Tuesday, October 19, 2021

62% மலேசியர்கள் முறையான சமூகப் பாதுகாப்பு காப்புறுதி பெறவில்லை. - யாசின் அகமட்



சமூக ஆர்வலர்களின் முன்னெடுப்பில், அக். 12 முதல் 17 வரை, ‘பாமர மக்களுக்கான ’ கருத்தரங்கு இணையம் வழியாக நடந்துகொண்டிருக்கிறது. மார்ஹேன் கலந்துரையாடல் 

மூன்றாம் நாள்...

நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் உரிமைகள் நிலைநாட்டப்படவில்லை; இவை எல்லா இடங்களிலும் முறைசாரா தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் விஷயங்கள். தாமதமான சேவைக்கு நீங்கள் திட்டும் இ-ஹெயிலிங் டிரைவர்கள் மற்றும் உணவு விநியோகம் செய்பவர்களில் தொடங்கி அதிகாலையில் நாசி லெமாக் விற்கும் பெண்மணி,  பிறருக்கு எல்லாவித அலங்காரங்களையும் முடித்த பின்னும் எந்தவித மாற்றமும் இல்லாத ஒப்பனை கலைஞர்கள், ஒருபோதும் வெளியிடாத பிரசுரங்களுக்கு முடிவில்லாமல் எழுதுகிற எழுத்தாளர்கள், நாள் முழுதும் உணவில்லாமல் உழைக்கிற மேடை நாடக இயக்குனர்கள், வெளிச்சமில்லாத இடங்களில் காயங்களுடன் காத்திருக்கும் பாலியல் தொழிலாளர்கள் போன்ற தொழில் செய்யும் மக்களை பற்றித்தான் நாம் பேசியாக வேண்டும். ஆனால், அவர்களை இந்த நாடு புறக்கணிக்கிறது. 

இவர்களின் சவால்கள் மற்றும் எதிர்காலம்  குறித்துத்தான் கபுங்கன் மர்ஹேன் மன்றத்தில் கிக் தொழிலாளர்கள் என்ற  தலைப்பில் பேசப்பட்டது. JPTF (முறைசாரா தொழிலாளர்களின் கூட்டணி) மற்றும் சோசியலிச இளைஞர்களால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் முறைசாரா தொழிலாளர்களான இ-ஹேலிங் டிரைவர் மற்றும் பாலியல் தொழிலாளர் சமூகத்தின் பிரதிநிதி போன்றவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.இரண்டு மணி நேர கலந்துரையாடலில் =, முறைசாரா தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சுமைகள் , அவர்கள் எதிர்நோக்கும் பாகுபாடுகள் குறித்து பேசப்பட்டதோடு முறைசாரா தொழிலாளர் துறையின் பகுப்பாய்வு  மற்றும் மலேசியாவில் அனைத்து முறைசாரா தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் பிரச்சாரமும்  தொடங்கப்பட்டது.

KWSP யின் அறிக்கையின்படி, 62% உழைக்கும் வயதுடைய மலேசியர்களுக்கு எந்த முறையான சமூகப் பாதுகாப்பு காப்புறுதியும் இல்லை.இந்த 62% உழைக்கும் வயது மலேசியர்கள் முறைசாரா தொழிலாளர்களாக உள்ளனர்.மேலும், முறையான துறைகளில் பணிபுரிபவர்களுடன் ஒப்பிடும்போது பல பொருளாதார சவால்களுக்கு ஆளாகியுள்ளனர். வேலைவாய்ப்பு சட்டம் 1955 இன் கீழ் குறைந்தபட்ச சட்டபூர்வமான நன்மைக்கு உத்தரவாதம் இல்லை, குறைந்தபட்ச ஊதியத்திற்கு உத்தரவாதம் இல்லை, தொழிலாளர் பாதுகாப்பு இல்லை, தொழிற்சங்க பேரம் பேச தொழிலாளர் உரிமைகள் இல்லை போன்றவை பல  சவால்களை உருவாக்கியுள்ளன.

பாலியல் தொழிலாளர்களின் சிக்கல்களை கையாளும் சமூக செயல்பாட்டாளர்களான சீட்  அறக்கட்டளையை சேர்ந்த ஜேன் மற்றும் நாஷா, பாலியல் தொழிலாளர்கள் குண்டர் கும்பல், வாடிக்கையாளர்கள் மற்றும் காதலர்களால் கொடுமை  மற்றும் கொலை செய்யப்படுதல் போன்ற இன்னல்களை எதிர்நோக்குகிறார்கள் என கூறினர்.இவை முறைசாரா தொழிலாளர்களின் ஒரு பிரிவான இவர்கள் எதிர்நோக்கும் உண்மையான வாழ்வு. இவர்கள் பெரும்பான்மை சமூகத்தால் ஒதுக்கப்படுகின்றனர். 

இதற்கிடையில் இ-ஹெயிலிங் தொழிலாளர்களின் அவலமும் பகிரப்பட்டது. இ-ஹெயிலிங் தொழிலாளர்களான சியோங், மணி மற்றும் முவாஸ் ஆகிய மூவர் தங்கள் வேலையைப் பற்றி பேசினார்கள்.

