மாண்புமிகு
டாக்டர் சூல்கிப்ளி,
மலேசிய
சுகாதார அமைச்சர்,
புத்ராஜெயா.
நடந்து முடிந்த நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் அடைந்திருந்த வெற்றிக்கும் அதன் சாதனைக்கும் வாழ்த்துகளை கூறுவதோடு நாட்டின் புதிய சுகாதார அமைச்சராக பதவியேற்றிருக்கும் தங்களுக்கும் வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி. இதற்கிடையில், நாட்டின் சுகாதார சேவையையினை மேம்படுத்துவதற்கு தாங்கள் இலக்கு கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. அந்நிலையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அடுத்தாண்டு வரவுசெலவில் 2.2% இருந்து அதனை 3.5% ஆக உயர்த்த ஆவணம் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது நாட்டின் சுகாதார பிரிவினை மேம்படுத்துவதோடு அதன் தர உயர்விற்கும் வழிவிடும்.
ஆனால், அன்மையில் சுகாதார அமைச்சின் துணை அமைச்சரும் தாங்களும் வெளியிட்டிருந்த நோயாளிகளுக்கான காப்புறுதி திட்டமானது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் தேர்தல் கொள்கை அறிக்கையில் 9வது அறிக்கையாக சுகாதார செலவினங்கள் அதிகரித்து வருவதாகவும் அதனை ஈடுகட்ட மக்கள் பெரும் இடர்களை சந்திக்க நேரிடுவதாகவும் கூறியிருந்த நிலையில் மலேசியர்களால் சுகாதார காப்புறுதி எடுத்துக்கொள்வது சாத்தியமானதா? சிலாங்கூர் மாநிலத்தில் வரைவில் இருக்கும் “பெடுலி சிஹாட்” திட்டத்தின் உருமாற்றமாக தான் இருக்க வேண்டும். அதற்கு எந்தவொரு கூடுதல் கட்டணமோ அல்லது கட்டணமோ விதிக்கக்கூடாது.
நாங்கள் வழங்கிடும் பரிந்துரையில் மருத்துவ சேவை
மற்றும் பொது மருத்துவ அமைப்பு முறை குறித்து தெளிவாக எடுத்துரைத்துள்ளோம். மேலும், அதனை விவேகமாய் கையாலும் ஆலோசனைகளும் முன் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவத்தை தனியார்மயமாக்குவதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் பி.எஸ்.எம் மற்றும் அதன் கூட்டமைப்பு ஆகியவற்றோடு சுமூகமான கலந்துரையாடலை சுகாதார அமைச்சு மேற்கொள்வதற்கு ஏதுவாக எங்களின் இந்த பரிந்துரையை முதலில் பெற்றுக் கொள்ளுதல் சிறப்பு. மக்களின் அரோக்கியமான வாழ்வாதாரத்திற்கு சாத்தியமான நாட்டின் சுகாதார சேவையை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதனை செம்மைப்படுத்துதல் நம் கடமை.
நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் நாட்டின் சுகாதார பிரிவில், களைய வேண்டிய பிரச்னைகளும் சிக்கல்களும் கீழ் கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது.
பிரச்னை 1: அரசு மருத்துவமனையில் குறைந்த எண்ணிக்கையிலான நிபுணத்துவ மருத்துவர்கள்.
