Tuesday, September 14, 2021

தேசிய மறுசீரமைப்பு - மலேசியாவுக்கு ஒரு மாற்று வழி

 

கோவிட் நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு பி.எஸ்.எம் புரட்சிகரமான திட்டத்தை பரிந்துரைக்கிறது…

தேசிய மறுசீரமைப்பு - மலேசியாவுக்கு ஒரு மாற்று வழி

"மக்களின் கோரிக்கை எளிதானதே"

 

2020 இல் கோவிட் -19 தொற்றுநோய் தாக்கியதிலிருந்து மலேசியாவின் நிர்வாகக் கட்டமைப்பும்,  சமூக -பொருளாதாரம் மற்றும் அரசியலும் மிக மோசமாக பலவீனங்கள்  அடைந்திருக்கிறது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக பாரிசன் நேஷனால்  கையாளப்பட்டு, பின்  22 மாத குறுகிய ஆட்சியில் பக்காத்தானால் தொடர்ந்த  புதிய தாராளவாத பொருளாதார அமைப்பு, இந்த தொற்றுநோய் காலத்தில் பெரும்பான்மை மக்களை பாதுகாக்கத் தவறிவிட்டது.

பெருநிறுவன  மற்றும்  முதலாளித்துவ சார்பு  முறை மற்றும் அது பாணியிலான  ஆட்சி பல ஆண்டுகளாக சமூக பாதுகாப்பு வலையமைப்பின் அடித்தளத்தை பலவீனப்படுத்தியுள்ளது. இதன் காரணங்களால்  பல்வேறு சமூக -பொருளாதார அழுத்தங்களுக்கு மக்களும் தள்ளப்பட்டுள்ளனர்.

நாம் ஒற்றுமையாக இந்த தொற்றுநோயிலிருந்து மீள்வது மட்டுமல்லாமல், இந்தக்காலத்தில் சமூக பாதுகாப்பு வலையமைப்பின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கும் எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கும்  நாம் தயாராக இருக்க வேண்டும். அப்படியென்றால், இதுபோன்ற தோல்விகளை சமாளிக்க நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

2020-ல் தொற்றுநோய் போதனை

மக்கள் அனுபவித்த மற்றும் அனுபவிக்கும் துன்பத்தைத் தவிர, இந்த தொற்றுநோய் சில முக்கியமான பாடத்தையும் நமக்குக் கற்பிக்கிறது;

அ) எந்த நெருக்கடி வந்தாலும், B40 பிரிவு ஏழை மக்கள் பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை சந்திப்பார்கள். COVID-19 தொற்றுநோய் தொடர்பான நெருக்கடி பணக்காரர்களையோ அல்லது ஏழைகளையோ அடையாளம் காணவில்லை.  என்றாலும், குடும்ப வருமானம், வீடு, வேலை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை COVID-19 தாக்கத்தின்போது ஒரு குடும்பத்தின்  தற்காப்பை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அனுபவம் காட்டுகிறது.

ஆ)  நிரந்தரமாகக் கருதப்பட்ட  வேலைகள் மற்றும் வாழ்வாதார ஆதாரங்கள் கண் இமைக்கும் நேரத்தில் மறைந்துவிடுகிறது.  ஒரு நல்ல சமூகப் பாதுகாப்பு  தொடர்பு  இல்லாமல், மக்கள் வறுமையில் மூழ்கி இருக்கிறார்கள்.  பல M40 குடும்பங்கள் இப்போது B40 நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள், அவர்கள் பணிநீக்கம் செய்யப்படும்போது  தங்கள் வருமான ஆதாரத்தை சேர்த்தே இழக்கிறார்கள்.

