Friday, July 2, 2021

துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பா?


அரசாங்கத் துறையில் குத்தகை அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பா?

அரசாங்கத் துறைகளில் குத்தகை அடிப்படையில் பணிபுரிந்து வரும் குறிப்பாக அரசாங்கப் பள்ளிகளின் துப்புரவு பணியாளர்களுக்கு சம்பள குறைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மலேசிய சோசலிச கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

துப்புரவு தொழிலாளர்களின் சம்பளத்தை மாதத்திற்கு 40 விழுக்காடு அதாவது 660 வெள்ளி அல்லது 720 வெள்ளியாக குறைக்க திட்டமிட்டு வருவதாக அறிகிறோம். நாட்டில் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் மொத்தம் 50,000 துப்புரவு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பி40 பிரிவைச்சேர்ந்த குடும்பங்களுக்கு உதவுவதன் மூலம் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக கோடிக்கணக்கான வெள்ளியை செலவிட வேண்டியிருக்கும். covid-19 தொற்றுநோய் அரசாங்கத்திற்கு பெரும் நிதி அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாங்கள் அறிகிறோம்.

 ஆயினும்கூட ஊதியங்களை குறைப்பதற்கான நடவடிக்கை covid-19 நெருக்கடியின் போது கடுமையான வறுமை மற்றும் பட்டினியை தவிர்ப்பதற்கான அரசாங்கத்தின் உண்மையான நோக்கத்திற்கு முரணானது என்று பிஎஸ்எம் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் ஆர். மோகனராணி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையான காரணம் என்னவென்றால் இந்த வகை தொழிலாளர்களுக்கான ஊதியக் குறைப்பு அவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே பி20 வரம்பில் இருப்பதால் அவர்கள் இன்னும் எழ்மையானவர்களாக இருப்பார்கள்.

இந்தக் குழுக்களில் ஏராளமானோர் தனித்து வாழும் தாய்மார்கள் அல்லது உயரும் வாழ்க்கை செலவை ஈடுசெய்ய குறைந்தபட்ச ஊதியமாக 1100 வெள்ளி மற்றும் 1200 வெள்ளி சம்பளத்துடன் போராடும் ஒற்றை வருமான ஆதாரங்களாக இருப்பார்கள். 

இந்த தொழிலாளர்கள் தங்கள் செலவுகளை அரை சம்பளத்துடன் எவ்வாறு நிர்வகிக்க முடியும் என்பதை அரசாங்கம் உணர வேண்டும். உணவு, வீட்டுவசதி இன்னும் பிறபயன்பாடுகளான போக்குவரத்து மற்றும் சுகாதாரம் போன்ற செலவுகளை அவர்கள் இந்த குறைந்தபட்ச சம்பளத்தில்தான் ஈடு செய்ய வேண்டும். எனவே அவர்களின் வருமானம் 40 விழுக்காடு குறைக்கப்பட்டால் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது.

அரசாங்கம் தனது ஊழியர்களுக்கான சம்பளத்தை குறைகிறதா?  தனியார் நிறுவனங்களை பொறுத்தவரை அரசாங்கம், உதவித் திட்டத்தை வழங்குகிறது. இவை அனைத்தும் மக்களுக்கு நல்ல நடவடிக்கைகள். ஆனால், துப்புரவு தொழிலாளர்களை ஏன் புறக்கணிக்க வேண்டும்?

 நம் நாட்டின் வேலைவாய்ப்பு சட்டங்களின்படி முதலாளிகள் ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க முடியாது இந்த விவகாரத்தில் அரசாங்கம் வேலைவாய்ப்பு சட்டத்தை மீறுகிறது அரசு பள்ளிகளில் ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பளத்தை குறைக்கும் முடிவை உடனடியாக ரத்து செய்யுமாறு பிஎஸ்எம் மலேசிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.


நன்றி; மலேசிய நண்பன் நாளிதழ் (2/7/2021)

No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...