Tuesday, March 2, 2021

புக்கிட் பெருந்துங் தோட்ட தொழிலாளர்களுக்காக மனுவில் கையெழுத்திடவும்


லாடாங் புக்கிட் பெருந்துதோங் தோட்ட தொழிலாளர்களுக்கு வாக்களித்தப்படி வீட்டை கட்டி கொடுக்க சொல்லுங்கள்!

- சிலாங்கூர் அரசை வலியுறுத்துகின்றனர்.

1991 இல் லாடாங் புக்கிட் பெருந்துங் தோட்ட தொழிலாளர்களுக்கு சொந்த வீடு கட்டி தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு பின்னர் நில உரிமையாளர்களால் அம்மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அதாவது ரோஸ்பெல் எண்டர்பிரைஸ் எனும் நிறுவனம் அவர்களுக்கு வீடு கட்டி தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுத்துவிட்டது.

 லாடாங் புக்கிட் பெருந்துங் குடியிருப்புவாசிகள் அந்த தோட்டத்தில் வேலைசெய்த முன்னாள் தொழிலாளர்களாவர்.  தற்போது லாடாங் புக்கிட் பெருந்தோங்கின் மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்திற்காக அவர்களை வெளியேற்ற மேம்பாட்டாளர்கள் முயற்சித்தனர். 1991 இல் 54 தோட்ட தொழிலாளர்களை தோட்டத்தை விட்டு வெளியேற்றும் முயற்சியில் அவர்களுக்கு தரை வீடு கட்டி தரப்படும் என்று வாக்களிக்கப்பட்டது. பின்னர் தொழிலாளர்கள் 1999 இல் வீடு விற்பனை மற்றும் வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வீட்டிற்கான வைப்புத்தொகை பணத்தையும் செலுத்தியுள்ளனர்.




இருப்பினும் லடாங் புக்கிட் பெருந்தோங் தோட்ட தொழிலாளர்களை  ரோஸ்பெல் எண்டர்பிரைஸ் என்ற மேம்பாட்டு நிறுவனம் ஏமாற்றிவிட்டது. எப்படி என்றால், மேம்பாட்டுக்காக தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றிய வீட்டு நிலங்கள் இன்றும் விவசாய நிலங்களாக உள்ளன. 1992 இல் நில நிபந்தனையை மாற்ற சிலாங்கூர் அரசு ஒப்புதல் அளித்திருந்தாலும், ரோஸ்பெல் எண்டர்பிரைஸ் மாநில நில அலுவலகத்தில் நில மானியத்தை சமர்ப்பிக்கவில்லை.

 

1992 முதல் ரோஸ்பெல் எண்டர்பிரைஸ் விவசாய நிலங்களுக்கான வரி தொகை RM3,189 மட்டுமே செலுத்தி வந்துள்ளது. மேம்பாட்டு கட்டுமான நிலமாக மாற்றப்பட்டிருந்தால்  RM197,000 நில வரி செலுத்தியிருக்க வேண்டும். இதனால் சிலாங்கூர் மாநில அரசு நில வரி வருவாயில் 5 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை அடைந்துள்ளது.

 

"நாங்கள் எந்த சொந்த வீடும் இல்லாமல் இங்கு வாழ்கிறோம். பறவைகளுக்கும் கூட வாழ ஒரு இடம் உண்டு. ஆனால் இந்த தோட்ட தொழிலாளர்களுக்கு  இன்னும் தலைக்கு மேல் ஒரு கூரை கூட இல்லைஎன்று லடாங் புக்கிட் பெருந்துங் முன்னாள் ஊழியர் தமிழ்செல்வன் கூறினார். "எங்கள் விஷயத்தில், மக்கள் ஏமாற்றப்பட்டதோடு மட்டுமல்லாமல், அரசாங்கமும் ஏமாற்றப்பட்டுள்ளது என்றார் அவர்.

எனவே, லடாங் புக்கிட் பெருந்துங் தோட்டத் தொழிலாளர்கள் சிலாங்கூர் மாநில அரசிடம் தேசிய நில சட்டதில் உள்ள விதிமுறைகளைப் பயன்படுத்தி ரோஸ்பெல் எண்டர்பிரைஸ் நிறுவனத்திடமிருந்து நிலத்தை கையகப்படுத்தி மூன்று சகாப்தங்களாக காத்திருக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு கட்டி கொடுக்குமாறு அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

லாடாங் புக்கிட் பெருந்தோங் தோட்ட தொழிலாளர்கள்  குறைந்த வருமானம் கொண்டவர்களாகவும் மூன்று தலைமுறைகளாக அதே தோட்டத்தில் பணிபுரிபவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் தங்களுக்கு வரவேண்டிய தரை வீட்டை மட்டுமே கோருகின்றனர்.

 30 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்கு வீடு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதிலிருந்து  சொந்த வீடு பெற காத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் வீடு உறுதி அளிக்கப்பட்ட 54 முன்னாள் தோட்டதொழிலாளர்களில் 15 பேர் இப்போது இறந்துவிட்டனர். இன்னும் எவ்வளவு காலம் காத்திருப்பது? முன்னாள் லாடாங் புக்கிட் பெருந்தோங் தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த வீடுகளுக்காகக் காத்திருக்கும் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நிலத்தை கையகப்படுத்தவும், வீடுகளை கட்டித்தரவும் சிலாங்கூர் மாநில அரசை வலியுறுத்த இணைய வழி மனு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

முன்னாள் புக்கிட் பெருந்துங் தோட்ட தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்திற்கு, பொதுமக்களும் ஆதரவளிக்க இந்த மனுவில் கையெழுத்திடவும்..

http://chng.it/5PPdb6tCnq 

 

No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...