ஷா ஆலாம்.ஜன.30-
மூன்று தலைமுறையாக
தங்களை வாழ்வைத்து வரும் தங்கள் மாட்டுப் பண்ணையை இடித்துவிடாதீர்கள் என்ற கோரிக்கையை
முன்வைத்து ஷா ஆலாம் அரசாங்க செயலகத்தின் முன் ஒன்றுக்கூடினர் கிள்ளான் அம்பாங் போட்டானிக்
பகுதியில் மாட்டுப் பண்ணை வைத்திருக்கும் பண்ணையாளர்கள்.
மாடு வளர்ப்பையே நம்பி
வாழ்ந்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு இடையூர் கொடுக்க வேண்டாம். குறிப்பாக கிள்ளான்
மாவட்ட நில அலுவலகம் எங்களை வெளியேற்றுவதிலே குறியாக இருந்து வருகிறது. சிலாங்கூர்
மந்திரி பெசாரின் அலுவலகம் இடம் மாற்றம் குறித்து எந்தவொரு இறுதிக்கட்ட முடிவையும்
எடுக்காத நிலையில் மாவட்ட அலுவலகத்தின் நடவடிக்கை அத்துமீறுவது குறித்து அதிருப்தியடைந்த
பண்ணையாளர்கள் நேற்று காலை 11.30 மணியளவில் பதாதையுடன் ஒன்றுத் திரண்டனர்.
பி.எஸ்.எம் கட்சியின்
உதவியோடு அங்குத் திரண்ட 20 க்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் அம்பாங் போட்டானிக் பகுதியில்
( முன்பு ஹைலண்ட்ஸ் தோட்டம் ) கடந்த 3 தலைமுறைகளாக இங்கு மாடு வளர்த்து வரும் தேவேந்திரன்
ஆறுமுகம் என்பவர் இப்பகுதியில் ‘சுசு ரவி’ என்றால் அனைவருக்கும் நன்கு பரீட்சியமானவர்.
இவரின் பண்ணை இருக்கும் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று நெருக்குதல் கொடுக்கப்பட்டுக்
கொண்டே இருப்பதுடன் பண்ணையை உடைக்கும் திட்டம் ஏறக்குறைய உறுதிப்படுத்தபட்டு விட்டதாக
நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிடுவதால், இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்ற அடிப்படையில்
இந்த அமைதி மறியலுடன் கோரிக்கை மனு கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியதாக பி.எஸ்.எம்
கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் சிவரஞ்ஜனி மாணிக்கம் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
![]() |
மாநில மந்திரி பெசார் பிரதிநிதியுடன் சிவரஞ்சனி |
மாற்றுத் திறனாளியான
தமக்கு மாட்டுப் பண்ணையின் வழி தான் வருமானம் என குறிப்பிட்ட தேவேந்திரன், தம்முடைய
160 மாடுகளை நம்பிதான் தனது வாழ்க்கை நடப்பதாக தெரிவித்த அவர், பால் விநியோகம், வியாபாரம்
அனைத்தும் கிள்ளான், புக்கிட் திங்கி வட்டாரங்களை சுற்றியே இருப்பதால் அவர்கள் காட்டும்
புதிய இடத்திற்கு சென்றால் எங்களின் அன்றாட வருமானம் நிச்சயம் பாதிப்படையும் என குறிப்பிட்டார்.
மாநில மந்திரி பெசார்
டத்தோஸ்ரீ அமிருடின் சாரியை சந்திக்க முடியாத பட்சத்தில் அவரின் பிரதிநிதியாக ஹாஜி
போர்ஹான் அமான் ஷா பண்னையாளர்கள் வழங்கிய கோரிக்கையை பெற்றுக் கொண்டார்.
அங்கு ஒன்றுத் திரண்டிருந்த
பண்ணையாளர்கள் சுமார் இரண்டு மணி நேரம் பதாதை தாங்கி நின்றுக் கொண்டிருந்தனர். சம்பந்தமே
இல்லாத ஒருவர் பிரதிநிதி என்ற பெயரில் வந்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டதில் தங்களுக்கு
திருப்தி இல்லையென பி.எஸ் எம் .கட்சியின் தலைமையக பணியாளர் யோகி தெரிவித்தார்.
செய்தியாளர் : பி.ஆர்.ஜெயசீலன்
பத்திரிகை செய்தி : (மக்கள் ஓசை
No comments:
Post a Comment