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளில் 75 விழுகாட்டினரை மருத்துவர்கள் பரிசோதனையை மேற்கொள்ளும் நிலையினை அரசு மருத்துவமனைகள் கொண்டிருந்தாலும் அரசு மருத்துவமனைகளில் வெறும் 25 விழுகாடு மட்டுமே நிபுணத்துவ மருத்துவகள் பணியாற்றுகிறார்கள். இந்நிலையால், அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கும் இடையிலான தரமான மருத்துவ சேவை வேறுபடுகிறது. குறிப்பாக பி40 மற்றும் எம்40 வர்கத்தினர் எப்பவுமே பொது மருத்துவ சேவையை சார்ந்து இருப்பதால் அவர்கள் பொது மருத்துவமனையில் நிபுணத்துவ மருத்துவரின் சேவையை பெறுவதற்கு வார கணக்கிலோ அல்லது மாத கணக்கிலோ காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால், பணம் செலுத்தி மருத்துவம் பார்க்க சாத்தியமுள்ளவர்கள் தனியார் மருத்துவமனை அல்லது முழு கட்டணத்தை செலுத்தி பொது மருத்துவமனையிலோ நிபுணத்துவ மருத்துவ சேவையை பெறுகிறார்கள். ஈப்போ பொது மருத்துவமனை மற்றும் ஈப்போவில் இயங்கும் தனியார் மருத்துவமனை இடையிலான நிபுணத்துவ மருத்துவம் குறித்த பட்டியலை காணவும்.
அட்டவணை 1. மருத்துவமனையில் நிரந்திர நிபுணத்துவ மருத்துவர்கள்.
நிபுணத்துவம்
|
ஈப்போ மருத்துவமனை
|
தனியார்
மருத்துவமனை
|
இருதய அறுவை சிகிச்சை
|
இல்லை
|
2
|
சிறுநீரகம் நிபுணத்துவம்
|
இல்லை.
கோலாலம்பூரிலிருந்து வருகை புரிதல்.
|
4
|
புற்றுநோய் நிபுணத்துவம்
|
இல்லை.
கோலாலம்பூரிலிருந்து வருகை புரிதல்.
|
3
|
இந்நிலை ஈப்போ பொது மருத்துவமனை மட்டுமின்றி கிள்ளான் பள்ளத்தாக்கு உட்பட நாட்டின் அனைத்து அரசு பொது மருத்துமனைகளிலும் தொடர்கிறது. இந்நிலையானது அவசியமாக கிடைக்க வேண்டிய நிபுணத்துவ சேவை கிடைக்காமல் சம்மதப்பட்ட பிரச்னைகளில் மருத்துவ சேவை காலதாமதமாகவும் பலவீனமாகவும் கிடைக்கிறது.
பி.எஸ்.எம் கட்சியின் பரிதுரை.
1. அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை ஆகியவற்றிலிருக்கும் நிபுணத்துவ மருத்துவர்களை அவர்களின் அனுபவ ரீதியில் துள்ளியமான கணக்கியல் மேற்கொள்ளுதல். அதில் 5 ஆண்டுக்கு குறைவாக, 6 முதல் 10 ஆண்டுகாலம் மற்றும் 11 ஆண்டு முதல் 15 ஆண்டு வரையிலான நிபுணத்துவ மருத்துவர்கள் என ஆய்வினை வரையறுத்தலின் மூலம் தெளிவான அடுத்தக்கட்ட நகர்வினை முன்னெடுக்கவும் உண்மையான புள்ளியல் நிலையும் நமக்கு கிட்டும்.
2. புதிய தனியார் மருத்துவமனைகள் உருவாவதை கட்டுப்படுத்துதல். இது மிகவும் அவசியமான ஒன்று. புதிய தனியார் மருத்துவமனைகள் உருவாகும் போதும் அவர்கள் நிபுணத்துவ மருத்துவர்களை தங்கள் வசம் இழுத்து விடுகிறார்கள். அதிகமான ஊதியத்தை முன் வைத்து அரசு மருத்துவமனை மருத்துவர்களை தனியார் மருத்துவமனைகள் கவர்ந்து விடுகிறார்கள்.
3. மருத்துவ சேவை துறை ஊழியர்களுக்கு சிறப்பு ஆணையம் உருவாக்குதல். அதன் மூலம் அவர்களின் சிறப்பு நிதியம் மற்றும் ஊதிய ஆகியவை மேம்படுத்துதல் இயலும். இதன் மூலம் ஐஜெஎன்-இல் வரையறுக்கப்பட்ட ஊதியம் உருமாற்றம் செய்யப்படலாம். மேலும், ”sabbatical” வழிமுறையின் மூலம் 5 ஆண்டுகள் சேவைக்கு பின்னர் 4 மாத நிபுணத்துவ வாய்ப்பினை வழங்கி அவர்கள் சார்ந்த துறையில் இன்னும் ஆழமான அனுபவத்தை பெற வழி செய்யலாம்.
