Thursday, April 29, 2021

இன்று ஏப்ரல் 30, மலேசிய சோசலிச நாள்..

 மலேசிய சோசலிச  கட்சி ஒரு வரலாற்றுப் பார்வை 




2008 - 10 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் பிஎஸ்எம் பதிவு பெற்ற கட்சியாக  உருமாறியது.

2009 - ஆசியாவின் 3 கட்சிகளில் ஒரு கட்சியாக  பி.எஸ்.எம்-மை, வெனிசுலாவில் நடந்த 5 -வது சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள  Hugo Chavez  அழைப்பு விடுத்தார். 


2010 - 40 ஆண்டுகளாக வேலைவாய்ப்புச் சட்டத்தில் உள்ள  மிகக் கொடூரமான திருத்தம் ஒத்தி வைக்கப்படுவதாக மனிதவள அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் பிஎஸ்எம் மறியல் போராட்டங்கள்  நடத்தவிருப்பதால் அந்த சட்டத்தை ஒத்திவைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

2011 - மலாயா கம்யூனிஸ்ட் கட்சியை - புதுப்பித்து, மாமன்னருக்கு எதிர்த்துப் போராடியதாக பிஎஸ்எம் மத்திய குழுவின் 6 உறுப்பினர்கள் அவசரகால சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு  கைது செய்யப்பட்டனர். இவ்வாறான  அவதூறு அவர்கள் மீது பரப்பப்பட்டது.

2012 - பி.எஸ்.எம் மற்றும் ஜெரிட் (JERIT) ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியச் சட்டம் ஒரு செயலாகி ஏப்ரல் 30 அன்று பிரதமரால் அறிவிக்கப்பட்டது. அதில் அவர்கள் வென்றனர்.

2013 - பி.எஸ்.எம் முதன்முறையாக  பி.எஸ்.எம் சின்னத்தை பயன்படுத்தி செமெனி மற்றும் ஜெலப்பாங்கில் பொதுதேர்தலில்  போட்டியிட்டது.

2014 -  சுதந்திரத்திற்கு பிறகு, மலேசிய வரலாற்றில் மிகப்பெரிய மே தினத்தை பி.எஸ்.எம் முன் ஏற்பாடு செய்தது. இது ஒரு பிஎஸ்எம்-இன் மாபெரும் முயற்சியாகும்.



2015 – 100 க்கும் மேற்பட்டவர்களால் ஜி.எஸ்.டி-க்கு எதிராக போராட்டத்தை நடத்தியவர்களில் 88 க்கும் மேற்பட்டோரை   கிளானா ஜெய சுங்க அலுவலகம் கைது செய்தனர். அவர்களில் பெரும்பாலோர்  பிஎஸ்எம் உறுப்பினர்களாவர். ஜிஎஸ்டிக்கு எதிரான மிக தேவையான போராட்டம் அது.

2016 - தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக பிஎஸ்எம் ஏற்பாடு செய்த அரசியல் பாடமான,  விரிவான மார்க்சிச பாடத்தை ஐஜிபி ரத்து செய்தது.

2017 - பணியாளர் காப்பீட்டு திட்டத்திற்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது - பிஎஸ்எம் பிரச்சாரத்தின் மற்றொரு வெற்றி அது.

2018 - பிஎஸ்எம் தனது சொந்த சின்னத்தை பயன்படுத்தி பொது தேர்தலில் பல இடங்களில் போட்டியிட்டது. அதாவது 5 மாநிலங்களில் 4 நாடாளுமன்றத்திற்கும் 12 சட்டமன்றத்திற்கும் நின்றது.    

2019- கட்சி நிறுவப்பட்டதிலிருந்து தலைவராக இருந்த டாக்டர்.  நசீர், 2007  கட்சியின் தீர்மானத்திற்கு ஏற்ப, 21- வது பிஎஸ்எம் மாநாட்டில் டாக்டர் ஜெயக்குமாரிடம் தலைமைத்துவத்தை ஒப்படைத்தார்.

2020 - பிஎஸ்எம் ட்ரோலாக் பிரகடனத்தை அறிமுகப்படுத்தியது - அது 2030 வரை பிஎஸ்எம் எதிர்காலத்திற்கான திட்டங்கள் கொண்டது.

No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...