Tuesday, October 19, 2021

“பி40 பிரிவுக்கு வீடு:சாத்தியமா அல்லது கனவா?


சமூக ஆர்வலர்களின் முன்னெடுப்பில், அக். 12 முதல் 17 வரை, ‘பாமர மக்களுக்கானகருத்தரங்கு இணையம் வழியாக நடந்துகொண்டிருக்கிறது. மார்ஹேன் கலந்துரையாடல் முதலாம் நாளில்....

பி.40 பிரிவுக்கு ஒரு வீடு அமையுமா என்பதின் அர்த்தம் என்ன? வீடு மற்றும் ஏழ்மை தொடர்பான கலந்துரையாடலில்  சாமானிய மக்களின் வீடுகளை விற்பனை சந்தையிலிருந்து  வெளியேற்ற வேண்டும் . வீட்டுவசதி என்பது அடைப்படை உரிமை .  லாபத்தை முன்னிலைப்படுத்தும் வர்த்தகம் அல்ல என்ற கோட்பாட்டினை முன்னிருத்தி பேசப்பட்டது.

 “பி40 பிரிவுக்கு வீடு:சாத்தியமா அல்லது கனவா? என்ற தலைப்பில்  அந்த கலந்துரையாடல் தொடங்கியது.  இந்தச் சந்திப்பு கூட்டத்தில் சூம் செயலி மற்றும் முகபுத்தகத்தின் வழி 160 பேருக்கு மேல் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்வு சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது.


சந்திப்பு கூட்டத்தில் ஏழ்மை மற்றும் வீட்டுவசதி குறித்து பேச்சாளர்கள் பேச துவங்கினர். வீடு வாங்குவதில் பாமர மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள், குறைந்த விலை வீடுகளில் இருக்கும் தரக்குறைவு, வசதி குறைவான வீடமைப்பு மற்றும் நீண்ட கால வீட்டு கடன் போன்றவை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. தோட்ட தொழிலாளர்களின் பிரதிநிதியாக கலந்துகொண்டவர் நெடுங்காலமாக குறைந்த சம்பளம் எவ்வாறு அவர்களை சொந்த வீடு வாங்க வழியில்லாமல் செய்திருந்தது எனவும் குறைந்தபட்ச ஊதியம் மிக சமீப காலமாகத்தான் கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் கூறினார்.

மேலும் அவர் தோட்டங்களை விட்டு வெளியேற விரும்பவில்லை எனவும் அரசு அவர்களுக்கான வீடமைப்பு திட்டத்தை தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அந்த வீடமைப்பு திட் டம் மாத தவணை (sewa  beli ) கீழ் கொடுக்கப்படவேண்டும் என பரிந்துரைத்தார். உணர்ச்சிகரமாக பேசிய அவர் குடியேறியர்கள் ஆக்கிரமைப்பாளர்கள் அல்லர் எனவும் வீட்டுரிமைக்காக தோட்ட மக்கள் தொடர்ந்து குரல் கொடுப்பதோடு வீட்டுப் பிரச்சினையை எதிர்த்து போராட அனைவரும் முன்வர வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து, இளைஞர்களின் பிரதிநிதியாக கலந்துக்கொண்ட நபர் எவ்வாறு இளைஞர்கள் பலர்  வீட்டு மாத தவணை  கட்ட முடியாமல் சிரமப்படுகிறார்கள் என்பதை விளக்கினார். பி40 பிரிவில் இருக்கும் இளைஞர்கள் தங்களுடம் சேர்த்து  தங்களது பெற்றோர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என வலியுறுத்தினார். அவர் இளைஞர்கள் சம்பள உயர்வுக்காகவும் போராட வேண்டும் என கூறினார்.

மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பின் பராமரிப்பு குறித்து பேசுகையில்  நகராட்சி மன்றத்திடம் பராமரிப்பு பொறுப்பை வழங்குவதற்கும் ஒரே வரி செலுத்தும் முறைக்கும் பலர் சம்மதம் தெரிவித்தனர் . வீட்டுரிவசதி குறித்து குரல் கொடுப்பவர்கள் சாமானிய மக்களாக இருக்கும் பட்சத்தில் அவை மக்களின் அடிப்படை  உரிமையாக பார்க்கவேண்டுமே தவிர லாபத்தை முன்னிலைப்படுத்தும் வியாபார நோக்கத்த்தோடு பார்க்கக்கூடாது . தொடர்ந்து பேசிய இளைஞர்களின் பிரதிநிதி, பாமர மக்களுக்கான வீடமைப்பு திட்டத்தில்  சில முக்கியமான விடயங்களை வலியுறுத்தினார்.

 

1.RM100,000 க்கு கீழான மலிவு வீடுகளை உருவாக்குங்கள்

2.அதிக பிபிஆர் வாடகை வீடுகளை உருவாக்குங்கள்

3.கட்டாயத்தின் பேரில் வெளியேற்றப்படுவதை நிறுத்துங்கள்

4. பாமர மக்களின் வீடமைப்பு திட்டத்தின்  கீழ் உருவான விடைகளை ஏலம் விடாதீர்கள்.

5.குறைந்த விலை கொண்ட குடியிருப்புகளை பராமரிப்பது நகராட்சி மன்றத்தால்  கையகப்படுத்தப்படுத்தப்பட வேண்டும்.

6. பி40/எம்40 மக்களுக்கான வீட்டுமனை திட்ட அமைப்பை (trust bina ) உருவாக்குங்கள். தனியார் மேம்பாட்டாளர்களுக்கு கொடுக்க கூடாது.

அடுக்குமாடி குறியிருப்பின் பராமரிப்பு குறித்தும் சந்தை விலையில் ஒரு வீட்டை வாங்குவதற்கு போதுமானதாக சம்பளமின்மை குறித்தும்  சந்திப்பு கூட்டம்  முழுதும் அடிக்கடி விவாதிக்கப்பட்டது. தற்போதைய காலக்கட்டத்தில் வீட்டு விலை சாமானிய மக்களின் திறனுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது எனவும் அரசு இவ்விவகாரத்தில் தலையிட மக்கள் குரல் எழுப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

 

 

No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...