4. முழு கட்டணம் செலுத்தி மருத்துவம் பார்த்தல் திட்டத்தை முடக்குதல் அவசியம். இந்த திட்டம் மற்ற மருத்துவமனைகளுக்கு விரிவாக்கம் செய்ய கூடாது. இத்திட்டத்தால் கட்டணம் செலுத்தாத நோயாளிகளுக்கு மற்றும் புதிய மருத்துவர்கள் நிபுணத்துவ மருத்துவர்களால் கவனிக்கப்படுகிறார்களா என்பதை கண்டறிய ஒரு மூன்றாம் தரப்பு ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டும். நிபுணத்துவ மருத்துவர்களுக்கு மத்தியில் உறவு எப்படி உள்ளது? மூத்த நிபுணத்துவ மருத்துவர்கள் முழு கட்டணம் செலுத்தி வருபவர்களைக் கவனிக்க இளைய நிபுணத்துவ மருத்துவர்களின் வேலை பளுவை அதிகரிக்கிறார்களா? இத்திட்டம் நிபுணத்துவ மருத்துவர்களுக்கு மத்தியில் சலசலப்பு ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஏனெனில், அனைத்து பிரிவும் தங்கள் நோயாளிகளை உடனடியாக கவனித்தார்கள் என்றால் இத்திட்டத்தை மக்கள் தேர்ந்தெடுக்கவே மாட்டார்கள். இத்திட்டத்தில் பங்கேற்காத நிபுணர்கள் தொடர்ந்து மக்களுக்கு வேலை செய்ய சிறப்பு சலுகை (மாதத்திற்கு ஏறத்தாழ RM2000) வழங்கும் அணுகுமுறையை ஆராய வேண்டும்.
5. அரசாங்கம் அனைத்து வகையிலான சுகாதார சுற்றுலாவை ஊக்குவிக்கும் நடவடிக்கையினை கைவிட வேண்டும். தனியார் மருத்துவமனைகளின் வளர்ச்சி நிபுணத்துவ மருத்துவர்களை வசப்படுத்துவதால் அரசு மருத்துவமனைகளின் சேவை தரம் இயல்பாகவே குறைத்திடும் மதிப்பிடும் சூழலுக்கு தள்ளப்படுகிறது.
பிரச்னை 2: அரசு மருத்துவமனைகள் எதிர்நோக்கும் இடநெரிசல்
அரசாங்க மருத்துவமனைகளில் இடநெரிசல் பெரும் பிரச்னையாக தலைதூக்கியுள்ளது. குறிப்பாக மாநிலங்களின் மையங்களான ஜோர்ஜ்டவுன், ஈப்போ, கிள்ளான் மற்றும் சிராம்பான் ஆகியவை இதில் அடங்கும். இம்மாதிரியான சிக்கல்கள் பல்வேறு பிரச்னைகளை உருவாக்குவதோடு நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்குவதிலும் முட்டுக்கட்டையாக விளங்குகிறது. அவற்றில் ;
- வார்டில் நோயாளியை அனுமதிக்கும் கட்டில் இல்லாததால் காலதாமதத்தை எதிநோக்குவது.
- ஒரு நோயாளி முழுமையாக குணமடைவதற்கு முன்னரே அடுத்த நோயாளியை வார்ட்டில் அனுமதிக்க வேண்டி முன்னதாகவே வார்ட்டிலிருந்து வெளியேற்றுவது.
- மற்ற நோயாளிகளிடமிருந்து வைரஸ் எளிதில் தொற்றிக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்துவது.
- போதுமான எண்ணிக்கையை காட்டிலும் அதிகமான நோயாளிகள் வார்ட்டில் அனுமதிக்கப்படுவதால் மருத்துவர்களும் தாதியர்களும் அழுத்ததிற்கு ஆளாகுதல்.
