நான், அமீர் ஷாஃபிக், ஜொகூர் மாநிலத் தேர்தலில் N.48 ஸ்கூடாய் தொகுதிக்கான மலேசிய சோசலிசக் கட்சியின் (PSM) வேட்பாளர்.
இன அடிப்படையிலான பாகுபாடு மற்றும் இன அரசியல் ஆகியவை மலேசிய மக்களைப் பிளவுபடுத்தி வரும் நீண்டகால சமூகப் பிரச்சினைகளாக இருப்பதை ஆழமாக உணர்கிறேன். எனவே, இனவெறி மற்றும் இன அரசியலுக்கு எதிராகப் போராடும் மலேசிய சோசலிசக் கட்சியை சேர்ந்த நான் , பின்வரும் உறுதிமொழியை ஏற்கிறேன்:
- மக்களின் வாக்குகளையோ ஆதரவையோ பெறுவதற்காக எந்தவிதமான இன அரசியலையும் நான் பயன்படுத்த மாட்டேன்.
- தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்ட உரைகள், கருத்துத் தெரிவிப்புகள், ஊடக அறிக்கைகள், சமூக ஊடகப் பதிவுகள், துண்டுப் பிரசுரங்கள், பதாகைகள் அல்லது வேறு எந்தப் பிரச்சாரப் பொருள்களிலும் இனவெறியையோ இன அடிப்படையிலான வெறுப்பையோ தூண்டும், பிற இனத்தவரையோ புலம்பெயர்ந்தவர்களையோ பாகுபடுத்தும் எந்தவிதமான கூறுகளையும் நான் பயன்படுத்த மாட்டேன்.
- எங்களின் அனைத்து நடவடிக்கைகளும் அரசியல் போராட்டங்களும் மக்களின் வர்க்க (Class) அடிப்படையிலேயே அமையும்; தோலின் நிறம் அல்லது இன அடிப்படையில் அல்ல. எங்களின் கொள்கைகளும் போராட்டங்களும் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவே அமையும்.
- நான் மாநில சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், சமத்துவச் சட்டம் (Equality Act) ஒன்றை இயற்றுவதற்கான முன்மொழிவை முன்வைக்க முயற்சிப்பேன்.
இந்த உறுதிமொழி, மலேசியாவில் இனவெறி மற்றும் இன அரசியலை ஒழிப்பதற்கான எங்களின் உறுதியை மீண்டும் வலியுறுத்துகிறது.
மக்கள் வாழ்க!
இனவெறி ஒழியட்டும்!
சமத்துவம் வெல்லட்டும்!
No comments:
Post a Comment