்பான கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் அது தொடர்பாக ஏற்பட்ட சந்தேகங்களுக்கு அவர் பதிலளித்தார்.  




தொடந்து மதிய உணவுக்குப் பிறகு மூன்றாவது அங்கம் தொடங்கியது.  வந்திருந்த செயற்குழுவினர் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு மூன்று செயற்திட்ட தலைப்புகளை வழங்கி அது தொடர்பாக ஆலோசிக்க பணிக்கப்பட்டது. சுமார் மூன்று மணி நேரம் அது தொடர்பான கலந்துரையாடலை குழுவினர் நடத்தினர். இரவு உணவிற்குப் பிறகு மேற்கொண்ட கலந்துரையாடலின் முடிவுகளை குழுவினர் சமர்பித்தனர். கலந்துரையாடலில் எழுந்த சந்தேகங்களையும் அங்கு அலசி ஆராயப்பட்டது. 

மூன்றாம் நாள் இரண்டு நாட்கள், குழுவினர் மேற்கொண்ட சந்திப்பின் சாரம்சத்தை முன்னிட்டு கலந்துரையாடப்பட்டது. முரண்பட்டும் உடன்பட்டும் கேள்விகள் கேட்கப்பட்டும் விடை காணுப்பட்டும் இப்படியாக முழுமையான ஒரு சந்திப்பினை பிஎஸ்எம் நடத்தியதுடன் அதன் திட்டங்களை செயற்படுத்தவும் தொடங்கிவிட்டது.      
  

Wednesday, January 22, 2020

பிஎஸ்எம் தலைமைத்துவம்

- எங்களை அறிந்து கொள்ளுங்கள்

ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒரு முறை நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டு கட்சி உறுப்பினர்களால் இந்த செயலாக்கக்  குழு தேர்வு செய்யப்படுகிறது.  2019-2021 காலத்திற்கான பிஎஸ்எம் மத்திய குழு உறுப்பினர்கள் பின்வருமாறு:

அருள்செல்வன் 
தேசிய உதவித்  தலைவர் 

           
             டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ் 
தேசிய தலைவர்


பவானி
தேசிய பொதுச் செயலாளர்

சிவராஜன் ஆறுமுகம்
தேசிய பொதுச் செயலாளர்





காத்திகேஸ்
மத்திய செயற்குழு உறுப்பினர்
சோ சூக்  வா 
பொருளாளர்


















சிவரஞ்சனி
மத்திய செயற்குழு உறுப்பினர்

சோங் யீ ஸான்
மத்திய செயற்குழு உறுப்பினர்

சூ சூன் காய்
மத்திய செயற்குழு உறுப்பினர்

நிக் அஸிஸ் அஃபிக்
தேசிய இளைஞர் பிரிவு தலைவர்
வான் ஸாம் சாஹிடி
மத்திய செயற்குழு உறுப்பினர்