- இடநெரிசலையும் அதிகமான நோயாளிகளை வார்ட்டில் கொண்டிருக்கும் சூழலில் வேலை செய்யும் ஊழியர்கள் மனநிலை பாதிப்பையும் எதிர்நோக்குகிறார்கள்.
பி.எஸ்.எம் கட்சியின் பரிந்துரைகள்
1. நாட்டிலிருக்கும் ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் அதன் “occupancy” விகிதம் குறித்து முழுமையான ஆய்வினை மேற்கொள்ளுதல். ஆய்வின் முடிவை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அஸ்திரேலியா ஆகிய நாடுகளோடு ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலையில் உள்ளதா என ஒப்பிடவேண்டும்.
2. ஈப்போ, கிள்ளான், சிரம்பான் மற்றும் பினாங்கு உட்பட அனைத்து மாநிலங்களின் மையங்களிலும் இரண்டாவது அரசு மருத்துவமனையை கட்ட வேண்டும்.
3. ”step down” முறையினை கையாண்டு பிசியோதெராபி நோயாளிகள் அவர்களின் சிகிச்சைக்காக பிற அரசு மருத்துவமனைகளுக்கும் மருத்துவ கல்வியல் மையங்களுக்கும் அனுப்பி வைக்கும் முறையினை ஆராய வேண்டும். அதேவேளையில், வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் சுமையை குறைக்க அனைத்து நகரின் மையங்களிலும் “satelit” மருத்துவமனைகளை அமைக்க வேண்டும்.
பிரச்னை 3: சுமையை அதிகரிக்கும் உபரி மற்றும் பொருட்களின் கட்டணம். நடப்பில், சிகிச்சைக்கான பொருட்களில் ஒரு பகுதிக்கு நோயாளி கட்டணம் செலுத்தும் முறை அமலில் உள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு முறையும் அறுவை சிகிச்சைக்கான பொருட்களை வாங்கவில்லை எனும் காரணத்தால் அறுவை சிகிச்சை ஒத்திவைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு கீழ்கண்ட பொருட்களை நோயாளிகளே அரசு மருத்துவமனைகளில் வாங்க வேண்டிய பொருட்களாகும்;
- Intra-occular
lens (Untuk catarract) - RM 500 se biji
- Implan
untuk keretakan tulang tibia - RM 2000 hingga RM 3000
- Alat
‘knee replacement’ - RM 5000 hingga RM 10,000
- Implan
spinal rod - RM 5000 – RM 10,000
- Surgical
stapler untuk pembedahan usus – RM 1500 hingga RM 2000
- self-expanding
metallic stent untuk barah usus - RM 3000
- Surgical
mesh untuk menampung incisional hernia - RM 500 – RM 1500
- Drug
eluting stent – RM 7000 se batang
- Cardiac
pacemaker – RM 25,000
மருத்துவமனைகளில் மற்ற சேவைகள் ஏற்புடைய நிலையில் இருந்தாலும் மேற்சொல்லப்பட்ட பொருட்களின் நிலை ஏழ்மை மற்றும் B40, M40 நிலை மக்களுக்கு பொருளாதார ரீதியில் பெரும் சுமையாக விளங்குகிறது. ஏற்கனவே பொருளாதார அழுத்தம் ஏற்பட்டுள்ளதால் நோயாளியை கவனித்துக் கொள்பவர் அல்லது நோயாளி விடுமுறை எடுத்தல் நோயாளியை சிகிச்சைக்காக அழைத்து செல்லுதல் போன்ற சூழலிலும் சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள்.
பி.எஸ்.எம் கட்சியின் பரிந்துரை.
