Tuesday, January 21, 2020

சுற்றுச்சூழல் சீர்கேடு! அவசரநிலை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பிரச்சாரத்தை தொடங்கியது பிஎஸ்எம்!




காப்பரேட் நிறுவனங்களின் அலட்சிய போக்கினாலும், நாடு முன்னேற்றமடைவதற்காக மேற்கொள்ளப்படும் இயற்கை வளங்கள்  அழிப்பினாலும், நமது சுற்றுச்சூழல் பெரும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதுடன் , இதற்கு  ஒரு தீர்வை எட்ட முடியாத நிலைக்கு நமது நாடு தள்ளப்பட்டிருக்கிறது. இயற்கைக்கு எதிராக  தொடரும் இந்த அவல நிலைக்கு  தேசிய அளவிலான பிரச்சாரத்தை பிஎஸ்எம் நேற்று அதைகாரப்பூர்வமாக தொடங்கியது. இப்பிரசச்சரத்தை  பிஎஸ்எம் கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் ஜெயக்குமார் தொடக்கி வைத்தார்.

ஏன் இந்த பிரச்சாரத்தை பிஎஸ்எம் மேற்கொள்கிறது?

1. வரையறையற்ற காட்டழிப்பு
2. தொழிற்துறை முன்னேற்றத்திற்காக முன்னெடுக்கப்படும் நிபந்தனையற்ற அரசு கொள்கைகள்
3. எல்லையற்ற நாட்டின்  வளர்ச்சிக்கு பலியாக்கும் இயற்கை வளங்கள். உதாரணத்திற்கு கடலில் மண்ணைக்கொட்டி மூடி அதன்மீது எழுப்பப்படும் கட்டிடங்கள். எடுத்துக்காட்டுக்கு பினாங்கு மாநிலம்.
4. இயற்கை சூழலை மறு வளர்ச்சிக்கு உட்படுத்தாமல் மலேசியா தோல்வியடைந்துள்ளது.  
மேற்குறிப்பிட்டிருக்கும் 4 விவகாரங்களை மையப்படுத்தி பிஎஸ்எம் இந்தப் பிரச்சாரத்தை நாடு தழுவிய நிலையில் முன்னெடுத்துள்ளது. 




இயற்கை சார்ந்த அமைச்சின் பார்வைக்கு இவ்விவகாரங்களை கொண்டு செல்வதுடன், இணைய தளங்கள், சமூக ஊடகங்கள், ஊடகங்கத்துறை,   இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ இயக்கங்களுடன் இணைந்து மாபெரும் சாலை  நடவடிக்கை பிரச்சாரங்களை செய்வதற்கு பிஎஸ்எம் திட்டமிட்டிருக்கிறது என்பதனை இப்பிரச்சார தொடக்க விழாவில் பேசிய பிஎஸ்எம் சுற்றுச்சூழல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சரண்ராஜ் தெரிவித்தார்.
குறிப்பாக எதிர்வரும் ‘புவி தினத்தில்’  இயற்கைக்கு எதிராக நடத்தப்படும் சீர்கேட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக,  பொதுமக்களும் தன்னார்வலர்களும் கலந்துகொள்ள பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுக்கொண்டிருப்பதை இந்நிகழ்ச்சியில்  நினைவுறுத்தப்பட்டது.



தொழில்துறை புரட்சியின் காரணமாக அதிகரித்திருக்கும் கிரீன்ஹவுஸ் வாயுக்களைக் குறைக்க விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பக்காத்தான் ஹரப்பன் தலைமையிலான அரசாங்கத்தை பிஎஸ்எம் கேட்டுக் கொண்டது. கிரீன்ஹவுஸ் வாயு என்பது வளிமண்டலத்தில் உள்ள ஒரு வாயு ஆகும், இது வெப்ப அகச்சிவப்பு வரம்பிற்குள் கதிரியக்க சக்தியை உறிஞ்சி வெளியேற்றும். இப்பேரழிவு தாக்கத்தைத் தவிர்ப்பதற்காகவும் கிரீன்ஹவுஸ் வாயுக்களைக் குறைக்கவும்  விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பக்காத்தான் ஹரப்பன் தலைமையிலான அரசாங்கத்தை பிஎஸ்எம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டது. கார்பன் நடுநிலை தேசமாக மாறுவதன் மூலம் மலேசியா வளர்ந்த நாடு என்கிற பாசாங்குத்தனமான முகத்தை மட்டுமே காட்ட முடியும்; மேலும்  வளர்ந்த நாட்டுக்கு இது ஒரு முன்மாதிரி இல்லை என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பிஎஸ்எம் கூறியது.  சிலாங்கூர் சீன மாநாட்டு மண்டபத்தில் நடந்த இந்த பிரச்சார அறிமுக நிகழ்வில்   அரசு சாரா இயக்கங்களும்  இயற்கை ஆர்வலர்களும் கலந்துகொண்டு ஆதரவு கொடுத்தனர்.

No comments:

Post a Comment

தோழர் அருளின் கைதும் விடுதலையும்

கோலாலம்பூர் : மலேசிய சோசலிசக் கட்சியின் (PSM) துணைத் தலைவர் எஸ் . அருட்செல்வன்   நேற்று மாலை 6 மணிக்கு டாங் வாங்கி போலீஸ் தலைமை...