மோகன ராணி ராசையா
மத்திய செயற்குழு உறுப்பினர்


















தே யூ சூ
மத்திய செயற்குழு உறுப்பினர்





சரண்ராஜ்
மத்திய செயற்குழு உறுப்பினர்



கோகிலா
மத்திய செயற்குழு உறுப்பினர்



சரஸ்வதி
மத்திய செயற்குழு உறுப்பினர்


Tuesday, January 21, 2020

சோஸ்மா நாடகத்தை உடனே நிறுத்துங்கள்! எஸ். அருட்செல்வன்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு எனும் பெயரில் (எல்.டி.டி.இ) சோஸ்மா சிறைக்கைதிகளான செரம்பன் ஜெய சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன், கடேக் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதன் மற்றும் டிஏபி உறுப்பினர் வி.சுரேஷ்குமார் ஆகியோரின் ஜாமீன் விண்ணப்பங்களை செவிமடுக்க நேற்று காலை நான் அவர்களின் குடும்பங்களுடன் நடைபிணம் போல் ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு நடந்தேன்.
அவர்களின் வழக்குகள் முறையே காலை 9, 11 மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கு விசாரிக்க திட்டமிடப்பட்டது.
நேரம் செல்லச் செல்ல, ஒரு நீதிபதியை அடுத்து மற்றொரு நீதிபதி பேசுவதை கேட்டபோது, இந்த முழு சோஸ்மா விசாரணையும் ஊடகங்களையும் பொதுமக்களையும் மகிழ்விக்கும் ஒரு கேளிகூத்தாக மட்டுமே எனக்குத் தோன்றியது,.
குணசேகரன், சாமிநாதன் மற்றும் சுரேஷ் ஆகியோரின் விண்ணப்பங்களை கேட்ட நீதிபதி முஹம்மது ஜமீல், நீதிபதி அஹ்மத் ஷாஹிர் மற்றும் நீதிபதி சீக்வேரா ஆகிய மூன்று பேரும் ஒரே முடிவுகளுக்கு வந்ததாகத் தெரிகிறது. அதாவது, நீதிபதி மொஹமட் நஸ்லானின் முந்தைய முடிவுக்கு அவர்கள் கட்டுப்பட்டிருக்கிறார்களா என்பதை அவர்கள் அறிய விரும்பினர்.
முந்தைய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அவர்கள் கட்டுப்பட வேண்டியது இல்லை என்பதையும், அந்நீதிமன்றம் தற்போதைய நீதிமன்றத்தின் நிலையில் (status) ஒரே மாதிரியாக இருப்பதையும், சுட்டிக்காட்டினர். மேல்முறையீட்டு நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் போன்ற உயர் நீதிமன்றத்தால் எடுக்கப்பட்ட தீர்ப்பால் மட்டுமே அவர்கள் கட்டுப்படுவார்கள் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதில் சோகமான உண்மை என்னவென்றால், கைதிகளில் சிலர் இன்று விடுவிக்கப்படுவார்கள் என்ற அதிக நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறப்பட்டது. அவர்கள் தங்கள் உடமைகளையும் சிறையில் இருந்து உடனெடுத்துவந்திருந்தனர்.
சோஸ்மா சட்டத்தின் 13வது பிரிவைச் சார்ந்துள்ள சட்டத்தின் கேள்விகளை நீதிமன்றங்கள் மீண்டும் அலசியதால் அந்த நம்பிக்கைகள் சிதைந்து போயின.
கைதிகளின் வழக்கறிஞரான ராம்கர்பால் சிங், நம் அனைவரையும் போலவே சோர்வாக இருந்தார். அவரும் ஒரு நீதிமன்றத்தில் இருந்து இன்னொரு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. தங்கள் அன்புக்குரியவர்களின் விடுதலையைப் பெறுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்று குடும்பங்களுக்கு உறுதியளித்தார். ஆனால் விடுதலைக்கான பாதை சீராக இல்லை என்பது மட்டும் தெரிகிறது.
உயர்நீதிமன்ற முடிவுக்கு கட்டுப்படவில்லையா?
நவம்பர் 29, 2019 அன்று, நீதிபதி மொஹமட் நஸ்லான் மொஹமட் கசாலி கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்றத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்தார். அவர் அன்று, ஜாமீன் கோருவதற்கு சாமிநாதனுக்கு ஒப்புதல் அளித்தார். முன்னதாக, சோஸ்மாவின் 13வது பிரிவு ஜாமீனை பரிசீலிக்க நீதித்துறைக்கு தடை விதித்திருந்தது.
அரசாங்கத்தின் பல்வேறு கிளைகளில் அதிகாரப் பிரிவினையை மீறுவதால் 13வது பிரிவு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று இந்த துணிச்சலான நீதிபதி அறிவித்தார்.
டிசம்பர் 13, 2019 அன்று, அட்டர்னி ஜெனரல் (ஏஜி) தாமி தாமஸ், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்முறையிட வேண்டாம் என்று அட்டர்னி ஜெனரலின் அலுவலகத்திற்கு உத்தரவிட்டதாகக் கூறினார்.
சோஸ்மாவின் கீழ் ஜாமீன் மறுக்கும் பிரிவு 13 அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று ஏஜி கருதுகிறது என்று இது பொருளாகிறது. “சோஸ்மா சட்டத்தை உருவாக்கியவர்களும், 2012 ஆம் ஆண்டு சட்டத்தை இயற்றிய நாடாளுமன்றமும் சில விசயங்களை கருத்தில் கொள்ளவில்லை. நீதிமன்றங்களின் நீதித்துறை செயல்பாடு, பிரிவு 13ஆல் அழிக்கப்படுகிறது எனவும் இதன் விளைவாக, நீதித்துறையின் அதிகாரம் சிதைந்துள்ளது எனவும் தாமி தாமஸ் கூறுகிறார்.
இந்த தீர்ப்பின் காரணமாக ஜாமீன் தானாக வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, தாமி தாமஸ் விளக்கமளித்தார். ஜாமீனை பரிசீலிக்க நீதித்துறைக்கு பரிந்துரை அளிப்பது தானாகவே ஜாமீன் வழங்குவதற்கு அர்த்தம் என்றிமில்லை, ஏனெனில் நீதிபதிகளுக்கு எப்போது அவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் புத்திசாலித்தனம் உள்ளது என்றார்.

குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை ஒரு நபர் நிரபராதி என்ற கொள்கையை மதிக்காத சட்டமாக விளங்கிய ரத்து செய்யப்பட்ட ஐ.எஸ்.ஏ (ISA) போன்றே சோஸ்மா இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நேற்று நீதிமன்றங்களில் நிகழ்ந்த உண்மை மட்டும் ஏமாற்றமளிப்பதாகவே இருக்கிறது. யாங் ஆரிஃப் மொஹமட் நஸ்லான் கசாலி அவர்கள் ஒரு அறிவிப்பை வழங்கியதாலும், ஏஜி மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்பதாலும், பிரிவு 13 அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று ராம்கர்பால் வாதிட்டார்.
ஆனாலும் மூன்று நீதிபதிகளும் அந்த உயர்நீதிமன்ற முடிவிலிருந்தும், ஏ.ஜி.சியின் நிலைப்பாட்டிலிருந்து விலக விரும்புவதாகத் தெரிகிறது. இந்த வழக்கில், அரசு தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு ஆகிய இரண்டும், பிரிவு 13 அரசியலமைப்பிற்கு முரணானது என்று ஒப்புக் கொண்ட போதிலும், தலைமை நீதிபதிகள் ஒப்புக் கொண்டதாகத் தெரியவில்லை.
குணசேகரனுக்கு ஏன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று ராம்கர்பால் சமர்ப்பித்தபோது, ஏஜிசி-யை பிரதிநிதிக்கும் துணை அரசு வக்கீல் மொஹமட் சைபுதீன் ஹாஷிம் முசைமி, குணசேகரனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று மிகவும் கடுமையாக வாதிட்டார். டிபிபி மற்றும் ஏஜி ஆகியவை ஒரே விஷயத்தில் முறன்பாடான நிலையில் உள்ளன என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது எனலாம்.
இதையெல்லாம் பார்த்து, இந்த முழு சோஸ்மா கைது ஒரு கேளிக்கூத்து மற்றும் ஒரு நாடகம் எனவே கருதுகிறேன். இப்போது நாடகம் நீதிமன்றங்களுக்கு சென்றுவிட்டது. ஆரம்பத்தில், இந்த விஷயத்தில் பக்காத்தான் ஹரப்பன் தலைவர்கள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமதுவை சந்தித்த பின்னர், மகாதீர் கைது விவகாரம் குறித்து வருத்தமடைந்து, சட்டத்தில் திருத்தம் செய்ய தீர்மானித்ததாகத் தெரிகிறது.
இப்போது அந்த 12 பேரும் நீண்ட காலம் சிறையில் இருக்க வேண்டும் என்றே தெரிகிறது. உயர்நீதிமன்றத்தின் முடிவுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்று இப்போது தெரிகிறது. ஏஜி மேல்முறையீட்டை தாக்கல் செய்யாதது என்பது இப்போது அதிகம் அர்த்தமில்லை என்றும் தெரிகிறது.
இந்த சனிக்கிழமையன்று அவர்கள் 100 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், 12 சோஸ்மா கைதிகளுக்கும் ஜாமீன் மற்றும் அவர்களின் சுதந்திரம் மறுக்கப்படும் என்பது மட்டும் உறுதி.
பிரிவு 13இல் ஏஜி மற்றும் அவரது டிபிபி தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்று பிஎஸ்எம் கேட்டுக்கொள்கிறது.
சோஸ்மா சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் இந்த நாடகத்தையும் கேளிக்கூத்தையும் முற்றுமாக நிறுத்த ஹராப்பன் அரசாங்கத்திற்கு பிஎஸ்எம் கேட்டுக்கொள்கிறது. இது அவர்களின் கொள்கை அறிக்கையிலும் இருந்த ஒரு அம்சமானதால் கம்பசித்திரம் ஒன்றும் கிடையாதே.
2020 மார்ச்சில் நடைபெரும் அடுத்த நாடாளுமன்றத்தில் ஹரப்பன் இந்த கொடூரமான சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லையேல், முன்னாள் பாரிசான் ஆட்சியின் போது விசாரணையின்றி தடுத்து வைத்த சட்டங்களை ஹராப்பன் அரசாங்கமும் மகிழ்ச்சியுடன் தொடர்கிறது என்று தான் விளங்கிக் கொள்ள வேண்டும்.
எஸ். அருட்செல்வன் மலேசிய சோசலிச கட்சியின் துணைத் தலைவர். இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள் எழுத்தாளர் / பங்களிப்பாளரின் கருத்துக்கள் மட்டுமே இன்றி மலேசியாகினியின் கருத்துக்களை குறிப்பது இல்லை.

