பிஎஸ்எம் அறிக்கை – 4 நவம்பர் 2025
சமூக மற்றும் கல்வி பிரச்சனைகளை சமூக நீதி அடிப்படையிலான நடவடிக்கைகளால் தீர்க்க வேண்டும்
நாங்கள், கல்வி அமைச்சர் Fadhlina Sidek அவர்களின்
மாணவர்களின் பாதுகாப்பு, பள்ளிகளில் நடைபெறும் பலியல் (buli)
பிரச்சனைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும்
மனநலம் குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தும்
அணுகுமுறையையும் அர்ப்பணிப்பையும் முழுமையாக ஆதரிக்கிறோம்.
எனினும், இந்நடவடிக்கைகள் மேலும் அடிப்படை மாற்றங்கள்
மூலம் விரிவுபடுத்தப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.
பாலியல் வன்முறை, பாலின சமமின்மை, உணர்ச்சி அழுத்தம், டிஜிட்டல் ஊடகங்களில் ஆபாச உள்ளடக்க பரவல் போன்றவை தனிநபர் குற்றச்செயல்கள் அல்ல — அவை “பாலியல் வன்முறை கலாச்சாரத்தின்” வெளிப்பாடுகள். அதாவது, வன்முறையும் பாலியல் துன்புறுத்தலையும் எளிதில் மன்னிக்கும் ஒரு சமூகம் அல்லது சூழல் அமைப்பு தான் இதற்குக் காரணம். பள்ளிகள், பணியிடங்கள் மற்றும் வீட்டில் கூட என்ன நடக்கிறது என்பதற்கான உண்மையான உதாரணங்கள் இங்கே:
-
ஆசிரியர்கள் பள்ளிகளில் “பொழுதுபோக்கு” என்ற பெயரில் ஆபாசமாகப் பேசுதல்.
(“The 17-year-old exposing rape culture in Malaysian schools”, Al-Jazeera, 19 May 2021) -
ஆண் மாணவர்கள் பெண்களை மரியாதை இல்லாமல் அணுகி,
அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள். (“Johor teenager nabbed for allegedly creating, selling lewd AI pics of schoolmates”, The Star, 9 April 2025) -
பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் குறைத்து மதிப்பிடப்பட்டு புறக்கணிக்கப்படுகின்றன, இதில் குற்றவாளிகள் பெரும்பாலும் ஆண்கள், அவர்கள் விளைவுகளை சந்திப்பதில்லை.
(உதாரணம்: tahfiz சம்பவங்கள் மற்றும் பல) -
ஆண்கள் பெண்களின் எல்லைகளை மதிக்காத நிலை.
(“Bandar Utama stabbing: Teen allegedly attacked over rejected advances”, Sinar Daily, 14 October 2025) பெண்கள் மற்றும் டீனேஜ் பெண்களின் உடைகள் குறித்து சமூகம் பெரும்பாலும் விமர்சிக்கிறது..
(“Malaysia to revise school textbook telling girls to cover up”, Reuters, 16 January 2019)
அதனால், கல்விக் கொள்கை சமூக நீதி என்ற அடிப்படைக் கொள்கையை மையமாகக் கொண்டு மீள வடிவமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இதில் அடங்குவது:
-
Inclusive Sex Education கல்வியை அறிமுகப்படுத்துதல்,
-
பாலின சமத்துவ விழிப்புணர்வை மேம்படுத்துதல்,
-
இலவச மனநல சேவைகளை வழங்குதல்,
-
மேலும் சமூக ஆதரவு அமைப்பை வலுப்படுத்துதல்.
இதன் நோக்கம் — கல்வி மனிதரை ஒடுக்குமுறை அமைப்பிற்கு ஏற்ப மாற்றும் கருவியாக அல்லாது, அவர்களை முழுமையாக விடுதலை செய்யும் சக்தியாக மாற வைக்கும்.
