Friday, March 12, 2021

இனி காத்திருக்க வேண்டாம், இப்போதே செயல்படுங்கள்!

உலக பெண்கள் தினத்திற்கான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து..



பெரிகாத்தான் நேஷனல் (பி.என்) ஒரு அரசாங்கம் உருவாகி ஒரு வருடம் ஆகிறது. அவர்களின் நிர்வாகத்தின் கீழ், பல திறமையற்ற அமைச்சகங்கள்,  பல பிரச்சினைகளை நம்மாள் காண முடிகிறது.  குறிப்பாக பாலினம் முதலியவற்றில் போதுமான கொள்கைகளையும் அமலாக்கத்தையும் இந்த அமைச்சு வழங்கத் தவறிவிட்டன. சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்து, மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) என்ன சொல்ல விரும்புகிறது என்றால் இனி காத்திருக்க வேண்டாம், இப்போது செயல்படுங்கள்!

பின்வரும் பரிந்துரைகளை நாங்கள் ன (பிஎஸ்எம்) பட்டியலிட்டுள்ளோம்:

பாலியல் வன்கொடுமைச்/வன்முறைச் சட்டமியற்றுக

பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் அல்லது வன்முறைகளை அறிகுறிகளைக் கொண்டு: வாய்மொழியாகவோ, கண் அசைவுகள் ரீதியாகவோ, உடல் மற்றும் சைகைகள் மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ, மின்னணு முறையில்வோ தொடர்பு கொள்வதற்கான விழிப்புணர்வின் அடிப்படையில் சமூகத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நடைமுறையில் பெண்கள் மற்றும் சிறுபான்மை பாலினரைப் பாதுகாக்க வகை செய்யும் சட்டங்களும் அரசு கொள்கைகளும் போதுமான தீர்வைத் தருவதாக இல்லை. தற்போதைய சூழலில், அமலில் முன்னேற்பாட்டு அம்சமாக இருக்கும் வேலை நியமனச் சட்டம் உள்ளிட்ட சட்ட பிரிவுகள் ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்படுவதோடு பெண்கள் மற்றும் பிற சிறுபான்மை குழுக்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலையும் உருவாக்கத் தவறிவிட்டது.  ஆகையால், பாலின உணர்திறன் பயிற்சிகள் வழங்கப்படுதல் போன்ற ஆற்றல் மிக்க அமலாக்க நடவடிக்கைகள் முறையாக செயல்படுத்தப்படுவதன் வழி சமூக வெளியில் ஆணாதிக்க கட்டமைப்பை அடியோடு களைய பெரும் பங்காற்றும். இப்பெரும் முயற்சியின் தாக்கத்தை ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற இருசாரார் மத்தியிலும் உறுதி செய்வதற்கு அனைத்து துறைசார்ந்த அதிகாரிகளுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் மருத்துவ பயிற்சியாளர்களுக்கும் அதிக அளவில் அளிக்கப்பட வேண்டியது அவசியம். ஆதிக்கப் பிறிவினர்களாக தங்களை அடயாளப்படுத்திக் கொள்ளும் தரப்புகளின் கைகளில் நிலைத்திருக்கும் அதிகாரத்தையும் சலுகையையும் அம்பலப்படுத்துவது முக்கியமாகிறது. இதனால், பாலின சமத்துவமின்மையின் அமைப்பை அகற்ற ஒன்றினைந்த தரப்பினரின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறும். அதோடு, இந்நாட்டில் உள்ள சிறுபான்மை பாலினர் உட்பட அனைத்து பாலினரையும் இன்னப்பிறரையும் பாதுகாக்கவும், சம்பந்தப்பட்ட தரப்பினரை பொறுப்புக்கூற வைக்கவும் பாலியல் வன்கொடுமைச் சட்டம் மிகவும் அவசியப்படுகிறது .

 

 

குழந்தை திருமணத்தை நிறுத்து!

குழந்தை திருமணங்களுக்கு வறுமை முக்கிய காரணம் எனவும் ஏழை நாடுகளில்தான் அதிக குழந்தை திருமணங்கள் நடப்பதாகவும் ஆராய்ச்சி காட்டுகிறது. மலேசியா ஒரு வளரும் நாடு என்றாலும், குழந்தை திருமண விவகாரத்தில் சமூக பொருளாதார நிலையில் கவனம் செலுத்தப்படாமலிருப்பது கண்கூடாக தெரிகிறது. பாலியல் கல்வியின் பற்றாக்குறை, குழந்தைகளின் ஒப்புதல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கலாச்சார ரீதியாக பின்பற்றப்படும் கருத்துகளின் விளைவுதான் குழந்தை திருமணமும் சமூக-பொருளாதார  ஏற்றத்தாழ்வும். ஒரு குடும்பம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் குழந்தைகளால் ஏற்படும் குடும்ப சுமையை குறைக்க அவர்களை குழந்தை திருமணத்தின் மூலம் மற்றொரு குடும்பத்தினரால் கவனித்துக் கொள்ளப்படுவதுதான் இவர்களுக்கு  ஒரே வழியாக இருக்கிறது.இளம் வயதில் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் பெரும்பாலும் வறுமையில் இருப்பதாகவும் இவ்வகை குழந்தை திருமணங்களால் பாரம்பரியமாக கடைபிடித்துவரும் பாலின பாகுபாடுகள்  பராமரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான மாநாடு (CEDAW) மற்றும் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான மாநாடு (CRC) ஆகியவற்றிக்கு மலேசியா ஒப்புதல் அளித்துள்ளது.மேலும் , CEDAW மற்றும் CRC இன் வழிகாட்டுதல்களின் படி குழந்தைகள் மற்றும் சிறுமிகளை குழந்தை திருமணங்களிலிருந்து பாதுகாக்க மலேசிய அரசாங்கம் கொள்கைகளை உருவாக்க வேண்டும்.

