Tuesday, October 11, 2022

பி.எஸ்.எம் மத்திய செயலவைக் குழு அவசரக் கூட்டத்தை நடத்தியது.

மலேசிய சோசலிசக் கட்சியின் மத்திய செயலவைக் குழு

அவசரக் கூட்டத்தை நடத்தியது. 


10 அக்டோபர் 2022 அன்று மலேசிய சோசலிசக் கட்சி, மத்திய செயலவை உறுப்பினர்களுடன் அவசரக் கூட்டத்தை ஏற்பாடு செய்து பின்வருபவை குறித்து விவாதித்தது.

1. பட்ஜெட் முடிந்து 3 நாட்களுக்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது, பி.எஸ்.எம் பொருத்தவரை இது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. இது நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாகவும் பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்தத் தேர்தல் நாடாளுமன்ற அளவில் மட்டுமே நடைபெறும், அதாவது அம்னோ தலைவர்களின் அரசியல் நலன்களுக்காக நடத்தப்படும் இந்த திடீர் தேர்தல் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுவது தொடரும் செயலாகும். அதே வேளையில், பருவமழை அவசரநிலையை சமாளிக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்வதில் இந்த தேசிய தேர்தல்கள் பெரிய கவனச்சிதறலை ஏற்படுத்தும். 

2. 2. PSM மிகவும் நியாயமான மற்றும் குறைந்தபட்ச கோரிக்கையை PH-இடம் சமர்ப்பித்துள்ளது. பொதுவான சின்னத்தைப் பயன்படுத்த ஒப்புக்கொள்வதைத் தவிர்த்து சுங்கை சிப்புட் நாடாளுமன்ற இருக்கைக்காக போட்டியிட, பிஎஸ்எம் தலைவரை முன்நிறுத்தி நாங்கள் சுங்கை சிப்புட் தொகுதியை கேட்டுள்ளோம். மீண்டும் பி.எஸ்.எம் சுங்கை சிப்புட்டை கைப்பற்ற மக்கள் விரும்புகின்றனர். டாக்டர் குமார் தலைமைதுவத்தின் கடந்த 10 ஆண்டுகால சேவையை மக்கள் இன்றும் நினைவு கூறுகின்றனர். தற்போது, சுங்கை சிப்புட் தொகுதிக்கு ம.இ.கா தேசிய தலைவர் டத்தோ விக்னேஸ்வரன் போட்டியிடவிருக்கும் வேளையில், அவரை வீழ்த்த முன்னாள் தலைவரான டத்தோஶ்ரீ சாமிவேலுவை அத்தொகுதியில் தோற்கடித்த டாக்டர் குமாரின்னால் மட்டுமே முடியும்.  எனவே பலமுனை போட்டிகளை தவிர்க்க. நேர்முனை போட்டிக்கு பக்கத்தான் பி.எஸ்.எம்-க்கு வழிவிட வேண்டும்.  


3. எந்தெந்த தொகுதியில் பி.எஸ்.எம் போட்டியிடப்போகிறோம் என்று பல ஊடகங்கள் எங்களை கேட்கின்றன. PH உடனான தேர்தல் ஒப்பந்தம் நிறைவேறினால் அது குறித்து முடிவெடுக்கப்படும். கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி PH உடனான எங்கள் சந்திப்புக்குப்பிறகு, PH தலைமைத்துவதிடமிருந்து அறிவிப்பு வந்திருக்க வேண்டும், ஆனால், அதிகாரப்பூர்வமான எந்த பதிலையும் அவர்களிடமிருந்து நாங்கள் பெறவில்லை. சாதகமான பதிலுக்காக காத்திருக்கிறோம்.   

 

எஸ்.அருள்செல்வன்

பி.எஸ்.எம் தேசிய துணைத்தலைவர்

Pengarah Biro Pilihanraya PSM.

No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...