1. கல்வி அமைப்பின் தோல்வி – ஆண் ஆதிக்கமும் (பேட்ரியார்க்கி) பாலின அசமத்துவமும் எதிர்கொள்வதில் இயலாமை
மலேசியக் கல்வி அமைப்பு, “ஒப்புதல்” (Consent) என்ற கருத்து, பாலின விழிப்புணர்வு, மற்றும் மனித உரிமைகள் பற்றிய ஆழமான புரிதலை மாணவர்களிடம் வளர்த்திட தவறியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை "மௌனமாக்கும்" (Culture of Silence)கலாச்சாரம் இன்னமும் வேரூன்றியுள்ளது, ஏனெனில் அவர்கள் வெளிப்படையாகக் குரல் கொடுக்க பாதுகாப்பான இடங்கள் இல்லை அல்லது அணுக முடியாத நிலையில் உள்ளனர். அதனால், அரசு ஒப்புமை மிக்க மற்றும் முன்னேற்றவாத பாலியல் கல்வியை (Inclusive & Progressive Sex Education) அறிமுகப்படுத்த வேண்டும் — இது மாணவர்களின் வயதிற்கு ஏற்ப உணர்ச்சி, உடல் மற்றும் சமூக பரிமாணங்களை பற்றி கற்றுத் தரும் ஒரு நவீன கல்வி அணுகுமுறை ஆகும். அதே நேரத்தில், அரசு பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
2. மாணவர்கள் மீது அதிகரித்து வரும் பகடிவதை சம்பவங்கள் மற்றும் சமூக அழுத்தம்
முதலாளித்துவ அமைப்பின் கீழ் ஆதரவு, பரஸ்பர உதவி மற்றும் ஒற்றுமையை விட போட்டி மற்றும் ஆதிக்கத்தை மதிக்கும் நமது சமூகத்தைவ் பகடிவதை சம்பவங்கள் பிரதிபலிக்கின்றன. இந்த பிரச்சனையை சமாளிக்க, அரசு முழுமையான (Holistik) மற்றும் ஒப்புமை மிக்க (Inklusif) கல்வி அணுகுமுறையை அமல்படுத்த வேண்டும் — இது மாணவர்களிடையே உணர்ச்சி நலன் (Emotional Well-being), பரிவு (Empati) மற்றும் சமூக ஒற்றுமையை (Solidariti Sosial) வலியுறுத்தும் வகையில் இருக்க வேண்டும்.
3. டிஜிட்டல் மூலதனவாதத்தின் (Kapitalisme Digital) சுரண்டலும் ஆபாச உள்ளடக்கப் பிரச்சனையும்
தொழில்நுட்ப முன்னேற்றம் பல நன்மைகளை வழங்கினாலும்,
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டீப்ஃபேக் (Deepfake) போன்ற தொழில்நுட்பங்கள் அதிகமாக தவறாகப் பயன்படுத்தப்பட்டு, பிறருக்கு தீங்கு விளைவிக்கின்றன. இது நம் சமூகத்தில் இன்னும் நிலைத்துள்ள ஆண் ஆதிக்க மனப்பான்மையும் (Patriarki), விமர்சன சிந்தனை (Critical Thinking) மற்றும் நெறி உணர்வின் (Etika) பற்றாக்குறையும் காரணமாகும். அரசு நாடு முழுவதும் டிஜிட்டல் கல்வி மற்றும் விழிப்புணர்வு (Digital Literacy) திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் — இதன் நோக்கம், குடிமக்களின் சமூக பொறுப்பு உணர்வை (Civic Mindset) மேம்படுத்தி, டிஜிட்டல் குற்றச்செயல்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமல்படுத்துவதாகும். இதன் மூலம், நாம் டிஜிட்டல் விழிப்புணர்வும், ஒழுக்க நெறியும் கொண்ட இளைய தலைமுறையை உருவாக்கி, முழுமையான (Holistik) மனித வளர்ச்சியை எட்ட முடியும்.