 

யுபிஐ (உலகளாவிய அடிப்படை வருமானம்)

கோவிட் -19 தொற்றுநோய் பல பி 40 பெண்களை பாதித்துள்ளது, குறிப்பாக தனித்து வாழும் தாய்மார்கள், அவர்களின் குடும்பத்திற்கு வருமானம் ஈட்டும் ஒரே நபராக உள்ளனர். வருமான இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள பலரின் கதைகள் மூலம் ஆதரவு அளிக்காத அரசாங்கத்தின் நிலை தெரிகிறது. தற்போது பெரிகாத்தான் நேஷனல் அரசாங்கம் பொருளாதாரத்தை உயர்ததுவதற்கான முயற்சிகளில் பணத்தை செலவழிக்கிறது. இருப்பினும், சில கவனக்குறைவால் பொருளாதாரம் வலுவாக பின்தங்கியுள்ளது. அரசாங்கம் யுனிவர்சல் பேசிக் இன்கம் (யுபிஐ) அதாவது உலகளாவிய அடிப்படை வருமானத்தை மாற்றியமைப்பதின் மூலம் இந்த சிக்கலை தீர்க்க முடியும். இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் உணவு வழங்கப்படுவதையும், அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்வதையும் இது உறுதி செய்கிறது. எதிர்காலத்தில் பொருளாதார கொள்கைகள் அனைத்திலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் சேர்க்கப்பட வேண்டும். நீண்ட காலமாக, பெண்கள் செய்யும் பராமரிப்புப் பணிகளுக்கு ஊதியமற்ற நிலையை மாற்ற அரசாங்கள் சீர்திருத்த கொள்கைகளை கொண்டு வரவேண்டும் .

LGBTIQ – சமூகத்திற்கான  மனித உரிமைகள்

LGBTIQ  சமுகத்திற்கு எதிரான பாகுபாடும்,ஒடுக்குமுறை மற்றும் அச்சமூகத்திற்கு எதிரான வன்முறையும் மலேசியாவில் மிகவும் கடுமையான சூழலை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. LGBTIQ சமூகத்தின் பேச்சு சுதந்திரம்,செயல்பாடு,வாழ்வியல் முறை ஆகியவற்றுக்கு எதிராக அரசாங்கத்தின் எதிர்ப்பும்,பழமைவாத போக்கும் அச்சமூகத்திற்கு எதிரான வெறுப்பையும் அத்துமீறல்களையும் நேரடியாக பாய்ச்சுகிறது.அச்சமூகத்தின் மீதான மனிதத்தை அஃது வேட்டையாடுகிறது.கடந்த ஓராண்டுக்காலமாக அதிகாரிகளாலும் அதிகாரவர்க்கத்தாலும் அச்சமூகத்திற்கு எதிரான வன்முறையும் ஒடுக்குமுறையும் பெரும் அளவில் அதிகரித்துள்ளது.இதனால் LGBTIQ சமூகம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு தங்களின் வாழ்வை பெரும் அச்சத்தோடு நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களும் மனிதர்கள் தான்.அவர்களுக்கெதிரான அச்சுறுத்தலையும் வன்முறையையும் தடுக்க அரசாங்கம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.மேலும்,அவர்களுக்கெதிரான ஒடுக்குமுறைக்கும் தீங்கு விளைவிக்கும் நிலையிலான குறிவைத்தலுக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

நீண்டக்காலமாக இங்கு பெண் புறக்கணிக்கப்படுகிறாள். அதிகாரத்தில் உள்ளவர்களாலும் குறிப்பாக ஆண்களாலும் பெண்கள் கட்டுப்படுத்தப்படுகிறார்கள்.இப்பிரச்னைகளை களைவதற்கு பாலினம் சார்ந்த பின்னோக்கிய சிந்தனையை அவர்கள் கையாளுகிறார்கள்.இக்காரணியத்தால் பெண்களின் போராட்டங்களில் பெரும் விரிவானது ஆணாதிக்க முறைக்கு எதிராகவும் பாலின சமத்துவத்தை நோக்கியுமே விரிவடைகிறது.இதன் வாயிலாக  சமுகத்தில் ஊடுருவியுள்ள பாலின ஏற்றத்தாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என நம்பப்படுகிறது.தொன்றுத்தொற்று நிலவிவரும் இந்த பாலின சமத்துவத்தை நிலைநிறுத்த அரசாங்கத்தின் பார்வையிலும் சமத்துவ சிந்தனை உயிர்தெழ வேண்டும்.ஆண்கள் இன்னமும் ஆணாதிக்க “சலுகைகளை” அனுபவிப்பதற்கு இதுவொன்றும் 18ஆம் நூற்றாண்டு அல்ல.ஆணாதிக்க சிந்தனைக்கு ஒரு முடிவு கட்டப்பட வேண்டும்.குடும்பப் பொறுப்புகளை பெற்றோர் எனும் நிலையில் பகிர்ந்துக் கொள்ளப்பட வேண்டும்.

 

 

No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...