- நன்றி மலேசியா கினி 

சுற்றுச்சூழல் சீர்கேடு! அவசரநிலை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பிரச்சாரத்தை தொடங்கியது பிஎஸ்எம்!




காப்பரேட் நிறுவனங்களின் அலட்சிய போக்கினாலும், நாடு முன்னேற்றமடைவதற்காக மேற்கொள்ளப்படும் இயற்கை வளங்கள்  அழிப்பினாலும், நமது சுற்றுச்சூழல் பெரும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதுடன் , இதற்கு  ஒரு தீர்வை எட்ட முடியாத நிலைக்கு நமது நாடு தள்ளப்பட்டிருக்கிறது. இயற்கைக்கு எதிராக  தொடரும் இந்த அவல நிலைக்கு  தேசிய அளவிலான பிரச்சாரத்தை பிஎஸ்எம் நேற்று அதைகாரப்பூர்வமாக தொடங்கியது. இப்பிரசச்சரத்தை  பிஎஸ்எம் கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் ஜெயக்குமார் தொடக்கி வைத்தார்.

ஏன் இந்த பிரச்சாரத்தை பிஎஸ்எம் மேற்கொள்கிறது?

1. வரையறையற்ற காட்டழிப்பு
2. தொழிற்துறை முன்னேற்றத்திற்காக முன்னெடுக்கப்படும் நிபந்தனையற்ற அரசு கொள்கைகள்
3. எல்லையற்ற நாட்டின்  வளர்ச்சிக்கு பலியாக்கும் இயற்கை வளங்கள். உதாரணத்திற்கு கடலில் மண்ணைக்கொட்டி மூடி அதன்மீது எழுப்பப்படும் கட்டிடங்கள். எடுத்துக்காட்டுக்கு பினாங்கு மாநிலம்.
4. இயற்கை சூழலை மறு வளர்ச்சிக்கு உட்படுத்தாமல் மலேசியா தோல்வியடைந்துள்ளது.  
மேற்குறிப்பிட்டிருக்கும் 4 விவகாரங்களை மையப்படுத்தி பிஎஸ்எம் இந்தப் பிரச்சாரத்தை நாடு தழுவிய நிலையில் முன்னெடுத்துள்ளது. 




