கோலாலம்பூர், ஜூலை 23....
விலைவாசி அதிகரிப்பு, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து இளைஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். உணவு பொருள்களின் விலை கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் ஏறிவருகிறது. மேலும் கோழி இறைச்சி முட்டை, சமையல் எண்ணை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதோடு அவை ஏழை மக்கள் வாங்க முடியாத அளவுக்கு விலை ஏறியுள்ளன. இதனால் மக்கள் கொதிப்படைந்திருக்கின்றனர். அரசுக்கு இது தொடர்பாக அழுத்தம் கொடுக்க இன்று இளைஞர்கள் வீதியில் இறங்கி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பட்டதாரி இளைஞர்கள் அதிகமானோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டதோட அரசு சாரா இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த இளைஞர்களும் கலந்துக்கொண்டு அரசுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தனர்.
இளைஞர்கள் முன்வைத்த 5 கோரிக்கைகள்...
Potong gaji Menteri;
Kekalkan subsidi;
Salurkan bantuan bermaruah;
Kawal harga barang;
Selesaikan isu jaminan makanan.
தமிழில்
1அமைச்சர்களின் ஊதியத்தை குறைத்தல்
2 உதவிதொகையை நிலைநிறுத்துக
3 நியாயமான உதவிகளை செய்க
4 பொருள்களின் விலையை கட்டுப்படுத்துக
5 உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துக.
செய்தி : யோகி
No comments:
Post a Comment