4. மாணவர்களின் மனநலம் மற்றும் உணர்ச்சி அழுத்தம்
அரசு, பள்ளிகளிலும் சமூகங்களிலும் முழுமையான (Comprehensive), இலவசமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய மனநல சேவைகளை வழங்க வேண்டும்.
இதில் அடங்குவது:
-
ஆலோசகர்கள் (Kaunselor) எண்ணிக்கையை அதிகரித்தல்,
ஆசிரியர்களுக்கான மனநலப் பயிற்சிகளை வலுப்படுத்துதல்,
-
மேலும் நண்பர் ஆதரவு (Peer Support) திட்டங்களை விரிவுபடுத்துதல்.
இந்த நடவடிக்கைகள், மாணவர்கள் எதிர்கொள்ளும் உணர்ச்சி அழுத்தம், கவலை மற்றும் மன உளைச்சல்களை சமாளிக்க முக்கியமானவை.
சர்வதேச சிறந்த நடைமுறைகள் (Best International Practices) அடிப்படையில்,
மலேசியாவும் தனது கல்வி அமைப்பில் மனநலத்தை முக்கிய கூறாக இணைக்க வேண்டும்.
சர்வதேச சிறந்த நடைமுறைகள்
1. ஸ்வீடன்
- ஆரம்பப் பள்ளியிலிருந்து ஒப்புமை மிக்க பாலியல் கல்வி (Inclusive Sex Education), மற்றும் பாலின சமத்துவத்தில் கவனம் செலுத்தி, பாலியல் வன்முறை வழக்குகளைக் குறைத்துள்ளது. கடந்த சில தசாப்தங்களாக, ஸ்வீடன் HIV தொற்று, இளவயது கர்ப்பம் மற்றும் குறைந்தவயது திருமணங்கள் ஆகியவற்றை குறிப்பிடத்தக்க வகையில் குறைத்துள்ளது.
2. பின்லாந்து -
முழு பள்ளி சமூகத்தையும் ஈடுபடுத்தும் பகடிவதை எதிர்ப்பு (Anti-Bullying) திட்டம் உலகளவில் முன்னுதாரணமாக உள்ளது. திட்டத்தின் முதல் ஆண்டிலேயே, 9–12 வயது மாணவர்களுக்கிடையேயான பள்ளி அகடிவதை குற்றங்கள் 30–40% வரை குறைந்துள்ளன.
3. நியூசிலாந்து -
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலுவான சட்டங்கள் மற்றும் ஆதரவு மையங்கள், அத்துடன் மனித உரிமைகள் விழிப்புணர்வு கல்வி வழங்கப்படுகிறது. நியூசிலாந்தின் அணுகுமுறை, ஒரு சுயாதீன நீதித்துறை, ஒரு சுதந்திர ஊடகம் மற்றும் மனித உரிமைகளை மதிக்கும் ஒரு அரசியல் கலாச்சாரத்தால் ஆதரிக்கப்படும் போது கடுமையான சட்டங்களை நியாயமாக செயல்படுத்த முடியும் என்பதைக் காட்டுகிறது. இது கருத்து வேறுபாடு அல்லது சமூக ஆர்வலர்களை அடக்கும் துஷ்பிரயோகங்களைத் தவிர்க்கிறது.
4. தென் கொரியா -
டிஜிட்டல் கல்வி (Digital Literacy) மிகவும் வலுவாக கற்பிக்கப்படுகிறது. அதே நேரத்தில், தகாத அல்லது ஆபாச உள்ளடக்கங்களைத் தடுக்கும் கடுமையான சட்டங்கள் அமலில் உள்ளன. அதே வேளையில் அதிகப்படியான கட்டுப்பாட்டைத் தவிர்க்க தெளிவான நடைமுறைகள் மற்றும் பொது கண்காணிப்பு உள்ளது. இதன் மூலம், குடிமக்கள் சைபர் குற்றங்களிலிருந்து பாதுகாக்கப்படுகின்றனர், அதேவேளை ஜனநாயக உரிமைகள் பாதிக்கப்படுவதில்லை.