இயற்கை சார்ந்த அமைச்சின் பார்வைக்கு இவ்விவகாரங்களை கொண்டு செல்வதுடன், இணைய தளங்கள், சமூக ஊடகங்கள், ஊடகங்கத்துறை,   இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ இயக்கங்களுடன் இணைந்து மாபெரும் சாலை  நடவடிக்கை பிரச்சாரங்களை செய்வதற்கு பிஎஸ்எம் திட்டமிட்டிருக்கிறது என்பதனை இப்பிரச்சார தொடக்க விழாவில் பேசிய பிஎஸ்எம் சுற்றுச்சூழல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சரண்ராஜ் தெரிவித்தார்.
குறிப்பாக எதிர்வரும் ‘புவி தினத்தில்’  இயற்கைக்கு எதிராக நடத்தப்படும் சீர்கேட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக,  பொதுமக்களும் தன்னார்வலர்களும் கலந்துகொள்ள பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுக்கொண்டிருப்பதை இந்நிகழ்ச்சியில்  நினைவுறுத்தப்பட்டது.



தொழில்துறை புரட்சியின் காரணமாக அதிகரித்திருக்கும் கிரீன்ஹவுஸ் வாயுக்களைக் குறைக்க விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பக்காத்தான் ஹரப்பன் தலைமையிலான அரசாங்கத்தை பிஎஸ்எம் கேட்டுக் கொண்டது. கிரீன்ஹவுஸ் வாயு என்பது வளிமண்டலத்தில் உள்ள ஒரு வாயு ஆகும், இது வெப்ப அகச்சிவப்பு வரம்பிற்குள் கதிரியக்க சக்தியை உறிஞ்சி வெளியேற்றும். இப்பேரழிவு தாக்கத்தைத் தவிர்ப்பதற்காகவும் கிரீன்ஹவுஸ் வாயுக்களைக் குறைக்கவும்  விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பக்காத்தான் ஹரப்பன் தலைமையிலான அரசாங்கத்தை பிஎஸ்எம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டது. கார்பன் நடுநிலை தேசமாக மாறுவதன் மூலம் மலேசியா வளர்ந்த நாடு என்கிற பாசாங்குத்தனமான முகத்தை மட்டுமே காட்ட முடியும்; மேலும்  வளர்ந்த நாட்டுக்கு இது ஒரு முன்மாதிரி இல்லை என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பிஎஸ்எம் கூறியது.  சிலாங்கூர் சீன மாநாட்டு மண்டபத்தில் நடந்த இந்த பிரச்சார அறிமுக நிகழ்வில்   அரசு சாரா இயக்கங்களும்  இயற்கை ஆர்வலர்களும் கலந்துகொண்டு ஆதரவு கொடுத்தனர்.

Tuesday, January 14, 2020

உழவர்களை வாழ வைப்போம் ! பிஎஸ்எம் பொங்கல் வாழ்த்து ...





லேசியா வாழ் அனைவருக்கும் மலேசிய சோசலிச கட்சியின் பொங்கல் வாழ்த்துகள். பொங்கல் என்பது வெறும் ஒரு கலாச்சாரா நிகழ்ச்சியாக பார்க்கக்கூடாது. நமது முன்னோர்கள் பொங்கல் கொண்டடியதற்கு   அவர்களின் அன்றாட வாழ்க்கை மற்றும்  பொருளாதாரத்திற்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. அதன் பின்னணி மிக முக்கியமானது. ஆனால் இன்றைய சூழலில் நம் நாட்டில் பொங்கல் எனும் திருநாளை ஒரு கலை  மற்றும் கலாசார நிகழ்ச்சியாகத்தான் பார்க்கிறோம். அதன் உண்மையான நோக்கமானது மறைக்கப்பட்டே வருகிறது.


