Monday, January 27, 2020

10 ஆண்டுகள் முன்னோக்கிய செயற்பாடை; திட்டமிட்டது பிஎஸ்எம்



ரு கட்சிக்கு அதன் செயற்பாடுகள், தார்மீக கொள்கைகள் மட்டுமல்ல தூர நோக்கு சிந்தனையும் மிக முக்கியம். கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென ஒரு கொள்கையை நிர்ணயித்து அதிலிருந்து சற்றும் விலகாது தொடர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறது மலேசிய சோசலிச கட்சி. மக்கள் பிரச்சனைகளுக்கு முதன்மை நிலையில் முக்கியதுவம் கொடுத்து அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்வரை அவர்களின் கையை விடாமல் பற்றிக்கொண்டு போராடியும் வருகிறது. இந்நிலையில் தனது கட்சியின் அடுத்தக் கட்ட நகர்வு எப்படி இருக்க வேண்டும் என்ற 10 ஆண்டுகள் முன்னோக்கிய தூர நோக்கு சிந்தனையை தனது செயற்குழுவோடு வரைந்திருக்கிறது பிஎஸ்எம்.

கடந்த ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரையில் மூன்று நாட்கள் ஈப்போ துரோலாவில் ஒன்று கூடிய செயற்குழுவினர், நீண்ட கலந்துரையாடல் மற்றும் விவாதத்திற்குப் பிறகு மிக முக்கியமான ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயற்முறை படுத்த தன் சகாக்களோடு களம்மிரங்கியிருக்கின்றனர். இந்த 10 ஆண்டுகளில் மூன்று தேர்தல்களை சந்திக்கப்போகும் பிஎஸ்எம் கட்சி, தனது வெற்றியை நிலை நிறுத்தவும், மக்களுக்காக செயற்படுத்தப்போகும் திட்டங்களையும், அதை செயற்படுத்தப்போகும் முறைகளையும் தயார் செய்திருக்கிறது.

முதல் நாள் சந்திப்பில் இதுவரை பிஎஸ்எம் மேற்கொண்ட நடவடிக்கைகள், எதிர்கொண்ட சவால்கள் குறித்து அதன் துணை தலைவர் அருட்செல்வன் விளக்கினார். 



இரண்டாம் நாள், தொடக்கத்தில் பிஎஸ்எம் கட்சியின் தேசிய பொது செயலாளர் சிவராஜன் ஆறுமுகம், தேசிய செயலவை உறுப்பினர்களான சிவரஞ்சனி மாணிக்கம், நளினி, சைமன், தேசிய இளைஞர் பிரிவு தலைவரான நிக் அஸிஸ் மற்றும் அவரின் சகாவான அர்விந்த் ஆகியோர் தங்கள் திட்டங்களை எழுத்துப்பூர்வமாக முன்வைத்து விளக்கம் கொடுத்தனர். தொடர்ந்து இரண்டாம் அங்கத்தில் பிஎஸ்எம் கட்சியின் தேசிய தலைவர் டாக்டர் ஜெயகுமார் ஒன்றுகூடலை வழிநடத்தினார். முன்னதாக அவரின் உரை எழுத்துப்பூர்வமாக அனைவருக்கும் வழங்கப்பட்டிருந்தது. அது தொடர்பான கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் அது தொடர்பாக ஏற்பட்ட சந்தேகங்களுக்கு அவர் பதிலளித்தார்.  




தொடந்து மதிய உணவுக்குப் பிறகு மூன்றாவது அங்கம் தொடங்கியது.  வந்திருந்த செயற்குழுவினர் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு மூன்று செயற்திட்ட தலைப்புகளை வழங்கி அது தொடர்பாக ஆலோசிக்க பணிக்கப்பட்டது. சுமார் மூன்று மணி நேரம் அது தொடர்பான கலந்துரையாடலை குழுவினர் நடத்தினர். இரவு உணவிற்குப் பிறகு மேற்கொண்ட கலந்துரையாடலின் முடிவுகளை குழுவினர் சமர்பித்தனர். கலந்துரையாடலில் எழுந்த சந்தேகங்களையும் அங்கு அலசி ஆராயப்பட்டது. 

மூன்றாம் நாள் இரண்டு நாட்கள், குழுவினர் மேற்கொண்ட சந்திப்பின் சாரம்சத்தை முன்னிட்டு கலந்துரையாடப்பட்டது. முரண்பட்டும் உடன்பட்டும் கேள்விகள் கேட்கப்பட்டும் விடை காணுப்பட்டும் இப்படியாக முழுமையான ஒரு சந்திப்பினை பிஎஸ்எம் நடத்தியதுடன் அதன் திட்டங்களை செயற்படுத்தவும் தொடங்கிவிட்டது.      
  

No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...