Tuesday, September 30, 2025

எங்கள் குழந்தைகளை பசியால் தவிக்க விடாதீர்கள்!

 பி.எஸ்.எம் பத்திரிக்கை  அறிக்கை 



– 1 அக்டோபர் 2025

சமீபத்தில் கல்வி அமைச்சு (MoE) மற்றும் சுகாதார அமைச்சு (MoH) எடுத்த முடிவின் படி, பள்ளிகளில் தின்பண்டங்கள் மற்றும் இனிப்பு பானங்கள் விற்பனை செய்வது அதிகாரப்பூர்வமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.  junk food என்று சொல்லக்கூடிய  தின்பண்ட உணவுகள் தீங்கு விளைவிப்பவை என்பதை மறுக்க முடியாது. ஆனால், மலேசிய சோசலிசக் கட்சியின் இளைஞர் பிரிவு கருதுவது என்னவெனில்,  இந்தத் தடை தவறான வழிகாட்டுதலும் தந்தைவழிச் சிந்தனையும் கொண்ட நடவடிக்கையாகத் தோன்றுகிறது என்றும், அரசாங்கம் ஒரு குழந்தையின் ஆரோக்கியமான உணவுக்கான அடிப்படை உரிமையை உத்தரவாதம் செய்யத் தவறியதற்காகக் குழந்தைகள்  தண்டிக்க பட்டிருக்கிறார்கள் என்றும் பி.எஸ்.எம் இளைஞர் பிரிவு கண்டறிந்துள்ளனர்.


சோசலிச இளைஞர்கள் வலியுறுத்துவது என்னவெனில், இச்சூழ்நிலையில் அடிப்படை பிரச்சினை என்பது ஆரோக்கியமான உணவுகள் எளிதில் கிடைக்காததும், கிடைத்தாலும் அதற்கான  விலை அதிகமாக இருப்பதுமே ஆகும். மக்களின் ஊதியம் வாழ்க்கைச் செலவுகளுடன் பொருந்தாத பொருளாதார நிலையில், பசுமையான சத்தானதுமான உணவு பலரால் அனுபவிக்க முடியாத ஓர் ஆடம்பரமாக மாறியுள்ளது. இந்தத் தடை குழந்தைகளை பசியுடன் விட்டு விடுகிறது, ஏனெனில் பெற்றோரின் செலவுக்கு ஏற்ற விருப்பங்களை, அரசு நீக்கத் தேர்வு செய்தாலும், உண்மையான தீர்வை அது வழங்குவதில்லை. இந்தத் தடை குழந்தைகளை பசியுடன் விட்டு விடுகிறது. மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய குறைந்த விலை உணவை அகற்றிவிட்டு, அதற்கு மாறான  உண்மையான தீர்வை அரசு வழங்குவதில்லை.

மலேசியா தற்போது இருமடங்கு ஊட்டச்சத்து சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது, குழந்தைகளில் போஷாக்குறை மற்றும் அதிக உடல் எடை/உடல் பருமன் ஆகிய இரண்டு பிரச்னைகளும் பக்கப்பக்கமாகவே காணப்படுகின்றன.இவை இரண்டும் ஒரே காரணத்திலிருந்து உருவாகின்றன – வறுமை மற்றும் உணவு பாதுகாப்பின்மை. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் வளர்ச்சி குறைபாடு (stunting) 2015-இல் 17.7% இருந்த நிலையில், அதிர்ச்சிகரமாக 2022-இல் 21.2% ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் உடல் பருமன் 6.0% ஆக உயர்ந்துள்ளது. மேலும், பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு மூன்று குழந்தைகளில் ஒருவர் தற்போது அதிக எடை அல்லது பருமனுடன் உள்ளார் என்பதும் மிகப் பதற்றமூட்டும் நிலையாகும்.

இந்த ஆண்டு மே மாதத்தில், பிரதமர் துறையின் (கூட்டரசு பிரதேசங்கள்) அமைச்சரான Datuk Seri Dr Zaliha Mustafa, குடும்பத்தின் பொருளாதாரச் சுமையால் குழந்தைகள் கல்வி கற்பதிலிருந்து விட்டு விலகி, குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வேலைக்குச் செல்லும் நிலை உருவாகியிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

உலகளாவிய இலவச பள்ளி உணவுத் திட்டம் இந்தப் பிரச்சினையைத் தடுக்கும் வகையில் பயனுள்ளதாக இருக்கும். இது பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தூண்டும் வகையில் ஊக்கமாகச் செயல்படும். இதன் மூலம் குழந்தைகள் கற்றலும் வளர்ச்சியும் அடைய தேவையான உணவுச்சத்தைக் கிடைக்க வழி செய்யும், அதே நேரத்தில் வறுமையில் இருக்கும் குடும்பங்களின் நிதி அழுத்தத்தைக் குறைக்கிறது. அமைப்பு ரீதியான  தோல்வியால் உருவான சுமையை பெற்றோர்கள் தங்களின் தோளில் சுமக்க வேண்டிய நிலை உருவாகக் கூடாது.

கல்வி அமைச்சகம் மீண்டும் இலவச காலை உணவு திட்டத்தை (PSP) செயல்படுத்தி, அனைத்து குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான காலை உணவை வழங்க வேண்டும் என சோசலிச இளைஞர்களான நாங்கள் அமைச்சிடம்  கோரிக்கை வைக்கிறோம். 


எழுதியவர்:  அமண்டா சுவேதா லூயிஸ்

மலேசிய சோசலிசக் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர்

No comments:

Post a Comment

எங்கள் குழந்தைகளை பசியால் தவிக்க விடாதீர்கள்!

 பி.எஸ்.எம் பத்திரிக்கை  அறிக்கை  – 1 அக்டோபர் 2025 சமீபத்தில் கல்வி அமைச்சு (MoE) மற்றும் சுகாதார அமைச்சு (MoH) எடுத்த முடிவின் படி, பள்ளிக...