நோயாளிகளின் குடும்ப பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு கருவிகளை வாங்குவதற்கு கூடுதல் நிதி உதவியை வழங்குதல் வேண்டும். இக்காரணத்திற்காகத்தான் பி.எஸ்.எம் நாட்டின் பட்ஜெட்டில் புதிய சுகாதார அமைச்சர் முன் வைத்த கூடுதல் நிதி ஒதுகீடுக்கு முழு ஆதரவு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரச்னை 4: நாட்டில் அதிகரிக்கும் காசநோய்
நாட்டில் தொடர்ந்து காசநோய் (டீபி) கண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பது கவலைக்குரியது. கடந்த 1990ஆம் ஆண்டு 10,000ஆக இருந்த அந்த எண்ணிக்கை கடந்த 2016ஆம் ஆண்டில் 26,168 ஆக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நோய் கண்ட வெளிநாட்டு ஊழியருக்கு அரசு மருத்துவமனைகளில் விதிக்கப்படும் அதிகமான கட்டணமே நோய் அதிகரிக்க முதன்மை காரணம் என்றும் நம்பப்படுகிறது. அதிகமான கட்டணத்தை செலுத்திட தவிர்க்க அவர்கள் சுயமாக மருத்துவம் பார்த்துக் கொள்ளும் நிலையில் நோய் முற்றி மற்றவர்களும் அது தொற்றிவிடுகிறது.
பி.எஸ்.எம் கட்சியின் பரிந்துரைகள்.
1. வெளிநாட்டு ஊழியர்களுக்கு விதிக்கப்படும் அதிகமான கட்டணத்தை நிறுத்த வேண்டும். அவசியம் என்றால் அவர்களின் “லேவி”யை அதிகரித்து அதன் மூலம் அவர்களின் மருத்துவ உதவிநிதியாக ஒருபகுதியினை பயன்படுத்தலாம். (2016இல் வசூலிக்கப்பட்ட லேவி வெ.2 பில்லியன்)
2. காசநோயை காரணம் காட்டி வேலை பெர்மிட்டை இரத்து செய்து அவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டாம். இந்நடவடிக்கையால் இந்நோய் கண்டவர்கள் சுயமாக முன் வந்து இந்நோய்க்கு மருத்துவம் பார்க்க தயங்குவதோடு சொந்த நாட்டிற்கு அனுப்பி விடுவார்கள் என அஞ்சுகிறார்கள். இங்கு வேலைக்காக சொந்த நாட்டில் வாங்கியிருக்கும் கடன் பிரச்னைகளை எண்ணி அஞ்சுவதால் அவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப விரும்புவதில்லை.
பிரச்னை 5: வெளிநோயாளி கிளினிக்கில் அதிகமான நோயாளிகள்.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவமனைகள் மற்றும் அரசு கிளினிக்கில் சுமார் 60 மில்லியன் பேர் சிகிச்சை பெறுகிறார்கள். அளவுக்கு அதிகமான நோயாளிகள் வருகை புரிவதால் அஃது மருத்துவர்களுக்கு அழுத்தமாவதால் நோயாளிகள் மீதிலான பரிசோதிக்கும் நேரமும் அவர்கள் மீதிலான பரிசோதனையும் சுறுக்கப்படுகிறது.
பி.எஸ்.எம் கட்சியின் பரிந்துரைகள்.
1. சுகாதார அமைச்சின் கீழ் மருத்துவர்களை அதிகரிக்க வேண்டும். மேலும், வெளிநோயாளி மையங்களில் அதிகமான மருத்துவர்களை பணியில் அமர்த்த வேண்டும்.
2. வெளிநோயாளி மருத்துவ மையங்களில் போதிய இடவசதி இல்லாமல் போனால் வேலை நேரத்தை 2 பிரிவாக வரையறுத்தல் விவேகமாய் அமையும். காலை மணி 7 முதல் மதியம் 3 மணி வரை முதல் பகுதியும் மதியம் 3 முதல் இரவு 10 மணி வரை இரண்டாவது பகுதியாகவும் வேலை நேரத்தை அமல்படுத்தலாம்.
