Tuesday, September 23, 2025

யூசோப் மாமத்துக்கு விழிப்புணர்வு வகுப்பை நடத்த PSM தயார்

PSM பத்திரிகை செய்தி – 24 செப்டம்பர் 2025 

குழந்தைகளை பலியாக்க வேண்டாம்;

யூசோப் மாமத்துக்கு  விழிப்புணர்வு வகுப்பை நடத்த PSM தயார்:


தோழர் கேசவன் பார்வதி


பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களும் சட்டப்பூர்வமாக குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று விரும்பும் கிளந்தான் காவல்துறைத் தலைவரின் முன்மொழிவை PSM கடுமையாகக் கண்டிக்கிறது. இந்த முன்மொழிவு சட்டம், நீதி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது.

சட்டம் மிகத் தெளிவாகச் சொல்லுகிறது – 16 வயதிற்குக் குறைவான குழந்தைகள் எந்த நிலையிலும் பாலியல் உறவுக்கு சம்மதம் அளிக்க முடியாது. அவர்கள் “ஆம் என்று சொன்னாலும் கூட, சட்டத்தின் பார்வையில் அது “இல்லை என்று தான் கருதப்படும். இந்தச் சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டதன் நோக்கம், குழந்தைகளை பெரியவர்களால் சுரண்டுவதைத் தடுக்குவதற்காகவே. ஏனெனில் குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள், எளிதில் ஏமாற்றப்படக்கூடியவர்கள். குறிப்பாக பாலியல் சூழ்ச்சி (child grooming) மூலம் ஏமாற்றப்படுவது, அல்லது பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இடையிலான அதிகார அசமத்துவம் (power imbalance) காரணமாக குழந்தைகள் தங்களைப் பாதுகாக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவது ஆகியவற்றைத் தடுக்கிறது.

ஒரு குழந்தை அல்லது இளம்பெண்கள்/இளைஞர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என்ற பரிந்துரை நடைமுறைக்கு வந்துவிட்டால், பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க பயப்படுவார்கள். “நீ புகார் செய்தால் உனக்கும் வழக்கு தொடரப்படும் என்று மிரட்டக்கூடிய சூழல் உருவாகும். இதனால் குற்றம் புரிந்த பெரியவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். இறுதியில், நாம் குழந்தைகள் (பாதிக்கப்பட்டவர்கள்) பாதுகாப்பை உறுதி செய்ய முடியாமல் தோல்வியடைந்து விடுவோம்.

Statutory பாலியல் வல்லுறவு (Statutory Rape) என்பது மிகத் தெளிவாக வலியுறுத்துகிறது. குழந்தையுடன் பாலியல் உறவு கொள்வது, குழந்தை சம்மதித்தாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், குற்றமாகவே கருதப்படும். இது பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஆண் குழந்தைகளுக்கும் சமமாகப் பொருந்தும்.

யூசுப் மமாத் முன்வைத்துள்ள பரிந்துரை ஒரு அபாயகரமான ‘பாதிக்கப்பட்டவரையே குற்றம் சாட்டும் (victim blaming) அணுகுமுறையாகும். ஏனெனில் அது, பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இடையே உள்ள ‘பாலியல் சூழ்ச்சி (Child Grooming) மற்றும் ‘அதிகார அசமத்துவம் (Power imbalance) ஆகியவற்றின் நிஜத்தை முற்றிலும் புறக்கணிக்கிறது. குழந்தைகள் வயது மற்றும் உடல் ரீதியாக பெரியவர்களுடன் சமமாக இல்லாதவர்கள் மட்டுமல்ல, அவர்கள் உளவியல் ரீதியாகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள்.

நாங்கள் வலியுறுத்துவது என்னவென்றால் – பாதிக்கப்பட்டவர்கள் (மக்கள்) தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். சட்ட அமலாக்கத்தின் கவனம் எப்போதும் குற்றம் புரியும் பெரியவர்கள்மீதே இருக்க வேண்டுமே தவிர பாதிக்கப்பட்டவர்கள்மீது சுமையை மாற்றுவதல்ல. குழந்தைகள் உரிமைகள் தொடர்பான மாநாட்டை (CRC) அங்கீகரித்த ஒரு நாடாக, மலேசியா, அனைத்து குழந்தைகளையும் பாலியல் சுரண்டலில் இருந்து பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது.

யூசுப் மமாத் உண்மையிலேயே இந்தச் சிக்கலைப் புரிந்துகொள்ள விரும்பினால், ‘பாலியல் சூழ்ச்சி (child grooming) மற்றும் ‘அதிகார அசமத்துவம் (power imbalance) பற்றிய விழிப்புணர்வு வகுப்புகளை நடத்துவதற்கு PSM தயாராக உள்ளது. இதன் மூலம் காவல்துறை அதிகம் விழிப்புணர்வுடன் இருந்து, இனி குழந்தைகள் (பாதிக்கப்பட்டவர்கள்) உயிருக்கு ஆபத்தான பரிந்துரைகளை முன்வைக்காமல் இருக்கலாம்.

 

எழுதியவர்: கேசவன் பார்வதி

No comments:

Post a Comment

யூசோப் மாமத்துக்கு விழிப்புணர்வு வகுப்பை நடத்த PSM தயார்

PSM பத்திரிகை செய்தி – 24 செப்டம்பர் 2025  குழந்தைகளை பலியாக்க வேண்டாம்; யூசோப் மாமத்துக்கு   விழிப்புணர்வு வகுப்பை நடத்த PSM தயார்...