அனைத்து தொழிலாளர்களுக்கும் அடிப்படைத் தேவையாகக் கருதப்படும் சமூகப் பாதுகாப்பு இந்த தொழிலாளர்களுக்கு இல்லாத ஒன்று. E- ஹேலிங் உணவு விநியோகஸ்தர் முனாஸ் இஷாக், மின்-ஹெயிலிங் டிரைவர்கள் தங்கள் நிறுவனத்தால் ஒரு பொருளைப் போல நடத்தப்படுவதாகவும் அவர்களில் பாதுகாப்பு அவர்களது உரிமை கருதப்படவில்லை என கூறினார்.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் கொரோனா தொற்றுநோய் காரணமாக, பல இ-ஹேலிங் டிரைவர்கள் முதல் பாலியல் தொழிலாளர்கள்  வரை  முறைசாரா தொழிலாளர்களாக இருக்க வேண்டியிருந்தது.குறிப்பாக திருநங்கைகளுக்கு,  சிறுபான்மை சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பது அவர்களுக்கு சமூகத்தில் மிகக் குறைந்த வாய்ப்பை வழங்குகிறது.கொரோனா நோய்த்தொற்றுக்கு முன்பு அழகுசாதன நிபுணர்கள், சிறு வணிக உரிமையாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களாக இருந்தவர்கள் நிலையற்ற பொருளாதாரம் காரணமாக பாலியல் வேலையை நாட வேண்டியிருந்தது. மேலும் பாலியல் தொழிலாளர்களாக இருப்பதன் மூலம், மேலே சொன்னது போல் அவர்கள் இப்போது பல்வேறு பாகுபாட்டிற்கு ஆளாகியுள்ளனர்.

முறைசாரா தொழிலாளர் சமூகத்தில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு பகுப்பாய்வு நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாகும். முறைசாரா தொழிலாளர்களின் ஒரு சிறிய மாதிரியின் பின்னூட்டத்தின் அடிப்படையில் பின்வருபவை முன்னிலைப்படுத்தப்பட்டன; கணக்கெடுப்பின்படி முறைசாரா தொழிலாளர்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் அவர்களின் பாதி வருமானத்தை கூட எட்டவில்லை  மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

பெரும்பாலானவர்களுக்கு, KWSP அல்லது PERKESO போன்ற எந்த சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழும் முறைசாரா தொழிலாளர்கள் பாதுகாக்கப்படவில்லை. மேலும், கணக்கெடுக்கப்பட்ட முறைசாரா தொழிலாளர்கள் அரசாங்கத்தின் உதவியுடன் கூட அவர்களின் எதிர்காலம் நிச்சயமற்றது என்று தெரிவித்தனர். முறைசாரா தொழிலாளர்களாக இருப்பதால் அவர்கள் பாதுகாப்பாக இல்லை. 

கணக்கெடுப்பு முறைசாரா தொழிலாளர்களிடமிருந்து கோரிக்கைகளையும் சேகரித்தது. சம்பாதித்த ஊதியத்தை உயர்த்துவது ,அவர்களுக்குத் தேவையான சமூகப் பாதுகாப்பை வழங்குவது மற்றும் அவர்களின் உரிமைகளை நிலைநாட்டாத  தங்கள் தொழிலாளர்களை வெளிப்படையாக துஷ்பிரயோகம் செய்யும் நிறுவனங்களுக்கு கவனம் செலுத்துவது ஆகியவை மிக முக்கியமான கோரிக்கைகளாகும்.

பாலியல் தொழிலாளர்களின் பிரதிநிதியின் கோரிக்கைகளில் ஊக்கத்தொகை மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய அரசாங்கத்தின் உதவி மற்றும் பாலியல் தொழிலில் இருந்து அவர்களை வெளியேற்றுவது ஆகியவை அடங்கும்.

முறைசாரா தொழிலாளர்கள் பொருளாதாரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அவர்களின் இருப்பு சமூகத்தின் பார்வையில் இருந்து மறுக்க முடியாத ஒன்று மற்றும் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பு அளவிட முடியாதது. ஆனால் அவர்கள் மீதான பாகுபாடு மற்றும் துஷ்பிரயோகம் என்று வரும்போதும் , வாழ்வாதாரம் என வரும்போதும் மிக சுலபமாக புறக்கணிக்கப்பட்டு விடுகின்றனர்.சமூகத்தில், இதுபோன்ற அப்பட்டமான அநீதிகளை நாம் ஏன் கவனிக்காமல் இருக்க அனுமதிக்கிறோம்?கபுங்கன் மர்ஹேன் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, அனைத்து குடிமக்களும் சமுதாயத்தில் அவர்கள் எந்தப் பங்கை வகித்தாலும், அவர்களுக்கு ஒரு சிறந்த நிலை தேவை என்று நாங்கள் கோருகிறோம். அது போதுமான ஊதியம் இல்லாத  ஈ-ஹேலிங் டிரைவர்கள் முதல்,நல்ல எதிர்காலம் அமையாதா என காத்திருக்கும் பாலியல் தொழிலாளர்கள் பொருளாதாரத்தை தாண்டி முக்கியமானவர்கள்.

அனைத்து முறைசாரா துறைகளும் சேர்ந்து குரல் கொடுத்து தங்கள் சுமையை பகிர்ந்து கொள்ளும் ஒரு தளமாக டெலிக்ராம் செயலி குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த முதிய முயற்ச்சிக்கு ஆதரவு தர விரும்புவோர் இணையலாம்.இணைப்பு பின்வருமாறு : https://t.me/jptf_psm 

 

No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...