Tuesday, July 6, 2021

துப்புரவு பணியாளர்களின் சம்பளக்குறைப்பு திட்டத்தை அரசு மீட்டுக்கொண்டது- PSM பிரச்சாரத்தின் வெற்றி

 

அரசாங்கப் பள்ளிகளில் துப்புரவு செய்துவந்த பணியாளர்களுக்கு சம்பள குறைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கையை அரசு மீட்டுக்கொண்டதில் மலேசியா சோசலிச கட்சி  மகிழ்ச்சியினை  தெரிவித்துக்கொண்டது. 

முன்னதாக  துப்புரவு தொழிலாளர்களின் சம்பளத்தை மாதத்திற்கு 40 விழுக்காடு, அதாவது 660 வெள்ளியிலிருந்து  720  வெள்ளிவரை  குறைக்க அரசு முடிவெடுத்திருப்பதாக குத்தகையாளர்களிடமிருந்து பி.எஸ்.எம் தகவல் அறிந்தது. 

குத்தகை நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட இந்தத் தகவல் உண்மையில் மலேசிய சோசலிச கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் மனிதவள அமைச்சின் கூற்றுப்படி  தொழிலாளர்களுக்கு சம்பளம் குறைப்பு என்பது சட்டவிரோதமாகும். ஆனால் அதே அமைச்சின் கீழ் இயங்கும்  கல்வித்துறை, அதன் தொழிலாளர்களின் சம்பளத்தை குறைப்பது என்பது முரண்பாடாக இருக்கிறது. எனவே கல்வித்துறையின்  இந்தக் கொள்கைத் திட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய அளவில் இணைய பிரச்சாரத்தை பி.எஸ்.எம் இன் அரசாங்கத்துறை ஒப்பந்த தொழிலாளர் அமைப்பு (JPKK)  மேற்கொண்டது.

அந்தப் பிரச்சாரத்தில்  கல்வித் துறையின் இந்நடவடிக்கையை குறித்து மிகக் கடுமையாக பி.எஸ்.எம்  சாடியிருந்தது. அடிப்படை சம்பளம் மட்டுமே பெறும் தொழிலாளர்களின் மாதந்திர சம்பள குறைப்பு என்பது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் சுமையாக அமைந்துவிடும்.  இந்த சம்பளக்குறைப்பு நடைமுறைக்கு வந்தால்  500 வெள்ளிக்கு குறைவாகவே தொழிலாளர்களுக்கு  மாதாந்திர சம்பளம்  கொடுக்கப்படும்.



துப்புரவு தொழிலாளர்களின் இந்தத் குத்தகை முறையையே   ரத்து செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக பிஎஸ்எம் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும்போது, அதையும் தாண்டி இந்த பெருந்தொற்றுக்காலத்தில்  அடிப்படை சம்பளத்தையும் குறைப்பது என்பது ஏழைகளை அதலபாதாளத்தில் தள்ளுவதற்கு சமமாகும். இவ்விளைவுகளைக் மேற்கோள்காட்டி பி.எஸ்.எம் மேற்கொண்ட   இணைய பிரச்சாரத்தை மலேசிய மக்கள் அதிகம் பகிர்ந்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதன் நெருக்கடி காரணமாக கல்வி அமைச்சு  அறிவித்திருந்த துப்புரவு தொழிலாளர்களின் மாதாந்திர சம்பள குறைப்பு தற்போது மீட்டுக்கொள்ள பட்டுவிட்டது.  இது பி.எஸ்.எம் மேற்கொண்ட பிரச்சாரத்தின் வெற்றியாகவே கருதப்படுகிறது.

 

.

No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...