Tuesday, July 26, 2022

விவசாயிகள் பாராளுமன்றத்திற்கு படையெடுத்தனர்

 கோலாலம்பூர்,  ஜூலை 26



நாட்டில் நாளுக்கு நாள் உணவு சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பூதாகரமாக தலையெடுத்து வருகிறது. உணவு பொருள்கள் விலையேற்றம், அத்யாவசியப் உணவு பொருள்களின் பற்றாக்குறை, விவசாயத்திற்கு தேவையான பொருள்களின் விலையேற்றம் இவற்றோடு விவசாய நிலங்களின் ஆக்ரமிப்பு உள்ளிட்ட  பலவிவகாரங்கள், உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிவரும் வேளையில் அதனை எதிர்த்து தங்களின் ஆச்சேபத்தை வெளிபடுத்தும் விதமாகவும் , பாராளமன்றத்தில் ஆலோசித்து சரியான தீர்வை கொண்டு வரவேண்டும் என்றும் விவசாயிகள்  மகஜர் ஒன்றை சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு வழங்கினர். 

    


முன்னதாக துகு நெகாரா செல்லும் சாலையருகே கூடிய,   நெல் பயிரிடும் விவசாயிகள், காய்கறிகள் பயிரிடும் விவசாயிகள், கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பிரதிநிதிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள்  பதாகைகளை ஏந்தி, அங்கிருந்து  பாராளுமன்றம் வளாகம் வரை கோஷம் மிட்டவாறே நடந்துச் சென்றனர்.   


அத்யாவசியப் உணவுப் பொருள்களின் விலை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசு அப்பொருள்களின் உற்பத்திக்காக பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தும் விலை கைமீறி போயிருப்பதை இந்த ஆர்பாட்டத்தில் விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.



மலேசிய சோசலிசக் கட்சி ஆதரவில் நடத்தப்பட்ட இந்த அமைதிப் பேரணி அமையான முறையில் நடந்தேறியதுடன் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் பிரதிநிதிகள் மகஜரை பெற்றுக்கொண்டனர். சுமார் 1 மணிநேரம் நடந்த இந்தப் பேரணிக்காக ஏராளமான போலீஸ்க்காரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது. 




No comments:

Post a Comment

தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைச் சட்ட வரைவு !

தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைச் சட்ட    வரைவு ! மனித வள அமைச்சிடம் சமர்பிக்கப்பட்டது     தோட்டத் தொழிலாளர்கள் ஆதரவுக் குழு (JSM...