கெட்கோ ஜோன் அவர்களின் போராட்டத்திற்கு பி.எஸ்.எம்-இன் செவ்வணக்கம்கெட்கோ ஜோன் அவர்களுக்கு நினைவாஞ்சலி (1966 -2024)
சில மாதங்கள் சுயநினைவு இல்லாத நிலையில் இருந்த கெட்கோ ஜோன் கான்டியஸ் கடந்த 12/12/24 அன்று காலமானார். அவர் கெட்கோ போராட்த்தில் 8 ஏக்கர் நிலத்திற்காக போராடிய ஒரே பி.எஸ்.எம் உறுப்பினராவார். அவர் தனது அப்பாவின் போராட்டத்தை தொடர்ந்தவர். ஜோன் ஒரு சிறந்த தலைவராக இருந்தார். ஆசிரியராக இருந்தமையால், மலாய், ஆங்கிலம், தமிழ் ஆகிய அனைத்து மொழிகளிலும் நன்கு உரையாடி சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார்.
பஹாவ், நெகிரி செம்பிலானிலுள்ள காட்கோ 8 ஏக்கர் நிலத்திற்காக போராடிய 140 மக்களின் குழுவிற்கு தலைவராக இருந்தவர் ஜோன். பலர் இந்தப் போராட்டத்திற்கு துரோகம் செய்துள்ளனர்; காட்டிக் கொடுப்பவர்களாக மாறினர்; அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் இந்தப் போராட்டக்குழு இரண்டாக உடைந்தது; பெரும்பான்மையினர் 8 ஏக்கர் போராட்டத்தை கைவிட்டு, மிகக்குறைவான நிலத்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்தனர்; இந்தப் போராட்டத்தை நகர்த்தி செல்ல ஜோன் பல இன்னல்களை சந்தித்துள்ளார். இனம், அரசியல் வேறுபாடு, மற்றும் சந்தர்ப்பவாதம் போன்ற பல வாராக மக்கள் பிரிக்கப்பட்டனர். பிளவுபட்ட மக்கள், எப்போதும் தோற்கடிக்கப்படலாம். அதுதான் இங்கேயும் நடந்தது.
கெட்கோ மக்களுக்கு 8 ஏக்கர் நிலத்தைப் பெறுவதற்கானவே அவரின் வாழ்க்கையின் கடைசி பத்தாண்டுகள் கழிந்தன. ஜோன் ஓர் ஆசிரியராக மட்டுமில்லாமல், விவசாயியாகவும் இருந்தார். அவர் குடியிருந்த வீடுதான் எங்களின் போராட்ட இயக்கத்தின் சந்திப்புக்கு முக்கிய தளமாக விளங்கியது. அவர் இருந்தவரை, அவரைச் சுற்றியுள்ளவர்களு ஒரு நம்பிக்கையாகவும் ஊக்கமளிப்பவராகவும் விளங்கினார்,
அவர் பணி ஓய்வு பெற்று தனது மீதமுள்ள வாழ்க்கையை போராட்டத்திற்கு அற்பணிக்க தொடங்கிய காலத்தில், வாழ்வில் ஒரு இடி விழுந்தது, சோகம் அவரது வாழ்க்கையைத் தாக்கியது. பல மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்த அவருக்கு, இன்று மரணம் ஒரு சிறந்த விடிதலையை அளித்திருக்கிறது. அவரது மனைவி பிலோமினா மற்றும் பிள்ளைகள் அனைவரும் அவருக்கு எப்போதும் ஒரு நம்பிக்கையாக இருந்தனர்; அவரின் கடைசி மூச்சிருக்கும்வரை அவருக்கு ஆதரவாகவும், அவரை அன்பாகவும் கவனித்தனர்.
அவரது குடும்பத்தினருக்கும், கெட்கோ மக்களுக்கும், அவரது நெருங்கிய நண்பர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய திறமையும் வசீகரமும் கொண்ட ஒரு சமூகத் தலைவரை காண்பது மிக அரிது. நெகிரி செம்பிலானிலுள்ள எனது நெருங்கிய பி.எஸ்.எம் தோழர்களும் என்னைப் போலவே இந்த இழப்பை உணர்வார்கள்.
ஜோன் என்றென்றும் நம் நினைவில் நிற்பார். அவரின் தலைமைத்துவம், அவரது வீடு, நிலம், தோட்டம், மக்கள், அனைவரும் இந்த மாபெரும் மனிதருக்கு பிரியாவிடை செலுத்துவோம்.
ஓய்வெடுங்கள் காம்ராட் கெட்கோ ஜோன்.
அருள்
11-12-2024 11.39 pm
தமிழில் ; சிவரஞ்சனி
No comments:
Post a Comment