இந்த நன்னாளில் பிஎஸ்எம் பொங்கல் குறித்த சில விஷயங்களை நினைவுபடுத்த விரும்புகிறது. முக்கியமாக உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை உழவர்களுக்கும்  கால்நடை வளர்ப்பவர்களுக்கும்  முதன்மை திருவிழாவாக இருக்கிறது.  ஆனால் மலேசியாவில் உணவு உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் நிலை எப்படி இருக்கிறது என்பதை யோசிக்க வேண்டிஇருக்கிறது.

கடந்த ஆண்டு விவசாயம், விவசாயம் சார்ந்த துணையமைச்சர் சிம் சீ சின் ஓர் உரையில் தற்போது  32 மில்லியன் ஜனத்தொகையை கொண்டிருக்கும் மலேசியா பெரிய அளவில், விவசாயம் சார்ந்த  உணவு பொருட்களை இறக்குமதி செய்கிறது என்று கூறியிருந்தார். அதாவது நமது சொந்த நாட்டு மக்களுக்கு தேவையான உணவை நமது நாட்டிலேயே தயாரிக்க முடியாத சூழ்நிலையை அவரின் உரை   தெளிவாக உணர்த்தியிருந்தது. 52 பில்லியன் ரிங்கிட்டுக்கு அயல்நாட்டிலிருந்து நமக்கான உணவு பொருட்கள்  தருவிக்கப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமற்ற விஷயம் என்று சொல்வதைக் காட்டிலும் இது ஒரு ஆபத்தான விஷயமாகத்தான்   பிஎஸ்எம் பார்க்கிறது. இப்படி சொல்வதற்கான  காரணம்  1996/97 ஆம் ஆண்டுகளில் ஆசியா ரீதியில் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த போது அடிப்படை உணவிலிருந்து எல்லா பொருட்களுமே விலை ஏற்றம் கண்டதை  மலேசிய மக்கள் அனைவருமே சந்தித்து கடந்து வந்திருக்கிறோம்.


எனவே நாம் விவசாயத்தை தொடர்ந்து புறம் தள்ளினால் கூடுதலாக பிற நாடுகளிலிருந்து பெறப்படும் உணவினால் நமது நாட்டு மக்கள் பாதிப்படைவார்கள் என்பது சாத்தியமான ஒன்று. அரசாங்கத்திட்டத்தில் சில தவறுகள் நடந்திருக்கிறது. 1970-ஆம் ஆண்டு விவசாயம் செய்வதற்கும் உணவு உற்பத்தி செய்வதற்குமான திட்டத்தை புறக்கணித்துவிட்டு, லாப நோக்கத்திற்காகவும் ஏற்றுமதிக்காகவும் செம்பனை, ரப்பர் உள்ளிட்ட  நடவுகளை செய்வதற்கு நிறைய நிலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அக்காலக்கட்டங்களில் செம்பனை நடவு செய்வது முதன்மையாக இருந்தது. மேலும் பெருநிறுவனங்கள் இந்த வணிகத்தில்  பெரிய அளவில்  ஈடுபட்டன. மக்களுக்கான உணவை தயாரிக்கக்கூடிய நிலங்கள் எல்லாம் செம்பனை எண்ணெய் செய்வதற்கான நிலங்களாக மாற்றப்பட்டன.

அப்போதே தொடங்கப்பட்ட அத்திடத்தின் தீவிரம் இன்று பூதாகரமாக உருமாறிவருவதை பார்க்க முடிகிறது. மீண்டு மீண்டும் அரசாங்கம் விவசாயத்தை புறக்கணிப்பது மிகப்பெரிய தவறாகும். பிஎஸ்எம் இதை வன்மையாக எதிர்க்கிறது.

பொங்கல் பண்டிகையான இந்த நாளில் அரசாங்கம் இப்பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மிக சமீபத்திய கண்ணோட்டத்தில் நிறைய விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன.