5. கனடா -
பள்ளிகளில் முழுமையான மனநல ஆதரவு அமைப்பு உள்ளது —
இதில் தொழில்முறை ஆலோசனை, சக நண்பர் ஆதரவு (Peer Support) மற்றும்
உணர்ச்சிப் பிரச்சினைகளைச் சுற்றியுள்ள களங்கத்தையும் குறைக்கின்றன.
இதனால் மாணவர்களின் மனநல பிரச்சனைகள் திறந்தவெளியில் பேசப்பட்டு,
அதற்கான உதவி முன்னதாகவே கிடைக்கிறது.
சமூக நீதி அடிப்படையிலான சமூக மற்றும் கல்வி செயல் திட்டம்
1. அரசின் பங்கு
அரசு, ஒப்புமை மிக்க கல்வி (Inclusive Education), பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான கடுமையான சட்டங்கள், இலவச மனநல சேவைகள், மற்றும் தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம்
ஆகியவற்றை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மேலும், வறுமை மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் பலவீனத்தால் ஏற்படும் சமூக மன அழுத்தத்தின் சிக்கல்களை அரசாங்கம் இன்னும் விரிவாகப் பார்க்க வேண்டும்.
இந்த முயற்சி பொருளாதாரக் கொள்கையின் ஒரு விஷயம் மட்டுமல்ல, மக்களின் நல்வாழ்வைப் பற்றியது.
அரசு கூடுதலாக:
-
ஆபத்து அதிகமான இடங்களில் சமூகப் பணியாளர்கள் (Social Workers) எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்,
-
சமூக ஆதரவை வலுப்படுத்த வேண்டும்
-
ஆசிரியர்களின் நிர்வாகச் சுமையைக் குறைக்கவும் அரசாங்கம் தேவை, இதனால் அவர்கள் கற்பித்தல் மற்றும் மாணவர்களின் உணர்ச்சி பூர்வமான மாற்றத்தில் கவனம் செலுத்த முடியும்.
நமது கல்வி முறை எண்ணிக்கை மற்றும் சந்தைத் தேவைகளுக்கு மட்டும் இல்லாமல், மனிதாபிமான, நீதியான மற்றும் சமநிலையான மக்களை உண்மையிலேயே வடிவமைக்க இந்த நடவடிக்கைகள் அவசியம்.
2. பெற்றோரின் பங்கு
பெற்றோர்கள், குழந்தைகளின் பண்புகள், நெறிமுறைகள், மதிப்புகள் மற்றும் சமூக அணுகுமுறைகளை வடிவமைப்பதில் மிக முக்கியமான மற்றும் மாற்றமேற்படுத்தும் பங்காற்றுகின்றனர். அவர்கள் வெறும் குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பாளர்கள் மட்டுமல்ல; பள்ளிகளுடன் இணைந்து பகடிவதை பிரச்னைகள், பாலின சார்ந்த தொல்லை, மற்றும் உணர்ச்சி அழுத்தம் போன்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதில் முக்கிய கூட்டாளர்கள் ஆவர்.
பெற்றோர்கள் பாலின விழிப்புணர்வு (Gender Awareness) மற்றும் உணர்ச்சி கல்வி (Emotional Literacy) பற்றி போதுமான அறிவைப் பெற வேண்டும்; இதனால் அவர்கள் குழந்தைகளுக்கு மரியாதை, பரிவு (Empati) மற்றும் சமூக நீதி ஆகியவற்றின் முன்மாதிரியாக இருக்க முடியும்.