இ) தனியார் மற்றும் பெருநிறுவனம் சார்ந்த தொழில்கள் நாட்டின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் மிக முக்கியமான நிறுவனங்களாகக் கூறப்படும் அதே வேளையில், நாடு தொற்றுநோய் நெருக்கடியால் பாதிக்கப்படும்போது, ​​ மக்களுக்கு ஆதரவளித்தவர்களாக இருப்பவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் அரசு நிறுவனங்கள்தான். தனியார் மருத்துவமனை துறையும் சுகாதார சுற்றுலா துறையும் கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கவில்லை.

ஈ) அடிப்படை வசதிகளை வழங்குவதற்கான பொருளாதாரத் துறையின் பங்கு நெருக்கடி காலங்களில் மக்களுக்கு (இன்றியமையாதது) மிக முக்கியமானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.  சிறு வியாபாரிகள், விவசாயிகள், பராமரிப்பு தொழிலாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், குப்பை  எடுப்பவர்கள், லாரி டிரைவர்கள், பொருட்கள் விநியோகம் செய்பவர்கள் உள்ளிட்டோர் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள். உள்ளூர் விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டால் அதோடு இறக்குமதி செய்யப்படும் வேளாண் பொருட்களும் பாதிக்கப்படும்  பட்சத்தில்,  மக்களுக்கான உணவு பாதுகாப்பு துண்டிக்கப்படும்.

உ) மக்களிடம்   நல்ல சூழல் கொண்ட வீடு இருந்தால் மட்டுமே கோவிட் -19 நோய்த்தொற்றிலிருந்து விலகி இருக்கவும் நிர்னயிக்கப்பட்ட SOP கள் மற்றும் நிபந்தனைகள் செயல்படுத்தவும் முடியும். தனிமைப்படுத்தலின் போது 650 -சதுர –அடி கொண்ட பிபிஆர் வீட்டில் வசிக்கும்  ஒருவரும் டாமான்சாராவில்  சொகுசு பங்களாவில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஒருவரையும்  ஒப்பிடும்போது, இருவருக்கும்  நிறைய வித்தியாசங்கள் இருக்கும்.  நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடும் முக்கியம்.

ஊ) கோவிட் -19 சுகாதார நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு மக்களுக்கு பலமில்லை  என்றால், அதைவிட  பல மடங்கு மோசமாக இருக்கும் காலநிலை நெருக்கடியை எப்படி எதிர்கொள்வார்கள்? எனவே, கட்டுப்பாடற்ற மரம் வெட்டுதல், நதி மாசுபாடு, கனிம சுரங்க பிரச்சனை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்.

இந்த முக்கியமான படிப்பினைக்கு ஏற்ப, பிஎஸ்எம் தேசிய மீட்சிக்கான மாற்று செயல் திட்டத்தை முன்வைத்து -நாட்டின் மாற்று வழியை வலியுறுத்தி "மக்களின் கோரிக்கை எளிதானதே"  என்ற கருப்பொருளை பரிந்துரை செய்கிறது.

இந்த ஆவணத்தின்  முன்மொழிவுகள் மலேசியாவுக்கு நியாயமான, நிலையான மற்றும் சமமான வளர்ச்சியை நோக்கி ஒரு புதிய முன்னுதாரணத்தை வழங்குகிறது. 

 

இந்த தேசிய மீட்சித் திட்டம் 5 முக்கிய அடுக்குகளை அடிப்படையாகக் கொண்டது;

 1 - வலுவான சமூக பாதுகாப்பு

2 - வேலை உத்தரவாதத் திட்டம்

3 – மக்களுக்கான வீட்டு உரிமை

4 - பொது சுகாதார சேவைகளை மேம்படுத்துதல்

5 -  பேரிடர் காலத்தை உடனடியாக கையாளுதல்

 

மேற்குறிப்பிட்ட இந்த 5 அடுக்குகளின்  சுறுக்கம்..