3. நீண்டக்கால நோய்கள் என வரையறுக்கப்படும் நீரழிவு நோய், இரத்த கொதிப்பு, இளைப்பு நோய், கீழ்வாதம் உட்பட நெஞ்சு வலி ஆகியவற்றுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வகையிலான திட்டத்தை ஆய்வு செய்து அதன் மூலம் சிகிச்சை பெறுவதை உறுதி செய்தல் வேண்டும். இந்த நோயாளிகளுக்கான மருந்து வகைகளை அரசாங்கம் சம்மதப்பட்ட தனியார் கிளினிக்குகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். நோயாளிகளை கவனிக்கும் தனியார் கிளினிக் மருத்துவர்களுக்கு அவர்கள் பரிசோதிக்கும் நோயாளிகள் அடிப்படையிலான எண்ணிக்கையின் கீழ் ஊதியம் நிர்ணயம் செய்தல் வேண்டும். ஆனால், நோயாளிகளின் வருகை மற்றும் சிகிச்சை முறையில் அஃது அடங்கியிருக்ககூடாது. அரசாங்க கிளினிக்கில் வெளிநோயாளிகளுக்கு விதிக்கப்படும் வெ.1 கட்டணம் தனியார் கிளினிக்கிலும் அவர்களுக்கு விதிக்கப்பட வேண்டும். இத்திட்டத்தில் பங்கெடுக்க விரும்பும் தனியார் கிளினிக் மருத்துவர்கள் அது குறித்த கற்பியல் பயிற்சிகளில் பங்கெடுப்பதோடு நீண்டகால நோய்பட்ட நோயாளிகளை பராமரிக்கும் மற்றும் சிகிச்சை அளிக்கும் வரையறை கொண்ட அதன் தொடர் நிகழ்வுகளிலும் கலந்துக் கொள்ள வேண்டும்.
4. இந்த தனியார் கிளினிக் திட்டத்தின் கீழ் தங்களின் பார்வையில் இருக்கும் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் தெளிவினை தனியார் கிளினிக் மருத்துவர்கள் கொடுத்திடல் வேண்டும். எடுத்துக்காட்டாக, நீரழிவு சிகிச்சையின் செயல்திறனை HbA1c மூலமாக கண்டறியலாம். HbA1c என்பது இரத்தத்தில் உள்ள ஒருவகை பொருளாகவும் அஃது ரத்ததில் இனிப்பு எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. இந்நிலையில்,60% நீரழிவு நோயாளின் உடலில் HbA1c அளவை 7.5%’ற்கும் குறைவான நிலைக்கு கொண்டு வரும் தனியார் கிளினிக்கிற்கு சிறப்பு ஊக்கத்தொகையும் வழஙக வேண்டும். அதேவேளையில், அந்த விழுகாடு 70ஆக உயர்ந்தால் சிறப்பு ஊக்கத்தொகையும் மேலும் இதர சிறப்புகளும் வழங்கிடல் வேண்டும். இந்நிலையில், மருந்தை சாப்பிடுவதோடு மட்டுமின்றி ஒவ்வொரு நோயாளியும் உணவு கட்டுப்பாடு, உடல்பயிற்சி மற்றும் உடல் எடையையும் குறைத்தல் வேண்டும். நோயாளிகள் இதனை முறையாக மேற்கொள்கிறார்களா என்பதை மருத்துவர்கள் கண்காணிக்க வேண்டும்.
5. இத்திட்டத்தின் கீழ் மருத்துவ சேவையினை பெற்று வரும் நோயாளிகள் புதிய சிக்கல்கள் எழுந்தால் அவர்கள் மீண்டும் சம்மதப்பட்ட நிபுணத்துவ மருத்துவரை அணுகிடும் வகையிலான வரையறை ஒன்றையும் அமைத்தல் வேண்டும். நடப்பில் அரசு கிளினிக் மருத்துவர்களோடு ஒப்பிடுகையில் தனியார் மருத்துவர்களின் பரிந்துரை நோயாளிகளுக்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பிரச்ச்னை 6: பட்ஜெட் பற்றாக்குறை.