அதே நேரத்தில், பெற்றோர்கள் வீட்டில் திறந்த உரையாடல் மற்றும் நம்பிக்கையான சூழலை உருவாக்குவது அவசியம் —
இதனால் குழந்தைகள்:
-
தங்கள் உணர்வுகளைத் திறந்தவெளியில் பகிரலாம்,
-
பள்ளியில் அல்லது சமூகத்தில் எதிர்கொண்ட சிரமங்களை சொல்ல அஞ்சாமல் இருக்கலாம்,
-
உதவி கேட்கத் தயங்காமல் இருக்கலாம்.
இந்த வகையான பாதுகாப்பான தொடர்பு சூழல், குழந்தைகளின் உணர்ச்சி பாதுகாப்பு, நம்பிக்கை, மற்றும் தன்னிறைவு வளர்ச்சி ஆகியவற்றிற்கு முக்கியமான அடித்தளமாக அமைகிறது. மேலும், பெற்றோர்கள் பள்ளி வாரியங்கள், PIBG, komuniti program, dan aktiviti sokongan pelajar போன்றவற்றில் செயலில் கலந்து கொள்வதும் தேவையாகின்றது.பெற்றோர்களின் செயற்பாட்டு பங்கேற்பு மூலம்:
-
பள்ளியில் ஒற்றுமை வலுப்பெறும்,
-
குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஒப்புமைகொண்ட (inklusif) மற்றும் பரிவு நிறைந்த சூழலை உருவாக்க உதவும்.
-
ஒவ்வொரு மாணவரும் மதிப்பு மற்றும் அன்பை உணர்வார்கள்.
இத்தகைய ஒட்டுமொத்த (holistik) ஆதரவு அமைப்பு, குழந்தைகள் உணர்ச்சி, சமூக மற்றும் மனிதாபிமான அடிப்படையில் ஆரோக்கியமாகவும் சமநிலையுடனும் வளர உதவுகிறது.
3. பள்ளிகளின் பங்கு
பள்ளிகள், மாணவர்கள் மரியாதை மற்றும் பரிவு அடிப்படையிலான சூழலில் வளரத் தேவையான நல்லிணக்க பண்பாட்டை உருவாக்குவது மிக முக்கியமானது. அதற்காக, ஆசிரியர் பயிற்சியை வலுப்படுத்துதல், மாணவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குதல், அத்துடன் டிஜிட்டல் மற்றும் பாலின கல்வியறிவு கல்வி வழங்குதல் வேண்டும்.
4. சமூகங்களின் பங்கு
சமூகத்தின் செயல்பாட்டும் சம அளவில் முக்கியமானது. உள்ளூர் மட்டத்தில் சமூக அதிகாரமளித்தல், பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் பாலின மற்றும் மனநல ஆதரவு மையங்களைத் திரட்டுதல் தேவையானது
முடிவுரை (Kesimpulan)
பள்ளிகளில் இடம்பெறும் பாலியல் மற்றும் உடல் ரீதியான வன்முறைகளை ஒழிக்க பல்வேறு பிரச்சாரங்கள் மற்றும் திட்டங்களை பள்ளிகளில் செயல்படுத்தினாலும், உண்மையான தீர்வு, சமூக நீதி, பாலின விழிப்புணர்வு மற்றும் வர்க்க ஒற்றுமையை மையமாகக் கொண்ட முறையான மாற்றம் மற்றும் விரிவான சமூக சீர்திருத்தத்தில் தான் உள்ளது. மனித உரிமைகள், பரிவு, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தும் சோசலிசக் கோட்பாடு வழியே தான் மலேசியக் கல்வி முறை, உண்மையில் நீதி, முன்னேற்றம் மற்றும் மனிதாபிமானம் நிறைந்த சமூகத்தை உருவாக்கும் அடித்தளமாக மாற்ற முடியும்.
எழுதியவர்:
கிருஷ்ண வேணி சிங்கம்
மலேசிய சோசலிசக் கட்சி (PSM) சோசலிச இளைஞர் குழு
No comments:
Post a Comment