1 - வலுவான சமூக பாதுகாப்பு

-         அடிப்படை வருமான உத்தரவாத திட்டம்

-         அரசின் கீழுள்ள தனியார் ஒப்பந்த  தொழில் முறை திட்டத்தை நீக்க வேண்டும்

-         தொழிலாளர் மற்றும் SOCSO சட்டங்களில் திருத்தங்கள்

-         வேலைவாய்ப்பு- காப்பீட்டு திட்ட சீர்திருத்தம்

-         மூத்த குடிமக்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம்

 

2 - வேலை உத்தரவாதத் திட்டம்

-         பசுமை தொழில்துறையில் வேலை வழங்குதல்

-         விவசாயத்தில் வேலை வாய்ப்

-         புகளை அதிகரிக்கவும்

-         பொது சுகாதார மையங்களை அதிகப்படுத்துதல்  

-         பொது சுகாதார வசதிக்கான ஆராய்ச்சிக்கூடங்களை மேம்படுத்துதல்மருத்துவ & மருந்தியல் ஆய்வுகள்

-         சமூக பணியாளர்கள் சேர்க்கப்படவேண்டும்

-         பராமரிப்பாளர்கள் மற்றும் ஆரம்ப கல்வி

-          வேலை நேரங்களின் மாற்றம்

-         GLC -களில் பங்கு

-         தொழிலாளர் பாகுபாடு எதிர்ப்பு சட்டம்

 

3 – மக்களுக்கான வீட்டு உரிமை

 

- B20 பிரிவு மக்களுக்கு PPR வீட்டை உருவாக்கவும்

- மக்களுக்கான  வீடுகளை சந்தையில் இருந்து அகற்று

- கட்டாய வெளியேற்றத்தை நிறுத்து - மாற்று வீட்டிற்கான சலுகைகள் வழங்கு

- ஒரு மக்கள் குடியிருப்பு அறக்கட்டளையை (லாப நோக்கமின்றி) உருவாக்க

- குறைந்த விலை கொண்ட குடியிருப்புகளை அரசு பராமரிக்கவும்

 

4 - பொது சுகாதார சேவைகளை மேம்படுத்தவும்

- பெர்கசா பொது சுகாதார சேவைகள்

- நாள்பட்ட நோய்களைத் தடுக்க GP- களை ஈடுபடுத்துங்கள்

- புலம்பெயர்ந்தவர்களுக்காக லெவியைப் மருத்துவ செலவுகளுக்கு பயன்படுத்தவும்

- அறுவை சிகிச்சை உபகரணங்கள் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படவேண்டும்

பொது மருத்துவமனை மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சிறப்பு மருத்துவர்களாக இடம்பெயர்வதை கட்டுப்படுத்துங்கள்

- மருத்துவமனை மாநியத்தை அதிகப்படுத்தவும்

- தரமான சுகாதார சேவைகள், பெரும்பாலான மக்களுக்கு சமூக ஊதியம்.

 

5 -  பேரிடர் காலத்தை உடனடியாக கையாளுதல்

- 100% புதுப்பிக்ககூடிய ஆற்றல் நுகர்வு

  - பெட்ரோலியத் தொழிலில் இருந்து மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும்

  - பொது போக்குவரத்து தீவிரமாக மேம்படுத்த வேண்டும்

- தனியாருக்கு காட்டில் மரம் வெட்டுதல் மற்றும் சுரங்கத் தடை


இந்தப் புரட்சிகரமான திட்டத்தை ஒரு நீண்டகால பிரச்சாரமாக மலேசிய சோசலிசக் கட்சி முன்னெடுக்க உள்ளது.  இதன் அறிமுக விழா மெய்நிகர் வழி கடந்த செம்படம்பர் 9-ஆம் தேதி கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் ஜெயகுமார் தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது . 

 

No comments:

Post a Comment

5 தோட்டத்தின் தொழிலாளர்களுக்கு வெற்றி

உலு சிலாங்கூர் மற்றும் கோலாசிலாங்கூரில் உள்ள 5 தோட்டங்களின் 25 ஆண்டுக்கால வீடு தொடர்பான போராட்டத்தை தீர்ந்துவிட்டதாக அமைச்சர் ...