நாட்டில் 2018’ஆம் ஆண்டிற்காக சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி வெ.26.58 பில்லியன். இஃது மத்திய அரசின் மொத்த பட்ஜெட்டில் 9.5% மட்டுமே. மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு வெ.280.2பில்லியன் ஆகும். ஆனால், மேற்சொல்லப்பட்ட பரிந்துரைகளை முன்னெடுக்க இந்த ஒதுக்கீடு போதுமானதல்ல. எனவே, சுகாதார அமைச்சிற்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும்.
பி.எஸ்.எம் கட்சியின் பரிந்துரை
1. நாட்டின் பட்ஜெட்டில் சுகாதார அமைச்சிற்கு 2.2%லிருந்து அதன் ஒதுக்கீடு 3.5% ஆக ஒதுக்கப்பட வேண்டும் எனும் சுகாதர அமைச்சர் டாக்டர் சூல்கிப்ளியின் கோரிக்கையை பி.எஸ்.எம் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. இதுவொரு நல்ல ஆலோசனை, இதனை வரும் ஐந்தாண்டுகளில் கட்ட கட்டமாக அமல்படுத்துதல் வேண்டும். நாட்டின் மொத்த உற்பத்தி வெ.1.337 டிரிலியனாக இருக்கும் பட்சத்தில் அதில் 3.5% என்பது வெ.46.8 பில்லியனாகும்.
2. பொது சுகாதார காப்புறுதி திட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இது B40 மற்றும் M40 நிலையிலான மக்களுக்கு பெரும் சுமையாக அமைகிறது. மேலும், காப்புறுதி நிலையிலான அடிப்படை கூறுகள் கீழ்கண்டவாறு அமைந்திட வாய்ப்பு உள்ளது.
- சுயமாக கட்டணம் செலுத்தும் நோயாளிகளுக்கும் அரசாங்கத்தின் உதவியோடு கட்டணம் செலுத்தும் நோயாளிகளுக்கும் வேறுபாடான நிலையிலான தரமான மருத்துவை சேவையை வழங்குதல்.
- ‘சேவைக்கான கட்டணம்’ முறையை அமல்படுத்தினால் சிகிச்சைக்கான செலவு அதிகரிக்கும்.
- ஆரோக்கியமான வாழ்க்கை குறித்து சுகாதார அமைப்பு கொடுக்கும் கவனத்தையும் அக்கறையையும் அஃது குறைக்கிறது.
மருத்துவ காப்புறுதி குறித்து கொண்டு வரும் எந்தவொரு செயல்திட்டமும் இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களிடமும் கலந்துபேசப்பட வேண்டும். நாட்டில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதைக் கூட எங்களின் செயல்பாடுகளை சர்வதேச நிதி அமைப்பு இடையூறாகவும் சிக்கலாகவும் இருப்பதையும் பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், அதிகமான சாத்தியமான ஊதிய உயர்வு நாட்டின் உற்பத்திதுறையில் போட்டித்தன்மையை பாதிக்கும் என அது கூறுகிறது.
எனவே,பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் நாட்டின் வருவாயை B40 மற்றும் M40 மக்களோடு பகிர்ந்துக் கொள்ள புதிய செயல்முறையினை கையாள வேண்டும்.இதற்கு நன் தீர்வை ஏற்படுத்தும் ஒரு திட்டமாக ‘சமூக ஊதியம்’ எனும் திட்டம் ஏற்புடையாதாக விளங்கும்.இத்திட்டத்தின் கீழ் அதிகமான அரசு உதவிகளை பொது சேவைகளுக்கு வழங்குதல் அதன் இலக்கிற்கு உகர்ந்ததாய் அமையும்.இந்த “சமூக ஊதியம்’ திட்டத்தில் மிகவும் முக்கியமானதாக உயர்தரமான மருத்துவ சேவையை வழங்குவதாகும்.
3. சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படும் பட்ஜெட்டில் 15% பொருட்கள் மற்றும் சேவைக்கான குத்தகைக்கு வழங்கப்படுகிறது. இதுவொரு பாராபட்சமானது. இந்த ஒதுக்கீட்டின் மூலம் குத்தகையாளர் அதிக லாபம் அடையும் நிலையில் சுகாதாரத்திற்கான ஒதுக்கீடு வீணாகிறது. எனவே, இந்த நடைமுறை இன்றைய சூழலுக்கு ஒத்துவராது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அமைச்சு ஆக்கப்பூர்வமானதை வெளிப்படுத்துதல் அவசியமாகிறது. கீழ்காணுபவைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்;
- மருந்து மற்றும் பொருட்களை கையகப்படுத்துதல்.
- துப்புரவுப் பணி, சலவை, மருத்துவ பொருட்கள் பராமரிப்பு மற்றும் கையகப்படுத்துதல்.
- கிளினிக் மற்றும் மருத்துவமனைகள் கட்டுவதை கையகப்படுத்துதல்.
சுகாதார அமைச்சின் ஒதுக்கீடு முறையற்ற நிலையில் அல்லது பாழ்படுத்தும் குத்தகையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் குறிப்பாக அவர்களின் குத்தகை ஒப்பந்தம் முடிந்த பின்னர் அவர்களுக்கான ஒப்பந்தத்தை நீடிக்ககூடாது. மேலும், சம்மதப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்கு சிறப்பு பிரிவுகளை கொண்டிருக்கவும் வேண்டும்.
நாட்டின் கொள்கையில் நிலையில் பூமிபுத்ரா தொழில் முனைவர்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமை பி.எஸ்.எம் வரவேற்கிறது. ஆனால், அந்த இலக்கை எட்டுவதற்காக சுகாதார அமைச்சின் பட்ஜெட்டை பயன்படுத்துவது விவேகமற்றது. சுகாதார அமைச்சின் பட்ஜெட் 100% மக்களுக்கான சுகாதார சேவைக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.
4. அனைத்துலக ரீதியிலான வாணிக ஒப்பந்ததின் போது சுகாதார அமைச்சு அதன் பேச்சுவார்த்தையில் அறிவுசார் சொத்துரிமை விவகாரத்தில் தனி கவனம் செலுத்திட வேண்டும். அனைத்துலக வர்த்தக ஒப்பந்தத்தில் இது முக்கியமானது. அனைத்துலக நிலையிலான பேச்சுவார்த்தையில் சுகாதார அமைச்சும் பங்கெடுப்பது அவசியமாகிறது. அதன் மூலம் காப்புறுதி நிலைப்பாட்டை முன் வைத்து பெரும் மருந்தியல் நிறுவனங்கள் மருந்துகளின் விலையை அதிகப்படுத்துவதற்கு அனுமதிக்ககூடாது.
மலேசியா இந்த புதிய மருந்து ஒப்பந்தத்தில் காப்புறுதி விவகாரத்தில் இந்தியா மற்றும் தெற்கு ஆப்ரிக்காவைப் போல் உறுதியான கொள்கையில் இருத்தல் வேண்டும். நம் நாட்டு மக்களுக்கு தரமான மருந்துகள் கிடைத்திட நாம் வளர்ந்த பிற நாடுகளோடு கைகோர்த்து செயல்பட வேண்டும்.
முடிவுரை
தொடக்கத்திலேயே நாங்கள் சொன்னது போல் சுகாதார அமைப்பு என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் மிகவும் முக்கியமானது. அது நாட்டு மக்களின் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் அளிப்பதோடு நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும் பங்காற்றுகிறது. அந்த இலக்கில் தான் பி.எஸ்.எம் சுகாதார அமைப்பில் முக்கிய ஆறு பிரச்னைகளை முன் வைத்து அதற்கான பரிந்துரைகளையும் தீர்வாக வரைந்துள்ளது. இதன் மூலம் நாட்டில் சிறந்த மற்றும் தரமான மருத்துவ சேவையை வழங்கிட முடியுமென பி.எஸ்.எம் நம்புகிறது.
(மலேசிய சுகாதாரத்துறை அமைச்சருக்கு
டாக்டர் ஜெயக்குமார் எழுதிய கடிதம்.)
No comments:
Post a Comment