சோசலிச இளைஞர்பிரிவு பத்திரிக்கை அறிக்கை – 1 டிசம்பர் 2025
சந்தேக நபர்களை (OYDS) 24 மணி நேரத்திற்கும் மேலாக காவலில் வைத்திருப்பதில் காவல்துறை அதிகார துஷ்பிரயோகம்
28 நவம்பர்
2025 அன்று நடந்த திடீர் சோதனையுடன் தொடர்பான போலீஸின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் செய்தியாளர்கள் நெறிமுறையின் புறக்கணிப்பு ஆகியவற்றை மலேசிய சோசலிசக் கட்சியின்
இளைஞர் பிரிவு தனது கண்டனத்தை தெரிவிக்கிறது.
மலேசிய அரச காவல் (PDRM), குறிப்பாக
டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகம் (IPD Dang Wangi),
171 மலேசிய குடிமக்களையும் 30 பிறநாட்டு நபர்களையும் 24 மணி நேரத்தை மீறி, மஜிஸ்டிரேட் ரிமாண்ட் உத்தரவு இன்றி OYDS (சந்தேகிக்கப்படும் நபர்கள்) என்ற அடிப்படையில் தடுத்துவைத்தது
சட்டவிரோதமாகும். இது மலேசிய மக்களுக்கு
எதிரான நம்பிக்கைத் துரோகம் எனப்படும் செயல்.
29 நவம்பர்
அன்று மஜிஸ்டிரேட் ரிமாண்ட் கோரிக்கையை நிராகரித்திருந்தபோதிலும், அனைத்து மலேசிய OYDS நபர்களும் ஒருவருக்கு ஒருவர் ஜாமீன் அளிக்கும்வரை விடுதலை செய்யப்படவில்லை. இது 30 நவம்பர் பிற்பகல் 4 மணி வரை — அதாவது
28 நவம்பர் இரவு 8 மணியிலான கைது முதல் 40 மணி நேரம்
— சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரக் காலவரம்பை
மீறி தொடர்ந்தது.
29 நவம்பர்
முதல் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் IPD Dang Wangi முன்பு கூடிக் கொண்டு, ஜாமீன் செயல்முறை மற்றும் நியாயத்திற்கான கோரிக்கையை
வெளிப்படுத்தினர். சோதனையின் போது மிரட்டல் மற்றும் மனித உரிமை மீறல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருமண
நிலை போன்ற தகவல்கள் வைரலானது. மெய்நிகர் ஊடகங்கள்
கூட தனியுரிமையை மீறி, செய்தியாளர்களின் நெறிமுறைகளுக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டனர்.
சோசலிச
இளைஞர் பிரிவினரான நாங்கள்,
இத்தகைய சோதனைகளால் ஏற்படும் பாகுபாடு மற்றும் அச்சுறுத்தல் பிரச்சினைகளையும் முன்வைக்க விரும்புகிறோம். இந்த சோதனை மற்றும்
அதன் பிந்தைய நடவடிக்கைகள் OYDS மீது அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் ஏற்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை.
அதே
நேரத்தில், OYDS நபர்கள் பாகுபாடு, சமூக ஒதுக்கல், வேலை இழப்பு போன்ற எதிர்மறை விளைவுகளை சந்திக்கும் அபாயத்திலும் உள்ளனர். மலைசியகினி செய்தி தெரிவிக்கையில், கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பைடில் பின் ஹாஜி மார்சுஸ்,
போதிய ஆதாரமின்மையால், போலீஸ் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியாமல் இருந்ததாக கூறினார்.
இது, மேற்கொள்ளப்பட்ட சோதனையானது அவசரமான,
உரிமை மீறல் மற்றும் பயனற்றது என்பதைக் காட்டுகிறது.
இந்தச்
சோதனை, சபா
சுரங்க ஊழல் விவகாரம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துகொண்டிருந்த நேரத்தில் நடைபெற்றிருக்கிறது என்பதனை சோசலிச
இளைஞர் பிரிவினர் நினைவூட்டுகிறோம். இரண்டு வார உளவுத்துறை நடவடிக்கைக்கு பின் இந்த சோதனை
இப்போது ஏன் நடத்தப்பட்டது?
அரசாங்கம் சம்பந்தப்பட்ட சர்ச்சைகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்ப ஒரு வழியாக "வக்கிரமான
நிகழ்வுகளை எதிர்த்துப் போராடுவது" போன்ற பிரபலமான பிரச்சினையை எழுப்ப முயற்சிப்பது முந்தைய மற்றும் தற்போதைய அரசாங்கங்களுக்கு பொதுவான நிகழ்வுகளாகும். மக்கள்தான் எச்சரிக்கையுடன், விமர்சன மனப்பாங்குடன் இருக்க வேண்டும். மெத்தனமாக இருக்கக்கூடாது.
இறுதியாக,
அரச மலேசிய காவல்துறை பொறுப்பேற்று, அவர்கள் சட்ட நடைமுறைகளை புறக்கணித்துள்ளனர் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் நலன் காக்க வேண்டிய நிறுவனமே பாதிப்பை ஏற்படுத்திய இந்த அநீதிக்கு நீதியை
அளிக்க வேண்டும்.
வெளியிடுபவர்
: Muhammad Aiman bin Mohd Sees
சோசலிச
இளைஞர் பிரிவு துணைத் தலைவர்
No comments:
Post a Comment