உதாரணத்திற்கு பேராக் மாநிலத்திலுள்ள சில விவசாய நிலங்கள் தனியார் மற்றும் அரசாங்கம் சார்ந்த நிறுவங்களால் கைப்பற்றப்பட்டு விவசாய மக்களை விரட்டியடித்த சம்பவங்களை கண்டித்து  பிஎஸ்எம்    போராட்டதில் ஈடுபட்டது.

விவசாயிகளுக்கு இம்மாதிரியான அநீதிகள் நடக்கக்கூடாது. காரணம்  இவர்கள் நாட்டுக்காகவும்  நாட்டு மக்களுக்காகவும் உணவு உற்பத்தி செய்யும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அரசு ஆதரித்து நிலங்களை வழங்க வேண்டும் மாறாக  இவர்களை விரட்டியத்து நிலங்களை பிடுங்குவதில் என்ன நியாயம் இருக்கிறது? 
கடந்த மாதம் கேமரன் மலையில் நடந்த இந்திய விவசாயிகளின் நில பிரச்சனை நாட்டையே பரபரப்பாக்கியது. ஒரு நிரந்தர நிலத்தை வழங்காமல் அவர்கள் விவசாயம் செய்திருந்த பயிர்களை அழித்து மிகவும் கடுமையாக நடந்துகொண்டது அதிர்ச்சியாக இருந்தது. விவசாய மக்களை இப்படி கடுமையாக நசுக்குவதில் என்ன நியாயத்தை கூற முடியும்.

அதுமட்டுமல்லாம் நாட்டில் முக்கியமாக பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் இன்னொரு விஷயம் கால்நடை வளப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல். பல தலைமுறைகளாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும்  தோட்ட தொழிலார்களுக்கு  அரசாங்கத்தை சார்ந்த நிறுவனமான  சைம் டர்பி நிறுவனம் தற்போது பெரிய நெருக்குதலை கொடுத்துக் கொண்டிருக்கிறது. கால்நடைகளை தோட்டத்தில் வளர்க்க கூடாது என்று அறிவித்திருப்பதுடன், அத்தொழிலை முழுமையாக தொழிலார்கள் கைவிடக்கூடிய நெருக்கடியை அந்நிறுவனம் ஏற்படுத்தி வருகிறது.
இம்மாதிரியான விஷயங்கள் பக்கத்தான் அரசாங்கத்தின் மீது எதிர்மறையான பார்வையை ஏற்படுத்துகிறது.

ஒரு நேரத்தில் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு  விவசாய மக்களை விரட்டியடிப்பதும், கால்நடை வளர்பவர்களை வாழவிடாமல் துரத்துவதும் ரொம்பவும் விசித்திரமாக இருக்கிறது. உழவர்கள் நல்லவிதமாக இருந்தால்தான் நாட்டு மக்களுக்கு நல்ல உணவு கிடைக்கும். எனவே விவசாய பிரச்சனையை நாட்டின் அனைத்து மக்களும் தனது சொந்த பிரச்சனையாக கருதி விவசாய மக்களுக்காக ஈடுபடும் போராட்ட்ங்களில் கைகொடுக்க வேண்டும் என பிஎஸ்எம் முக்கியமாக கேட்டுக் கொள்கிறது. 
இந்த நல்ல நாளில் பொங்கலை ஒரு கலாச்சார விழாவாக மட்டும்  பார்க்காமல் உழவு செய்யும் விவசாயிகளின் பிரச்சனைகளையும் சிந்தித்து விழிப்புணர்வுடன் இருப்பதுடன் ஒவ்வொருவரும் இதற்காக தங்கள் குரலை எழுப்ப வேண்டும் என பி எஸ் எம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.  

சிவராஜன் ஆறுமுகம்
பி எஸ் எம் தேசிய பொதுச்செயலாளர்.  


களப்பரியாத போராளி, தோழர் சாந்தா காலமானார் (1975 - 2025)

சமூக ஆர்வாலர், ஓர் ஆசிரியர்,  முற்போக்கான குரல் மற்றும் எங்கள் ஜொகூர் கிளையின் முக்கிய தலைவருமான தோழர் சாந்தா லெட்சுமி பெருமாள் அவர்களின் உய...